Sunday, 25 May 2014

தொலைந்து போன நதிகள்

இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல நதிகள் இன்று இல்லை. மணல் கொள்ளை, தொழிற்சாலைகளின் சாயக்கழிவுகள், நிலச் சுரண்டல்கள் இப்படி நதிகளை அழித்தவிட்ட நிலையில் நதிகள் தொலைந்து போனதும் மட்டுமல்லாமல் இருந்த சுவடுகள் கூட தெரியாமல் போனது வேதனை.


முல்லைப் பெரியாறு அணை, வெள்ளிமலை அணை, வைகை அணை இவையெல்லாம் இன்று மழைக்கால தண்ணீர் தேங்கும் கால்வாய்களாக மாறி விட்டன. ஒரு காலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதைக் காணும் போது மகிழ்ச்சியாக இருக்கும். இன்றோ அது தலைகீழ் மாற்றம்.

வைகை பற்றிய பரிபாடல் (இருபதாம் பாடல்) உங்கள் பார்வைக்கு:
வானாற்று மழைதலைஇ மரனாற்று மலர்நாற்றம்
தேனாற்று மலர்நாற்றம் செறுவெயில் உறுகால
கானாற்றுங் கார்நாற்றம் கொம்புதிர்ந்த கனிநாற்றம்
தானாற்றம் கலந்துடன் தரிஇவந்து தரூஉம் வையை
பொருள்:
மரங்களின் மலர்களின் நறுமணமும், சிதறும் தேன் துளிகளின் இனிய மனமும் எப்புறத்தும் எழுந்தது, காட்டுப்பகுதியில் மழைபெய்ததால் அவ்வெப்பம் நீங்கப் புதிய மண்வாடையும் மண்ணின் ஈரமணத்தோடு எழுந்தது, மழையின் தாக்குதலால் மரக்கிளைகளிலிருந்து உதிர்ந்து வீழ்ந்த கனிகளின் மணம் எழுந்தது.

இவ்வாறாகக் காட்டுப்பகுதியுள் புது மழையினது வரவால் எழுந்த பல்வகையான மணங்களையும் வையையிற் பெருகி வந்து, அந்த இன்பத்தை மதுரை மக்கட்கு நல்கியது குறித்து காட்சியாய் வடிக்கிறது பரிபாடல் வரிகள்.
ஆனால் இன்று வெள்ளை மணல் பரவிகிடக்கும் பரப்பாக இருக்கும் வைகை நம் கண்ணில் வெள்ளப்பெருக்கை வரவழைக்கும்படி காட்சியளிக்கிறது.

பவானி, காவேரி, நொய்யல், பாலாறு, தாமிரபரணி, பெண்ணையாறு என பெயரளவில் வாழும் இவைகளின் அடையாளங்கள் தொலைந்து போனதற்கு காரணம் யார்?
நதியோர தென்னைகள், மரங்கள் இவைகளெல்லாம் எங்கே போனது? நதிகளை தாரைவார்த்து விட்டு இன்று தண்ணீர்க்கு கையேந்தும் நிலைக்கு யார் காரணம்?
காவேரி பெருக்கெடுப்பு, வைகை பெருக்கெடுப்பு என இலக்கியங்கள் பேசிய காட்சிகள் எல்லாம் எங்கே போயின?

முதலில் மழை வராமல் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை சிறிதும் தயங்காமல் செய்து முடித்தோம். காடுகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெட்டி எடுத்தோம். உலகில் அதிகமாக ஆயுதம் பயன்படுத்துவது மரங்களில் தான் என்று கவிப்பேரரசு வைரமுத்து வருந்தி கவி பாடும் அளவிற்கு வெட்டி எடுத்தோம். அது முடிந்து மழை இல்லாமல் போனதும் மழை பொய்த்து விட்டது என்று இயற்கை மீது பழியைப் போட்டுக் கொண்டு நாம் ஒதுங்கிக் கொள்கிறோம். பின்னர் ஆற்று மணல் மீது கை வைத்தோம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுரண்டல்.

சுரண்டல் எனும் வார்த்தை மணல் கொள்ளைக்கு கச்சிதமாகப் பொருந்தும்.
தொடர்ந்து மலைகளை மழித்தும் வளங்களை வழித்தும், இயற்கையைப் பழித்தும் வருவேமானால் இன்னும் பல நதிகள் புதைபொருள் ஆராய்ச்சிக்கு போக நேரிடும். எனவே காடுகள் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை நம்மால் முடிந்த அளவிற்கு வழங்குவோம். மரங்களை வெட்டினால் அதற்கு ஒரு சில வருடங்களுக்கு முன்னரே மரக்கன்றுகளை நட்டு வளர்த்து விட்டு வெட்டும்படி சட்டங்கள் உருவாக வேண்டும். மணல்கொள்ளைகளைத் தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும்.

இவையெல்லாம் சாத்தியமானால் தான் மிச்சம் இருக்கும் நதிகளையாவது காப்பாற்ற முடியும்.இதற்கு அரசு முயற்சி எடுத்து தொலைந்து போகும் நதிகளை காக்க முவர வேண்டும். பொதுமக்களும் ஒத்துழைப்பு தந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்பதே எனது வேண்டுகோள். நன்றி.
கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

40 comments:

 1. இதுவெல்லாம் எங்கே சென்று முடியப் போகிறதோ...? ம்...

  ReplyDelete
  Replies
  1. சகோதரரின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

   Delete
 2. வணக்கம்
  சகோதரன்

  ஒவ்வொரு வார்த்தைகளும் அனல்பறக்கிறது.....நீங்கள் சொல்வது உண்மைதான்....அரசுமுயற்சி எடுத்தாக வேண்டும்... நல்ல விழிப்புணர்வுப்பதிவு அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. சகோதரரின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

   Delete
 3. மனிதனின் பேராசைக்கு, மரங்களும், மணல்களும் உணவாகிக் கொண்டிருக்கின்றன. மரங்கள் இல்லையேல் மனிதன் இல்லை என்ற உண்மை மட்டும் உரைக்கவே மாட்டேன் என்கிறது.

  ReplyDelete
  Replies
  1. சகோதரரின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

   Delete
 4. //எனவே காடுகள் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை நம்மால் முடிந்த அளவிற்கு வழங்குவோம். மரங்களை வெட்டினால் அதற்கு ஒரு சில வருடங்களுக்கு முன்னரே மரக்கன்றுகளை நட்டு வளர்த்து விட்டு வெட்டும்படி சட்டங்கள் உருவாக வேண்டும். மணல்கொள்ளைகளைத் தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும்.//

  சரியாகவே சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். விழிப்புணர்வுப் பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies

  1. அய்யாவின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

   Delete
 5. அருமையாக நீங்களும் ஆழ் அகழ்வு
  ஆராச்சிப் பதிவு தந்திருக்கின்றீர்கள் சகோ.

  மணலை வாரிக் கொண்டுபோவோருக்கு
  அவர்தம் வாழ்வை வாரும் தண்டனை கொடுக்கவேண்டும்.
  அப்போதாவது அவர்களின் தவறுகளை உணர்வார்களோ...

  நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள் சோதரரே!

  த ம.3

  ReplyDelete
  Replies

  1. சகோதரியின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

   Delete
 6. நீங்க சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை.
  ஆனால் அரசு நடவடிக்கை எடுக்கிறதா என்ன..?

  ReplyDelete
  Replies

  1. சகோதரரின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

   Delete
 7. வீண் கனவு.. அரசு ஒருநாளும் நடவடிக்கை எடுக்காது!.. சில தினங்களுக்கு முன் தஞ்சையில் இருந்தபோது - தனியார் தொலைக் காட்சியின் செய்தி அறிக்கையில் - ஒரு குடியிருப்பைச் சுற்றிலும் காட்டுச்செடிகள் புதராக மண்டிக் கிடப்பதையும் அதை அரசு கண்டு கொள்ளவில்லை என்றும்!.. - காட்டினார்கள்.

  அங்கே குடியிருப்பவர்கள் ஆளுக்கு ஒரு அரிவாளை எடுத்தால் மண்டிக்கிடக்கும் புதர் எப்போதோ காணாமல் போயிருக்கும்!..

  ஆனால் - இப்போது மக்களுக்கு - பல் தேய்க்கவும் சோம்பல்.. சாலையோர சாக்கடைக்கு அருகில் விற்கப்படும் புரோட்டாவைத் தின்று கொண்டே மானாட மயிலாட பார்க்கும் காலமாகி விட்டது.

  யாரைச் சொல்லி என்ன பயன்!.. காலம் எனும் நதி ஓடிக் கொண்டிருக்கின்றது.

  நல்ல பதிவினுக்கு நன்றி!..

  ReplyDelete
  Replies

  1. அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே..

   Delete
 8. “வான் பொய்ப்பினும் தான்பொய்யா
  மலைத்தலைய கடற்காவிரி” -என்று, “பட்டினப் பாலை” பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனாருக்குத் தெரியும் போலும் “பட்டினம் இனிமேல் பாலையாகப் போகிறது” என்று! தங்கள் பதிவு சிறப்பாக உள்ளது அய்யா.

  ReplyDelete
  Replies
  1. அய்யாவிற்கு வணக்கம்
   தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி.
   அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

   Delete
 9. நல்ல சமுதாய நோக்கு... ! திருமணங்களில் தாம்பூலப்பைக்கு பதிலாக ஒரு மரக்கன்று கொடுக்கும் சில பேரை பார்த்து மகிழ்ந்தேன்... நம் வீட்டு விசேஷங்களுக்கும் இது போல் செய்யலாம்...

  ReplyDelete
  Replies
  1. அன்பு சகோதரிக்கு வணக்கம்.
   தங்கள் வருகையும் கருத்தும் வழக்கம் போல் புது உத்வேகத்தினைத் தருகிறது. அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றிகள்..

   Delete
 10. நதிகள் எல்லாம் வறண்டு போய் இப்போது சாலைகளே நதிகளாக மாறிவிடும் அவலமும் இருக்கத்தான் செய்கின்றன. என்னுடைய வீட்டைச் சுற்றிலும் உள்ள சாலைகளுக்கு நதிகளின் பெயரை வைத்தாதலும் வைத்தார்கள் சிறு மழைக்கும் சாலைகள் நதிகள் போல் ஆகிவிடுகின்றன. ஒவ்வொரு பதிவுக்கும் ஒவ்வொரு பாடலை குறிப்பிட்டு அழகான பதவுரைகளையும் தரும் உங்கள் பாங்கே பாங்கு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. சகோதரருக்கு வணக்கம்.
   தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி.
   அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

   Delete
 11. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை பாண்டியன்..காணாமல் போன நதிகளைக் காணும்பொழுது கண்ணில்தான் நதி வரும் போல..இன்னும் மரங்களை வெட்டிக்கொண்டுதான் இருக்கின்றனர்.,,ஆனால் ஒரு கன்று நடுகிறார்களா என்பது பெரிய கேள்விக்குறி!! அரசு...அரசு நினைத்திருந்தால் என்றோ செய்திருக்கலாமே..அரசை விடுங்கள்..சிலர் இருக்கும் இடம் முழுவதும் வீடுகட்டி வாடகைக்குவிடத்தான் விரும்புகின்றனரே தவிர ஒரு மரம் வைக்கலாம் என்று நினைப்பதில்லை...நீங்கள் சொல்வது மாதிரி விழிப்புணர்வு வந்தால் நல்லதுதான் சகோ..நாம் பயிற்றுவிக்கவேண்டியது நாளைய தலைமுறையினரை...அதாவது பயன் தரும் என்று எண்ணுகிறேன் சகோ! நல்ல ஒரு பதிவிற்கு வாழ்த்துகள் சகோதரரே!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி..
   நிச்சயம் நாம் வழிக்காட்ட வேண்டியது அடுத்த தலைமுறையினருக்கு தான். நாளைய தலைமுறை நல்லதாய் அமையட்டும். வருகைக்கும் நல்லதொரு கருத்துக்கும் நன்றி..

   Delete
 12. பயனுள்ள பதிவு

  இயற்கையை நாம் பார்க்கும் வித்தத்தில்தான் இயற்க்கை நமக்கு உதவுகிறது

  பரிபாடல் வரிகள் அழகு

  வாழ்த்துக்கள் பாண்டியன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே..
   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றிகள்..

   Delete
 13. அரசு முயற்சி எடுத்து தொலைந்து போகும் நதிகளை காக்க முவர வேண்டும். பொதுமக்களும் ஒத்துழைப்பு தந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்பதே எனது வேண்டுகோள்.

  கவனத்தில் கொள்ளவேண்டிய கருத்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அம்மா.
   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்

   Delete
 14. ஆமாம்ம் உண்மைதான்ன்.. நதிகள் மட்டுமோ தொலைந்து விட்டன.... இன்னும் நாளுக்கு நாள் தொலைந்து கொண்டே இருக்கின்றன...

  நியாயமான, கவலையடங்கிய பதிவு.

  ReplyDelete
  Replies
  1. சகோதரிக்கு வணக்கம்.
   தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்

   Delete
 15. வணக்கம் சகோதரா....!
  நல்ல விடயம் தான் விழிப்புனர்வை ஏற்படுத்த.
  ஒவ்வொரு பிறந்த தினத்துக்கும் ஒவ்வொருவரும் மரம் நாட்ட( 1 - 5 ) வரை விரும்பியபடி) வேண்டும் என்று ஒரு தீர்மானம் எடுக்கலாமே. அரசாங்கம் சட்டம் போட்டாலும் நல்லதே. செய்யுமா?

  இப்பொழுது இயற்கையை பேணுவதிலும் ஆர்வமா? மிக்க மகிழ்ச்சி.
  தொடர வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி.
   அடுத்த தலைமுறையினை இயற்கையைப் பற்றிய விழிப்புணர்வோடு உருவாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது அல்லவா சகோதரி! அதன் விளைவாக சிந்தனையில் தோன்றிய விடயங்களைப் பகிர்தேன். தங்கள் வருகைக்கும் கருத்தும் அன்பான நன்றிகள்...

   Delete
 16. கட்டுமானத் தொழிலின் அபிரிதமான வளர்ச்சி மணல்கொள்ளைகளுக்கு அடித்தளமாக அமைகிறது, இவற்றை முறைப் படுத்த வேண்டும். மணல் உருவாக பல்லாயிரம் ஆண்டுகள் தேவை . எத்தனையோ ஆண்டுகளாக இயற்கை சேகரித்த மணலை தொழில்நுட்பம் எளிதில் கொள்ளையிட உதவுவது வேதனை. இயற்கையை அழிக்கும் செயல்களை தவிர்க்க மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அய்யா..
   புதிய தொழில்நுட்பமும், மனிதனின் குறுக்கு புத்தியுமே சுரண்டலுக்கு காரணமாக அமைந்து விடுவது உண்மை தான் அய்யா. தங்கள் வருகைக்கும் கருத்தும் அன்பான நன்றிகள்...

   Delete
 17. ஒரு பொறுப்பான குடிமகனாக பார்க்கிறேன் ...
  வாழ்த்துக்கள்...
  ஆசிரியருக்கு அவசியமான சிந்தனை..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே..
   தங்கள் ஊக்குவிக்கும் கருத்துக்கும் வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

   Delete
 18. சமுதாயப் பார்வை நன்று.
  தொடரட்டும் ஆய்வு.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. சகோதரிக்கு நன்றி. நிச்சயம் நம்மால முடிந்த வரை அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டுவோம்.

   Delete
 19. நீங்கள் கூறிய காரணங்கள் எல்லாவற்றையும் விட, தமிழ்நாட்டு நதிகள் எல்லாம் வற்றி தமிழ்நாடு பாலைவனமாகிப் போவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது பல நதிகள் உற்பத்தியாகும் இடங்களை, அவற்றில் தமிழர்கள் பெரும்பான்மையினராக இருந்தும், அவை வரலாற்றுக் காலம் தொடக்கம் தமிழ்மண்ணாக இருந்தும் கூட, ஏனைய மாநிலங்கள் புத்திசாலித் தனமாக அவற்றை சொந்தம் கொண்டாடிய போது, அவர்களை எதிர்த்து பாரம்பரிய தமிழ் மண்ணைக் காக்காமல், முட்டாள் தனமாக, இந்திய ஒற்றுமை என்ற பெயரில்,இளிச்சவாய்த்தனமாக விட்டுக் கொடுத்த காமராசர் போன்ற இந்திய தேசியவாதிகள் தான் என்றும் சிலர் கூறுகின்றனர். அதைப் பற்றி உங்களின் கருத்து என்ன. அப்படி விட்டுக் கொடுத்ததால் தான், அந்த மாநிலங்கள் குறுக்கே அணைகளைக் கட்டி, தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீரைத் தடுத்து, தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கிக் கொண்டிருக்கிறார்கள், தமிழ்நாட்டு ஆறுகள் வெறும் மழை நீரோடும் கால்வாய்ககளாக மாறி விட்டனவாம்.

  ReplyDelete
  Replies
  1. சகோதரருக்கு வணக்கம்
   தங்கள் கருத்து மிகவும் கவனிக்கத்தக்கது. பதிவில் பதிய தவறி விட்டேன். தமிழன் ஆதி முதல் இன்று வரை ஏமாளியாய் தொடர்வது வேதனை தான். எதிர்கால சந்ததியினரை அறிவோடும் விழிப்போடும் வளர வகை செய்வோம். கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி..

   Delete
 20. தொலைந்து போன நதிகள். ஆஹா தலைப்பே ஈர்த்து விட்டதே நண்பரே.
  வியாசன் சொல்வதில் உண்மை நிறைய இருக்கிறது. நல்ல பதிவு. ,பாராட்டுக்கள்.

  ReplyDelete
 21. இந்த மனத்தாங்களும் , ஆறுகளை பார்க்கும் போது வலிக்கும் என் கண்களும்...ஆகையால் தான் தங்களின் வலைத்தளத்திற்கு வந்தவுடன் இப்பதிவை முதலில் படிக்க என் மனம் சொன்றது..நன்றி சகோதரரே...

  ReplyDelete