அரும்புகள் மலரட்டும்: நீயாக வேண்டும் நான்!

Saturday 13 December 2014

நீயாக வேண்டும் நான்!


புல்லாங்குழல் புகுந்தக் காற்று
இசையாய் வெளியேறும் அதிசயத்தை
உன் மூச்சுக்காற்றிலும் உணர்ந்தேன்

ஒருகணம் திரும்பிப் பார்த்தால்
மறுகணம் என் இதயப்பூ
இதழ் விரித்து சிரிக்கிறது

உன் கைவிரல் தீண்டியதற்கே
மதுவுண்ட வண்டென மயங்கித்
திரிகிறேன் இன்னும் நான்

உணவருந்தும்  வேலையிலும் உன்னை
இதயத்தில் சுமந்து கொண்டு
வயிறு நிரப்ப மறக்கிறேன்

உயரே தூக்கி முத்தமிட்டேன்
உன்னை- சடக்கென்று விழுந்து
நொறுங்கியது வாழ்நாள் கர்வம்

கன்னத்தோடு கன்னம் வைத்து
உரசிட்டாய் காட்டாற்று வெள்ளமென
உருகியோடுது என் ஆவி

என்னோடு நீயிருக்கும் வேளையில்
கடற்கரை மணலில் தொலைந்த
சிப்பியாய் நானுமாகிறேன் உன்னோடு

நீ சிரிக்கும் போது விழும்
கன்னக்குழியில் விழுந்து கரையேற
மறுக்கிறது என் மனம்

நீயென்னை உரசும் போதெல்லாம்
கோள்களை உரசி சிதறி
மறையும் விண்கற்களாய் ஆகிறேன்

காற்று உன் தேகம் தொட்டு
கடந்து சென்றால் மேனி
நோகுமென அஞ்சி நடுங்குகிறேன்

உனைப்போல் நானும் மீண்டும்
மழலையாய் மாறிட முயன்று
தோற்றுப் போகிறேன் நான்


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

16 comments:

  1. //உனைப்போல் நானும் மீண்டும்
    மழலையாய் மாறிட முயன்று
    தோற்றுப் போகிறேன் நான்!//

    வார்த்தைகளில் - அழகு.. வாழ்க!..

    ReplyDelete
  2. செவியில் தேனாய் புகுந்ததே காற்று அருமை நண்பரே,,, வலைச்சரத்தில் முரசொலி கேட்க வாரீர்....

    ReplyDelete
  3. ஒவ்வொரு வரிகளும் அருமை! கடைசி வரிகள் சூப்பர்ப்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. அருமை அருமை வரிகள் ஒவ்வொன்றும்...அதுவும் இறுதி வரிகள்...ஆஹா...எல்லோரது எண்ணமும் பிரதிபலித்துவிட்டது....

    ReplyDelete
  5. கவிதையில் மென்மை மேம்பட்டுள்ளது. அருமை.

    ReplyDelete
  6. அன்புள்ள அய்யா,

    ‘ நீயாக வேண்டும் நான்! ’ என்று மழலையாய் மாறிட முயன்று தோற்றுப் போய் அடிமைசாசனம் அருமையாக எழுதிக் கொடுத்துவிட்டீர்கள்.
    ’நீ சிரிக்கும் போது விழும்
    கன்னக்குழியில் விழுந்து கரையேற
    மறுக்கிறது என் மனம்’
    -மிகவும் இரசித்துப் படித்தேன். உயிர்ப்புள்ள கவிதை...!
    நன்றி.




    ReplyDelete
  7. ஆஹா!! ரொமாண்டிக் ரசம் சொட்டுதே!! கலக்குங்க சகோ!

    ReplyDelete
  8. த ம ஒன்று ...
    ஆனால் மகிழ்வு

    ReplyDelete
  9. முடியாது.. முடியாது.. இனிப் பின்னோக்கிச் செல்ல முடியாது:) அதனால கடக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் இனிமையாக அனுபவித்துக் கடவுங்கோ ஹா..ஹா..ஹா...

    வோட்டும் போட்டிட்டேன்ன்ன்.

    ReplyDelete
  10. இசையாகும் காற்று ரசிக்கவைத்தது..

    ReplyDelete
  11. மழைலைகளாய் மாறிபோனால் பிரச்சனை இல்லைதான்,ஆனால் இது போலான கவிதையை தர மழலையால் எப்படி,,,,,,,,,,?

    ReplyDelete
  12. //மழலையாய் மாறிட முயன்று
    தோற்றுப் போகிறேன் நான்//
    அருமை நண்பரே

    ReplyDelete
  13. ~நீ சிரிக்கும் போது விழும்
    கன்னக்குழியில் விழுந்து கரையேற
    மறுக்கிறது என் மனம்~
    அருமை வரிகள் சகோ..,

    ReplyDelete
  14. மழலைகளை கொஞ்சும்பொழுது
    நாமும் மீண்டும் ஆகிறோம்
    மழலைகளாய்
    நம்மையும் மறந்து......
    அருமையான ஆக்கம்.வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete