அரும்புகள் மலரட்டும்: ரூபன் மற்றும் பாண்டியன் நடத்திய கட்டுரைப் போட்டியின் முடிவுகள் வெளியீடு

Thursday 3 April 2014

ரூபன் மற்றும் பாண்டியன் நடத்திய கட்டுரைப் போட்டியின் முடிவுகள் வெளியீடு


வணக்கம் நண்பர்களே! ரூபன் மற்றும் பாண்டியன் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியின் முடிவுகள் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இதில் பங்கேற்று சிறப்பித்த அனைத்து உள்ளங்களுக்கும், பரிசு பெற்ற நண்பர்களுக்கும் எங்கள் உளப்பூர்வமான நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். பல்வேறு பணிகளுக்கு இடையிலும் நடுவர்களாக இருந்து நடுநிலையுடன் சிறப்பான முடிவுகளை அறிவித்த நடுவர்கள்

1. கவிஞர் திரு. முத்துநிலவன் அவர்கள்  
வலைப்பக்கம்: வளரும் கவிதை

2.கவிஞர் திரு. இராய. செல்லப்பா அவர்கள்
வலைப்பக்கம்: http://imayathalaivan.blogspot.in

3. கவிஞர் திரு. வித்யாசாகர் அவர்கள்
வ்லைப்பக்கம்: http://vithyasagar.com
நடுவர் பெருமக்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். தங்களின் பங்களிப்பும், ஆலோசனைகளும் எங்களுக்கு வருங்காலங்களில் சிறப்பாக
பணிபுரிய உதவும் என்பது உண்மை. உங்கள் அனைவருக்கும் மீண்டும
எங்களது சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்... போட்டிக்கான பணிகளில் எங்களை விட முனைப்பு காட்டிய, இரவு பகலெல்லாம் இதே சிந்தனையோடு இருந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை எங்களுக்கு ஆலோசனைகள் வழங்கிய நிர்வாக குழு உறுப்பினர்கள்

1. திரு. ரமணி ஐயா அவர்கள்
வலைப்பக்கம்: http://yaathoramani.blogspot.com

2. திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
வலைப்பக்கம்: http://dindiguldhanabalan.blogspot.com

இருவருக்கும் எங்களது நன்றிகள் என்று சொல்லி உங்களை விட்டு விலகி இருக்க விரும்பவில்லை உண்மையில் இந்த போட்டு வெற்றிகரமாக நடந்தது உங்கள் உழைப்பால் தான் நாங்கள் காலந்தோறும் உங்கள் இருவரின் கரம் பிடித்து நட்பாக வலம் வர விரும்புகிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். போட்டிக்காக உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி! நன்றி! நன்றி!..

இதோ முடிவுகள் உங்களின் கண்களுக்கு காட்சியாக்கப்பட்டுள்ளது.                   

முதல் மூன்று பரிசுகள் பெற்றவர்கள் விவரம்: 

1.பதிவர் பெயர் : காரஞ்சன்(சேஷ்)

தளத்தின் பெயர் : Seshadri e.s.
கட்டுரைத் தலைப்பு : இணையத்தின் சமூகப் பயன்பாடு

2.பதிவர் பெயர் : Iniya
தளத்தின் பெயர் : Kaviyakavi
கட்டுரைத் தலைப்பு : இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்

3.பதிவர் பெயர் : கீதமஞ்சரி
தளத்தின் பெயர் : கீதமஞ்சரி
கட்டுரைத் தலைப்பு : இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்
http://www.geethamanjari.blogspot.com.au/2014/02/blog-post_20.htm


ஏழு ஆறுதல் பரிசுகள்: சான்றிதழ்கள் பெறுபவர்கள் விவரம்:

>>பதிவர் பெயர் : Karthikeyan L

தளத்தின் பெயர் : கார்த்திக்கின் கிறுக்கல்கள்
கட்டுரைத் தலைப்பு : உழைப்புக்கான வழியினைச் சீர் செய்ய எண்ணாது அரசு இலவசங்களிலும் வியாபாரத்திலும் முனைவது சரியா…?
>>பதிவர் பெயர் : Dineshsanth S
தளத்தின் பெயர் : மனதின் ஓசை
கட்டுரைத் தலைப்பு : இணையத்தின் சமூகப் பயன்பாடு
>>பதிவர் பெயர் : PSD PRASAD
தளத்தின் பெயர் : அரங்கேற்றம்
கட்டுரைத் தலைப்பு : இணையத்தின் சமூகப் பயன்பாடு
>>பதிவர் பெயர் : கிரேஸ்
தளத்தின் பெயர் : தேன் மதுரத் தமிழ்!
கட்டுரைத் தலைப்பு : தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்
>>பதிவர் பெயர் : yarlpavanan
தளத்தின் பெயர் : தூய தமிழ் பேணும் பணி!
கட்டுரைத் தலைப்பு : தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்!
>>பதிவர் பெயர் : கோவை மு சரளா
தளத்தின் பெயர் : பெண் என்னும் புதுமை
கட்டுரைத் தலைப்பு : தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்
>>பதிவர் பெயர் : Chokkan Subramanian
தளத்தின் பெயர் : உண்மையானவன்
கட்டுரைத் தலைப்பு : இன்றைய சினிமாவின் போக்கும் சமுதாய பாதிப்புகளும்

கவிஞர் திரு. முத்துநிலவன் ஐயா அவர்களின் சிறந்த பின்னூட்டத்திற்கான பரிசுகளைப் பெறுபவர்கள்:



நமது கட்டுரைப் போட்டியில் கட்டுரைக்கான பின்னூட்ட விமர்சனங்கள் பரிசு பெறும் அளவிற்கு அமையவில்லை என்று நடுவர்கள் கருதியதால் கவிஞர். திரு. முத்துநிலவன் ஐயா அறிவித்த பரிசுகள் ஆறுதல் பரிசு பெறும் நண்பர்களுக்கு வழங்கப்படும். ஒவ்வொருவருக்கும் தலா ரூ.200 மதிப்புள்ள புத்தகம் வழங்கப்படுகிறது. நண்பர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும், விரும்பும் புத்தகத்தைத் தெரிவித்தால் கவிஞர் திரு. முத்துநிலவன் ஐயா அனுப்பி வைப்பார். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் தங்கள் இந்திய முகவரியை மட்டும் தெரிவிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறோம்



வாழ்த்துகள் 



பரிசு பெற்ற அனைவருக்கும் ரூபன் மற்றும் பாண்டியன் சார்பாகவும், எங்கள் நடுவர்கள் குழு சார்பாகவும், எங்கள் நிர்வாக குழு சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பரிசு பெற்ற அனைவரும் தங்கள் முழு முகவரியை கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

1.rupanvani@yahoo.com

2.pandi29k@gmail.com


 ரூபன் அவர்கள் இடைவிடாத பணி காரணமாக நம்மிடமிருந்து விலகி இருக்கும் சூழல் அவர்களின் பணி சிறக்கவும் மீண்டும் நம்மோடு விரைவில் இணையவும் வாழ்த்துவோம். நன்றி...


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

32 comments:

  1. மதிப்புக்குரிய அறிஞரே!

    யாழ்பாவாணனின் தளத்தின் பெயர் : தூய தமிழ் பேணும் பணி!

    யாழ்பாவாணனின் கட்டுரைத் தலைப்பு : தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்!

    என்றவாறு அமைதல் வேண்டும்.

    போட்டியில் வெற்றி பெற்ற எல்லோருக்கும் எனது வாழ்த்துகள்.

    தமிழை வளர்த்துப் பேணப் போட்டியை நடத்தியோருக்கு மிக்க நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      தவறுக்கு பொறுத்தருள வேண்டும். திருத்தி விட்டேன். தமிழ்ப்பணி மேலும் சிறக்க வேண்டுமென்பதே எனது விருப்பமும். வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றிகள் ஐயா

      Delete
  2. வணக்கம்.
    ரூபன்&பாண்டியன் இருவரும் இணைந்து நடத்திய.
    தைப்பொங்கல் சிறப்புக் கட்டுரைப் போட்டிக்கு வலையுலக நண்பர்கள் ஊக்கமும் உச்சாகமும் கொடுத்தார்கள் அவர்களுக்கும் எனது நன்றிகள். முடிவுகள்.அன்புக்குரிய சகோதரன் பாண்டியன் தளத்தில் வெளிவந்தமைக்கு எனது நன்றிகள்(சகோ)
    அத்தோடு கட்டுரை படைத்த படைப்பாளிகள் அனைவரும் சிறப்பாக எழுதியுள்ளார்கள்
    அதில் சிறப்பு நடுவர்கள்
    01.கவிஞர்:-இரா.செல்லப்பா (ஐயா).
    02.கவிஞர்:-நா.முத்து நிலவன்(ஐயா)
    03.கவிஞர்:-ரமணி(ஐயா)
    04.வலைச்சித்தர்:-திண்டுக்கல் தனபாலன்
    (அண்ணா)-
    05.கவிஞர்:-குவைத் வித்யாசாகர்(அண்ணா)
    06.திரு.அ.பாண்டியன்(சகோ)
    நாங்கள் அனைவரும் படித்து சிறப்பான கட்டுரையை தேர்வு செய்தோம்.நடுவர்களுக்கும் எனது நன்றிகள் முதல் 3இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்கும் ஏனைய ஆறுதல் பரிசு பெற்ற அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளும்.வாழ்த்துக்துக்களும்...
    சான்றிதழ்+கேடயம்&பதக்கம்
    போன்ற வற்றில் தங்களின் பெயர் அச்சிட்டு தபாலில் அனுப்ப உள்ளதால் முகவரியை மின்னஞ்சல் செய்யுங்கள்....
    மீண்டும் அடுத்த போட்டி தலைப்புடன் வலையுலகில்
    சந்திப்போம்.....
    இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-


    ReplyDelete
    Replies
    1. இனிய சகோதரருக்கு வணக்கம்
      தங்களின் முயற்சியில் என்னையும் இணைத்துக் கொண்டமைக்கு தங்களுக்கு நன்றிகள். போட்டி நன்முறையில் முடிவடைந்ததும் நமது வலைப்பக்க நண்பர்கள் கலந்து கொண்டு ஆதரவளித்ததும் கூடுதல் மகிழ்ச்சி. மீண்டுமொரு ஒரு முறை கலந்து கொண்ட, பரிசு பெற்ற நண்பர்களுக்கும், எங்கள் நடுவர் குழு, நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்

      Delete
  3. பரிசு பெற்ற அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!

    இந்தப் போட்டியை இத்தனை ஆர்வத்துடனும், முனைப்புடனும், கடுமையான உஹப்புடனும் நடத்திய நண்பர்கள் ரூபன், பாண்டியன், அவர்களுடன் உழைத்த நண்பர்கள் DD, ரமணி அவர்களுக்கும், மேலும் , மேலும் தங்கள் பணி சிறக்க எங்கள் நல்வாழ்த்துக்கள்! உங்களுக்கும் பாராட்டுக்கள்!

    நடுவர்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ரூபன் தம்பி இத்தனை நாட்கள் நம்மிடையே வராததற்கு காரணம் அறிவோம்! இனி தம்பி அவர்களைக் காண விழைகின்றோம்! அவருடைய கடுமையான் உழைப்புக்கும், ஆர்வத்திற்குகும், எல்லோரையும் ஊக்குவிப்பதற்கும் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்! தம்பி பாண்டியன் அவர்களுக்கும் சேர்த்துத்தான்!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. கருத்திட்டு ஊக்கப்படுத்திய தங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா. தொடர்ந்து எல்லாவற்றிலும் இணைந்திருப்போம். நன்றீங்க..

      Delete
  4. வெற்றி பெற்ற அனைவருக்கும் உளங் கனிந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றீங்க ஐயா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

      Delete
  5. தம்பி ரூபன் அவர்களின் கணினி பிரச்சனை விரைவில் தீரட்டும்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர்
      போட்டிக்கு உறுதுணையாக இருந்த உங்கள் உழைப்புக்கும் அன்புக்கும் எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நன்றீங்க சகோதரர் அனைத்துக்குமாக!

      Delete
  6. அன்புச் சகோதரர் பாண்டியனுக்கும் ரூபனுக்கும் என் மனம் கனிந்த நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்....! திறம்பட நடத்திய நடுவர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கியவர்க்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ...! போட்டியில் கலந்து சிறப்பித்தவர்களுக்கும் பரிசினை வென்றவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....!

    ReplyDelete
    Replies
    1. அன்பின் சகோதரிக்கு வணக்கம்
      போட்டியில் பங்கு பெற்று போட்டியைச் சிறப்பித்தமைக்கு தங்களுக்கு நன்றிகள். வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள்.. இன்னும் பல படைப்புகள் தருக. வருகை தந்து பரிசு பெற்றோரை வாழ்த்தியமைக்கும் கருத்திட்டு மகிழ்ந்தமைக்கும் நன்றிகள் சகோதரி. தொடர்ந்து பயணிப்போம்.

      Delete
  7. போட்டி வெகு நிறைவாய் நிறைவு பெற்றுள்ளது !
    பங்கேற்று பரிசுபெற்ற எல்லா நண்பர்களுக்கும்
    என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. சகோதரிக்கு வணக்கம்
      போட்டி சிறப்பாக நடந்து முடிந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் எனது நன்றிகள்.

      Delete
  8. வணக்கம் சகோதரரே. முதலில் இப்போட்டி நடத்திய உங்களுக்கும், ரூபன் அவர்களுக்கும், உதவி செய்த திரு.தனபாலன் மற்றும் திரு.ரமணி அவர்களுக்கும் நன்றிகள். நடுவர்களாய் அரும்பணியாற்றிய திரு.முத்துநிலவன், திரு,இராய.செல்லப்பா மற்றும் திரு.வித்யாசாகர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
    வெற்றிபெற்ற காரஞ்சன், இனியா மற்றும் கீதமஞ்சரி ஆகியோருக்கு உளமார்ந்த வாழ்த்துகள். கீதமஞ்சரியின் கட்டுரை படித்தது நினைவில் இருக்கிறது, மிகவும் அருமையாய் எழுதியிருந்தார். மற்ற இருவரின் கட்டுரைகளைப் படிக்கிறேன். ஆறுதல் பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள், அவர்களின் கட்டுரைகளையும் சென்று படிக்கிறேன்.
    முடிவுகள் வெளியானதைத் தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி பாண்டியன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி
      போட்டியில் பங்கு பெற்று போட்டியைச் சிறப்பித்தமைக்கு தங்களுக்கு நன்றிகள். இன்னும் பல படைப்புகள் தருக. வருகை தந்து பரிசு பெற்றோரை வாழ்த்தியமைக்கும் கருத்திட்டு மகிழ்ந்தமைக்கும் நன்றிகள் சகோதரி. தொடர்ந்து பயணிப்போம்.

      Delete
  9. தைப்பொங்கல் சிறப்புக் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      வருகை தந்து அனைவரையும் வாழ்த்தி மகிழ்ந்தமைக்கு நன்றிகள் தங்களுக்கு. தொடர்ந்து பயணிப்போம்..

      Delete
  10. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி
      வருகை தந்து அனைவரையும் வாழ்த்தி மகிழ்ந்தமைக்கு நன்றிகள் தங்களுக்கு. தொடர்ந்து பயணிப்போம்..

      Delete
  11. நல்ல அனுபவம் பாண்டியன், உங்களிருவருக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும்.. நான் இதற்கு முன்னாலும் பல போட்டிகளுக்கு நடுவராக இருந்திருக்கிறேன். கவிதைப்போட்டி ஒன்றில் ஒரு பெண் அப்படியே ஒரு பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரத்தின் பாடலை எழுதியிருந்தார். அதற்கு மற்றொரு நடுவரும் நலல மதிப்பெண் கொடுத்திருந்தார். நான் அதில் குறிப்பெழுதினேன் - “இதற்குத்தான் பரிசு தரவேண்டும், ஆனால் பெற்றுக்கொள்ள பட்டுக்கோட்டை உயிருடன் இல்லையே!” என்று! இந்தப் போட்டியில் பலரும் சிறப்பாக சிரத்தையாக எழுதியிருந்தாலும், ஒரு நான்குபேர் அப்படியே இணையத்தில் எடுத்த தொகுப்பைத் தந்துவிட்டார்கள். (அடுத்து, எடுத்தவரும் அப்படியே வரிசைமாறாமல் எடுத்துக் கோத்திருந்தார்!) நல்லவேளையாக அவர்களில் யாருக்கும் பரிசு எதுவும் தரப்படவில்லை. ஆறுதல் பரிசுகள் ஓரிரு மதிப்பெண்களில் விடுபட்டவர்கள்தான். அவர்களும் நமது பாராட்டிற்கு உரியவர்களே என்பதால்தான் நான் அதை ஏற்றுக்கொண்டேன். சொந்தமாய் எழுதிய அனைவர்க்கும் நடுவர்களின் சார்பில் வாழ்த்தும் பாராட்டுகளும் தெரிவிப்பதோடு, இவர்கள் தொடர்ந்து எழுதிவரவும் வேண்டுமென வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஐயாவிற்கு வணக்கம்
      போட்டிக்கான தங்களின் பங்களிப்புக்கும், பரிசளிப்புக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா. போட்டி அறிவித்தலிருந்து இன்று வரை உழைத்த அனைத்து நடுவர்களுக்கும் எனது தனிப்பட்ட நன்றிகள். வருங்காலங்களிலும் நாம் இணைந்து செயல்படுவோம் ஐயா. தொடர்ந்து பயணிப்போம். கருத்திட்டு அனைவரையும் வாழ்த்தியமைக்கு நன்றிகள்..

      Delete
  12. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! போட்டி நடத்திய உங்களுக்கும் ரூபனுக்கும் நடுவராய் சிறப்பித்தவர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர்
      வருகை தந்து அனைவரையும் வாழ்த்தி மகிழ்ந்தமைக்கு நன்றிகள் தங்களுக்கு. தொடர்ந்து பயணிப்போம்..

      Delete
  13. நல்லதொரு தலைப்பில் பங்கு கொண்டவர்கள் அனைவரும் மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார்கள். பரிசு பெற்றவர்களுக்கும், நடுவர்களுக்கும், உங்களை வழி நடத்தியவர்களுக்கும், போட்டியை நடத்தி நல்லதொரு வாய்ப்பு கொடுத்த உங்களுக்கும், திரு ரூபனுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. இந்தப் போட்டியை ஏற்பாடு செய்த திரு.ரூபன், பாண்டியன் இருவருக்கும் என் உளமார்ந்த நன்றி! நடுவராக சீரிய பணியாற்றிய
    01.கவிஞர்:-இரா.செல்லப்பா (ஐயா).
    02.கவிஞர்:-நா.முத்து நிலவன்(ஐயா)
    03.கவிஞர்:-ரமணி(ஐயா)
    04.வலைச்சித்தர்:-திண்டுக்கல் தனபாலன்
    (அண்ணா)-
    05.கவிஞர்:-குவைத் வித்யாசாகர்(அண்ணா)
    06.திரு.அ.பாண்டியன்(சகோ) இவர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! பரிசு பெற்ற அனைவருக்குன் என் உளமார்ந்த வாழ்த்துகள்! நன்றி!

    ReplyDelete
  15. வலையுலகில் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டும் வண்ணம் பலரும் இணைந்து செயல்பட்டு வெற்றிகரமாய் மாபெரும் கட்டுரைப் போட்டியை முன்னின்று திட்டமிட்டு நடத்திய ரூபன் மற்றும் பாண்டியன் இருவருக்கும், திறம்பட செயலாற்றிய நடத்துனர்களுக்கும், நடுவர்குழாமுக்கும் அன்பான பாராட்டுகளும் நன்றிகளும். இப்போட்டியில் என்னுடைய கட்டுரை மூன்றாம் பரிசுக்குரியதாய் தேர்வானதில் அளவிலா மகிழ்வும் பெருமையும் அடைகிறேன். மிக்க நன்றி அனைவருக்கும். போட்டியில் பரிசு பெற்ற சக நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் பாஸ் ...என்நை ஆட்டத்துல சேர்த்துக்கல பார்த்தீங்களா ..

    ReplyDelete
  17. பரிசுபெற்ற அனைவருக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்! பரிசு பெறுவதைத் தவறவிட்ட அனைவருக்கும் எதிர்காலத்தில் பரிசுகள் குவிந்திட எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் .
    ஒரு நல்ல போட்டியை ஏற்பாடு செய்த ரூபன் &பாண்டியன் கூட்டணிக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  19. வெற்றி பெற்ற காரஞ்சன்(சேஷ்), இனியா, கீதமஞ்சரி, கார்த்திகேயன், தினேஷ் சாந்த், பிரசாத், கிரேஸ், யாழ் பாவாணன், கோவை மு சரளா, சொக்கன் சுப்ரமண்யன் ஆகிய அனைத்து
    சகோதர சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்!

    வலைப்பக்கம் எழுதும் பதிவர்கள் குறைந்து வரும் இந்நாளில், அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம், பதிவர்போட்டியை இணைந்து நடத்திய சகோதரர்கள் ரூபன் மற்றும் பாண்டியன் இருவருக்கும், மற்றும் நடுவர்கள் கவிஞர் முத்துநிலவன், கவிஞர் இராய. செல்லப்பா மற்றும் கவிஞர் வித்யாசாகர் ஆகியோருக்கும், ஆலோசனைகள் வழங்கிய கவிஞர் ரமணி மற்றும் திண்டுக்கல் தனபாலன் இருவருக்கும் நன்றி!

    அனைவருக்கும் ,எனது உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. வெற்றி பெற்ற அனைவருக்கும் உளங் கனிந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete