அரும்புகள் மலரட்டும்: கனவில் வந்த காந்தி (தொடரும் கனவு)

Monday 17 November 2014

கனவில் வந்த காந்தி (தொடரும் கனவு)

நண்பர்களுக்கு வணக்கம்.
ஒரு வழியாக இணையத்திற்குள்ளே மீண்டும் வந்து விட்டேன். தேவக்கோட்டை மண்ணின் மைந்தர் சகோதரர் திரு.கில்லர்ஜி கொழுத்திப் போட்ட மத்தாப்பு இணையப் பக்கமெல்லாம் ஒளி விடுவது கண்டு மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த ஆட்டத்திற்கு கவிஞர் திரு.நா.முத்துநிலவன் ஐயா அவர்களும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆய்வாளர் திரு.ஜம்புலிங்கம் ஐயா அவர்களும் இழுத்து விட்டிருக்கிறார்கள். எண்ணங்களை விசாலப்படுத்திக் கொள்ள உதவும் இது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வாய்ப்பளித்த நண்பர்கள் இருவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு நானும் களம் இறங்குகிறேன்.


1.நீ மறுபிறவியில் எங்குப் பிறக்கவேண்டும் என்று நினைக்கிறாய்?
மறுபிறவி என்று ஒன்றிருந்தால் நான் மீண்டும் என் அன்னையின் வயிற்றில் பிறக்க வேண்டும்

2.ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்?
இந்தியாவின் சாபக்கேடில் இதுவும் ஒன்றாகி விடும். இருந்தாலென்னா?
மக்களை வாத்தியங்களாக்கி அவர்களுக்கு மத்தியிலே கூத்தாட்டம் போடும் வித்தை நம்மாலும் கற்றுக் கொள்ள முடியாத என்ன? அவர்களுக்கு மத்தியிலும் விடிவெள்ளியாய் முளைத்திட்ட நல்ல அரசியல்வாதிகளுடனும் இளைஞர்களுடனும் இணைந்து வறுமையும் வேலை இல்லா
திட்டாட்டமும் நீக்கிட முயலுவேன்.

3.ஒருவேளை வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால்?
எதிர்ப்பா? நாட்டின் வளர்ச்சியைப் பார்த்து அனைவரும் தாயகம் திரும்பும் நிலையல்லவா வந்திடும். எந்த வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் எனும் கீதம் எட்டுத்திக்கும் முழங்கிடும்!

4.முதியோர்களுக்கு என்று ஏதும் திட்டம் வைத்திருக்கிறாயா?>நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் பண்டங்கள் அனைத்தும் தன் பெற்றோர்களை வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ளும் நபர்களுக்கு மட்டும் வழங்கிட வழி செய்வேன்.
> முதியோர்களின் மனதிற்கு இதமான பழைய பாடல்களை ஒலிப்பரப்பிட 24*7 தொலைக்காட்சி அலைவரிசையும் வானொலி அலைவரிசையும் தனியாக ஒதுக்கப்படும்
>முதியோருக்களுக்கான எளிய வகையில் குடிசைத் தொழில் செய்ய மானியத்துடன் கடனும் அனுமதிக்கப்படும்

5.அரசியல்வாதிகளுக்கென்று திட்டம் ஏதாவது?
>அரசியல்வாதிகளின் செயல்பாட்டில் திருப்தியெல்லையென்றால் அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை வழங்கப்படும். அதை அவர்கள் தவறான வழியில் நடைமுறை படுத்தாமல் இருக்க கண்காணிக்கப்படும்.
>அரசியல்வாதிகள் வங்கி பரிவர்த்தனைகளோடு மட்டுமல்லாது அவர்களின் உறவினர்கள், நண்பர்களோடு பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும்.
>ஐந்தாண்டு சம்பளத்தில் ஓராண்டு சம்பளத்தை மக்களுக்கு வழங்கிட வேண்டுமென்று அறிவுறுத்தப்போவதில்லை குறைந்த பட்சம் மக்களின் பணத்தில் தேவையில்லா வெளிநாட்டு பயணம், உள்நாட்டில் கூட ஏதாவது ஊருக்கு செல்ல வேண்டுமானால் நலத்திட்டங்கள் அந்த ஊருக்கு வழங்குவதாக விளம்பரம் செய்து கொண்டு மக்கள் பணத்திலேயே சென்று வரும் அவலங்கள் எல்லாம் தடுத்து நிறுத்தப்படும்.
>திட்டம் என்னவோ பழசு தான் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது தானே நம்மில் பலரின் ஆதங்கம்..

6.மதிப்பெண் தவறென்று மேல்நீதிமன்றங்களுக்குப் போனால்..?
தங்களுக்கு இழைக்கப்பட்டது அநீதி என்று கருதும் பட்சத்தில் ஒவ்வொருவரும் மேல்
நீதிமன்றங்களுக்கு செல்லலாம் என்பது தானே நமது சட்டம். இந்த விசயத்தில் சட்டம் தன் கடமையைச் செய்ய அனுமதிப்பதே சிறந்தது. இருப்பினும் மதிப்பெண் காரணத்திற்காக மேல் நீதிமன்றம் செல்லும் நிலைக்கே வாய்ப்பில்லாத படி மதிப்பெண் திருத்தும் பணி நவீனமாக்கப்படும்.

7.விஞ்ஞானிகளுக்கென்று ஏதாவது திட்டம்?
இஸ்ரோவில் இருக்கும் விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு கிராமத்தின் மூளையிலும் முளை விடும் விஞ்ஞானிகளை இனம் கண்டு அவர்களின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் ஊக்கவிக்கப்படும். அதற்கான நிதிகளைத் தாராளமாய் வழங்கி விண்ணிலும் மண்ணிலும் நம் நாட்டின் விஞ்ஞான மூளை விதைக்கப்படும். ஆம் நண்பர்களே விவசாயத்தில் புது புது கண்டுபிடிப்புகள் நாளும் பெருகி படித்தவர்கள் எல்லாம் விவசாயத்தில் ஈடுபடும் நிலை உருவாக்கப்படும். (கனவு என்று தானே எண்ணுகிறீர்கள் நனவானால் நாடு நலமாகும்)

8.இதை உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் தொடர்வார்களா?
எனது திட்டங்களை எனக்கு பிறகு வரும் ஆட்சியாளர்கள் பின்பற்றவில்லை என்றால் நாட்டு மக்களே அதற்காக எதிர்ப்பு குரல் கொடுக்கும் அளவிற்கு அத்திட்டங்கள் சென்றடைந்திருக்கும் என்று நம்புகிறேன். மக்கள் நலனுக்கு எதிராக ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள் அரசியலில் அனாதை ஆக்கப்படும் சூழ்நிலை என் ஆட்சிக்கு அப்பறமாவது நடந்தேறும் எனும் நம்புகிறேன்.

9.மற்ற நாடுகளில் இல்லாத புதுமையாக ஏதாவது திட்டம்?
>மற்ற நாடுகளில் இல்லாத புதுமைத் திட்டம் விவசாயத்திலும் கல்வியிலும் செயல்படுத்த வேண்டும்.
>33 சதவீத காடுகள் வளர்க்கப்பட்டு மழை பெற்று விஞ்ஞான விவசாயம் விதைக்கப்பட வேண்டும் வீட்டிற்கொருவர் விவசாயத்தில் ஈடுபட்டால் தான் அரசின் சலுகைகள் வழங்கப்படும் திட்டம். வேளாண் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியில் முதன்மை பெற திட்டம்.
> இந்தியப் பாரம்பரிய க்லாசாரத்தோடு அனைவருக்கும் இலவச கல்வி, வீடு தோறும் ஆய்வுக்கூடமும் நூலகமும் அரசே அமைத்து தரும் திட்டம் (பள்ளிகளில் பயன்படுத்தினாலே முழு வெற்றி தான்).
>கல்லாமை என்பதே இல்லாமை எனும் இலக்கு நோக்கிய விரைவுத் திட்டம்.

10.மானிடப் பிறவி தவிர வேறென்ன பிறவி எடுக்க விரும்புகிறாய்?
செல்வ சீமான்களின் இல்லங்களை அலங்கரிக்கும் பொம்மைகளாக (டெடிபியர்) இருக்க விரும்பவில்லை பாசமுள்ள ஏழைக் குடிசையில் நாய் குட்டியாய் வலம் வரவே விரும்புகிறேன்.

நமக்கு வர இன்பமா இருக்கட்டும் கஸ்டமா இருக்கட்டும் அதை அடுத்தவங்க தலையில கட்டி விடுகிற சுகம் இருக்கே தனி அலாதி தாங்க... நம்மளும் கொஞ்சம் யாரு கிட்ட நகர்த்தி விடலாம் மண்டையைக் கொடஞ்சதுல நினைவுக்கு வந்த நண்பர்கள்
1. மரியாதைக்குரிய ரஞ்சனி அம்மா அவர்கள் http://ranjaninarayanan.wordpress.com/
2. அன்பின் சகோதரி வேலூர் உஷா அன்பரசு
 அவர்கள் http://tamilmayil.blogspot.com/
3. ஜெர்மனி சகோதரி பிரியசகி அவர்கள் piriyasaki.blogspot.com/
4.வேர்களைத் தேடி முனைவர் இரா.குணசீலன் அவர்கள் http://www.gunathamizh.com/
5. வேதாவின் வலை கோவைக்கவி அவர்கள்  http://kovaikkavi.wordpress.com/
6. காவியக்கவி சகோதரி இனியா அவர்கள் http://kaviyakavi.blogspot.com/
7.அழுகும் சமுதாயம்`சகோதரி தி.பரமேஸ்வரி அவர்கள் http://tparameshwari.blogspot.in/
8.. வசந்த மண்டபம் வலைத்தள சகோதரர் மகேந்திரன் அவர்கள் http://ilavenirkaalam.blogspot.in/
9.மின்னல் மியாவ் சகோதரி அதிரா அவர்கள்  http://gokisha.blogspot.in/
10.கீவியின் கூவல்கள் சகோதரி புனிதா அவர்கள்  http://kiwicalls.blogspot.in/

நண்பர்கள் அனைவரும் இந்த இளையவனின் அழைப்பை ஏற்று தங்களின் மேலான எண்ணங்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன். சகோதரிகளை அதிகமாக இந்த ஆட்டத்தில் சேர்த்திருப்பதின் நோக்கமே அரசியல் பற்றியும் நமது தேசம் பற்றிய உங்கள் சிந்தனைகளை அறிவதற்கு தான். ஆவலோடு காத்திருக்கிறேன் எண்ணங்களை அறிந்து கொள்ள. அனைவரும் சிரமமாக எண்ணாமல் சிந்தனைக்கான தூண்டுகோளாக ஏற்றுக் கொள்வீர்கள் எனும் நம்பிக்கையில்
உங்கள் சகோதரன்
அ.பாண்டியன்




கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

37 comments:

  1. மிகச் சிறப்பான பதில்கள் சகோதரா...
    அருமை... வாழ்த்துக்கள்...
    தொடர்ந்து பதிவுகள் எழுதுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர்
      தங்களை வேறு யாரேனும் இழுத்துக் கொண்டார்களா என்பதை அறிய தங்கள் தளம் வந்தேன். இருவர் இழுக்க நான் ஒதுங்கிக் கொண்டேன். தொடர்ந்து எழுதுகிறேன் சகோ. கருத்துக்கு நன்றி..

      Delete
  2. நண்பரே ஒவ்வொன்றும் உரத்த சிந்தனைகளோடு நல்ல நோக்கங்களோடு சொல்லி இருக்கிறீர்கள் அருமை எமது வலைப்பூவுக்கு வந்து காண அழைக்கிறேன்

    5 ஸூப்பரோ.... ஸூப்பர்

    http://www.killergee.blogspot.ae/2014/11/1.html

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே
      வலைத்தளம் எல்லாம் உங்கள் புகைப்படம் தான். சும்மா கலக்குறீங்க போங்க. நல்ல சிந்தனைகளைத் தூண்டி விட்டதே நீங்கள் தானே ஆக்கப்பூர்வமான விடயங்கள் நாளும் வளரட்டும் இணையத்தில். நன்றி சகோதரரே..

      Delete
  3. ஒன்னுல நெகிழ்ச்சி... ரெண்டுல மகிழ்ச்சி...
    மூனுல முழக்கம்...நாலுல முதிர்ச்சி...
    ஐந்தில் முயற்சி...ஆறில் பயிற்சி...
    ஏழில் ஆக்கம்...எட்டில் ஊக்கம்..
    ஒன்பதில் பெருமை பத்தோ அருமை!
    (எதுகை மோனையில் கொஞ்சம் ஓவராயிருச்சோ.. சரி விடுங்க..
    முதல் பதிலிலேயே கொஞ்சம் உணர்ச்சிவசப் படுத்திட்டீங்க.. பாண்டி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      என் மீதான தங்களின் நம்பிக்கைக்கு நன்றிகள் ஐயா. தங்களிடமிருந்து இப்படியொரு கருத்துக் கண்டு நானும் உணர்ச்சிவசப் படுகிறேன் ஐயா. எதுகை மோனை அதிகமானால் என்ன ஐயா? நீங்கள் சொல்வீர்களே மயிலுக்கு வால் நீண்டால் அழகு தான் என்று. கருத்துக்கும் வழிகாட்டதலுக்கும் நன்றிகள் ஐயா..

      Delete
  4. நீண்ட நாட்களுக்குப் பின் பாண்டியனை சந்திப்பதில் மகிழ்ச்சி . பலரையும் சிந்திக்க வைத்து விட்டார் கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      சென்ற வாரம் கூட தங்களிடம் பேசவில்லை பேச வேண்டும் என்று என் மனைவியிடம் சொல்லிக் கொண்டு தான் இருந்தேன். தற்போது இணையம் வழியாக சந்தித்துக் கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி ஐயா ஆம் கில்லர்ஜி கொழுத்திப்போட்டது இணையத்தில் ஒளிர்கிறது. கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள் ஐயா...

      Delete
  5. வணக்கம்
    சகோதரன்..

    ஆகா...ஆகா ..நீண்ட நட்களின் பின்... ஒவ்வொரு பதிலும் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் திருமுகம் கண்டும் எத்தனை நாள் ஆகி விட்டது. பேச வேண்டும் என்ற எண்ணம் மனதை விட்டு நேரம் தான் ஒத்துழைக்கவே இல்லை. இணையம் நம்மை எப்படியும் இணைத்து விடும் என்பதை நாமறிந்தது தானே சகோதரரே. கருத்துக்கு நன்றி சகோ..

      Delete
  6. தங்களுடைய பதில்கள் எல்லாம் நல்ல சிந்தனையை பிரதிபலிக்கின்றன. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களிக்கு பிறகு நம் நண்பர்களைக் காணுவது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது சகோ. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிகுந்த நன்றிகள்..

      Delete
  7. மனவையில் ஒரு விடிவெள்ளி முளைத்திருக்கிறது!! உங்கள தான் தம்பி நாடே எதிர்பார்க்குது!! வாங்க தம்பி வாங்க! நாலு பேருக்கு நல்லதுன்ன எதுவே தப்பில்லை:))

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் அக்கா.. இப்படி உசுப்பேத்தி விட்டு அடி வாங்குறதுக்கு நான் கைபிள்ளை அல்ல அக்கா நான் உங்க வீட்டு பிள்ளை. தம்பிக்கு அக்கா ஆலோசகர். உங்களையும் உள்ள இழுத்து விட்ற மாட்டேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் அக்கா..

      Delete
  8. சிறந்த பதில்கள் நண்பரே
    தொடருங்கள் தங்கள் எழுத்துப் பணியை

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      கண்டிப்பாக தொடர்வேன் ஐயா. தங்களைச் சந்திக்கும் வாய்ப்பை நம் முத்துநிலவன் ஐயா புத்தக வெளியீடு மற்றும் மதுரை வலைப்பதிவர் மாநாடு என இருமுறை இழந்திருக்கிறேன். விரைவில் சந்திப்போம் ஐயா.

      Delete
  9. முத்து நிலவன் ஐயா கருத்துரையில் சொன்னது சரி...!

    ReplyDelete
    Replies
    1. விரைவில் மீண்டும் சந்திப்போம் சகோதரரே. நலம் தானே! தொலைபேசியில் கூட நாம் சமீபத்தில் பேசிக்கொள்ள வில்லை. ஊருக்கு செல்வது பணி என்றே காலம் கடத்தி விட்டேன். இடையில் இணையக் கோளாறு வேறு. இனி முயற்சித்து தொடர்ந்து எழுதுகிறேன் நன்றீங்க சகோதரர்.

      Delete
  10. கோதாவில் குதிச்சாச்சா ...
    நான் இப்போதான் வார்ம் அப் ஆகிகொண்டிருகிறேன் ...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ
      வார்ம் அப் பயங்கரமாக இருக்கும் போல தெரியுது அப்போ பதில்கள்!!! பட்டைய கிளப்ப போறீங்க. காத்திருக்கும் களத்தில் இறங்கும் நாளுக்காகவும் பதிலுக்காகவும்.. நன்றிகள் சகோ..

      Delete
  11. சிறப்பான பதில்கள்....

    -------------------------
    அரிதாரம் பூசறவனெல்லாம் அறிவாளி,
    ஸ்க்ரீன் ஹீரோ எல்லாம் செயல் வீரன்ன்னு நம்புற கூட்டமாச்சே…

    கோட்டருக்கும் கோழிபிரியாணிக்கும் என வாழும் கொள்கை வீரர்களாச்சே…

    தம்படிக்கு தகுதியில்லாதவன் எல்லாம் “தானைத் தலைவன்”....

    ஒரு குமாஸ்தா வேலைக்குக்கூட exam பாஸ் பண்ணணுமே??? ஆனா மண்டைல ஒண்ணுமில்லாட்டியும் மந்திரி ஆக்கி அழகுபார்ப்பாய்ங்க… பாசக்கார பயலுவ…
    ---------------------------------------------------

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே
      மக்கள் மத்தியில் நிறையவே மாற்றம் வேண்டும் தான். அரசியலில் நல்லவர்களை அடையாளம் கண்டு வாக்களிக்கும் விழிப்புணர்வு வந்தால் தான் நாட்டிற்கு நல்லது. அதுவரை நீங்கள் மேலே குறிப்பிட்டது தான். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்

      Delete
  12. அழைப்பிற்கு நன்றி பாண்டியன். புனிதா கொஞ்சமும் சீரியஸ்னஸ் இல்லாத பொண்ணு. கூப்பிட்டிருக்கீங்க. என் பதிலைப் பார்த்து யாராச்சும் என்னைத் திட்டினால்... நீங்கதான் வந்து விலக்குப் பிடிச்சு விடுவீங்க. :-)

    http://kiwicalls.blogspot.co.nz/2014/11/blog-post_17.html

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோதரி
      தங்களின் வருகைக்கும் எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டமைக்கும் அன்பான நன்றிகள். அரும்பிய நட்பில் தொடர்ந்து இணைந்திருப்போம்.

      Delete
  13. உங்கள் அழைப்பிற்கு நன்றி பாண்டியன். நிச்சயம் பதில் எழுதுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அம்மா
      தங்களின் வருகையும் முகமும் கண்டதும் மனதிற்கு மகிழ்ச்சி பிறந்துள்ளது. பதிலுக்கு ஆவலோடு காத்திருக்கிறோம். நன்றீங்க அம்மா..

      Delete
  14. ஆஹா.. பதிலகளைப் பார்த்து ரசிச்சு முடிக்க முன்.. கீழே வச்சிட்டீங்களே ஆப்பூ:).. முயற்சி செய்கிறேன் பாண்டியன், முடிந்தால் தொடர்கிறேன்.. இல்லையெனில் கோபித்திட வேண்டாம்...

    என்னையும் அழைத்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  15. தங்கள் அழைப்புக்கு நன்றிகள் நண்பரே.

    ReplyDelete
  16. நீண்ட நாள்களுக்குப் பின் தங்களைக் காண்பதில் மகிழ்ச்சி. தங்களின் மறுமொழிகளை ரசித்தேன். தொடர்ந்து எழுதுங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள். உடன் வருகிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. மிக அருமையான தங்கள் மனதைப் பிரதிபலிக்கும் கருத்துக்கள் அடங்கிய பதில்கள்! வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  18. கனவில் வந்த காந்தி

    மிக்க நன்றி!
    திரு பி.ஜம்புலிங்கம்
    திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

    புதுவைவேலு/யாதவன் நம்பி
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

    ReplyDelete
  19. ஹலோ! நண்பரே !
    இன்று உலக ஹலோ தினம்.
    (21/11/2014)

    செய்தியை அறிய
    http://www.kuzhalinnisai.blogspot.com
    வருகை தந்து அறியவும்.
    நன்றி
    புதுவை வேலு

    ReplyDelete

  20. உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் இந்த இணைப்பில் இருக்கிறது பாண்டியன், அழைப்பிற்கு மறுபடியும் நன்றி!
    http://wp.me/p244Wx-Jy தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete