அரும்புகள் மலரட்டும்: வான்வெளியில் ஒரு காதல் காட்சி

Friday 12 December 2014

வான்வெளியில் ஒரு காதல் காட்சி


இரவெல்லாம் உலகிற்கு ஒளிமுகம் காட்டி
இன்பம் தந்த நிலவுப் பெண்ணை
கரம் பிடிக்கும் ஆசை வர!

சமுத்திரம் வழியே காலை எழுந்து
குளித்திட்டு செவ்வாடை அணிந்த மேனியாய்
கம்பீரமாய் புறப்படுது கதிரவன்!

கதிரவன் வரவைக் கண்ட நொடியில்
ஓடி ஒளிந்து வழக்கம்போல் கண்ணாம்பூச்சி
காட்டுகிறாள் அழகிய நிலாப்பெண்!

பகலவனோ அவளைத் தேடி தேடியே
கால்கள் நடுக்கமுற்று மண்டை சூடேறி
அக்கினியைக் கக்குகிறான் வெறுப்போடு!

சமாதானம் செய்ய விரைந்து புறப்படுது
மேகக்கூட்டம் குளிர்ச்சியைச் சுமந்தபடி வின்வெளியில்
கதிரவன் இருப்பிடம் நோக்கி!

மாலைப் பொழுது வர மண்டை
சூடு தணிந்து நாளை மீண்டும்
வந்து வான்மகளின் நிலவுப்பெண்ணை!

தப்பாது கரம் பிடிக்கும் சூளுரையை
உரைத்திட்டு மெல்ல மறைகிறது கதிரவன்
இப்படியாய் நாளும் அரங்கேறுது காதல்காட்சி
வான்வெளியில் கதிரவனுக்கும் நிலவுக்குமாய் !


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

18 comments:

  1. வணக்கம்
    சகோதரன்.

    உவமை மிக்க வரிகள்.. மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு வாக்குக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரர்

      Delete
  2. Replies
    1. வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரர்

      Delete
  3. இதற்குத் தான் தமிழில் தற்குறிப்பேற்றம் என்று பெயரோ கவிஞரே?
    அருமை!

    ReplyDelete
  4. நல்ல வர்ண நடையழகு நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரர்

      Delete
  5. ஞாயிறும் திங்களும் நாளும் புரிவது
    ஏய்த்தொரு நாடகமோ இங்கு!

    நல்ல கற்பனை! அருமை!
    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  6. கம்பீரமான வரிகள்....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா

      Delete
  7. அட பாவமே!! அந்த கதிரவன் ஆசை நிறைவேறுமா???

    ReplyDelete
  8. அழகிய கற்பனை! அழகிய வரிகள்! மேகக் கூட்டம் கூடுவது கதிரவன், நிலவின் காதலை பூமி மாந்தர் காணாது மறைக்கத்தானோ?!!

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் இருக்கலாம் ஐயா. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  9. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  10. நிலாவை வர்ணிக்கும்வரிகள் அழகு!

    ReplyDelete