அரும்புகள் மலரட்டும்: ஹலோ எங்கே தேடுறீங்க? நான் இங்கே இருக்கிறேன்

Sunday 25 May 2014

ஹலோ எங்கே தேடுறீங்க? நான் இங்கே இருக்கிறேன்



வணக்கம் நண்பர்களே இன்றைய உலகில் நாம் தொலைத்து விட்டு தேடுவது நிறைய அதில் ஒன்று தான் நமது சந்தோசம். இவற்றை நாம் அடைய யார் யாரிடமோ சென்று நிற்கிறோம். கோவிலில் தேடுகிறோம். கடற்கரை மணலில் சென்று தேடுகிறோம்.  திரைப்பட அரங்கில் தேடுகிறோம். இப்படி எத்தனையோ வழிமுறைகளைக் கையாளுகிறோம். புரியவில்லையா நண்பர்களே! விரிவாகவே கூறுகிறேன்.

நமது மனசு கஷ்டபடும் போது மனசு எண்ணமோ மாதிரி இருக்கு கோவிலுக்கு போயிட்டு வரேன், மனசுக்கு கஷ்டமா இருக்கு வாங்க இன்னைக்கு கடற்கரைக்கு சென்று வருவோம். மனசு கஷ்டமா இருந்தது நண்பரைக் கூட்டிக்கிட்டு திரைப்படம் பார்க்க சென்று வந்தேன் என்று பலர் கூறுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். உண்மையில் அந்த சூழ்நிலைகள் தான்  நமக்கு சந்தோசத்தைத் தரும் கருவியாக இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை. அது வெறும் தற்காலிகம் தான்.

திரு.கோபிநாத் (நீயா!நானா!) அவர்கள் தனது ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீர்கள் எனது புத்தகத்தில் ஒரு நிகழ்வைச் சொல்வார். ஒருவர் மெர்குரி லைட் வெளிச்சத்தில் தான் தொலைத்த மோதிரத்தைத் தேடிக் கொண்டு இருந்தாராம். அப்போது அந்த வழியாக சென்றவர் என்னங்க தேடிறீங்க என்று கேட்டதும் அவர் மோதிரத்தைத் தேடுகிறேனு பதிலளிக்கிறார். மோதிரத்தை எங்கே தொலைத்தீர்கள் என்ற அடுத்த கேள்விக்கு அதோ அந்த இருட்டான இடத்தில் தொலைத்தேன் என்கிறார். அங்கே தொலைத்து விட்டு இங்கே வந்து தேடுகிறீர்களே என்று மீண்டும் வினாயெழுப்ப அதற்கு அவர் இங்கே தானே வெளிச்சமாக இருக்கிறது என்றாராம்.

ஆம் நண்பர்களே அவரைப் போல தான் நாமும் தொலைத்த இடத்தில் தேடாமல் நமக்கு சாதகமான ஒரு இடத்தில் தேடுகிறோம். முதலில் பிரச்சனைக்கான மூலக்காரணம் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும். அடுத்து அவற்றை எவ்வாறு களைய வேண்டுமென்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதை விடுத்து சந்தோசத்தை எங்கேயெல்லாம் தேடி கடைசியில் தோற்றுத் தான் போகிறோம்.  எதுவெல்லாம் உங்களுக்கு தேவைப்படுகிறதோ அப்போது எல்லாம் நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள். எது தேவையில்லையோ அப்போது வருத்தமடைகிறீர்கள்.

யாருக்கு தாகம் இருக்கிறதோ அவன் தண்ணீரைப் பார்த்ததும் மகிழ்கிறான். யாருக்கு தாகம் இல்லையோ அப்போது அவன் அதைக் கண்டு கொள்வதில்லை என்பது தானே உண்மை. அப்படியானால் நமது மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது அந்த தருணம் நமது தேவை தான். பொருள் அல்ல. இது இயற்கையாக எழக் கூடிய தேவை அவற்றை நாம் கட்டுபடுத்த முடியாது. ஆனால் செயற்கையாக நாம் ஏற்படுத்திக் கொண்ட தேவைகளை மிக சரியாக தீர்மானித்தாலே மகிழ்ச்சி தங்கும்.

ஆம் ஒருவனை மகிழ்விக்க பொன், பொருள் வேண்டாம். வானத்திலிருந்து விழுகிற அந்த முதல் துளி போதுமே! இன்னும் சொல்லப் போனால் குளிக்கும் போது ஒரு குவளைத் தண்ணீரைத் தலையில் ரசித்துக் கொண்டே ஊற்றுங்கள் அது தரும் சந்தோசம். அது தரும் என்றால் அந்த பொருளோ சூழலோ அல்ல. அப்போது நாம் வைத்துக் கொண்ட மனநிலை.

ஆகவே எது கிடைத்தாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு தங்களைத் தயார்படுத்துங்கள்.  எப்போதும் மனதை விழிப்புணர்வோடு வைத்துக் கொள்ளுங்கள். அது கடினம். நமக்கு எப்போது நமது தேவைகளைத் தீர்மானிக்கிறமோ அப்போதாவது மனதை விழிப்போடு வைத்துக் கொள்ளுங்கள். அப்போது சந்தோசத்தின்  குரல் நம் செவிகளில் கேட்கும் ஹலோ எங்கே தேடுறீங்க நான் இங்கே இருக்கிறேன்.


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

28 comments:

  1. அருமை அருமை... எதையும் நமக்குள்ளே தேட வேண்டும்... திருப்தியும் அடைய வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் மிக்க நன்றீங்க சகோதரரே

      Delete
  2. பாண்டியன்,
    அழகு என்பது நம் கண்களில் இருக்கிறது என்று சொல்வார்கள் விபரம் அறிந்தவர்கள். அதேபோல மகிழ்ச்சி நம் மனதிலிருந்து வருவது. நல்ல பதிவு. பாராட்டுக்கள்.
    அந்த கோபிநாத் எழுதிய தொலைந்த மோதிரம் கதை முல்லா கதைகளில் ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கும் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றீங்க சகோதரர். உங்களின் வருகை என்னை வழிநடத்தும். நன்றி..

      Delete
  3. ஆகா புதிய பாதை
    புதிய கருது

    என்ன
    சொல் புதிது பொருள் புதிதா?

    கலக்குங்க பாண்டியன்

    தமா 4

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றீங்க சகோ. தங்களைப் போன்றோரின் ஊக்கமே எனது உற்சாக டானிக். தொடர்ந்து பயணிப்போம். நமது இலக்கு மிக பெரிது.

      Delete
  4. இருக்கும் இடத்தை விட்டு
    எங்கெங்கோ அலைகின்றார்
    ஞானத் தங்கமே
    என்னும் பாடல் வரிகள்தான் நினைவிற்கு வருகின்றன
    தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்வெய்தினேன் நண்பரே
    சந்திப்புகள் தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. தங்களைச் சந்தித்த தருணங்களை நான் இன்னும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன் ஐயா. தங்களின் அன்பும் கருத்தும் எனது வளர்ச்சிக்கு உதவட்டும். மிக்க நன்றீங்க ஐயா

      Delete
  5. அருமை! இன்னும் சிலர் இருட்டில் தொலைத்து வெளிச்சத்தில் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்! நல்ல பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ
      கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றீங்க.

      Delete
  6. 'எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
    எந்த இடம் அது தொலைந்த இடம்'என்று தேடிக்கொண்டு இருந்தேன் ..நல்ல வழி காட்டினீர்கள் பாண்டியன் ஜி !
    த ம +1

    ReplyDelete
    Replies
    1. விடாது வருகை தந்து கருத்திடும் பகவான் ஜி க்கு எனது அன்பான நன்றிகள்.

      Delete
  7. சூப்பர் பாண்டியரே...!ஆத்துல போட்டிட்டு குளத்தில தேடுவது என்பார்கள். இப்ப இருட்டில போட்டிட்டு வெளிச்சத்தில தேடுறாங்களா.
    நவீன காலத்தில அப்பிடி தான் இல்லையா.
    என்ன ஒரு தெளிவு என்ன ஒரு தெளிவு மிக்க மகிழ்ச்சியாய் உள்ளது. ரசித்தேன் தங்கள் மனதை சிந்தனையை. இதற்கு ஒரு கவிதை எழுதி பாதியிலேயே நிற்கிறது விரைவில் முடிக்க வேண்டும் பார்க்கலாம்.
    நன்றி வாழ்த்துக்கள் .....!

    அடைவதில் இருக்கும் இன்பம்.
    அடைந்த பின்னர் இருப்பதில்லை
    (அது பெரிய விடயமாக இருக்காது)

    உடையும் போது தோன்றும் துன்பம்
    உடைந்த பின்னர் இருப்பதில்லை
    (மனதை தேற்றி விடுவோம் கிட்டாதாயின் வெட்டென மற என)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி
      உங்கள் அன்பும் வழிகாட்டதலும் கிடைக்க வாய்ப்பளித்த வலைப்பூக்கு நன்றிகள். உங்கள் கருத்துரை தூங்கிக் கிடக்கும் சோம்பேறிகளையும் எழுப்பும். நிறைய தகவல்களைத் தாங்கிய கருத்துரைக்கு நன்றீங்க சகோதரி

      Delete
  8. //எது கிடைத்தாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு தங்களைத் தயார்படுத்துங்கள். எப்போதும் மனதை விழிப்புணர்வோடு வைத்துக் கொள்ளுங்கள். //

    அருமையாக, எளிமையாக, தக்க உதாரணங்களுடன் சுவைபடச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. பல்வேறு பணிகளுக்கிடையே வருகை தந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றீங்க ஐயா

      Delete
  9. வெளிச்சம் வெளியில் இல்லை என்பதினை மிக அழகாக உணார்த்திவிட்டீர்கள்.அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க சகோதரர்

      Delete
  10. சகோ..!
    நல்ல பகிர்வு..

    ReplyDelete
  11. "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றாய் ஞானத்தங்கமே" என்ற கண்ணதாசனின் சினிமாப் பாடல் நினைவுக்கு வந்தது..நல்ல பதிவு ....வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா. தங்கள் வருகையும் ஆலோசனைகளும் எனது எழுத்தை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்ல உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க ஐயா.

      Delete
  12. "எது கிடைத்தாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு தங்களைத் தயார்படுத்துங்கள். எப்போதும் மனதை விழிப்புணர்வோடு வைத்துக் கொள்ளுங்கள். அது கடினம். நமக்கு எப்போது நமது தேவைகளைத் தீர்மானிக்கிறமோ அப்போதாவது மனதை விழிப்போடு வைத்துக் கொள்ளுங்கள். அப்போது சந்தோசத்தின் குரல் நம் செவிகளில் கேட்கும் ஹலோ எங்கே தேடுறீங்க நான் இங்கே இருக்கிறேன்." என்ற வழிகாட்டலை வரவேற்கிறேன்.

    உளவியல் நோக்கில் கிடைத்ததில் நிறைவுகாண வேண்டும். முன்னோர் சொன்னபடி கைக்கெட்டியதைக் கையாள வேண்டும். அப்படியாயின் இருக்கிறதை வைத்து மகிழ்ச்சி அடையலாம்.

    ReplyDelete
  13. “உள்ளது போகாது இல்லது வாராது“ என்னும் சைவசித்தாந்தம்.
    “வருந்தி யழைத்தாலும் வாராத வாரா
    பொருந்துவன போமிலென்றாற் போகா“ என்னும் நம் அறநூல்.
    இனிய செறிவுள்ள கட்டுரை எம்மை வழிநடத்தட்டும் தோழரே!
    நல்ல பதிவினுக்கு நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      நல்ல செறிவுள்ள கருத்துரை என்னை வழிநடத்தும். தங்கள் நட்பு கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. தொடர்ந்து பயணிப்போம். நன்றி.

      Delete
  14. அன்பின் பாண்டியன் - பதிவு அருமை - நன்று நன்று !

    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தைத் தேடி அலைகிறோமே - ஞானத்தங்கமே !

    முழுவதும் படித்து விட்டு - இறுதியில் கிடைத்த கீழ்க் கண்ட பத்திதான் சாராம்சம் எனத் தெரிந்து கொண்டேன் .

    ஆகவே எது கிடைத்தாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு தங்களைத் தயார்படுத்துங்கள். எப்போதும் மனதை விழிப்புணர்வோடு வைத்துக் கொள்ளுங்கள். அது கடினம். நமக்கு எப்போது நமது தேவைகளைத் தீர்மானிக்கிறமோ அப்போதாவது மனதை விழிப்போடு வைத்துக் கொள்ளுங்கள். அப்போது சந்தோசத்தின் குரல் நம் செவிகளில் கேட்கும் ஹலோ எங்கே தேடுறீங்க நான் இங்கே இருக்கிறேன்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete