Thursday, 18 September 2014

ஃபேஸ்புக் பற்றிய அறிந்திராத பத்து உண்மைகள்


காலையில் எழுந்து ஃபேஸ்புக் பார்த்து
காபி குடித்து...

வேக வேகமா கோபித்துக் கொண்டு எங்க கிளம்பிறீங்க நண்பர்களே! இங்க வாங்க கொஞ்சம் நேரம், கோபம் எல்லாம் குறைந்த அப்பறம் கிளம்பலாம் இணையத் தளத்தில் அதிகமான பயன்பாடு ஃபேஸ்புக்காக (முகநூல்) தான் இருக்கிறது.நம்ம ஆளுங்க முகநூல்னு ரொம்ப சரியாக தான் தமிழாக்கம் கொடுத்துருக்காங்க. காலையில் எழுந்து தன் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பதற்கு முன் தன் முகத்தை ஃபேஸ்புக் இடம் காட்டி விடுகிறார்கள்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முகநூல் கணக்கு வைத்திருக்கிறார்கள். இவர்களின் இரவு தூக்கத்தைக் கூட இரவல் வாங்கிக் கொள்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதை விட முகநூல் போன்ற சமூகத்தளங்கள் மக்களிடம் பிரிக்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்திருப்பதும் அதன் மூலம் பற்பல நன்மைகள் விளைந்திருப்பதும் அதனினும் மறுக்கவியலா உண்மை. சரி தகவலுக்கு வருவோம்.

துவக்கம்
ஃபேஸ்புக் துவங்கிய முதல் கோடை காலத்தில் அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் குடும்பம் இந்த முயற்சியை காப்பாற்ற சுமார் 85,000 டாலர்களை செலவழிக்க வேண்டியிருந்தது. அந்த முக்கியத்துவம் வாய்ந்த முதலீடு, இந்த புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனத்தை உயிர்ப்புடன் வைக்க உதவியாக இருந்தது. இன்று இந்த நிறுவனம் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 1,20,000 கோடி ரூபாய்) மதிப்புள்ளதாக அறியப்படுகிறது.

முதல் பங்கு விற்பனை
ஃபேஸ்புக் முதன்முதலில் தன் பங்குகளை நாஸ்டாக் பங்குச்சந்தையில் விற்கத் துவங்கிய போது, அதன் பங்குகளின் விலை 38 அமெரிக்க டாலர்கள் என்ற நல்ல விலையை பெற்றன. அதன் பிறகு அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு பிரபலமான நிறுவனங்களான யாஹூ, க்ரூபான், லிங்க்டின், நெட்ப்ளிக்ஸ் மற்றும் ஐ எ சி ஆகிய நிறுவனங்களில் ஒட்டுமொத்த மதிப்பையும் மிஞ்சி சுமார் 100 பில்லியன் டாலர்கள் (சுமார் ஆறு லட்சம் கோடி ருபாய்) என்ற அபரிமிதமான அசுர வளர்ச்சியை அடைந்தது.

ஃபேஸ்புக்குடன் இணைந்து செயல்படும் இணைய தளங்கள்
சுமார் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட இணைய தளங்கள் ஃபேஸ்புக்கை இணைத்துக் கொள்ளும் வசதியை கொண்டுள்ளன.

20 நிமிடங்களில் என்ன நடக்கிறது என்பது உங்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கும்
ஒவ்வொரு 20 நிமிடமும் நம்பமுடியாத சுமார் 20 லட்சம் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அல்லது நட்பழைப்புகள் விடப்படுகின்றன. சுமார் 30 லட்சம் குறுஞ்செய்திகள் பரிமாற்றப்பட்டு சுமார் 10 லட்சம் தொடர்புகள் இணைக்கப்படுகின்றன.

ஒரு நாள் பயணம்
ஒரு நாளில் மட்டும், 35 கோடி படங்கள் பதிவேற்றம் (அப்லோட்) செய்யப்படுகின்றன. மேலும் சுமார் 450 பில்லியன் லைக்குகள் கொடுக்கப்படுகின்றன.

சீனா
சீனாவில் ஃபேஸ்புக் தடை செய்யப்பட்டிருந்தாலும், சுமார் ஒன்பதரை கோடி பேர் அதைப் பயன்படுத்துகின்றனர். ஆச்சரியம்... அல்லவா?

விவரங்கள் உள்ளடக்கம் (கன்டென்ட்)
ஃபேஸ்புக்கின் தொடர் உபயோகிப்பாளர்களுக்கு தினமும் சுமார் 1400 முதல் 1500 வெவ்வேறு விவரங்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன

500 டாலர் பரிசு! (இது நல்லாயிருக்கே)
ஃபேஸ்புக் நிறுவன விதிகளின் படி, உத்தரவாதமாக யாரேனும் அதன் மென்பொருள் விவரங்களில் குறைபாடுகளைக் கண்டறிந்தால் அவர்களுக்கு 500 டாலர் சன்மானமாக வழங்கப்படும்.

எண்ணற்ற மொழிகள்
இந்த உண்மை நம்புவதற்கு சற்று கடினமானது தான். ஃபேஸ்புக் உபயோகிப்பாளர்களுக்கு சுமார் 70 மொழிகள் உள்ளன.

ஃபேஸ்புக் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை வளர்ச்சி
2012-13 ஆம் ஆண்டு மட்டும் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 22 சதவிகிதம் உயர்ந்தது.

நன்றி: தமிழ் போல்டு ஸ்கை வலைத்தளத்திற்கு

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

18 comments:

 1. அனைத்தும் பிரமிக்கத்தக்க தகவல்கள் நண்பரே... நன்றி.

  ReplyDelete
  Replies
  1. இவ்வளவு சீக்கரமா! மின்னல் வேகத்தில் வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றிகள். ஜி நீங்க எங்கேயோ போயிட்டீங்க...

   Delete
  2. நான் எங்கும் போகவில்லை வலைப்பூவில்தான் வீழ்ந்து கிடக்கின்றேன் தாங்கள்தான் புதுமாப்பிள்ளை பிஸி....

   Delete
  3. தெய்வமே நீங்க எங்கோயோ போயிட்டீங்க எனும் அபூர்வ சகோதர்கள் படத்தின் நகைச்சுவை கண்டுள்ளீர்கள் தானே! அதைத் தான் கூறினேன். பூவில் வீழ்ந்து கிடப்பது சுகம் தானே! அதும் வலைப்பூவில் என்றால்!!!

   Delete
 2. ஆஹா விரிவான பதிவு...எத்தனை விவரங்கள்...நம்பவே முடியாத வளர்ச்சி...நன்றி சகோ..

  ReplyDelete
  Replies
  1. மிகுந்த நன்றிகள் சகோதரி வருகைக்கும் கருத்துக்குமாக

   Delete
 3. தினமும் பார்த்துக்கொண்டிருக்கும் முக நூல் குறித்து நான் அறியாத செய்திகள். பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. மிகுந்த நன்றிகள் சகோதரி வருகைக்கும் கருத்துக்குமாக

   Delete
 4. சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

  ReplyDelete
 5. இத்தனை விடங்கள் அங்கு இருக்கின்றதா?...
  ஆச்சரியம்தான்! நல்ல பகிர்வு!
  நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
 6. அறியாத செய்திகள். பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 7. அப்பப்பா...எத்தனை எத்தனை தகவல்கள்..
  உண்மையிலேயே பிரமிப்பாகத்தான் இருக்கிறது
  சகோதரரே...
  அறியத் தந்தமைக்கு நன்றிகள் பல..

  ReplyDelete
 8. பகிர்வுக்கு நன்றி பாண்டியன். அப்படியே கொஞ்சம் எனது பதிவையும் எட்டிப் பாருங்கள். உங்களுடைய பெயரையும் சேர்த்து இருக்கிறேன்.
  த.ம.4

  ReplyDelete
 9. அறியாத செய்திகள் நண்பரே
  நன்றி

  ReplyDelete
 10. முகநூல் பற்றிய அறியாத செய்திகள் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 11. ஒ!! f.b ல இவ்ளோ மேட்டர் இருக்கா!! நல்ல கலெக்ட் பண்ணுறீங்க சகோ டீடைலு:)))

  ReplyDelete
 12. அருமையான தகவல்கள் பாண்டியன்...

  ReplyDelete
 13. எழுத்தாளர் சொக்கன் பேஸ்புக் வரலாறு குறித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். வாய்ப்பு கிடைத்தால் படித்துப் பாருங்கள். அட்டகாசமாய் இருக்கும்...

  ReplyDelete