Monday, 2 June 2014

எவன் வைத்த பெயர்?


நாய்குட்டிக்கு ஒரு வாய்
பூனைக்குட்டிக்கு ஒரு வாய்
என பகிர்ந்து உண்ணும் தாய்மை!

வீட்டிற்குள்ளே படுக்கை விரித்தும்
இல்லாத மேற்கூரையின் வழியே
நட்சத்திரங்களோடு பழகும் வாய்ப்பு!

இயந்திரக் காற்றை இரவல்
வாங்காமல் இயற்கையின் காற்றை
உள்வாங்கும் உன் சட்டையின் ஓட்டைகள்!

உன் ஒற்றை வாக்கினில்
ஒருவனை உயரே ஏத்தும்
உன் பெருந்தன்மை!

உண்மையின் இருப்பிடமாய் நீயிருந்தும்
உன் உழைப்பினை உறிஞ்சி
உயிர் வாழும் எசமான்கள்!

அந்நியராயினும் முகம் மலர்ந்து
வரவேற்கும் உன் வீட்டு
மூடாத வாசல் கதவுகள்!

அடுத்த வீட்டில் அலறலென்றால்
அடுத்த கணம் ஓடி வரும்
அன்பான குணம்

முற்றத்தில் நீ அமர்ந்தால்
மூச்சுக்குழலை நிரப்ப முந்திவரும்
அசுத்தமில்லாக் காற்று!

இத்தனையும் நீ பெற்று
மகிழ்வோடு வாழ்கையிலே! -உமக்கு
ஏழையென்று எவனடா பெயர் வைத்தான்?


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

68 comments:

 1. அய்யா,
  வணக்கம்.
  பணமிருக்கும் மனிதரிடம் குணமிருப்ப தில்லை!
  குணமிருக்கும் மனிதரிடம் பணமிருப்ப தில்லை!
  உண்மைதான்! நல்ல கவிதை! இன்னும் வளர்க!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   தங்களிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. நீங்கள் எழுதுவது தான் கவிதை. இதெல்லாம்? நடை பழகும் சிறுகுழந்தை தான் நான். விழுந்தாலும் எழுந்து தொடர்கிறேன். முழுமையான நடை பயிற்சியாலும் முயற்சியாலும் வரும் எனும் நம்பிக்கையில்.

   Delete
 2. காசு இருந்தால் பேர் சொல்ல ஆயிரம் பேர் ,இல்லாததால் எல்லோர்க்கும் ஒரே பேர் ஏழை !
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. எவ்வளவு கொடியவனாகினும் காசு இருந்தால் அவன் பக்கம் நாலுபேர். எவ்வளவு நல்லவனாகினும் அவன் ஏழை என்றால் கேட்பாரும் பாட்பாரும் அற்று தான் வாழ்கிறார்கள். கருத்துரைக்கும் வருகைக்கும் நன்றி சகோதரர்.

   Delete
 3. நீர் மனதால் ''மாடி வீட்டு ஏழை'' யய்யா....
  Killergee
  www.killergee.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. என்னை வச்சு காமெடி எதும் பண்ணலயே கில்லர் ஜி. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்

   Delete
 4. அன்பான குணம் அதுவே சிறப்பு + உயர்வு...

  ReplyDelete
  Replies
  1. இதை விட ஒரு வரியில் எப்படி சொல்ல முடியும். அழகான வரி. கருத்துக்கு நன்றிகள் சகோதரர்

   Delete
 5. //இத்தனையும் நீ பெற்று மகிழ்வோடு வாழ்கையிலே! -உமக்கு
  ஏழையென்று எவனடா பெயர் வைத்தான்?//

  ஒருவேளை, இவைகளில் ஏதுமே கிடைக்காத பணக்காரப்பயலுகள் வைத்திருப்பான்களோ !

  ReplyDelete
  Replies
  1. இவர்களை வைத்து உயர்ந்தவர்கள் இவர்களுக்கு இட்ட பெயர் ஏழை. அன்பான கருத்துக்கும் எழுத்து பிழைகளை ஒரு ஆசானைப் போல் சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் ஐயா.

   Delete
 6. //அடுத்த குகணம் ஓடி வரும்//

  இதில்
  ’அடுத்த’வுக்கு
  அடுத்த
  ‘கு’
  எ த ற் கு ?

  எடுத்துவிட்டால் இன்னும் எடுப்பாக இருக்குமே.

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் தட்டச்சு பிழையும் என் கவனக்குறைவும் தான் காரணம். தவிர்க்கப் பார்க்கிறேன் ஐயா.

   Delete
 7. வணக்கம் சகோ..
  த.ம நான்கு..
  கவிதை அருமை
  ஏழ்மை கூட ஒருவிதத்தில் வரமே... இல்லையா?
  ரான்சம் என்கிற படத்தில் கடத்தப் பட்ட குழந்தையை கண்டிபிடிக்க இருந்த ஒரு காவல் அதிகாரி திடீரென வீட்டுக்காரிக்கு போன் செய்து குழந்தைகள் பத்திரமா நல்வேளை நம்மிடம் பணம் இல்லை என்று சொல்வான் ..
  அது நினைவிற்கு வந்தது உங்கள் கவிதையைப் படித்த பொழுது..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ
   முதலில் மதிப்பெண் அப்புறம் கருத்துரையோ! ஊக்குவிக்கும் உங்கள் கருத்துரைக்கு அன்பான நன்றிகள் சகோ..

   Delete
 8. ஆஹா..
  சிறப்பு..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றீங்க சகோ.

   Delete
 9. இந்தப் பண்புகள் இல்லாத பணக்காரனும் உண்மையில் ஏழை தானே பாண்டியரே. ஏழைக்கு படுத்தவுடன் தூக்கம் வந்து விடும் உழைத்து களைத்தும் இருப்பார்கள். பணக்காரனுக்கு படுத்தாலும் தூக்கம் வராது. வயிறார உண்ணவும் முடியாது. நல்ல பதிவு. நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. உண்மையை மிக அழகாக சொன்னீர்கள் சகோதரி. எல்லாம் இருந்தும் வயிறார உண்ணவும், அடுத்தவனுக்கு உதவாத மனம் கொண்டவன் தானே ஏழை! தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள் சகோதரி. தங்கள் நட்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி..

   Delete
 10. அருமையான பாடல்.

  இதயத்தில் என்றும் இரங்காது, காலை
  உதயத்தைக் கண்டும் உவக்காது, வீரமற்றுக்
  கோழையாய்க் கும்பிட்டு வாழ்பவரை மட்டுமே
  ஏழையென்றே என்றும் எழுது!

  வாழ்த்துக்கள் அ. பாண்டியன்.

  ReplyDelete
  Replies
  1. கவியால் கருத்துரை தந்து வாழ்த்திய அன்பின் சகோதரிக்கு எனது அன்பான நன்றிகள் பல. தொடர்வோம்..

   Delete
 11. Replies
  1. மிக்க நன்றீங்க சகோதரி

   Delete
 12. வித்தியாசமாக அற்புதமாகச் சொன்னீர்கள்
  ஆம் அவனை ஏழையாகப் புரிந்து கொள்பவந்தான்
  நிச்சயம் ஏழை
  மனம் கவர்ந்த கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஊக்குவிக்கும் கருத்துகள் தந்து உற்சாகப்படுத்தும் உங்கள் நல்ல குணத்திற்கும் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் ஐயா

   Delete
 13. Replies
  1. மிக்க நன்றீங்க ஐயா

   Delete
 14. அழகான கவிதை. இருப்பவனை விடவும் இல்லாதவனுக்குதான் நாளைய பொழுது பற்றிய கவலையில்லாமல் படுத்தவுடனேயே தூக்கம் வருகிறது. உண்மைதானே.. பாராட்டுகள் பாண்டியன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி.
   முற்றிலும் உண்மை. வருகை தந்து கருத்திட்டு பாராட்டியும் மகிழ்ந்தமைக்கு என் அன்பு நன்றிகள் பல.

   Delete
 15. பணம் இருப்போர் மட்டுமே பணக்காரர்கள் இல்லை
  அருமை நண்பரே

  ReplyDelete
  Replies
  1. இருந்தும் ஈய மனம் இல்லாதவனுக்கு பணக்காரன் எனும் பட்டம் கூட யார் கொடுத்தது ஐயா! தங்கள் அன்பான வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றிகள் ஐயா

   Delete
 16. Replies
  1. மிக்க நன்றீங்க ஐயா

   Delete
 17. வணக்கம் சகோ.நலம்தானே. கவிதை அழகான,ஆழமான வரிகள். நன்றாக எழுதியிருக்கிறீங்க சகோ.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அன்பின் சகோதரியின் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள். தொடர்ந்து பயணிப்போம்.

   Delete
 18. அன்பின் பாண்டியன்!..
  மனதைக் கலக்கி விட்டது - தங்களின் கவிதை!..
  பாதிக்கு மேல், படிக்க முடியாமல் - கண்கள் குளமாகி விட்டன.
  மனதை (தற்காலிகமாக) கல்லாக்கிக் கொண்டேன்..

  இங்கு பெரும்பாலானவர்க்கு அடிப்படை இப்படித்தான் இருக்கின்றது. அவர்களுள் நானும் ஒருவன் என்பதில் எனக்குப் பெருமையே!..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. முதலில் தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும். படித்து விட்டு எனக்கு அலைபேசியில் அழைத்து விம்மிய குரலில் பேசினீர்கள். உங்களின் குழந்தை மனம் நன்றாக புரிந்தது ஐயா. உங்களைப் போன்றவர்களுக்காவது நான் தொடர்ந்து எழுத வேண்டும் ஐயா. தங்களின் இளகிய குணத்தில் நான் நிலைகுழைந்து விட்டேன் என்பதும் உண்மை. அடுத்தவர்களுக்காக இரங்குபவன் தான் மனிதன் ஐயா. அந்த வகையில் நீங்கெல்லாம் மாமனிதர். உங்கள் நட்பு கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் ஊருக்கு வரும் போது அவசியம் தெரிவிக்க வேண்டும். வருகைக்கும் அழைப்புக்கும் மிக்க நன்றிகள் ஐயா..

   Delete
 19. "ஏழையென்று எவனடா பெயர் வைத்தான்?" என்று முடிய
  எடுத்துரைத்தீர் ஏழை நிலை நன்றே!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   தங்கள் வருகையும் கருத்தும் என்னை மென்மேலும் உயர்த்தும். மிக்க நன்றீங்க ஐயா.

   Delete
 20. சிந்திக்கவைக்கும் வினா..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் நண்பரே
   தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்த நட்பில் இணைந்து பயணிப்போம். நன்றீங்க..

   Delete
 21. எங்கள் அம்மா ஒன்று சொல்லுவார்கள். பணக்காரர்களிடம் ஒன்போது ரூபாய் இருக்கும். அடுத்தவனுடைய கஷ்டதிற்கு ஒரு ரூபாயை கொடுத்து உதவ மாட்டார்கள். மேலும் ஒரு ரூபாய் கிடைத்தால் பத்து ரூபாயாகிவிடும் என்று எண்ணுவார்கள். இதே ஏழையோ, உடனே அந்த ஒரு ரூபாயை கொடுத்து உதவுவான்.

  அந்த இரக்க குணம் ஏழைகளிடம் தான் அதிகம் காணப்படும்.
  உங்களுடைய கவிதையை படித்தவுடன், இது தான் நியாபகத்துக்கு வந்தது சகோதரா..
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அம்மாவின் வாய்மொழிகளை எங்களுக்காக பகிர்ந்தமைக்கு முதலில் நன்றிகள் சகோதரர். அவரின் குணம் உங்களுக்கு இருக்கும் என்பதால் மனிதநேயமிக்கவராக தான் நீங்கள் இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன். என் பதிவு அம்மாவின் சொற்களை நியாபகப்படுத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி சகோதரர்.

   Delete
 22. அருமை! சிறப்பான கவிதை! சிறப்பான சிந்தனை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ.
   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

   Delete
 23. பெயர் பொருத்தம் இங்கே பிழையாகிப்போனதோ/

  ReplyDelete
  Replies
  1. ஐயா மிகச் சரியாக சொன்னீர்கள். தங்கள் சிந்தனையோடு என் சிந்தனையும் ஒத்துப் போகியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

   Delete
 24. Replies
  1. மிக்க நன்றீங்க ஐயா

   Delete
 25. அன்பில் தொடங்கி அறச்சீற்றத்தில் முடிந்த அற்புதக் கவிதை!
  மிகவும் சிறப்பான படைப்பு பாண்டியன். “குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி..“ குறள் எழுதப்பட்டதென்னவோ துறவிகளுக்குத்தான் ஆனால் உங்களைப் போன்றவர் கோவப்படும்போது அந்த நியாயத்தின் தகிப்பு சூரியனையும் சுடும். இதுபோலும் படைப்புகள் தொடரட்டும் நண்பா. நன்றி. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   தங்களின் தொடர் ஊக்கம் தான் இது போன்ற சிந்தனைகள் ஊற்றெடுக்க காரணமாக இருக்கிறது. உங்கள் நட்பு என்னை வழிநடத்துவதோடு சமூக சிந்தனைகளையும் தந்திருப்பதில் நான் ரொம்பவே மகிழ்ச்சி ஐயா. தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள் குறைகள் இருப்பினும் சுட்டிக்காட்டுங்கள். கருத்துக்கு அன்பான நன்றிகள் ஐயா.

   Delete
 26. இத்தனையும் நீ பெற்று
  மகிழ்வோடு வாழ்கையிலே! -உமக்கு
  ஏழையென்று எவனடா பெயர் வைத்தான்?//

  மாப்பிள்ளைத் தம்பி இப்படிப் போட்டு அசத்திட்டீங்களே! அப்படியே மெய் மறந்து விட்டோம்! எப்படியெல்லாம் அற்புதமான சிந்தனைகள் உருவாகின்றன என்று! நிஜமாகவே வலையுலகம் எங்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்தான்! தங்களைப் போன்ற எழுத்தாளர்கள் எல்லாம் கிடைக்கப் பெற!

  புது மாப்பிள்ளைக்கு எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! தங்கள் மண வாழ்க்கை சீரும் சிறப்புடனும் அமைய எங்கள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   உங்கள் அன்பான கருத்துரைக்கு முதலில் நன்றிகள். உங்களின் நட்பு கிடைத்ததற்கும் வலைப்பூவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அருமையான இரு உள்ளங்களிலிருந்து அன்பு நிறைந்த வார்த்தைகளால் நான் வாழ்த்து பெற்றிருக்கிறேன். இதைவிட என்ன வேண்டும் எனக்கு என்று தோன்றுகிறது. உங்கள் அன்பு என்னை மேலும் உற்சாகப்படுத்தும். என் திருமணத்திற்கு உங்கள் வாழ்த்துகளும் ஆசிர்வாதமும் அவசியம் எனக்கு வேண்டும். அருகில் என்றால் அவசியம் வர வேண்டுமெனும் அன்பு கட்டளை இட்டிருப்பேன். இருப்பினும் முயல்க. நன்றீங்க..

   Delete
 27. செம...செம்ம...ஏழை யார் என சிந்திக்க வைத்துவிட்டீர்கள் சகோ.
  சி.எல். எழுதிட்டேன். மணவை வரும் நாளை ஆவலோடு பார்த்திருக்கிறேன்,வாழ்த்துக்கள் சகோ:))

  ReplyDelete
  Replies
  1. அன்பின் சகோதரிக்கு வணக்கம்
   தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றிகள்.
   என் சகோதரி இல்லாத திருமணமா! அவசியம் விடுமுறை எடுத்து வருவீர்கள் என்று தெரியும். திருமணம் திருக்கோவிலூரில் சகோதரி. வரவேற்பு மணப்பாறையில். முன்னதாகவே இரு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

   Delete
 28. பணம் மகிழ்ச்சியின் அளவுக்கோல் இல்லை சகோ!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர்
   உங்களின் மனம் அனைவருக்கும் இருந்து விட்டால் ஏழை என்ற வார்த்தை எப்பவோ மறைந்திருக்கும். தங்களின் அன்பு குணத்திற்கு நன்றிகள்.

   Delete
 29. வணக்கம்
  சகோதரன்

  கவிதையின் ஒவ்வொரு வரிகளையும் ரசித்து ரசித்துப் படித்தேன்.... மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ
   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

   Delete
 30. நல்ல கவிதை.
  கருத்தும் பொருத்தமான வார்த்தைகளும் இணைந்த சிறப்பான கவிதை வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   தங்களின் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி. கருத்துக்கு மிக்க நன்றிகள் ஐயா. உங்கள் சந்திப்பின் நிகழ்வுகள் இன்னும் என் நினைவுகளில். மீண்டும் ஒருமுறை என் திருமணத்தில் சந்திக்க வேண்டும் ஐயா.

   Delete
 31. // இத்தனையும் நீ பெற்று
  மகிழ்வோடு வாழ்கையிலே! -உமக்கு
  ஏழையென்று எவனடா பெயர் வைத்தான்?//
  அருமையான கேள்வி வந்த கோணம் நன்று.
  சகோதரா..
  வாழ்த்துக்கள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. சகோதரிக்கு வணக்கம்
   தங்களின் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி கருத்துக்குமாக// ,மிக்க நன்றிகள் சகோதரி..

   Delete
 32. மிக அருமையான கவிதை. பணத்தைவிட சிறந்தது நல்ல குணம்தான்.

  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் சகோதரர். தொடர்ந்த நட்பில் இணைந்திருப்போம். நன்றீங்க..

   Delete
 33. கடைசி சொற்றொடர்களில் கவிதையின் முழுப் பொருளும் ஆதங்கமும் வெளிப்படுவதைக் காணமுடிந்தது. பாராட்டுகள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   தங்களைப் போன்ற ஆய்வாளர்களின் நட்பு கிடைக்க நான் தான் பெரும்பேறு பெற்றிருக்க வேண்டும். வருகை தந்து கருத்தும் தந்திருக்கீறீர்கள் என்றால் சொல்லவா வேண்டும்! மிக்க நன்றிகள் ஐயா..

   Delete
  2. வணக்கம் தோழரே தங்களின் எளிமையான வரிகள் ஏழையின் எஜமான வாழ்க்கையைக் காட்டிவிட்டது வாழ்த்துகள்..

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete