அரும்புகள் மலரட்டும்: உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

Saturday 21 June 2014

உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!
வலைப்பக்கம் தந்த நட்பு குடும்ப உறவாக மாறுவது சாத்தியமா! நிச்சயம் சாத்தியம் என்பது எனக்கு ஏற்பட்ட அனுபவம். திரு. கவிஞர் முத்துநிலவன் ஐயா, திரு.மது கஸ்தூரிரெங்கன், திருமதி மைதிலி கஸ்தூரிரெங்கன் இவர்களின் நட்பு வலைப்பக்கத்தில் அரும்பியது. ஆனால் இன்று குடும்பத்தில் ஒருவராக உலா வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் இதை விட நான் சம்பாதிப்பதற்கு என்ன இருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறது. இவர்கள் நேரடியாக கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும்,  இவர்களைப் போலவே என்னோடு நட்பு பாராட்டும் வலைப்பதிவர்கள் நிறைய. அவர்களும் என் மனதில் சகோதர்களாக, சகோதரிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் இது என்றும் தொடரும்..   அவர்களுக்காவும், இன்னபிற மனதினுள் எதிர்பார்க்கும் நண்பர்களுக்காகவும் இந்த பதிவு.



1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?எனது 101 ஆவது பிறந்த நாளை விட சிறப்பானதாக இருக்க வேண்டும்.

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. முக்கியமாக வாழ்க்கைப் பாடத்தை. அதை வாழ்ந்து சறுக்கி விழுந்து தான் கற்றுக் கொள்ள முடியும் என்பதாக உணர்கிறேன். இந்த கற்றலுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் சறுக்கி விழ தயார்.

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?இந்த நொடி. வாழ்க்கையின் எல்லா தருணங்களையும் நான் இந்த நொடியாக தான் பார்க்கிறேன். அடுத்த நொடி என்பது கூட அப்பொழுது அது இந்த நொடி தானே! அடுத்தவர்களின் வாழ்க்கையோடு விளையாடும், அடுத்தவர்களின் வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்கிற, சுயநலம் கொண்ட சில வேடிக்கை மனிதர்களை எண்ணி.

4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?என்னை சுதந்திரமாக உலாவ விட்டதற்கு முதலில் நன்றிகள். பகலில் நண்பர்களோடு பேசி வருவேன். இரவில் நீல ஆடைக்குள் முகம் மறைத்து சற்றே எட்டிப் பார்க்கும் நிலவு பெண்ணுடனும், அவளோடு விளையாடும் நட்சத்திர தோழிகளுடனும் மனதை பழக விட்டு மகிழ்ந்து வருவேன். (இந்த பதில் மதுகஸ்தூரி சகோ அவர்களோடு ஒத்திருக்கிறது)

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?
சுக துக்கங்களில் இருவரும் கரம் பிடித்து கடைசி வரை நடைபோட வேண்டும். இதில் யார் உயர்ந்தவர் என்றே பேச்சுக்கே இடமில்லை. இருவர் உள்ளமும் இரண்டென கலந்து விட்டால் அங்கே ஆள்வது அவர்களின் அன்பாகத் தான் இருக்க முடியும். அன்பால் ஆட்சி செய்யுங்கள் வாழ்க்கை உங்கள் வசம் என்று வாழ்த்தும் அளவிற்கு எனக்கு வயதில்லை. எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
ஒவ்வொருவரும் தனக்குள்ளே எட்டிப்பார்க்கும் வன்மத்தைக் கட்டுப்படுத்தப்பட வேண்டும் அல்லது கலையப்பட வேண்டும். அப்படி மட்டும் நடந்து விட்டால் உலகப் பிரச்சனைகள் எல்லாம் தானே சரியாகி விடும்.
சிலையும் நீயே
சிற்பியும் நீயே உன்னை நீ சரி செய்து கொள்
உலகம் தானாக சரியாகி விடும்
எனும் வாசகமே என்றும் மனதில்..

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
பெரும்பாலும் நண்பர்களிடம். அவர்கள் என்ன தான் சொன்னாலும் எனக்குள் இருக்கிறவன் (மனது) அனுமதி தந்தால் செயலாக்குவேன்.

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
அவர்களின் மனதில் மண்டிக்கிடந்த தவறான எண்ணம்  வெளி வர நான் கருவியாக இருந்திருப்பதை எண்ணி மகிழ்ச்சிக் கொள்வேன்.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
இழப்பு என்பது எவராலும் ஈடு செய்ய இயலாது தான். இருப்பினும் அவளின் எண்ணங்கள், கனவுகள் எல்லாவற்றையும் நீ நிறைவேற்றவாய் என்ற நம்பிக்கையில் அவளின் கடைசி மூச்சு நின்றிருக்கிறது. ஆதலால் நீ மெல்ல எழு.. அவளின் எண்ணங்களுக்கு உயிர் கொடு... உன் கரம் பற்ற, தோள் கொடுக்க நான் இருக்கிறேன் என்பேன்..

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
இதோ இப்ப பண்ணிட்டு இருக்கேன்ல. வலைப்பக்கங்கள் படிப்பது, புத்தகம் படிப்பது, தொலைக்காட்சியில் கிரிகெட் ஒன்று தான். எதிர்கால திட்டமிடல் என்று பெரிதாக இல்லாவிட்டாலும் அது பற்றிய சிந்தனைகள் மறுப்பதற்கில்லை.

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

27 comments:

  1. வணக்கம் சகோ.
    பதில்கள் அருமை. குறிப்பாக எட்டாவது கலக்கல்..
    வாழ்த்துக்கள் சகோதரரே. த.ம.1

    ReplyDelete
  2. பதில்கள் ஒவ்வொன்றும் ஆணித்தரமாக உள்ளது நல்லபதிவு நண்பரே....

    ReplyDelete
  3. வணக்கம் சகோ!

    அருமையான பதில்கள்! நல்ல நல்ல சிந்தனைகள்!
    ஆரோக்கியமான வகையில் பதில்களைத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள்!

    பாராட்டுடன், பகிர்விற்கு இனிய நன்றியும் சகோ!

    ReplyDelete
  4. வணக்கம்
    சகோதரன்.

    தங்களின் கேள்விக்கான பதிலை மிக அருமையாக பகிர்ந்துள்ளீர்கள்...வாழ்த்துக்கள்
    அதிலும் 6வது வினாவுக்கு மிக அருமையாக பதில் சொல்லியுள்ளீர்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. நல்ல பதிவு.

    ஆம் நட்பு வட்டங்கள்...அருமை அருமை.

    நன்றி.

    ReplyDelete
  6. பாண்டியன் நன்றாக எழுதியுள்ளீர்கள்
    இனிய வாழ்த்து.
    வாருங்களேன் என் வலைப்பக்கமும்.

    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  7. அழகாகப் பதில்கள் கொடுத்திருக்கிறீங்க பாண்டியன்... என்னாது 101 வயதை விடவா? :)) இது ஓவரா தெரியல்ல :)

    ReplyDelete
  8. அருமையான பதில்கள்! அர்த்தமுள்ளவையாக அமைந்தன! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. அருமையான பதில்கள் பாண்டியரே அசத்திட்டிங்க வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  10. எவ்வலைப் பக்கம் சென்றாலும்
    மதுரைத் தமிழனின் பங்களிப்புத் தெரிகிறது
    பதிலகள் அருமை
    நன்றி நண்பரே

    ReplyDelete
  11. வணக்கம் பாண்டியன் !

    இயல்பான பதில்கள் .அர்த்தமுடன் தூரநோக்கு பார்வை அத்தனையும் அருமை

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  12. //இவர்கள் நேரடியாக கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும்///
    பாண்டியா..........கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உம்மை இந்த் தொடரில் முதலில் அழைப்பு விடுவித்தது நாந்தான்யா.....

    ReplyDelete
    Replies
    1. மதுரைத் தமிழர் வலைநண்பர்கள் பலரையும் ஒரு சுற்றுச் சுற்ற வைத்துவிட்டீர்களே... வாழ்த்துகள் நண்பரே. புதிய நல்ல யோசனைகளை ஈகோ பார்க்காமல் செயல்படுத்தும் நல்ல நண்பர் வட்டம் உருவாகியிருப்பதைத்தான் இது காட்டுகிறது. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி மதுரைத் தமிழ் நண்பரே.

      Delete
  13. சகோ ஒரு விஷயம் தெரியுமா? இந்த ரிலே ரேஸை ஆரம்பித்துவைத்த தமிழன் சகோ முதன் முதலா விடுத்த நேரடி அழைப்பில் நீங்கள் இருக்கிறீர்கள்:)
    நீங்க சொன்னது உண்மைதான் சகோ இந்த வலைப்பூ ஒரு அழகான குடும்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. :)) இனியா, கிரேஸ் எல்லாம் ரொம்ப வருஷம் பழகியதை போல் எண்ணம் தோன்றுது:)
    பதில்கள் ஆச்சரிய பட வைக்கின்றன சகோ!! இந்த வயதில் என்ன ஒரு தெளிவு!! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  14. வெகு சிரத்தையோடு பதில்கள் வந்திருக்கின்றன...
    உங்கள் குரலில் பதில்களை வாசித்துப் பார்த்தேன் ...
    நேரில் பேசுவதை விட எழுத்தின் மூலம் பேசுவதில் உள்ள சக்தியை உணர்ந்தேன்..
    வாழ்த்துக்கள் சகோ
    வாக்குண்டாம் நல்ல ... நான் சொன்னது தமிழ் மன வாக்கைப்பா
    www.malartharu.org

    ReplyDelete
  15. /// மனது அனுமதி தந்தால் செயலாக்குவேன்... //

    பாராட்டுக்கள்...

    ReplyDelete
  16. உண்மைதான். வலை நட்பு குறிப்பாக தமிழ்மணம் நட்புகள் குடும்ப உறவாக மாறித்தான் இருக்கு!

    ReplyDelete
  17. அனைத்து பதில்களும் அருமையான பதில்கள்.
    தங்களின் ஆறாவது பாதிலின் மூலம் தான் ஒரு ஆசிரியர் என்று மீண்டும் நிரூபித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. அனைத்துப் பதில்களும் அருமை....
    வாழ்த்துக்கள் சகோதரா...

    ReplyDelete
  19. அருமை பாண்டியன்.. ஆறாவது பதில் கடைசியில் உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்வதாக உண்மையைச் சொன்னதும் அழகு. உங்களின் வெற்றியில் உண்மைதான் அடிப்படை. நண்பர்கள் சொன்னாலும் எனக்குச் சரியென்று தோன்றுவதைச் செயல்படுத்துவேன் என்றதுதான் சரி. தெளிந்த சிந்தனையைத் தெளிவாகச் சொன்னவிதம் அருமை.

    ReplyDelete
  20. பதில் எண் 4. அமாவாசை அன்று?

    ReplyDelete
  21. எல்லா பதில்களுமே அருமை! தம்பி! அதுவும் 2 கேள்விக்கான பதிலும், 6 வது பதிலும் தங்களின் பண்பட்ட மனதைக் காட்டுகின்றது! மிகவும் அருமை! ஒவ்வொருவரும் இந்த தொடர் வலைப்திவில் எத்தனை நல்ல பாடங்களைக் கற்றுத் தருகின்றார்கள்!

    தாங்கள் சொல்லி இருப்பது போல் இந்த வலை நட்பு மிகவும் இனிமையான ஒரு குடும்பமாகிவிட்டது என்பது உண்மைதான்! அதில் நாங்களும் ஒருவர் என்பதை நினைக்கும் போது மனம் பூரிப்படைகின்றது!

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்! தம்பி!

    ReplyDelete
  22. "வாழ்ந்து சறுக்கி விழுந்து தான் வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதாக உணர்கிறேன்" என்கிறீர்களே, இந்தப் பாடத்தைப் படித்து முடிப்பதற்குள் பலருக்கு வாழ்க்கையே முடிந்து விடுகிறது நண்பரே! உங்களுக்கு அந்த ஞானம் இளம் வயதிலேயே வந்ததுதான் பெருமை! நீங்கள் அளித்த பதில்களின்படி வாழ்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  23. என்றுமில்லாத
    இணையற்ற பதிலடிகள்
    சிந்திக்க வைக்கின்றன

    ReplyDelete