அரும்புகள் மலரட்டும்: June 2014

Tuesday 24 June 2014

வலைச்சரத்தில் அ.பாண்டியன்


அன்பான வலை உறவுகளுக்கு வணக்கம்.

தங்களின் அன்பான வழிகாட்டலாலும், கருத்துகளாலும், ஊக்கத்தாலும் என் வலைப்பக்கம் விரைவில் ஓராண்டை நிறைவு செய்ய இருக்கிறது. நடைபழகும் சிறுகுழந்தை தான் நான் இன்று வரை.. ஆனாலும் தொடர்ந்து நடக்கிறேன் விழுந்து விட்டால் தாங்கிப் பிடிக்க உங்கள் கரங்கள் தயாராக இருக்கும் எனும் நம்பிக்கையில்...

Saturday 21 June 2014

உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!
வலைப்பக்கம் தந்த நட்பு குடும்ப உறவாக மாறுவது சாத்தியமா! நிச்சயம் சாத்தியம் என்பது எனக்கு ஏற்பட்ட அனுபவம். திரு. கவிஞர் முத்துநிலவன் ஐயா, திரு.மது கஸ்தூரிரெங்கன், திருமதி மைதிலி கஸ்தூரிரெங்கன் இவர்களின் நட்பு வலைப்பக்கத்தில் அரும்பியது. ஆனால் இன்று குடும்பத்தில் ஒருவராக உலா வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் இதை விட நான் சம்பாதிப்பதற்கு என்ன இருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறது. இவர்கள் நேரடியாக கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும்,  இவர்களைப் போலவே என்னோடு நட்பு பாராட்டும் வலைப்பதிவர்கள் நிறைய. அவர்களும் என் மனதில் சகோதர்களாக, சகோதரிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் இது என்றும் தொடரும்..   அவர்களுக்காவும், இன்னபிற மனதினுள் எதிர்பார்க்கும் நண்பர்களுக்காகவும் இந்த பதிவு.



Wednesday 18 June 2014

அரிதான தலைவர் கக்கன் அவர்களின் பிறந்த நாள்


வணக்கம் நண்பர்களே! இன்று ஜீன் 18 வாழ்ந்து வரலாறு ஆன எளிமையின் உருவமான திரு.கக்கன் அவர்களின் பிறந்த நாள்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தும்பைப்பட்டி எனும் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பில் தோன்றினார் இவர். சேரிப்பகுதியின் கோயிலுக்கு கக்கன் அவர்களின் தந்தை தான் பூசாரி. அந்த கோயிலில் பெருக்கி, சுத்தம் செய்து பூஜையில் ஈடுபடுகிற பழக்கம் கக்கன் அவர்களுக்கு இளம் வயதிலே இருந்தது.

Sunday 15 June 2014

போலி சாமியார்களும் பொல்லாத சோதிடர்களும்


வணக்கம் நண்பர்களே! ஆத்தா, வீடுகாத்த பேச்சி, ராக்காயி, சீலைக்காரி, பெத்தன்னா, மூலக்கார பாண்டி, அங்காள ஈஸ்வரி, அங்காளம்மா, கங்கங்கம்மா, ஒச்சக்கா..கா... கா ஏய்...... இப்படி கூவி பக்கத்துல இருக்கிறவனை பயமுறுத்திட்ட அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டதுண்டா? தன் பிழைப்புக்காக சாமியர்களும் சோதிடர்களும் அடுத்தவர்களின் வாழ்க்கையில் விளையாடிய கதைகள் ஏராளமாக நம் சமூகத்தில் பரந்து பட்டு இருக்கிறது.

Saturday 7 June 2014

வாருங்கள்! இது சொர்க்கத்திற்கான அழைப்பு!


இந்த பிரபஞ்சத்தில் வாழும் மனிதர்களில் யாரிடம் சென்று நீங்கள் இறந்தவுடன் சொர்க்கத்துக்கு போக வேண்டுமா? நரகத்துக்கு போக வேண்டுமா? எனும் ஒரு வினாவை முன் வைத்தால் ஏறத்தாழ அனைவரும் விரும்புவது சொர்க்கமாக தான் இருக்கும். சொர்க்கத்தை விரும்புவதில் என்ன தவறு இருக்கிறது அவர்கள் மிகச்சரியாக தானே தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று உங்கள் மனதில் ஒரு எண்ணம் ஓடுவதை நான் அறிவேன். இதோ ஒரு சிந்தனைக்காக ஒரு கதை. வாருங்கள் கதையோடு பயணிப்போம்.

Monday 2 June 2014

எவன் வைத்த பெயர்?


நாய்குட்டிக்கு ஒரு வாய்
பூனைக்குட்டிக்கு ஒரு வாய்
என பகிர்ந்து உண்ணும் தாய்மை!

வீட்டிற்குள்ளே படுக்கை விரித்தும்
இல்லாத மேற்கூரையின் வழியே
நட்சத்திரங்களோடு பழகும் வாய்ப்பு!

Sunday 1 June 2014

நண்பனின் அழைப்பு!


கோடை விடுமுறையைக் குதுகலாமாய்
கழித்து விட்டு மீண்டும்
பள்ளி வரும் பாலகனே!

கோடை விடுமுறை உனக்கு
வேண்டுமானால் குளிர்ந்திருக்கலாம்- ஆனால்
எனக்கு கோடை தகித்தது!