அரும்புகள் மலரட்டும்: சிறந்த 25 பொன்மொழிகள்

Monday 29 December 2014

சிறந்த 25 பொன்மொழிகள்


1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம்
சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த
பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம்
வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

4. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால்
வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகியிருக்கும்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற
கொள்கையை மேற்கொள்கிறான்.

7. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.
அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச்
செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம்
இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12.ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.
ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ
சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும்
உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும்
சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு
கண்டிப்பாக கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.
அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும்
அகன்றுவிடும்.

25.தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

36 comments:

  1. சிந்தைக்கு விருந்தான பொன்மொழிகள்..
    பயனுள்ள பதிவு..
    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் ஐயா.

      Delete
  2. #சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும்
    சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.#
    இல்லறத்தில் இது சாத்தியமா ,பாண்டியன் ஜி ?
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. இல்லறத்திலும் சாத்தியக்கூறுகள் இருக்கிறது. கடைபிடிப்பது நம் கையில். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் ஐயா.

      Delete
  3. வலை உறவுகளுக்கு வணக்கம்
    தற்சமயம் நான் ஊரில் இருப்பதால் அலைபேசியில் நண்பர்கள் அனுப்பியதை அப்படியே வெளியிட்டுள்ளேன். விடுமுறை முடிந்து வீட்டுக்கு வந்ததும் வழக்கமான படைப்புகள் வெளியிடுகிறேன். அதுவரை இதுபோன்ற வெளியீட்டுக்கு பொறுத்தருள வேண்டுகிறேன் . நன்றி.

    ReplyDelete
  4. சிறந்த தொகுப்பு. பாராட்டுக்கள். சுவாமி விவேகானந்தா படம் மேலே இருப்பதால், அனைத்துமே அவருடைய பொன்மொழிகளாக எடுத்துக் கொள்ளலாமா?
    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      எல்லாம் பலரின் எண்ணத்தில் உருவானது ஐயா. முழுக்க விவேகானந்தர் பொன்மொழிகள் அல்ல. படம் பொன்மொழி தாங்கியிருப்பதால் வெளியிட்டேன் ஐயா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ஐயா.

      Delete
  5. சிறந்த பொன்மொழிகளை தொகுத்தளித்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் ஐயா.

      Delete
  6. நல்ல தொகுப்பு சகோ..ஆனா தமிழ் இளங்கோ அண்ணா சொல்வது போல் விவேகானந்தர் படத்தை பார்த்து நானும் அப்படித்தான் நினைத்தேன்:)

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே நண்பர்கள் தொகுத்து அனுப்பியது தான் அக்கா,. என்னுடைய பணி குறைவு தான். ஊரில் இருந்ததால் அப்படியே கட் அண்ட் பேஸ்ட் செய்து வெளியிட்டேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் அக்கா..

      Delete
  7. பொன்மொழிகள் அருமை! உதிர்த்தவர்களின் பெயர்களையும் வெளியிட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வேறொரு பதிவில் முயற்சிக்கிறேன் சகோ. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் சகோ..

      Delete
  8. சிறந்த பொன்மொழீகள் நண்பரே நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் மிக்க நன்றிகள் ஐயா.

      Delete
  9. என்ன திடீர்னு பொன்மொழித் தொகுப்புல இறங்கிட்டீங்க பாண்டியன்?
    (விடுமுறைத் தொகுப்பாக்கும்?) சொன்னவர்கள் பேரையும் போட்டிருந்தால் பலரும் சேமித்து வைத்திருப்பார்கள் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே நண்பர்கள் தொகுத்து அனுப்பியது தான் அக்கா,. வணக்கம் ஐயா. என்னுடைய பணி குறைவு தான். ஊரில் இருந்ததால் அப்படியே கட் அண்ட் பேஸ்ட் செய்து வெளியிட்டேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் ஐயா..

      Delete
  10. பொன்மொழிகள் அனைத்தும் அருமை சகோ.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் சகோ

      Delete
  11. அனைவரும் பின்பற்ற வேண்டிய அருமையான பொன் மொழிகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் சகோ..

      Delete
  12. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம்
    வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
    சிறந்த பொன்மொழி
    நன்றியுடன்,
    புதுவை வேலு
    குழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்

    வாழ்க வளமுடன்!
    திகழ்க நலமுடன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் சகோ. தங்களுக்கும் எனது உளம்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்

      Delete
  13. அனைத்தும் முத்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் சகோ

      Delete
  14. "அன்பும் பண்பும் அழகுற இணைந்து
    துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!"

    வலைப் பூ நண்பரே / சகோதரியே!

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் சகோ. தங்களுக்கும் எனது உளம்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்

      Delete
  15. அனைத்துமே அருமை னண்பரே!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே!

    அன்புட்னௌம், நட்புடனும்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் ஐயா. தங்களுக்கும் எனது உளம்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்

      Delete
  16. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் சகோ. தங்களுக்கும் எனது உளம்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்

      Delete
  17. நிறை மங்கலம் நீடு புகழ் பெற்று நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக!..
    அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் சகோ. தங்களுக்கும் எனது உளம்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்

      Delete
  18. வணக்கம்
    சகோதரன்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் சகோ. தங்களுக்கும் எனது உளம்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்

      Delete
  19. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் சகோ. தங்களுக்கும் எனது உளம்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete