அரும்புகள் மலரட்டும்: September 2014

Thursday 25 September 2014

கணிதத்தில் சில சுவாரசியங்கள்


வணக்கம் நண்பர்களே
வணக்கம் என்பது ஐந்தெழுத்து
நண்பர்கள் என்பது ஆறெழுத்து
என்னென்னமோ பொழம்புறானே 
இதை எல்லாம் கேட்கிறது 
எங்க தலையெழுத்துனு நீங்க 
பொழம்புறது சத்தமா கேட்குது
இனி எல்லாமே கணக்கு தான்....

Wednesday 24 September 2014

மறுஜென்மம் பற்றிய சந்தேகங்கள்

வணக்கம் நண்பர்களே!

மறுஜென்மம் எனும் வார்த்தையில் கூட எனக்கு நம்பிக்கையில்லை என்று தான் சொல்வேன். ஆனாலும் எனது நண்பர்கள் முன் வைத்த வாதத்தால் ஏற்பட்ட ஐயங்களுக்கு உங்களின் மேலான எண்ணங்களை அறிந்து கொள்ளும் வகையில் சில கேள்விகளை முன் வைக்கிறேன். தகுந்த விளக்கங்கள் கிடைக்கும் எனும் நம்பிக்கையில்...

1. மனிதன் இறந்தவுடன் அவனுக்கு மறுஜென்மம் உண்டா?

Saturday 20 September 2014

இணையக் கவிதை



முன்னிரவு பின்னிரவு எனக்கில்லை
முயன்று படுத்தேன் முடியவில்லை
முப்பொழுதும் உன்மடியில் தவழுகிறேன்..

புத்தம்புது குழந்தைகளை நொடிக்கொருமுறை
பிரசவிக்கும் வித்தைப் பெற்றாய்
பாவிப்பய மனதைக் கெடுத்து வைத்தாய்..

Thursday 18 September 2014

ஃபேஸ்புக் பற்றிய அறிந்திராத பத்து உண்மைகள்


காலையில் எழுந்து ஃபேஸ்புக் பார்த்து
காபி குடித்து...

வேக வேகமா கோபித்துக் கொண்டு எங்க கிளம்பிறீங்க நண்பர்களே! இங்க வாங்க கொஞ்சம் நேரம், கோபம் எல்லாம் குறைந்த அப்பறம் கிளம்பலாம் இணையத் தளத்தில் அதிகமான பயன்பாடு ஃபேஸ்புக்காக (முகநூல்) தான் இருக்கிறது.நம்ம ஆளுங்க முகநூல்னு ரொம்ப சரியாக தான் தமிழாக்கம் கொடுத்துருக்காங்க. காலையில் எழுந்து தன் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பதற்கு முன் தன் முகத்தை ஃபேஸ்புக் இடம் காட்டி விடுகிறார்கள்.

Monday 15 September 2014

விருது வாங்கி கை எல்லாம் வலிக்குதுங்க நீங்க கொஞ்சம் பிடிங்களேன்

வலை உறவுகளுக்கு வணக்கம்

எல்லா புகழும் இறைவனுக்கே!!!

தமிழ் வலை உலகை கலக்கி வரும் THE VERSATILE BLOGGER AWARD சக எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் அற்புதமான விடயம்.
ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்!  
எனும் கவிஞர் வாலியின் வரிகள் இந்த விருதுக்கு எத்தனை பொருத்தம்.

Thursday 11 September 2014

ஆமை வேக அரசுப் பேருந்தும் அசுர வேக பள்ளி வாகனமும்



ஆமை வேக இரு சக்கர வாகனம் உங்களைப்
பின்தொடர்ந்தே பயணித்ததுண்டா?

சன்னலோர மரங்கள் உங்களை விட்டுப்
பிரிய அடம் பிடித்ததுண்டா?

நொடிக்கொரு முறை நொந்து கொண்டே
கடிகார முற்களைக் கண்டதுண்டா?

அப்படியானால் நீங்கள்
அரசுப் பேருந்தில் பயணித்துள்ளீர்கள்!



ணக்கம் நண்பர்களே! 
பிள்ளைக்கு என்ன ஆச்சு இப்படி கவிதையில பொழம்புதுனு தானே யோசிக்கிறீங்க? அதும் ஒன்னும் இல்லைங்க 
(அப்படினா ரெண்டு மூனு இருக்கும்னு உங்க கம்ப்யூட்டர் மூளை கணக்கு போட்ருக்குமே?)

Monday 8 September 2014

காதல் கடிதம்

உள்ளுக்குள் பிறப்பெடுத்து தொண்டைக்குள் சிக்கி
ஊமையாய் போன உணர்வுகளை
உரியவளுக்கு உரைத்திடும் உயிர்மொழி...