அரும்புகள் மலரட்டும்: வாருங்கள்! வாழ்த்துங்கள்!

Tuesday 8 July 2014

வாருங்கள்! வாழ்த்துங்கள்!

வலையுலகச் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்!


என் வாழ்நாளின் மகிழ்ச்சியான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் அளவில்லா மகிழ்ச்சியடைகிறேன். ஆமாங்க என் திருமணச் செய்தி தான். நாளை 09.07.2014 அன்று விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சுப்பிரமணிய திருமண மகாலில் காலை 9.00- 10.30 மணிக்குள் நடைபெற இருக்கிறது. திருமணம் பெண்வீட்டில் என்பதால் இன்று மாலை மாப்பிள்ளை அழைப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியும் அதே திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. அதன் பின்னர் 13.07.2014 அன்று மாலை 6.15 மணி முதல் மணப்பாறை மஹாலெட்சுமி திருமண மஹாலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அனைவருக்கும் நேரில் வந்து அழைப்பிதழ் கொடுக்க இயலாத சூழ்நிலை நண்பர்கள் அனைவரும் மன்னிக்கவும். இதனையே அழைப்பிதழாக ஏற்றுக் கொண்டு வருகை தந்து எங்களை வாழ்த்தியும் நிகழ்வுகளைச் சிறப்பித்துத் தருமாறு அன்போடு அழைக்கிறேன். என் மகிழ்ச்சியில் நீங்களும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென்பதே என் விருப்பம். எனவே அருகில் இருக்கும் நண்பர்கள், என் மீது அன்புள்ளம் கொண்ட நண்பர்கள் என அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்போடு வேண்டுகிறேன். வருக! வருக! நன்றி! நன்றி!...


இப்படிக்கு,
அ.பாண்டியன்,
மணப்பாறை.
வலைப்பக்கம்: http://pandianpandi.blogspot.com/
மின்னஞ்சல்: pandi29k@gmail.com

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

42 comments:

  1. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் பாண்டியன்.இன்று தொடங்கும் உங்கள் இனிய இல்லறம் நல்லறமாக, பொருள் ஈட்டி, இன்பம் வளர்க்கத் திருக்குறள் துணைநிற்கும். இரண்டு தமிழும் இதயத்தால் இணைந்து முத்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டுகிறேன் ( இதைப் படிக்கும் போது முத்தத் தமிழ் னு நீங்க படிச்சா அது இலக்கண வழுவன்று நண்பா..இயல்பு நவிற்சியே என்பது அகநடை) வாழ்க பல்லாண்டு, நும் புகழ் வளர்க பலநூறாண்டு. 13ஆம் தேதி நேரில் வந்தும் வாழ்த்துவேன்.

    ReplyDelete
  2. தங்களுக்கு எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்!
    த.ம.2

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் பாண்டியன் ஜி !

    ReplyDelete
  4. நீங்கள் நேரில் வந்து பத்திரிகை கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் ஒரே ஒரு விமான டிக்கெட்டை மட்டும் அனுப்பி வையுங்கள் போதும். நான் நேரே வந்து விடுகிறேன்.


    தங்களின் திருமணத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  5. தம்பி - உன்
    திருமண அழைப்புக் கண்டு
    மகிழ்ச்சி அடைகிறேன்!
    நம்பி - உன்
    மணநாளில் கலந்திட முடியாமைக்கு
    தொலை தூரத்தில் இருந்து
    நான் அழுகின்றேன்!
    தம்பி - நீ
    நம்பிய என் வாழ்த்து
    பின்னூட்டமாய் பகிருகிறேன்!

    அன்போடு, அறிவோடு, ஆளுமையோடு
    பதினாறு செல்வங்களும் பெற்று வாழ
    தமிழ் பேண
    பிள்ளைச் செல்வங்களும் பெற்று வாழ
    சல சல என்னும் மள மள என்னும்
    இரட்டைக் கிழவி போல
    வள்ளுவரும் வாசுகியும் போல
    பாண்டியனும் - ஜீவிதாவும் இணைந்து வாழ
    ஈழத்து யாழ்ப்பாணம், மாதகல் வாழ்
    யாழ்பாவாணன் (காசி.ஜீவலிங்கம்) வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  6. வணக்கம்
    சகோதரன்

    செய்தியை கேட்டவுடன் மகிழ்ச்சியாக உள்ளதுதாங்கள் அனுப்பிய மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றேன் என்னால் வரவில்லை என்றாலும் என்னுடைய சார்பாக என்னுடைய அண்ணா திண்டுக்கல் தனபாலன்அவர்கள் தங்களின் இல்லற நிகழ்வுக்கு வருவார் என்பதை நான் உறுதியாக சொல்லுகிறேன்.நான் அவருடன் எல்ல விடயங்களையும் பேசிவிட்டேன்... சரி தம்பி என்று பதில் சொன்னார்.
    நினைவுகளும் கனவுகளும்
    சுமந்தவண்ணம்
    இல்லறம் என்ற நல்லறப்பாதையில்
    அடி எடுத்து வைக்கும் தங்களுக்கு
    எனது இதயம் கனிந்த திருமண வாழ்த்துக்கள் சகோதரன்.
    வாழ்க வளமுடன்... வாழ்க வளமுடன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. வணக்கம்
    த.ம 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க..
    இறைவனின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிட்ட பிரார்த்திக்கிறேன்.
    வாழ்க பல்லாண்டு...!!!

    ReplyDelete
  9. இதயம் நிறைந்த திருமண வாழ்த்துக்கள்!..
    இல்லறம் எனும் நல்லறத்தில் - வாழ்க பல்லாண்டு!..
    வாழ்க நலமுடன்!.. வாழ்க வளமுடன்!..

    ReplyDelete
  10. மிக்க மகிழ்ச்சி நண்பர் பாண்டியன்! தங்கள் மணவாழ்க்கை இனிதே தொடங்கி வாழ்நாள் முழுவதும் தங்கள் இல்லற வாழ்க்கை இனிதே அமைய எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  11. இனிய நல்வாழ்த்துக்கள் சகோ.பாண்டியன். தங்களின் இல்லற வாழ்க்கை இனிதே அமைய எங்கள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. இறைவன் உலகின் அனைத்து சந்தோசங்களையும் வாரி வழங்கி வள்ளுவனும், வாசுகியும்போல் வாழ வாழ்த்துகிறேன், பாரி வள்ளலைப்போல்....
    அன்புடன்
    (என்பெயர் போடவில்லை காரணம் வாழ்துவதற்குறியதல்ல)

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் சகோதரா...

    நேரிலும் வந்து வாழ்த்துவேன்...

    ReplyDelete
  14. மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. உங்க சகோ மைதிலி சொன்னாங்க என் சகோ பாண்டியன் மிக ஸ்மார்ட் என்று அது இப்பதான் புரிந்தது. கல்யாணத்தை நாளை வைத்து இன்று கூப்பிடுவது..... நல்லது நல்லது எங்கடா இந்த மதுரைத்தமிழன் வந்து குட்டிக் கலாட்டா பண்ணிடுவானோ என்ற பயம்தானே....

    ReplyDelete
  16. அடிச்சாலும் பிடிச்சாலும் ஒன்னா வாழ்ந்துகணும்
    அடிச்சதற்கு ஒன்ணு பிடிச்சதற்கு ஒன்னு
    பதிவை போட்டுக்கணும் நல்ல பதிவை போட்டுக்கனும்

    ReplyDelete
  17. நண்பர்களே இனிமேல் பாண்டியனின் பதிவுகள் அதிகம் வாராது ஆடி மாசத்தில் அவர் பதிவுகள் அதிகம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது அதனால் இங்கு உஆரும் கூட்டம் கூட வேண்டாம்

    ReplyDelete
  18. இல்லறம் என்னும் நல்லறத்தில் அடியெடுத்து வைக்கும் அன்புச் சகோதர்க்கு இதயம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. பாண்டியன் சகோ
    உங்கள் மனம் போல நல்ல வாழ்க்கை அமையும். எல்லா நலமும் வளமும் நீங்கள் பெற்று சிறக்க வாழ்த்தும்
    அன்பு அக்கா

    ReplyDelete
  20. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  21. நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. அறம், பொருள், இன்பமென அகமகிழ்வோடு அகிலம் போற்ற அர்த்தமாய் அமையட்டும் உங்கள் திருமணவாழ்க்கை! இனிய திருமண வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
  23. மண வாழ்வில் எல்லா நலனும் பெற்று வாழ எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அறிமுகமாகி சில மாதங்களே ஆனாலும் என் மனதில் நன்கு பதிந்துவிட்டீர்கள். தங்களின் அன்பும், பழகும் பாங்கும் அனைவரையும் தங்களை நேசிக்க வைக்கும். மறுபடியும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. மணமக்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..
    வாழ்க வளமுடன்.
    வாழ்வில் எல்லா நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க இனிதாக!

    ReplyDelete
  25. சகோதரரே,

    வாழ்வின் சகல சுகங்களும் பெற்று, உங்கள் இல்லறம் சிறக்க எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  26. பாண்டியரே தங்கள் அழைப்பிதழ் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அனைவரையும் பார்க்கும் ஆவல் உண்டே இருந்தாலும். பல வித தடங்கல் உள்ளனவே. ஆகையால் பொறுத்துக் கொள்ளவும்.
    ஆனால் என் வாழ்த்துக்கள் என்றும் தங்களுக்கு உண்டு .

    இல்லறம் நல்லறமாக இருவரும் என்றும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ என்மனம் கனிந்த, இதய பூர்வமான வாழ்த்துக்கள்.பாண்டியா ....! தங்கள் அழைப்பிற்கு மிக்க நன்றி ......!

    ReplyDelete
  27. அன்பால் இசைப்பீர் ஆனந்த ராகம்!
    அகத்தில் ஆசைகள் பொங்க!
    இன்பம் சூழ்ந்திட இளமை வெல்ல!
    ஈடில்லா மகிழ்வும் தொடர!
    தென்றல் வந்து தேகம் தீண்ட!
    தெவிட்டா உறவும் துலங்க!
    மன்றில் மாலை மாற்றினீர் இன்று!
    மணமக்களே! வாழ்க! வாழ்கவே!

    திருமண பந்தத்தில் இணையும் இருவீரும்
    வாழ்வில் அனைத்துப் பேறுகளும் பெற்று
    நீடூழி வாழ்கவென உளமார வாழ்த்துகிறேன்!

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  28. மணமகளாரே, மணமகனாரே
    இணைந்தின் புற்றுநன் மக்களை ஈன்று
    பெரும்புகழ் பெற்றுநீ டூழி
    இருநிலத்து வாழ்க இனிது.

    என்னும் பாவேந்தரின் வரிகளால் வாழ்த்துகிறேன் நண்பரே

    ReplyDelete
  29. எல்லா நலங்களும் பெற்று நீடூழி வாழ்க. மனமார்ந்த இனிய திருமண நல் வாழ்த்துக்கள் பாண்டியன் -ஜீவிதா தம்பதியினரே.

    ReplyDelete
  30. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  31. இனிய திருமண நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரா...
    இல்லறம் சிறக்கட்டும்.

    ReplyDelete
  33. மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள் பாண்டியன். இருவரும் தினமும் திருக்குறள் படியுங்கள். (மு.வ . அறிவுரை படி ) வள்ளுவர் வழி வாழ முயற்சி செய்யுங்கள்.

    ReplyDelete
  34. மனமார்ந்த வாழ்த்துக்கள் பாண்டியன்.

    இல்வாழ்க்கை இன்று(09.07.2014) இனிதாய்த் தொடங்கி
    நல்வாழ்வு அமைந்திடவே நல்லோர் ஆசியுடன்
    மடையிலா வெள்ளம போல் மகிழ்ச்சி பொங்க
    தடையிலா இன்பம் பெற்று தரணியில் வாழ்கவே!

    ReplyDelete
  35. இல்லற வாழ்வு சிறக்க வாழ்த்துகள் சகோ!

    ReplyDelete
  36. திருமண வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. மன்னிக்கவும் சகோதரரே, திருமணத்தைக்காண ஆவலுடன் இருந்தேன். எதிர்பாராத ? விதமாக வெளியூர் செல்ல நேர்ந்துவிட்டது.....இல்லறம் சிறக்க இனிய நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. மகிழ்ச்சி. மனம் கனிந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  39. அருமை.. தெளிவான பதிவு.. பகிர்வினிற்கு நன்றி..

    Happy Friendship Day 2014 Images

    ReplyDelete
  40. திருமிகு அ. பாண்டியன் ஜீவிதா இணையர்
    திருமண வாழ்த்துமலர்

    மின்பூ வலையை அரசாளும்
    அன்புச் செல்வன் பாண்டியனும்
    பொன்பூச் செல்வி ஜீவிதாவும்
    போற்றும் வாழ்வில் இணைந்தனரே!
    இன்பூ பூத்து மணக்கட்டும்!
    இதயம் இனிப்பில் மிதக்கட்டும்!
    என்பூஞ் சொற்கள் தூவுகிறேன்!
    எழில்பூந் தமிழாய் வாழியவே!

    மலர்ந்து மணக்கும் சோலையென!
    மனத்தை மயக்கும் மாலையென!
    அலர்ந்து மணக்கும் எண்ணங்கள்
    அமுதைச் சுரக்கும் வண்ணமென!
    புலர்ந்து மணக்கும் நற்காலை
    புலமை மணக்கும் இன்பமென!
    கலந்து மணக்க மணமக்கள்
    காலம் மணக்க வாழியவே!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  41. திருமிகு அ. பாண்டியன் ஜீவிதா இணையர்
    திருமண வாழ்த்துமலர்

    மின்பூ வலையை அரசாளும்
    அன்புச் செல்வன் பாண்டியனும்
    பொன்பூச் செல்வி ஜீவிதாவும்
    போற்றும் வாழ்வில் இணைந்தனரே!
    இன்பூ பூத்து மணக்கட்டும்!
    இதயம் இனிப்பில் மிதக்கட்டும்!
    என்பூஞ் சொற்கள் தூவுகிறேன்!
    எழில்பூந் தமிழாய் வாழியவே!

    மலர்ந்து மணக்கும் சோலையென!
    மனத்தை மயக்கும் மாலையென!
    அலர்ந்து மணக்கும் எண்ணங்கள்
    அமுதைச் சுரக்கும் வண்ணமென!
    புலர்ந்து மணக்கும் நற்காலை
    புலமை மணக்கும் இன்பமென!
    கலந்து மணக்க மணமக்கள்
    காலம் மணக்க வாழியவே!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete