Monday, 17 November 2014

மீள் வருகை


மழை வரும் மாலைப்பொழுதைமுந்தி சொன்னது மேகக்கூட்டம்
மழையும் வந்தது இடியோடு

வராத விருந்தினர் வந்ததைப்போல்
வணக்கம் சொல்லி வரவேற்றோம்
வாசல் வந்த மர்ந்து

வான்மழையை ரசித்த படியே
பொத்தானில் பொருத்தி யிருந்த
மின்சாதன இணைப்புகளை நீக்கவில்லை

படக்கென்று அருகாமையில் இடி விழ
போனது அத்தனையும் -சரிசெய்ய
பத்தாயிரம் தேவையென் பதனால்

ஒவ்வொன்றாய் பழுதுநீக்க முடிவெடுத்து
முதலில் தொலைக்காட்சி பின்னர்
கணினி, இணைய இணைப்பென

இன்று தான் இன்னல் தீர்ந்தது
இதனாலே இடைப்பட்ட நாள்களிலே
இணையம் வர இயலவில்லை

இவனுக்கு என்ன ஆனதென்று
இல்லம் வந்து விசாரித்த
இணையத் தம்பதியினருக்கும்

இதுவும் கடந்து போகும்
இன்னலுற வேண்டாமென செல்லமாய்
இயம்பிட்ட எம் முத்துக்கவிஞருக்கும்

இணையத்தில் இல்லாத பொழுதினிலும்
வலைச்சரத்தில் அறிமுகம் செய்திட்ட
கீத சகோதரிக்கும் குமார சகோதரருக்கும்

அனுதினமும் வருகை தந்து
அடியேனின் வலைப்பூவை
வாசம் செய்த நண்பர்களுக்கும்

நன்றியைச் சொல்லிடத் தான்
நற்றமிழ் சொல்லெடுத்து வந்திட்டேன்
நல் உள்ளங்களைத் தொடர்ந்திடவே...

............................................நன்றி...............................................................
இணையத்தம்பதியினர்: மலர்தரு.திரு.மதுகஸ்தூரிரங்கன் அவர்கள்-மகிழ்நிறை திருமதி மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள்.

முத்துக்கவிஞர்: கவிஞர் திரு.நா.முத்துநிலவன் அவர்கள்

கீத சகோதரி; கவிஞர் திருமதி.கீதா அவர்கள்

குமார சகோதரர்: திரு.பரிவை மனசு குமார் அவர்கள்


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

20 comments:

 1. வாங்க தம்பி!! வாங்க!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அக்கா
   நலமாக உள்ளீர்களா? எப்படி இப்படியொரு வேகம். பதிவிட்ட அடுத்த நொடியில் தம்பியை வரவேற்று விட்டீர்களே! அதான் அக்கா... இல்லம் வந்து இன்முகம் காட்டி இல்லத்தாரை மகிழ்வித்து இனிய அனுபவமாக ஆக்கிச்சென்ற என் மாமாவிற்கும் (இனி அப்படி தான்) என் அக்காவிற்கும் என் அன்பு என்றும் இருக்கும்..

   Delete
 2. அருகில் விழுந்த இடி
  இணையத்தை அல்லவா குறி வைத்துவிட்டது
  இனி தொடர்ந்து இணையத்தில் வலம் வாருங்கள் நண்பரே
  வரவேற்கிறோம்

  ReplyDelete
 3. தங்களைக் காணாது நானும் தவித்திருந்தேன்!..
  வருக.. வாழ்க...

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்...

  விரைவில் சந்திப்போம்...

  ReplyDelete
 5. வாருங்கள்..!பண்டியனாரே..!
  இனி பாண்டியன் எக்ஸ்பிரஸ் அதி வேகமாகச் செல்லும்.!
  வாழ்த்துகள்.!

  ReplyDelete
 6. இதுவும் கடந்து போகும்
  இன்னலுற வேண்டாம்...........இனிதொடருங்கள்

  ReplyDelete
 7. இதற்கு முன்னால் போட்ட கலாட்ட பதிவு எங்கே..
  கவிதை அருமை
  வாக்கு ஐந்து

  ReplyDelete
  Replies
  1. வாங்க தலைவா!
   முன்னரிட்ட பதிவின் கலாட்டா அதிகமாகச் சென்று விட்டதால் நீக்கி விட்டேன். நம் சகோதரிகளுக்கு நாம் மதிப்பளிக்கா விட்டால் யாரு அளிப்பது. அப்பதிவு வெறும் நகைச்சுவைக்காக பதிவிட்டது தான் அதுவும் தவறென உணர்த்திட்ட நம் நண்பர்களுக்கு தான் நன்றிகள் அனைத்தும்..

   Delete
 8. விழுந்தெழுவதுதானே வாழ்க்கை/

  ReplyDelete
 9. இடி விழுந்தால் இப்படியும் ஆகுமா! வரக்கூடாத வருத்தம் தான்! தேவையற்ற பொருள் நட்டம்!

  ReplyDelete
 10. வருக வருக பாண்டியன்! மிக்க மகிழ்ச்சிய்யா.. கவிதையில் நன்றியா? வாங்க வாங்க அப்படியே நம்ம விஜூ வலைப்பக்கம் போயி வெண்பாவகுப்பில் கலந்துகொண்டு கலக்க வருக!
  http://oomaikkanavugal.blogspot.com/2014/11/blog-post.html மற்றும்
  http://oomaikkanavugal.blogspot.com/2014/11/ii.html பார்த்து வருக
  அடுத்த பதிவை வெண்பாவுடன் எதிர்பார்க்கிறோம்.
  அத்தோடு,
  முந்திய பதிவை எடுத்தமைக்கு நன்றி.
  அதில் பாண்டியன் இல்லை.
  எங்கள் பாண்டியன் ரொம்பப் பொறுப்பானவர்.
  இனி அவரைப் பார்க்கத்தானே நானும் ஒரு வம்பில் இழுத்துவிட்டிருக்கிறேன்? பார்க்க - http://valarumkavithai.blogspot.com/2014/11/4.html
  வருக...விரைவில் பதில் தருக.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வரவேற்புக்கும், வழிகாட்டுதலுக்கும் மிகுந்த நன்றிகள்;. முந்தைய பதிவு என்னுடைய எண்ண ஓட்டம் இல்லை ஐயா. நண்பர்கள் வாட் அப்பில் அனுப்பியது. பதிவிட்டு நாள் ஆகிட்டதே என்று அப்படியே காபி பண்ணி போட்டு விட்டேன். தவறுக்கும் மன்னிக்கவும் ஐயா. கண்டிப்பாக அடுத்த கவிதை வெண்பாவில் இருக்கும். சகோதரர் விஜீவின் வலைத்தளத்திற்கு சென்று வருகிறேன் ஐயா இதற்கு முன்பே நானே முயன்று கற்றும் இருக்கிறேன். அடுத்த பதிவில் அசத்தி விடலாம் என்று நினைக்கிறேன். அது இருக்கட்டும் ஐயா இப்படி மாட்டி விட்டுடீங்களே ஐயா ஆணையிட்ட பிறகு சோம்பலுக்கு ஏது வேலை இதோ புறப்படுகிறேன் பதிலளிக்க... நன்றீங்க ஐயா. விரைவில் நேரில் சந்திக்க ஆசை..

   Delete
 11. நடந்தத்தனையும் அறிந்து மனம் வருந்தினேன்!
  இதுவும் கடந்து போகும்..!

  மீள்வருகை மனதிற்கு மகிழ்ச்சி!
  வாழ்த்துக்கள்!.. தொடருங்கள் சகோதரரே!

  ReplyDelete
  Replies
  1. துன்பங்கள் யாவும் கடந்தாச்சு
   இனி வீறுநடை தான் சகோதரி
   தங்களின் கருத்துரையும் இத்தனை நாள் கழித்து
   சந்தித்ததும் மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்வோம்..

   Delete
 12. கல்யாண மாப்பிள்ளை பிசியாக இருக்கீங்க என்று நினைச்சேன்! கவிதையுடன் மீண்டு வந்து காரணம் உரைத்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. தங்கள் வலைத்தளத்தில் மறுஜென்மம் பற்றிய சந்தேகங்கள் மற்றும் நீக்கப்பட்ட இன்னொரு பதிவு – ஆகியவற்றைப் படித்தவுடன் பாண்டியனுக்கு என்ன ஆயிற்று என்றுதான் நினைத்தேன். மேலும் மணப்பாறைக்கு அருகிலிருக்கும் மதுரையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பிற்கும் நீங்கள் வரவில்லை. எது எப்படி இருப்பினும், பழைய உற்சாகத்தோடு, மீண்டும் மீண்டு வந்தமைக்கு வாழ்த்துக்கள்!
  த.ம.8

  ReplyDelete
 14. வருக. இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். தொடர்ந்து எழுதுங்கள். உடன் வருகிறோம்.

  ReplyDelete
 15. உங்கள் பதிவு வேறாக இருந்தது ஆனால் வந்தால் தளம் வரவில்லை. பின்னர் அப்டேட் ஆகவே இல்லை. முனைவர் குணா அவர்களின் தளத்தில் தாங்கள் சொல்லி இருந்ததைப் பார்த்துத்தான் இங்கே வந்தோம்.

  மீண்டும் வந்தாயிற்று..கலக்குங்கள்!

  மிக அருமையான கவிதை மூலம் தாங்கள் வலைத்தளம் வர இயலாமைக்கான காரணம் கண்டு ..ஏடோ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்றே என்று மன நிம்மதி. ஆம்! இதுவும் கடந்து போகும்! நண்பரே! தங்களுக்கு எல்லா நலனும் வழங்க பிரார்த்தனைகள்.

  கலக்குங்கள் நண்பரே! தொடர்கின்றோம்!

  ReplyDelete