அரும்புகள் மலரட்டும்: நிஜமாகும் கனவுகள்

Monday 7 April 2014

நிஜமாகும் கனவுகள்


கதிரவன் காட்சி தந்த வேளையிலும்
கண்டேனடி நிறைமதியை உன்னுருவில்
நித்தம் நித்தம் என் நினைவோடு
யுத்தம் செய்யும் உம்மை நிஜத்தில் கண்டதும்
நின்றதடி என் இதயம்!

கட்டிய சேலைக்குள் கச்சிதமாய்
நீ பொருந்த உன்னை காண
கிளம்பியதும் என்னோடு பயணித்த
கற்பனை தேவதைகளை விரட்டி விட்டேன்
உன் மலர் முகம் கண்டு!

என் உயிரை நேரில் கண்டு
சற்றுத் தடுமாறி தலை நிமிர்ந்தேன்
தென்றலின் கரம் தீண்டி
கலைந்த உன் நெற்றி முடிக்குள்
சிக்கிக் கொண்டது என் இதயம்!

பொன்னகைக்கு மத்தியில் நீ பூத்த
சிறு புன்னகையே மிளிர்ந்ததடி எனக்கு
உள்ளங்களால் இணைந்த நம் இருவர்க்கும்
இல்லங்கள் இணைந்த காட்சி
இனித்ததடி கவிதையாய் நமக்கு!

கண்ணாடி முன் நீ நின்று
பொன்னகை மாட்டி அழகு பார்க்க
நானும் எனது  பிம்பம் காட்டி
காதல் பார்வை பார்த்த போது
அழுக்காறு காரணமாய் அலறியது பாதரசம்!

உணவகத்தில் நீ உண்ணும் காட்சியைக்
கடைவிழி பார்வையால் நான்
இமைக்காமல் ரசித்துக் கொண்டே
நான் விழுங்கியது உணவையல்ல
யாரையென்று உமக்கு மட்டும் தெரியும்!

என்னிடம் விடை பெற்ற தருணத்தில்
கடிகார முற்களைக் கடுகடு பார்வையால் நோக்கி
கதறிய என் மனதை உன்னோடு அனுப்பி விட்டு
கடைவீதி நான் கடந்தேன்
உன் நினைவை மட்டும் சுமந்து கொண்டு!

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

47 comments:

  1. அடடா......காட்சியை கண் முன் நிறுத்துகிறது கவிதை அசத்திட்டீங்க நன்றிசகோ.
    \\கிளம்பியதும் என்னோடு பயணித்த// இப்படி இருக்கணுமோ?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி
      நலம் தானே! நீங்கள் குறிப்பிட்டதை மாற்றி விட்டேன் சகோதரி. ரொம்ப நன்றி. வருகை தந்து கருத்திட்டமைக்கு எனது அன்பான நன்றிகள்.

      Delete
  2. காதல் ரசம் வழிகிறது நண்ப .....அழுக்காறு கொண்டது கண்ணாடி மட்டும் அல்ல. ...... கரம் பிடித்த பின்னும் காதல் சிறக்க வாழ்த்துக்கள். ...

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பா!
      உனது வாழ்த்துக்கும் எனது ஒவ்வொரு பதிவுக்கும் உனது வருகைக்கும் எனது அன்பு நன்றிகள் ( நீ விரும்பாவிட்டாலும்). நம் உயிர் கொண்ட நட்பில் என்றும் இணைந்திருப்போம். நன்றி நண்பா.

      Delete
  3. Replies
    1. வணக்கம் சகோதரி
      தங்களின் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி. கருத்திட்டு மகிழ்ந்தமைக்கு நன்றிகள். தொடர்ந்து பயணிப்போம்.

      Delete
  4. அப்படிச் சொல்லுங்க...!

    ம்... ம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே
      தங்களின் வாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்திட்டு மகிழ்ந்தமைக்கு நன்றிகள். எல்லாவற்றிலும் எனது சகோதரர் துணை இருப்பார் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. தொடர்ந்து இணைந்திருப்போம் சகோதரரே.

      Delete
  5. உன் நினைவை மட்டும் சுமந்து கொண்டு!

    அருமையான காதல் கவிதை. வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்து (அப்படி தானே) கருத்திட்டமைக்கு மிக்க நன்றீங்க சகோதரரே. தங்கள் வாழ்த்துக்கும் நன்றிகள்.

      Delete
  6. #தென்றலின் கரம் தீண்டி
    கலைந்த உன் நெற்றி முடிக்குள்#
    உண்மையைச் சொல்லுங்க ,தென்றலின் கரம்தானா ?
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பகவான் ஜி சகோதரர்
      மெய்யாலும் நான் நல்ல பையனுங்கோ. அது தென்றலின் கரம் தான். இது பகவான் ஜி குசும்புங்கிறது. பத்த வச்சுட்டீயே பரட்டைங்கிற திரைப்பட வசனம் நினைவுக்கு வருகிறதே எனக்கு!

      Delete
  7. கவிதை அருமை சகோதரரே...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. படித்து கருத்திட்டு மகிழ்ந்தமைக்கும் வாழ்த்துக்கும் அன்பு நன்றிகள் சகோதரர். தங்கள் தமிழன் என்றால் திமிரு இருக்கனும் மிக அருமை சகோ. படித்ததும் அவ்ளோ மகிழ்ச்சி. தொடர வாழ்த்துகள்.

      Delete
  8. கவிதை மிக அழகு!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  9. நண்பரே அருமை அருமை
    கனவு நிஜமாகட்டும்

    ReplyDelete
    Replies
    1. கனவுகள் நிஜமாக வாழ்த்தியமைக்கு மிக்க நன்றீங்க ஐயா.

      Delete
  10. பொன்னகைக்கு மத்தியில் நீ பூத்த
    சிறு புன்னகையே மிளிர்ந்ததடி எனக்கு
    உள்ளங்களால் இணைந்த நம் இருவர்க்கும்
    இல்லங்கள் இணைந்த காட்சி
    இனித்ததடி கவிதையாய் நமக்கு!
    நான் எப்பவோ எதிர்பார்த்தேன் இந்தக் கவிதையை எங்கடா காணோம் என்று பார்த்தேன். இப்ப தான் பொங்கி இருக்கிறது காதல் அப்படியா சகோ கடமை உணர்வை கொஞ்சம் தள்ளி வையுங்கையா.
    ஹா ஹா .......ரசித்து அழகாக எழுதியுளீர்கள். நன்றி வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி
      முன்பே எதிர்பார்த்தீர்களோ! இந்த மரமண்டைக்கு தான் இது எல்லாம் தெரிய மாட்டீங்கதே!! இப்ப தான் பொங்கி இருக்கு சகோதரி என்ன செய்ய! இனி கலக்கிடுவோம்ல. ரசித்து கருத்திட்டு மகிழ்ந்தமைக்கு நன்றிகள் சகோதரி..

      Delete
  11. சரி சாரே
    இன்னும் சில மாதங்கள் காத்திருந்தால் போகுது...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ
      தங்களின் வழிகாட்டுதலின் படியே பொறுத்திருப்போம். அதனால் என்ன! எல்லாம் சுபமாக முடிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி சகோ. கருத்திட்டமைக்கு நன்றிகள்..

      Delete
  12. // உணவகத்தில் நீ உண்ணும் காட்சியைக்
    கடைவிழி பார்வையால் நான்
    இமைக்காமல் ரசித்துக் கொண்டே
    நான் விழுங்கியது உணவையல்ல
    யாரையென்று உனக்கு மட்டும் தெரியும்!..//

    அப்படியானால்.. உங்களுக்கு மட்டும் டபுள் மீல்ஸ்!.. சரியா!..

    ReplyDelete
  13. Replies
    1. வணக்கம் அம்மா
      தங்களின் ரசனைக்கும் நன்றி. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  14. நிச்சய தார்த்தம் முடிஞ்சிடுச்சின்னு புரிஞ்சிக்கிட்டேன்... கொஞ்சம் பொறுங்க சகோ ..உங்க மனசை கொள்ளையடிச்சவங்க இன்னும் சில நாள்ல உங்க வீட்டுக்கு வந்துட போறாங்க...! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி
      தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது. கருத்துரை உற்சாகமடையச் செய்கிறது. திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்துவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி சகோதரி.

      Delete
  15. ஒவ்வொரு வரியிலும் காதல் ரசம்! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து ரசித்து வாழ்த்தியமைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரரே.

      Delete
  16. என் உயிரை நேரில் கண்டு
    சற்றுத் தடுமாறி தலை நிமிர்ந்தேன்
    தென்றலின் கரம் தீண்டி
    கலைந்த உன் நெற்றி முடிக்குள்
    சிக்கிக் கொண்டது என் இதயம்!//

    காதல் கனி ரசம் பிழிந்து விட்டீர்கள்! ரசனையான, அசத்தல் கவிதை நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா இவ்ளோ ரசித்தமைக்கு நன்றிகள் ஐயா. தங்களின் ரசனை குணம் வியக்க வைக்கிறது. வருகைக்கும் கருத்திட்டு வாழ்த்தியமைக்கு நன்றிகள் ஐயா.

      Delete
  17. ரஸித்தேன் ....... நினைவை மட்டும் சுமந்து கொண்டு!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      பணிச்சுமையிலும் வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றிகள் ஐயா

      Delete
  18. யாரை நினைத்து எழுதப்பட்ட கவிதை சகோ!!!

    அருமையான ஒரு காதல் கவிதை.

    ReplyDelete
    Replies
    1. யாரைனு உங்களுக்கு தெரியாதாக்கும். தெரியாத மாதிரியே கேக்குறது. போங்க சகோ. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

      Delete
  19. செம ரகளை சகோ!
    நல்ல ராசனை தான் சகோவிற்கு , மணப்பாறை கடைவீதிகள் கண்முன் வருகின்றன! கனவுகள் நனவாகட்டும்!!

    ReplyDelete
    Replies
    1. அப்படியெல்லாம் இல்லை சகோதரி உங்கள் நாத்தினாரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது அதான் இப்படி. ரசித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி. விரைவில் சந்திப்போம்.

      Delete
  20. //என் உயிரை நேரில் கண்டு//
    //அழுக்காறு காரணமாய் அலறியது பாதரசம்!// அட அட மிக அருமை, கவிதை ரொம்ப நல்லா இருக்கு.
    மணப்பாறை கடைவீதியா? மனம் கொண்டு சென்றவர் யாரோ? :)
    வாழ்த்துகள் சகோதரரே.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் யாருனு தெரியாதாக்கும்! வருகை தந்து கருத்திட்டு வாழ்த்திய சகோதரிக்கு அன்பு நன்றிகள்

      Delete
  21. காதல்தேன் சொட்டும் கவித்தேனடை. பாராட்டுகள் பாண்டியன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி
      வருக. தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

      Delete
  22. அருமையாக உள்ளது தோழரே. இதற்கு இசை அமைத்து நல்லதொரு திரைப்பாடலாகவும் மாற்ற முடியும் போலுள்ளது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்படிச் சொல்லுங்க சகோ! நம்ம கதையை வைத்து படமே எடுத்துடலாம். பாவம் மக்கள் பொழைச்சு போகட்டுமேனு விட்டு வச்சுருக்கோம். ரசித்தமைக்கு நன்றி சகோ. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

      Delete
  23. தம்பி கனவுகளிலேயே இருக்கிங்களோ ? சரி சரி... அழகா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. அக்கா வாங்க. கனவெல்லாம் இல்லை. நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததால் அதன் நினைவுகளில் ஏதோ உளறியிருக்கிறேன். அவ்வளவே. கருத்திட்டு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிகள் சகோதரி.

      Delete