Monday, 15 September 2014

விருது வாங்கி கை எல்லாம் வலிக்குதுங்க நீங்க கொஞ்சம் பிடிங்களேன்

வலை உறவுகளுக்கு வணக்கம்

எல்லா புகழும் இறைவனுக்கே!!!

தமிழ் வலை உலகை கலக்கி வரும் THE VERSATILE BLOGGER AWARD சக எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் அற்புதமான விடயம்.
ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்!  
எனும் கவிஞர் வாலியின் வரிகள் இந்த விருதுக்கு எத்தனை பொருத்தம்.

ஒரு எழுத்தாளன் சக எழுத்தாளனை எழு. எழுது. எழுச்சி பொங்க எழுது. இன்னும் எழுது இந்த சமூகம் எழும் வரை எழுது என்று தோள் தட்டி ஊக்குவிக்கும் இந்த முயற்சி உண்மையில் பாராட்டத்தக்கது. நெடுங்காலமாக வழக்கத்தில் இந்த முறை இருந்தாலும் இம்முறை நானும் விருது வாங்கியிருக்கிறேன் என்பதை என்னும் போது மட்டற்ற மகிழ்ச்சி.. நான் இன்னும் ஊக்கு கூட விற்க தொடங்க இருப்பினும் என்னையும் ஊக்குவிக்க நட்பு கரங்கள் வருகை தந்திருக்கின்றன என்றால் கூடுதல் மகிழ்ச்சி இருக்க தானே செய்யும்.

எல்லா புகழும் இறைவனுக்கே!!
என்னடா ஏ.ஆர்.ரகுமான் இரட்டை ஆஸ்கார் விருது வாங்கும் போது சொன்ன அதே வரிகளைத் திரும்ப திரும்ப சொல்றானு தானே பார்க்கிறீங்க ஆமாங்க எனக்கு இரண்டு விருது கொடுத்திருக்காங்க. அவங்க யார்யார்னு சொல்றேன் கொஞ்சம் கவனமா கேளுங்க..

இவர் எழுதுகோல் பக்தி நனி சுவை சொட்ட சொட்ட எழுதும். இவரின் மனமோ சக மனிதனின் இல்லாமை கண்டு குழந்தை பசிக்கு அழுவது போல் அழும். இவரின் வாழ்க்கையின் பெரும்பகுதி வெளிநாடு என்றாலும் நாடியவர்க்கு உதவிட துடிக்கும் இவரின் கரங்கள். இவையெல்லாம் மிகையல்ல வெறும் புகழ்ச்சியல்ல அவ்ருடன் கலந்துரையாடும் வாய்ப்பைப் பெற்றவன் என்ற வகையில் இதைச் சொல்கிறேன். அவர் தான் தஞ்சையம்பதி தளத்திற்கு சொந்தக்காரர் திரு. துரை செல்வராஜ் அய்யா அவர்கள். அய்யா அவர்கள் விருது வழங்கிய பதிவின் இணைப்பு:
http://thanjavur14.blogspot.in/2014/09/blog-post84-blog-award.html

விருது வழங்கிய மற்றொருவர். இவர் இறைவனுக்கு சேவை செய்யும் பாக்யம் பெற்றவர். எளிமையானவர். தளிர் என்றே சொல்லிக் கொண்டே எழுத்துலகின் ஆழம் பார்த்தவர். இன்னும் படைக்க எண்ணத்தில் எழுச்சிக் கொண்டவர் இவர் தான் அன்பு சகோதரர் தளிர் சுரேஷ் அவர்கள். எனக்கு விருது வழங்கிய அவரின் பதிவின் இணைப்பு  http://thalirssb.blogspot.com/2014/09/blogger-award-14-9-14.html

அடுத்து என்னைப்பற்றி சொல்ல வேண்டுமாமே!

சொல்லிக் கொள்ளும்படி இன்னும் எதையும் சாதிக்கவில்லை உங்கள் அன்பால் நாளை அது சாத்தியப்படலாம் எனும் நம்பிக்கை உண்டு.

நான் அரசுப்பள்ளியில் தமிழாசிரியன் ஆனாலும் மாணவர்களிடமிருந்து தொடர்ந்து கற்றுக் கொண்டிருக்கும் ஓய்வில்லா மாணவன்.

நிறைய படிக்க வேண்டும் பின்னர் எழுத வேண்டும் எனும் எண்ணம் கொண்டவன் ஆனாலும் முந்திரி விதை போல நிறைய படிக்கும் முன்னே எழுத வந்த ஆர்வக்கோளாறு. ஆனாலும் என் ஆர்வம் கோளாறு இல்லை என்பதை என் எழுத்து எடுத்துரைக்கும் என்றே நம்புகிறேன்.

நான் காணும் காட்சிகள் கண்களை உறுத்துமானால் என் பேனா மை அதனைக் கண்டு காரி உமிழ வேண்டும். அதற்கான வல்லமையை எல்லா வல்ல இறைவன் எனக்கருள வேண்டும்.

நாம் பெற்ற விருதைப் பகிரப் போகும் நண்பர்கள்;

1. மனசின் பக்கம் வந்து வார்த்தைகளால் வசந்த ஊஞ்சல் ஆடுபவர் திரு. சே.குமார் அவர்கள் http://vayalaan.blogspot.com/2014/09/blog-post_13.html

2. மாற்றம் ஒன்றே மாறாதது என்று மானிடம் தத்துவம் பேசுவபவர் தோட்டங்கள் அமைத்து பராமரிப்பவர். சமீபத்துல பிரமீடு தேசம் போய் வந்தவருங்க அட அவங்களே தாங்க நம்ம ஜெர்மனி சகோதரி பிரியசகி அவர்கள்  http://piriyasaki.blogspot.in/

3. அவசர உலகில் அருசுவையுடன் காத்திருக்கிறேன் பழகலாம் வாங்க என அழைக்கும் தனிமரம் http://www.thanimaram.org/
(அன்பு சகோதரரே உங்கள் பெயர் தெரிவிக்க அன்போடு விண்ணப்பிக்கிறேன்)

4 அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து தன் எழுதப்படாத நாட்குறிப்பிலிருந்து திடம் கொண்டு போராடு எனும் அறைகூவல் விடுக்கும் அன்பு சகோதரர் திரு.சீனு அவர்கள் http://www.seenuguru.com/

5.இவர் வலைச்சரம், மதுரை பதிவர் சந்திப்புனு எப்பவும் பிஸியாக இருப்பவர் அன்பு சகோதரர் திரு.தமிழ்வாசி பிரகாஷ் http://www.tamilvaasi.com/

6. ஆஸ்திரேலியாவின் அதிசயங்களை அழகாய் நமக்கும் படம் பிடித்துக் காட்டுபவர் சகோதரி கீதமஞ்சரி http://www.geethamanjari.blogspot.com.au/

7. கலைகளையும் சிந்தனைகளையும் முத்துக்களாக சிதற விடுகிற அன்பு சகோதரி திருமிகு. மனோசாமிநாதன் அவர்கள் http://muthusidharal.blogspot.in/

8. இவங்க பிறந்த நாள் வாழ்த்து சொல்வதில் வல்லவர். இதற்காகவே விரைவில் 144 போட போறாங்க மக்கள் ( 144 தடை உத்தரவைச் சொல்லலங்க தொடரும் நண்பர்கள் பட்டியலைச் சொன்னேன் யாரும் மெர்சலாக வேண்டாம்) இவங்க தாங்க நாம கிராமத்து கருவாச்சி சகோதரி கலை அவர்கள்
http://kalaicm.blogspot.in/

நான் பெற்ற விருதை அனைவருடன் பகிர்ந்து கொள்ள ஆசை தான். ஆனாலும் மற்ற நண்பர்கள் பகிர்ந்து கொண்டதால் நான் பகிரவில்லை. இவ்ளோ இந்த சின்னப் பிள்ள பேச்சை காது கொடுத்துக் கேட்டதுக்கு மிக்க நன்றிங்க. நானும் விருது வாங்கினவங்க எல்லாத்துக்கும் தகவலைச் சொல்ல கிளம்புறேன். மீண்டும் சந்திப்போம். மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றிகள்..

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

22 comments:

 1. வாழ்த்துகள் சகோ

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி
   உடனடியாக வாழ்த்தியமைக்கு நன்றிகள்

   Delete
 2. தங்களுக்கு இரட்டை விருது கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்.

  எனக்கும் விருதை அளித்த தங்களுக்கு நன்றி...

  தங்களிடம் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி சகோ. விருதைத் தங்களோடு பகிர்ந்ததில் எனக்கு முன்னர் கிள்ளர்ஜியும் பகிர்ந்துள்ளதை இப்பொழுது தான் கண்டேன். நீங்களும் இரட்டை விருது வாழ்த்துகள் சகோ..

   Delete
 3. மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே...
  இன்னும் பல விருதுகள் உங்களை வந்தடைய விருப்பங்கள்...

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்! இன்னும் நிறைய அரும்புகள் மலரட்டும்!
  Tha.ma.3

  ReplyDelete
 5. வணக்கம் சகோதரரே!

  விருதினைப் பெற்று விருதுகளை வாரி வழங்கினீர்கள்!
  மிக அருமை! பலவிடயங்கள் உங்களிடம் அறிந்துகொண்டேன்!

  உங்களுக்கும் விருது பெற்றவர்களுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. வணக்கம்
  சகோதரன்

  விருதுகள் வந்து குவிகிறது.. பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.. வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் தம்பி! தங்களிடமிருந்து பெற்ற வலையுலக அன்பர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. இரட்டை விருது பெற்றமைக்கு - இரட்டிப்பு மகிழ்ச்சி!..
  இன்னும் பல விருதுகள் பெற்று ஏற்றமுற வேண்டும் என -
  இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 9. வணக்கம் பாண்டியன்...
  சிறப்பான பதிவர்/வலைப்பூ என்ற விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...
  தங்கள் விருதை எனக்கும் அளித்து பெருமை சேர்த்ததுக்கும் நன்றி...

  ReplyDelete
 10. தொடர்ந்து பதிவுலகில் பல விருதுகள், சிறப்புகள் பெற வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 11. விருது பெற்றமைக்கும் வாழ்த்துக்கள் சகோ. ரெம்ப நன்றி என்னையும் இணைத்தமைக்கு.

  ReplyDelete
 12. வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 13. விருது கிடைத்த உடன் frame பண்ணிடீன்களே!!! சூப்பர்!! வாழ்த்துகள் சகோ!

  ReplyDelete
 14. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் பாண்டியன்.

  ReplyDelete
 15. விருது பெற்றதுக்கு வாழ்த்துக்கள் பாண்டியன் சார்

  ReplyDelete
 16. விருது பெறும் தகுதி எனக்கு உண்டா என்ற ஆதங்கத்துடன் என் சுய பெயர் சிவநேசன் தியாகராஜா என்றாலும் வலையில் தனிமரம் என்றே வருவது அதிகம் பிடிக்கும் சுயம் இழந்த ஏதிலி அல்லவா என்பதால்!ம்ம் நன்றி சார்!

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்>.. அந்த பக்கத்து மேசையில வையுங்கோ.. நான் விருதுக்கு சொன்னேன்...

  விருதைப் பெர்றூக் கொண்ஓருக்கும் வாழ்த்துக்கள்>..

  7 வதா வோட் பன்ணீ உங்கல் பெருமையை தமிழ் மனாத்தில் மேல கொண்டு வந்திட்டேன்ன்ன் >. அப்போ எனக்கு விருது இல்லயா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)

  ReplyDelete
 18. வாழ்த்துகள்.
  தொடருங்கள்

  ReplyDelete
 19. வாழ்த்துகள் ! மலரும் அரும்புகளுக்கு ஆயிரம் விருகள் காத்திருக்கு...!

  ReplyDelete
 20. விருது பெற்ற‌தற்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! இந்த விருதை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி பாண்டியன்!!

  ReplyDelete