Monday, 12 May 2014

வீதி கலை இலக்கிய களம்- மே மாத கூட்டம்


புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் திரு. அருள்முருகன் அவர்களின் ஆலோசனையாலும் கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்களின் சீரிய முயற்சியாலும் இயங்கி வரும் வீதி கலை இலக்கிய களம் பற்றி நண்பர்களின் முந்தைய பதிவுகள் மூலம் அறிந்திருப்பீர்கள். 11.05.2014 அன்று நடந்த மே மாத கூட்ட ஒருங்கிணைப்பாளர்களாக நானும் திரு. கவிஞர் மகாசுந்தர் அவர்களும் இருந்தோம். கூட்டம் புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையற்கலை கல்லூரியில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் முன்னிலை வகித்தார். திரு. மகாசுந்தர் அவர்கள் வரவேற்புரை வழங்கி அனைவரையும் வரவேற்றார். சென்ற கூட்டத்தின் நிகழ்வுகளை அறிக்கையாக திரு. பாண்டியன் (நான்) அவர்கள் வாசித்தார். தலைமை உரை திரு. முபா அவர்கள் வழங்கினார். திரு. ப. முத்துப்பாண்டியன் அவர்கள் ”மௌனம்”எனும் கவிதையை வாசித்தார், திரு. ரவீந்திரன் அவர்கள் ”தமிழ்மண்”  எனும் கவிதையை வாசித்தார்.

பின்னர் இரண்டு கவிதைகள் பற்றிய விமர்சனங்களைப் பங்கேற்பாளர்கள் எடுத்துரைத்தார்கள். திருமதி. இரா. ஜெயலட்சுமி அவர்கள் ”பணிப்பண்பாடு” எனும் வெ.இறையன்பு அவர்கள் எழுதிய நூலை அறிமுகம் செய்தார் அத்தோடு அல்லாமல் கூட்டத்திற்கு வருகை தந்த 35 பேருக்கும் அந்த நூலையும் வழங்கி சிறப்பு சேர்த்தார். முனைவர் திரு. சு. துரைக்குமரன் அவர்கள் சிறுகதை வாசித்தார். திரு.ஸ்டாலின் சரவணன் அவர்கள் கேப்ரியேல் மார்க்யூஸ் எழுதிய “நூற்றாண்டுகளின் தனிமை“ எனும் நூல் விமர்சனம் செய்தார்.

தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் நமது செயல்பாடுகள் யாவும் இணையத்தின் வாயிலாக ஆவணப்படுத்தும் முயற்சியாக முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் வலைப்பக்கம், முகநூல், மின்னஞ்சல் முகவரி, டிவிட்டர் ஆகியவைகள் தொடங்கி வைத்தும் களப்பணி பற்றிய ஆலோசனைகளையும் வழங்கினார்.

வீதி கலை இலக்கிய களத்திற்கான வலைப்பக்கம்: http://veethimeet.blogspot.com/
முகநூல் முகவரி: veethi (user)
                                      veethi ilakiya kalam (page)
டுவிட்டர் பக்கம்: www.twitter.com/veethi

(பக்கங்களை வடிவமைத்துக் கொடுத்த சகோதரர் மதுகஸ்தூரிரெங்கன் (மலர்தரு)அவர்களுக்கு நன்றிகள்)

முடிவாக திரு. பாண்டியன் அவர்கள் நன்றியுரை வழங்க கூட்டம் இனிதே நிறைவடைந்தது. அடுத்த கூட்டத்திற்கு திரு. கஸ்தூரி நாதன் அவர்களும், திருமதி. இரா. ஜெயலெட்சுமி அவர்களும் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவார்கள் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

வருகை தந்த அனைவரும் பார்வையாளர்களாக இல்லாமல் பங்கேற்பாளர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டது கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது அனைவருக்கும் நன்றிகள்.

குறிப்பு:
கூட்டத்தின் முடிவில் தான் எங்களுக்கு ஒரு இனிய செய்தி தெரிந்தது கவிஞர் திரு. முத்துநிலவன் ஐயாவின் பிறந்த நாளும் அன்று என்று. ஐயா அவர்களுக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தோம். நீங்கள் வாழ்த்து கூற விரும்பினால்அவரது வலைப்பக்கத்திற்கு சென்று வாழ்த்துங்களேன் http://valarumkavithai.blogspot.in/

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

9 comments:

 1. இலக்கிய ரசிகர்களின் களம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் !
  த ம 1

  ReplyDelete
 2. வணக்கம்
  சகோதரன்

  தமிழர்கள் வாழட்டும் எம் தமிழ் மொழி வளரட்டும்....தொடருங்கள் பயணத்தை....வாழ்த்துக்கள்...
  த.ம 3வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. நல்ல செயல்பாடுகள். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. சிறப்பை தொகுத்து வழங்கியமைக்கு (இணைப்புகளுக்கும்) நன்றி சகோதரா...

  ReplyDelete
 5. மாதமொரு கூட்டம்! சிறந்த பணி! தவறாமல் நடக்க வாழ்த்து!

  ReplyDelete
 6. வீதி கலை இலக்கிய களம்
  உலகெங்கும்
  தமிழைப் பரப்பிப் பேண உதவுமென
  நம்புகிறேன்.
  வாழ்த்துகள்

  ReplyDelete
 7. பகிர்வுக்கு நன்றி! தொடர்ந்து வீதி அமைப்பு சிறக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. வீதி கலை இலக்கிய களம் வளர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. நிறைவாய் இருந்தது கூட்ட அமைப்பு.வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete