அரும்புகள் மலரட்டும்: ஒரு கதை சொல்லும் பாடம்

Tuesday 27 May 2014

ஒரு கதை சொல்லும் பாடம்


நண்பர்களுக்கு வணக்கம். இன்று நாம் ஒரு கதையின் மூலம் ஒரு படிப்பினையை உணர்ந்து கொள்ளப்போகிறோம். கதை என்றால் சொந்தமாக சிந்தித்து எழுதிய கதை இல்லை அப்படி நான் சொந்தமாக சிந்தித்து எழுதினாலும் அதை நீங்கள் கதையாக ஏற்றுக் கொண்டாலே பெரிது. இதில் படிப்பினையை எங்கிருந்து பெறுவது. சரி கதைக்கு வருவோம் அந்த கதை அக்பர் பீர்பால் கதை தான்.

கதை
ஒருநாள் அக்பர் அவை கூடியிருந்தது. வழக்கம் போல் அமைச்சர் பீர்பால், சேனாதிபதிகள், சிப்பாய்கள் என அனைவரும் கூடியிருக்கின்றனர். அப்போழுது அக்பர் திடீரென்று கோபப்பட்டு அருகில் நிற்கும் பீர்பால் கண்ணத்தில் ஓங்கி அறைந்து விடுகிறார். பீர்பாலுக்கு மன்னர் செய்கையால் ஒன்றும் புரியவில்லை. இருப்பினும் மன்னரைத் திரும்ப அடிக்க இயலாது அல்லவா! தனது சமயோசித புத்தியால் பக்கத்திலிருக்கும் சேனாதிபதிக்கு ஒரு அறை விடுகிறார் பீர்பால்.

இப்போது சேனாதிபதி அக்பர் பீர்பாலை எதற்காக அடித்தார் என்பதே நமக்கு விளங்கவில்லை. அதற்குள் பீர்பால் நம்மை அடித்து விட்டாரே பீர்பால் செய்தால் காரணத்தோடு தான் செய்வார் என்று எண்ணி பக்கத்திலிருக்கும் சிப்பாய்க்கு விடுகிறார் ஒரு அறை. இப்போது சிப்பாய் அதே குழப்பத்துடன் அருகில் இருக்கும் மற்றொரு சிப்பாயை அறைகிறார். அதற்கு பின்னர் மூன்று நாள் கழித்து மன்னர் அந்தபுரத்திற்கு செல்கிறார். அவரைக் கண்டதும் அரசி ஓடோடி வந்து கண்ணத்தில் விடுகிறார் ஒரு அறை. மன்னனுக்கு ஒரே கோபம். கோபமென்றால் மூக்கின் உச்சிக்கு போகிறது ஏன் என்னை அறைந்தாய் என்று கடும்கோபத்துடன் கேட்கிறார்.

அதற்கு அரசி நீங்கள் மூன்று நாள்களுக்கு முன்பு ஆரம்பித்து வைத்தது தான் நீங்கள் பீர்பாலை அடித்துள்ளீர்கள் அவர் சேனாதிபதியை, சேனாதிபதி சிப்பாயை, சிப்பாய் அவரது நண்பரை, நண்பர் அவர் மனைவியை இப்படியே தொடர்ந்தது இந்த விளையாட்டு. எனது தோழி என்னை அறைந்தாள். நான் யாரை உரிமையுடன் அறைய முடியும் அதான் நான் உங்களை அறைந்தேன். பொசுக்கின்று மூக்கின் மேல் கோபம் வருகிறதே என்றாள். அப்போது தான் பீர்பாலின் புத்திக்கூர்மை அரசனுக்கு புரிந்தது.

பாடம்
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் படிப்பினை என்னவென்றால் பொறுப்பினை மற்றவர்களுக்கு தட்டி விட்டால் அது தான் நமக்கே தான் திரும்ப வரும். பள்ளிச் சிறுவர்களிடம் பார்த்திருக்கலாம் ஒரு பேப்பரைச் சுருட்டி பக்கத்தில் இருப்பவனிடம் தூக்கி எறிவான் அவன் அவனுக்கு பக்கத்தில் என இப்படியே தொடர்ந்து இறுதியில் பேப்பரை சுருட்டிப் போட்டவனிடமே வந்து விடும் அப்படி தான் நமது பொறுப்புகளும்.

நமது பொறுப்புகளுக்கு அடுத்தவரை அணுகி நிற்கக் கூடாது. பொறுப்பினை கடத்துவர்களாக நாம் இருந்து வருகிறோம். சாப்பிட்ட தட்டை எடுப்பது நமது பொறுப்பு ஆனால் நாம் எடுப்பதில்லையே அன்னையோ, மனைவியோ எடுக்கிறார்கள் நமது பொறுப்பு இப்பொழுது தட்டிவிடப் பட்டிருக்கிறது. வீட்டில் நடக்கும் அன்றாட செயல்கள் கூட தன்னை விட வயதில் இளையவர்கள் இருந்தால் அவர்களின் தலையில் நமது பொறுப்பும் சேர்த்து கட்டிவிடப்படுகிறதே!

ஒரு செயலின் காரணமாக ஏற்படும் நன்மைக்கு மட்டுமே நாம் பொறுப்பெடுத்துக் கொள்கிறோம். அதுவே எதிர்மறை விளைவு என்றால் அது சரியில்லை, அவர் சரியில்லை, நேரம் சரியில்லை என்று எதாவது நொண்டி சாக்கு சொல்லி தப்பித்துக் கொள்கிறோம். அதற்கு நாம் தான் பொறுப்பு என்பதை உணரவில்லை/ உணர்ந்தாலும் ஏற்றுக்கொள்வதில்லை. நமது பொறுப்பினைச் சரியாக உணர்ந்து செய்யாமல் எதாவது எதிர்மறை விளைவு என்றால் கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுனு புலம்புவதில் என்ன பயன் இருக்கப் போகிறது?. எந்த சூழ்நிலையிலும் சரி எந்த நொடியிலும் நமது பொறுப்பிலிருந்து விலகாமல்/ அடுத்துவர்களுக்கு கடத்தாமல் செவ்வனே செய்து வந்தால் வாழ்க்கையில் வசந்தம் வராது. வசந்தமே வாழ்க்கையாக இருக்கும்.

பொறுப்பு என்பதை ஒரு வட்டத்திற்குள் நிறுத்தி விட முடியாது. அதன் அளவு மிகப்பெரியது. தன், தன் வீடு, சமூகம் என எல்லா தரப்பிலும் நமது பொறுப்புகள் பரந்து கிடக்கின்றன. அவற்றைக் கையில் எடுத்து பொறுப்போடு செயல்பட்டால் அன்பான, அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து காட்டலாம். என்ன நண்பர்களே அழுது அழுது பெத்தாலும் நான் தான் பெக்க வேண்டும் என்று கிராமத்து  பழமொழி காதில் விழுகிறதா! அதை பொறுப்போடு உணர்ந்து செயல்படுங்கள். நன்றி..

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

31 comments:

  1. சிறப்பான ஒரு கதையின் மூலம் சிறந்த அறிவுரை! பொறுப்புணர்ந்து பலர் செயல்பட்டால் நாடே சுபிட்சமாக இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றீங்க சகோதரரே

      Delete
  2. ஆகா.. கதையும் கதையாக்கமும் அருமை பாண்டியன்.
    தனக்குப் பிரியமானவர்களை அறைவது என்று மட்டும் இந்தக் கதையை மாற்றி(?) நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.. அன்பு லாஜிக்!
    இப்ப நீங்க என்னை அறைஞ்சிட்டீங்க.. நான் நம்ம மகா.சுந்தரை.. இப்படியே போய் திரும்ப நம்கிட்ட வர்ரமாதிரி தெரியல.. அதனால என்ன சும்மாவாச்சும் ஒன்னு குடுத்து வாங்கிக்க வேண்டியதுதான். அன்பாக இறைவனே கல்லடியும் செருப்படியும் வாங்கிக்கொண்ட கதைகள் ஏற்கெனவே நம்மிடம்தான் இருக்கிறதே! பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      கதை திரிந்து வந்து கொண்டே இருப்பது தானே. இன்னும் சில வருடங்கள் இந்த கதையே அவர்களுக்கு ஏற்றாற்போல் திரிக்கப்படும். ஐயயோ நான் உங்களை அறைந்தேனா! வேண்டாம் ஐயா. தங்களின் மேலான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள்.

      Delete
  3. நல்ல கதை நல்ல படிப்பினை!

    ReplyDelete
  4. சுவையான கதைமூலம் நல்லதொரு சிந்தனைக் கருத்து. பகிர்வுக்கு நன்றி பாண்டியன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றீங்க சகோதரி

      Delete
  5. வணக்கம்
    சகோதரன்

    கதையும் அதற்கான விளக்கத்தையும் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றீங்க சகோதரரே

      Delete
  6. என்ன ஆசிரியரே சின்ன புள்ளைங்களுக்கு சொல்லும் கதையை இப்ப கல்யாணம் ஆகப் போகிறது என்பதால் பொறுப்போடு பெரியவங்களுக்கும் சொல்ல ஆரம்பித்து விட்டீங்களோ?

    ஆமாம் கல்யாணம் ஆகுவதற்கு முன்பே பொறுப்போடு துணை சொல்லும் வார்த்தையை பொறுப்போடு கேட்க ஆரம்பித்துவிட்டது எங்களுக்கு புரிகிறது...ஹீ.ஹீ.ஹி

    ReplyDelete
    Replies
    1. மதுரைத் தமிழன் நிலைமை நமக்கும் வந்திட கூடாதுனு ஒரு முன்னெச்செரிக்கை தான். பூரிக்கட்டை அடியெல்லாம் தாங்க முடியாது சாமி. கருத்திட்டமைக்கும் வருகைக்கும் மிக்க நன்றீங்க சகோதரரே

      Delete
  7. சரியாகச் சொன்னீர்கள் பாண்டியன் ஜி ,பொறுப்புக்கு எல்லையே இல்லை ,அதை உணர்ந்து நாம் செய்வதே இல்லை என்பதே உண்மை !
    த ம +1

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றீங்க சகோதரரே

      Delete
  8. பொறுப்புப் பற்றிய ஒப்பீட்டை வரவேற்கிறேன்

    ReplyDelete
  9. நல்ல நடையில் அழகிய கருத்துக்கள்!
    நமது பொறுப்புகளுக்கு அடுத்தவரை அணுகி நிற்கக் கூடாது. பொறுப்பினை கடத்துவர்களாக நாம் இருந்து வருகிறோம்.
    உண்மைதான்!

    ReplyDelete
    Replies
    1. வருக சகோதரரே உங்கள் வருகை நல்வருகையாகட்டும். கருத்துக்கு மிக்க நன்றி

      Delete
  10. நல்ல கதை.....

    நல்ல பாடம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றீங்க சகோதரரே

      Delete
  11. இது ஒருவகை பழக்கமும்,பயிற்சியும்தானே/

    ReplyDelete
  12. கருத்துள்ள கதை...

    சமீபத்திய இரண்டு மூன்று பகிர்வில் ஒரு மாற்றம் தெரிகிறது... பாராட்டுகள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பாண்டியன். இப்பொழுது தான் வலைப்பூக்களுள் நுழைந்து இளப்பாறத் தொடங்கியுள்ளேன். தங்களது பதிவுகள் மலைக்க வைக்கின்றன. நேரம் எவ்வாறு வாய்க்கிறது , அதன் இரசியம் என்ன என்பதை மட்டும் சொல்லிவிடுங்கள். வாழ்த்துகள். தொடர்ந்து வருவேன். நன்றி.

      Delete
    2. திரு. திண்டுக்கல் தனபாலன் சகோதரருக்கும் திரு.குருநாதசுந்தர் ஐயாவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

      Delete
  13. வணக்கம் பாண்டியன். இப்பொழுது தான் வலைப்பூக்களுக்குள் நுழைந்து இளைப்பாறத் தொடங்கியுள்ளேன். தங்களது பதிவுகள் என்னை மலைக்க வைத்துவிட்டன. தொடர்ந்து தங்கள் வ்லைப்பூவின் மணம் நுகர விழைகிறேன். நன்றி. பதிவுகள் அருமை ! தமிழைப்போல !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      தங்கள் வருகை மிகுந்த மகிழ்வளிக்கிறது. தங்கள் வருகை என்னை வழிநடத்தும். தொடர்ந்து வாருங்கள். நேரம் எல்லாம் நாம் வடிவமைத்துக் கொள்வது தானே ஐயா. பெரும்பாலும் இரவு 10 மணிக்கு மேல் தான் பதிவுகள் எழுதப்படும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க ஐயா.

      Delete
  14. வணக்கம் தோழிரே..தங்களின் வலைப்பக்கத்திற்கு முதன்முறையாக வருகிறேன். தங்களின் படிப்பினை மிகவும் சிறப்பாக இருக்கிறது. இனி உங்களின் வலைப்பக்கத்தைப் பின்பற்றுபவர்களில் நானும் ஒருத்தியாக இருப்பேன்.. நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வருக தோழியே
      தங்கள் முதல் வருகை மகிழ்வளிக்கிறது. தங்கள் வருகை நல்வரவாகட்டும். கருத்துரைக்கு மிக்க நன்றி.

      Delete