அரும்புகள் மலரட்டும்: இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறையும் பதிவர்கள் சந்திப்பும்

Monday 19 May 2014

இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறையும் பதிவர்கள் சந்திப்பும்

                               
                           (பயிற்சியில் முதன்மைக்கல்வி அலுவலர் ஐயா)

புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழாசிரியர் கழகம் சார்பாக இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறை 17,18.05.2014 (சனி, ஞாயிறு) இரு தினங்களும் நடைபெற்றதை நண்பர்கள் நன்கறிவீர்கள்.


முதல் நாள் நிகழ்வு

திரு. முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் (முதன்மைக் கல்வி அலுவலர்- புதுக்கோட்டை)தலைமையேற்று தொடங்கி வைத்து துவக்கவுரை ஆற்றினார்.
பின்னர் கலந்து கொண்டவர்கள் அறிமுகம் செய்து கொண்டனர். நண்பர்களின் பெயரை சொடுக்கினாலே அவரவர் வலைப்பக்கங்களுக்கு செல்லும் வண்ணம் அமைத்துள்ளேன்.

திரு. முனைவர். மு.பழனியப்பன்  (சிவகங்கை கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர்) அவர்கள்
1.ஜிமெயில், வலைப்பக்கம் எப்படி தொடங்குவது?
2.வலைப்பக்கம் தொடங்க என்ன தேவை?
3.தொடங்கிய வலைப்பக்கத்தை எவ்வாறு அழகுபடுத்துவது?
4.தமிழில் எழுத எந்தெந்த மென்பொருளைப் பயன்படுத்துவது போன்ற தலைப்புகளில் சிறப்பானதொரு வழிகாட்டுதலைத் தந்தார்.

புதுக்கோட்டை மாநகரில் வசிக்கும் சர்மா நண்பர்கள் (சர்மா சொல்யூசன்ஸ்)எனும் தமிழ்த்தட்டச்சு நிறுவனம் எண்களை மட்டும் வைத்துக் கொண்டு தமிழில் தட்டச்சு செய்யும் புதிய முறையை அறிமுகம் செய்து பயிற்சி அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.

முதல்நாள் சிறப்பு விருந்தினர் திரு.முனைவர்.மதிவாணன் (திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர்)சிறப்புரை ஆற்றினார். அதில் எழுத்தாளர்களுக்கு சங்க இலக்கியத்து மொழிநடை தான் வேண்டுமென்று அவசியமில்லை தங்களின் இயல்பான மொழியால் எழுதினால் போதும் எழுதினால் தவறு வந்து விடுமோ என்று தயங்கி நிற்பதை விட ஒற்றுப்பிழை வந்தாலும் பரவாயில்லை எழுதுங்கள் என்றும், எழுத்தில் சமகால போக்கு இருக்க வேண்டுமென்றும் இயல்பான மொழியில் எழுதுங்கள் ஆனால் மொழிப்பற்றிய பொறுப்பு வேண்டும் எனும் கருத்துகள் அடங்கிய உரை மொழியில் தெளிந்த அறிவையும், முதிர்ச்சியையும், நிதானத்தையும் உணர்த்தியது. அவரோடு நண்பர் திரு.ஜோசப் விஜீ அவர்களும் வருகை தந்து சிறப்பித்தார்

பின்னர் அனைவரும் கணினி முன் அமர்ந்து வலைப்பக்கம் உருவாக்கம் மற்றும் தொடங்கிய வலைப்பக்கத்தை செம்மைப்படுத்தும் பயிற்சி நடந்தது. இதில் 20 புதிய வலைப்பக்கங்களும், 15 ஏற்கனவே தொடங்கிய வலைப்பக்கங்கள் செம்மைப்படுத்தப்பட்டன.
               (திரு.கவிஞர்.முத்துநிலவன் ஐயா அவர்கள் பேசிய காட்சி)

இரண்டாம் நாள் நிகழ்வு

முனைவர் திரு. அருள்முருகன் அவர்கள் நட்ட கல்லும் பேசுமே எனும் தலைப்பில் ராசராசன் பெருவழி பற்றிய பண்டைய வழித்தடம் பற்றி பழமையான மைல்கல்களை ஆதாரமாக வைத்து நீண்ட ஆய்வு செய்து பழங்காலத்து வழித்தடத்தை விளக்கி ஆய்வினை சமர்பித்தார்.

விக்கிபீடியாவில் எழுதுவது எப்படி எனும் தலைப்பில் திரு.பிரின்சு என்னாரெசுப்பெரியார் (விக்கி-தமிழ் சென்னை)அவர்கள் சிறப்பான சிறுகுழந்தைக்கு கூட புரியும் வண்ணம் வகுப்பெடுத்தார். எளிய முறையில் புரியவைத்து எங்களது மனங்களில் விக்கிபீடியா மீது இருந்த பிரம்மாண்டத்தைத் தவிடுபொடியாக்கி சென்றார்.

5.வலைப்பக்கத்தைத் திரட்டிகளில் இணைப்பது, அதிக வாசகர்களை ஈர்ப்பது எப்படி?
6.வணிக நோக்கில் இணையத்தை வளர்க்க என்ன செய்ய வேண்டும்?
7.புகழ்பெற்ற இணைய இதழ்கள், திரட்டிகள், வலைப்பக்கங்கள் பற்றிய அறிமுகம்
8.வலையுலகில் எதைச் செய்யக்கூடாது?
ஆகிய தலைப்புகளில் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்களும், மூங்கில் காற்று திரு. டி.என்.முரளிதரன் அவர்களும் வகுப்பெடுத்தார்கள். தஞ்சைத்தமிழ் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளரர்க பணிபுரியும் திரு.ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் வருகை தந்து சிறப்புரையும் ஆற்றினார்.

                                          (கலந்து கொண்ட பதிவுலக நண்பர்கள்)


படத்தில் இருப்பவர்கள் இடமிருந்து வலம்
1.திரு.ஜம்புலிங்கம் ஐயா
2.திண்டுக்கல் தனபாலன் 
3.மூங்கில் காற்று திரு. டி.என்.முரளிதரன்
4.திரு.அ.பாண்டியன்,
5.திரு.கவிஞர் முத்துநிலவன்,
6.திரு.கஸ்தூரிரெங்கன்,
நிற்பவர்களில் இடமிருந்து வலம்
7.திரு.குருநாதசுந்தர்,
8.திரு.கரந்தை ஜெயக்குமார்,
9..திரு.மகாசுந்தர்,
10.திருமதி.கவிஞர் கீதா,
11.திருமதி.மாலதி

படம் எடுத்தவர்
12.திரு.திருச்சி தமிழ் இளங்கோ 

படத்தில் இல்லாதவர்கள் ஆனால் வருகை புரிந்தவர்கள்
14.திருமதி.கவிஞர் சுவாதி

பதிவர் சந்திப்பா!

தமிழை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு உன்னதமான இப்பயிற்சிக்காக பல்வேறு இடங்களிலிருந்து வருகை தந்து சிறப்பித்த பதிவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சந்தித்தது இது பயிற்சியா? பதிவர்களின் மினி மாநாடா? எனும் ஐயம் எழுந்திருக்கலாம். அவ்வாறு கலந்து கொண்டஅனைத்து பதிவர்கள்களுக்கு நன்றி சொல்வதோடு அல்லாமல் அவர்களோடு பகிர்ந்து கொண்ட மணித்துளிகள் ஒவ்வொன்றும் பயனுள்ளதாகவும், என்னை மென்மேலும் மெருகேற்றி வளர்த்துக் கொள்ளவும் பேருதவியாக இருக்கும் எனும் மகிழ்ச்சியோடு உங்களோடு பகிரும் நண்பன் அ.பாண்டியன். நன்றி.

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!



21 comments:

  1. வணக்கம்
    சகோதரன்

    தங்களின் சேவையை கண்டு என்மனம் உவகை கொண்டது.. பயிற்சி நடத்திய தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் தமிழர்கள் வாழட்டும் தழிழ்மொழி சிறக்கட்டும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா. தங்களின் நட்பும் தமிழ்ப்பற்றும் என்றும் வேண்டும். தொடர்ந்து நட்பு பாராட்டுவோம். நன்றி சகோதரர்

      Delete
  2. சிறப்பான கட்டுரை. உடனுக்குடன் பகிர்ந்து கொண்ட தம்பி மணவை அ.பாண்டியன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்! நான் இனிமேல்தான் தொகுத்து எழுத வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான குணமும் சுறுசுறுப்பும் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். தொடர்ந்து எல்லாவற்றிலும் இணைந்திருப்போம் ஐயா. நன்றீங்க ஐயா.

      Delete
  3. அருமை .கற்றதை உடனே செயல்படுத்தி விட்டீர்கள் போல பாராட்டுக்கள் சகோ.எழுத நேரமில்லை என்பதால் உங்கள் பதிவை உங்கள் அனுமதியுடன் எனது வலைப்பூவிலும்,முகநூலிலும் பதிந்து கொள்ள அனுமதி தரவும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி
      லிங்க் கொடுப்பதெல்லாம் நான் ஏற்கனவே அறிந்தது தான். இப்பயிற்சியின் பல புதிய தகவல்களையும், சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொண்டேன். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கவிஞர் முத்துநிலவன் ஐயாவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். தங்களுக்கும் நன்றி சகோதரி.

      Delete
  4. அருமையான முயற்சி... தற்செயலாக டிடி-க்கு அழைத்த போது இந்த நிகழ்வு குறித்து கூறினார்..

    //வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன்// ஆமா இது டிடிக்கு தெரியுமா :-))))))))

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோதரர் வணக்கம்
      வலைச்சித்தர் பட்டம் உங்களுக்கு தெரியாதா! அது தான் இப்ப பிரபலம். பயணம் என்றே இருப்பதால் இதெல்லாம் தாமதமாக தெரிகிறது உங்களுக்கு. சும்மா. வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள் சகோதரர்.

      Delete
  5. அடேயப்பா இத்துணை இணைப்புகளுடன் ஒரு பதிவு அதுவும் எந்த நிகழ்வும் விட்டுப் போகாமல்.. வாழ்த்துக்கள் சகோ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ. தங்களின் அன்பும் கற்றதை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் பாங்கும் கண்டு உளம் மகிழ்ந்தேன். விரைவில் சந்திப்போம். நன்றி சகோ.

      Delete
  6. அட...! உடனடி பகிர்வு... நன்றி + வாழ்த்துக்கள் சகோதரா...

    ReplyDelete
  7. பலே பாண்டியா! கற்றதை உடனுக்குடன் செயல்படுத்தும் உங்கள் சுறுசுறுப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது! எனது பதிவில் உங்களின் இந்தப் பதிவைப்பற்றியம் சேர்ததிருக்கிறேன். நன்றி தொடரட்டும். (வலைப்பதிவர்களின் அடுத்த “சிறு மாநாடு“ விழுப்புரம் அருகில்?)

    ReplyDelete
  8. சிறப்பான கட்டுரை. நாமும் நேரில் இருந்தது போன்ற உணர்வு..
    நிகழ்ச்சிகளைப் பகிர்ந்து கொண்ட தங்களுக்கு நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
  9. இணையத்தில் தமிழ் வளர்ச்சிக்காக உழைக்கும் அன்புள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. மிக அருமை.
    நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
    இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  11. நல்ல முயற்சிக்கு பாராட்டுக்கள்.
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
  12. தோழி கீதாவின் வலையில் பார்த்தேன்.நல்ல முயற்சி சிறப்பாக நடந்து முடிந்தமையை இட்டு மகிழ்ச்சியே. தங்கள் சுறுசுறுப்பு கண்டு வியந்து தான் போகிறேன். தங்களை எல்லாம் வாழ்த்த தானே முடியும் பங்கு பற்ற எல்லாம் இயலாதே. இருந்தாலும் நடப்பதையாவது தெரிந்து கொள்ள முடிகிறதே அது வரையாவது மகிழ்ச்சி தான். மிக்க நன்றி ! வாழ்த்துக்கள் பாண்டியா....!

    ReplyDelete
  13. நிகழ்வு விரிப்பு மகிழ்வைத் தருகிறது.
    இந்நிகழ்வை மேலும் விரிவுபடுத்தினால்
    உலகெங்கும் தமிழ்பரப்ப இலகுவாயிருக்கும்.
    நிகழ்வை நடத்தியோர்
    நிகழ்வின் பங்காளிகள் என
    எல்லோருக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  14. திரு முத்துநிலவன் ஐயா அவர்களின் தலைமையின்கீழ் தங்களைப் போன்றோரின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கதாகும். வலையில் எழுத்தில் சந்தித்த நாம் நேரில் சந்தித்தது என்பது மனதிற்கு நெகிழ்வினைத் தந்தது. தொடர்ந்து எழுதுவோம், சந்திப்போம், சாதிப்போம்.

    ReplyDelete
  15. பயிற்சி முகாம் பற்றி படிப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete
  16. இப்படி ஒரு பயிற்சிப்பட்டறை இங்கே மதுரையில் நடக்காதா என்று ஏங்க வைக்கிறது உங்கள் பதிவு !
    த ம 6

    ReplyDelete