அரும்புகள் மலரட்டும்: மாணவர்களுக்கு எமனாகும் இருசக்கர வாகனங்கள்

Saturday 8 March 2014

மாணவர்களுக்கு எமனாகும் இருசக்கர வாகனங்கள்


இப்போதெல்லாம் அலாரம் எழுப்பி காலை துயில் எழுவது இல்லை. ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டு எழுந்திருக்கிறேன். நித்தம் என்னை எழுப்பதைக் கடமையாக கொண்டுள்ளன அவைகள். காரணம் நமது இல்லம் அரசு தலைமை மருத்துவமனை எதிர்புறம். சப்தம் கேட்டு என்னவென்று விடயத்தைத் தெரிந்து கொண்டவர்களிடம் கேட்டால் விபத்து நேரிட்டு கல்லூரி மாணவன் இறந்து விட்டான் என்பது தான் பெரும்பான்மையான மறுமொழியாக இருக்கும். அந்த அளவிற்கு மாணவர்கள் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். இளம் ரத்தம் என்பதால் வண்டியை முறுக்கி வேகத்தைக்கூட்டி பயணத்தைத் தொடர்ந்து எதிர்வரும் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகி இறக்க நேரிட்டு பெற்றோரையும் தன்னைச் சார்ந்தவர்களையும் வேதனைகளில் ஆழ்த்தி விட்டீர்கள் சென்று விடுவது தொடர்கதையாகுகிறது.

இனியும் தொடர கூடாது என்னும் சின்ன அக்கறையாலும் ஒவ்வொரு முறையும் கோர விபத்தைக்கண்டு விம்மி அழும் மனதின் வார்த்தைகளை இங்கே இறக்கி வைக்கிறேன் இதனால் சிறிதளவேனும் மாற்றம் நிகழும் என்னும் நம்பிக்கையோடு..

மாணவர்கள் காலையில் எழுந்து டியூஷன், பள்ளி வகுப்புகள், மாலையில் டியூஷன் என்று "ரவுண்ட்' அடித்து இரவு 9.00 மணிக்கு வீடு திரும்புகின்றனர். அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக, மாணவர்களுக்கு, பெற்றோரும் மொபைல்போன், பைக் என்று வாங்கிக்கொடுத்து ஊக்குவிக்கின்றனர்.இதில், தவறு ஏதும் இல்லையென்றாலும், 18 வயது நிரம்பாதவர்கள் ரோட்டில் வாகனம் ஓட்ட அனுமதிப்பதன் மூலம் போக்குவரத்து விதிமுறைகள் மீறப்படுகின்றன. எதிர்கால கனவுகளுடன் இளம்தளிர்கள் கண்மூடித்தனமான வேகத்தில் வாகனத்தை ஓட்டுவதால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. பள்ளி பருவத்தினர் இருசக்கர வாகனங்களைத் தவிர்க்க வேண்டும்.

பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் பங்கு
                             பள்ளி ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோர்களும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிப்பதோடு சாலை விதிகளையும் சேர்த்து போதிக்க வேண்டும். டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது; அவ்வாறு ஓட்டுவது சட்டப்படி குற்றம் என்பதை தினமும் கற்பிக்க வேண்டும். பெற்றோர்கள் வீட்டிலிருந்து கிளம்பும் போது தங்கள் குழந்தைகள் தலைக்கவசம் அணிய வற்புறுத்த வேண்டும் இதே போன்று தொடர்ந்து வற்புறுத்தினால் அவனே அதைக் கடமையாக்கிக் கொள்வான். சொந்த வாகனத்தை விடுத்து அடுத்தவர்கள் வாகனத்தை ஓட்டுவதை தவிர்க்க தங்கள் வயது வந்து பிள்ளைகளுக்கு வற்புறுத்துங்கள் ஏனெனில் நம் வாகனம் நம் சொல் கேட்கும். அதனை கட்டுப்படுத்துவது எளிது. வேறோருவரின் வாகனம் சமயத்தில் நம்மை தடுமாற விட்டு விடும். செல்போனை சைலண்ட் மோடில் வைத்து விட்டு பயணம் செய்ய பழகிக் கொள்வது நல்லது. ஒரு வேலை அவசியமாக பேச வேண்டும் என்றால், சாலை ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு பேச பழக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் ஹாரன், பிரேக், ஹெட் லைட், இண்டிகேட்டர், டயரில் உள்ள காற்று அளவு உள்ளிட்டவை சரியாக இருக்கிறதா என சரி பார்த்து விட்டு பயணத்தை துவங்க பழக வேண்டும்.

கல்வி நிறுவனங்களின் பங்கு
                          கல்லுரி மற்றும் பள்ளி நிர்வாகங்கள் சரியாக வண்டி ஓட்டத்தெரியாத லைசென்சு இல்லாத மாணவர்கள் வாகனங்களைப் பள்ளிக்கு எடுத்து வந்தால் அதை உடனே கண்டு அனுமதிக்கக் கூடாது என்பதில் தெளிவான சிந்தனை இருந்தால் அவசியம் மாணவர் சமுதாயம் விபத்துகளில் சிக்குவது தவிர்க்கப்படும் என்பது எனது நம்பிக்கை.

மாணவர்களுக்கு
       ஆசையாய் பெற்றெடுத்து அவன் அல்லது அவளுக்கு சின்னதாய் கூடமுகம் கோண விடாமல் வேண்டியதை அனைத்தும் வாங்கிக்கொடுத்து நல்ல கல்வியைத் தந்து நாளை நம்மை என் மகன் அல்லது மகள் வந்து கை நிறைய சம்பாதித்து எங்களைக் காப்பாற்றுவார்கள் என்று மனக்கோட்டை கட்டிப் பார்த்து பார்த்து வளர்க்கும் பெற்றோர்களுக்கு மாணவர்களாக நீங்கள் செய்ய போகிறீர்கள்? செய்ய வேண்டிய பணிவிடைகள் நிறைய இருக்கிறது செல்லங்களே! அவசரம் வேண்டாம் மெதுவாக செல்லுங்கள் விழிப்போடு உங்கள் பயணம் தொடரட்டும்!!
                                                            நன்றி.






கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

39 comments:

  1. சீரிய சிந்தனையுடன் கூடிய பதிவு!..
    தினம் ஒரு விபத்து - உயிர் சேதம் என்பதை அறிந்திருந்தும் -
    திருந்தியவர் எத்தனை பேர்!..
    நல்லனவற்றை - நம் மக்கள் கேட்டுக் கொண்டால் - நல்லது..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      விழிப்புணர்வுகள் நம் காதுக்கெட்டும் தொலைவில் தான். இருப்பினும் அது செவிடன் காதில் ஊதிய சங்காக உலாவுவது தான் வேதனையளிக்கிறது. நம்மால் சிறிதளவேனும் மனதில் மாற்றம் ஏற்பட்டால் மகிழ்ச்சியே. நன்றீங்க ஐயா...

      Delete
  2. இல்லை சார்,சமூகம் ஏற்றா தாழ்வு அடுக்குகளை பூசிக்கொண்டு நாட்கள் பலவாகிவிட்டது,தவிர பொருட்களை சந்தைப்படுத்துகிற முறையும் வெகு எளிதாகிப்போனது,அவசியம் என்பது போய் ஆடம்பர மனோ நிலைகூடிப்போனதும் ஒரு காரணம்,சமூக அந்தஸ்து,கௌரவம் போன்ற வெட்டி ஜம்பங்களும் இதற்கு ஒரு காரணியாக/ஈகோ பிரச்சனையால் கோர்ட் வாசப்படியில் நிற்கிற புது மணத்தம்பதிகளீன் நிலையே இதற்கும் எனலாம்/

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      தாங்கள் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. அடுத்தவர் என்ன சொல்வார்கள் என்று எண்ணிய கடன் வாங்கி ஆடம்பரம் தேடிக்கொள்ளும் நிகழ்வுகள் தானெ இங்கு ஏராளம். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்..

      Delete
  3. 100ல் வேகமாய் சென்று 108யை தேடாமல் இருப்பதே நல்லது !
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஜி
      எனது மொத்த வார்த்தைகளும் உங்கள் ஒற்றை வார்த்தையில் அடங்கி விட்டதே!! வருகைக்கு நன்றி சகோதரர்.

      Delete
    2. அன்பின் பகவன் ஜீ அவர்களுடைய கருத்து ’’ நறுக் ’’ என்றிருக்கின்றது.
      வேக விரும்பிகள் இதனை உணரவேண்டும்.

      Delete
    3. நம்ம எல்லாம் விழுந்து விழுந்து பதிவு போட்ட பகவான் ஜீ நாலு வரிகளிலே ஒரு பதிவு போட்டு அசத்திடுரார்.

      Delete
  4. மாணவர்களின் வேகம் , சாலையில் பயணிக்கும் நம்மை நடுங்க வைக்கின்றது நண்பரே.
    மாணவர்கள் மட்டுமல்ல, பல நேரங்களில் பெண்களும், எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பதை அறியாமலே பறக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வேகக்கட்டுபாட்டு கருவி வந்தால் தான் இந்நிலை மாறும் அதுவரை தொடரும். அனைவரும் உணர்ந்து அவரவர் கடமைகளைச் சரிவர செய்தால் போதும். எல்லாம் சுபம் தான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க ஐயா..

      Delete
  5. காத்து,பிரேக்....எல்லாவற்றையும் விட சாலை, அது எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்க வேண்டும்.இன்றும் சென்னையில் பல சாலை சந்திப்புகளில் சமிக்கை விளக்கு கிடையாது.பலருக்கு ஆம்பர் விளக்கு வந்தவுடன் வேகத்தை குறைக்கனும் என்ற அறிவு கூட கிடையாது.ஒரு மூலையில் நின்று சமிக்கை செய்யும் போலீஸ்காரரை காணும் திறமை ஓட்டுனருக்கு இருக்கவேண்டும்.வேகத்தடை மலை மாதிரி போட்டு அதனால் வரும் விபத்துகள் சொல்லி மாளாது.இரவு நேரத்தில் ஹை பீம் போட்டு அடுத்த லேனில் வருபவனின் கண்ணை குருடாக்கும் திறமை நம்மிடம் நிறைய பேரிடம் இருக்கு.ஏண்டா ஹைபீம் போடுகிறாய் என்றால் சாலையில் விளக்கு வசதியில்லை என்று பதில் வரும்.வருங்கால சந்ததிகள் அவர்கள் எப்படி திருந்தப்போகிறார்கள் என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர்
      தங்கள் முதல் வருகைக்கு நன்றி. வருங்கால சந்தததியினருக்கு பாடம் புகட்ட வேண்டிய நம்மவர்கள் இப்படி என்றால்! எனும் தங்கள் ஆதங்கம் புரிகிறது. இருப்பினும் தொடர்ந்து எச்சரிக்கை குரல் கொடுப்பது நமது கடமை. தொடர்ந்து இணைந்திருப்போம். மிக்க நன்றி..

      Delete
  6. தந்தை வேகம் வேண்டாம் என்பார்... ஆனால் ---> சில தாய்மார்களும் இதற்குக் காரணம் என்பதையும் மறுக்க முடியாது...

    ReplyDelete
    Replies
    1. செல்லம் என்பது எல்லை மீறும் போது அது வினையாகி விடுவதைச் சில பெற்றோர்கள் உணர வேண்டும் எனும் உங்கள் எண்ணம் சரி தான் சகோதரர். மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  7. வழிகாட்டல் பதிவைத் தந்து
    சிந்திக்க வைக்கிறியள்

    ReplyDelete
    Replies
    1. ஐயா போன்றோரின் வருகையும் கருத்தும் எனது சிந்தனையை கூராக்கட்டும். நன்றீங்க ஐயா

      Delete
  8. உண்மைதான் சகோ.தேவையான பதிவு.நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..

      Delete
  9. அன்புச் சகோதரரே!
    இம் முறையும் சமூக நலன் கொண்ட அருமையான பதிவே மிக்க மகிழ்ச்சி ! சாலை விபத்துக்களை நினைத்தால் பெரும் துயரமே, ஒருவரின் கவனக் குறைவால் அப்பாவி மனிதர் சிக்குவதை தவிர்க்கவே வேண்டும் அல்லவா? நான் என் பிள்ளைகளுக்கு நீங்கள் விடும் பிழைகளால் அப்பாவி மக்கள் ஒரு போதும் விபத்துக்குள்ளாக கூடாது.அதுவும் இல்லாமல் நீங்கள் விடும் பிழைகளால் நீங்கள் தப்பி அப்பாவி மனிதர் உயிர் இழந்தால் அது எவளவு தவறு என்றும், சாலை விதி முறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்றும்( show off )கூடாது (distance) எப்பவும் தூரம் சரியாக (maintain) வைத்திருக்க வேண்டும். என்றும் சொல்வேன். வயது அப்படி தானே சொல்லிக் கொண்டு தான் இருக்க வேண்டும். அத்துடன் வாழ்நாளில் விபத்து இல்லாமல் ஓட்டுவதும் தண்டனையோ டிக்கெட்டோ வாங்காமல் ஓடினேன் என்று சொல்வது தான் பெருமை, நல்ல கவனமாக ஓட்ட கூடியவர் நம்பி அவருடன் போகலாம் என்ற நம்பிக்கை வரவேண்டும். உன்னோடு இருக்கும் ஒருவர் (comfortable) சொகுசாக உணரவேண்டும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்கக் கூடாது என்றும் சொல்வதோடு,
    ஒரு தடவை விபத்து ஏற்பட்டு விட்டால் வாழ்நாள் முழுவதும் வலியை தாங்கவேண்டி இருக்கும் பழைய நிலைக்கு திரும்ப இயங்கும் என்பது சாத்தியம் இல்லை எனவே கவனமாக ஓடவேண்டும் என்று சொல்லி வைப்பேன். இரு சக்கர வண்டிகள் இன்னும் கவனமாக தான் ஓடவேண்டும்.
    நன்றி ! வாழ்த்துக்கள் சகோதரா.....!

    ReplyDelete
    Replies
    1. சகோதரிக்கு வணக்கம்
      தங்களின் கருத்து எனது பதிவிற்கு வலு சேர்க்கிறது. விபத்து ஏற்பட்டு அதனால் ஏற்படும் இழப்புகள் வாழ்நாள் முழுதும் அனுபவிக்க வேண்டிய சூழலை நாம் கொஞ்சம் விழிப்போடு இருந்து தவிர்க்க வேண்டும் என்பதே பதிவின் நோக்கம். வழக்கம் போல் கருத்திட்டு ஊக்கப்படுத்தியமைக்கு என் அன்பான நன்றிகள் சகோதரி..

      Delete
  10. வணக்கம் வேகம் இல்லையெனில் சேதம்இல்லை என்பதை அழகாகச்சொன்னீர்கள் நல்லதொருபகிர்வு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி
      தங்களின் அறிமுகம் கிடைத்ததும் கருத்தும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தொடர்ந்த நட்பில் இணைந்திருப்போம். நன்றீங்க சகோதரி..

      Delete
  11. என் நண்பா,
    உன் அகண்ட அலைவரிசை உன்போல் உள்ளங்களை இணைப்பது எனக்கு பெருமகிழ்வு. உரத்த சிந்தனை உரக்க சொல்கிறாய். உன் உள்ளத்து தோட்டம் பசுமையாய் ஒளிர தொடர்ந்து உரமிடுகிறாய் என அறிகிறேன். உன் இந்த வெளிப்பாடு உண்மையும் ஆழ்ந்த சிந்தனையும் உடையது. இந்த நீண்ட பயணத்திற்கு என் மனமுவந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பனுக்கு
      எனது வலைத்தளத்தில் உனது கருத்து கண்டு உள்ளம் பூரிக்கிறது. நாம் ஆசிரியர் பயிற்சி படித்த போது உங்களுடன் எல்லாம் பழகிய அந்த நாட்கள் இன்னும் என் எண்ணத்தில் நிரம்பியுள்ளது. உன்னைப்போன்ற நண்பர்கள் தான் எனக்கு எப்பவும் கிரியா ஊக்கி. நமது நண்பர்கள் எண்ணி உண்மையில் உளம் மகிழ்கிறேன் நண்பா! தொடர்ந்து வருகை தந்து கருத்திட்டு வழிகாட்ட அழைக்கிறேன் நன்றி மச்சான்..

      Delete
  12. சகோ ஒரு பொதுமருத்துவமனை அருகே வசிக்கும் தாங்கள் அதற்கும் தனக்கு சம்பந்தம் இல்லை என எண்ணாமல் சமூக உணர்வோடு சிந்திகிறீர்கள் என்பதற்கு இக்கட்டுரை ஒரு எடுத்துகாட்டு ! ஒரு ஆசிரியார் சமுதாயத்தின் எல்லா துயர்களையும் பற்றிய சிந்தனையோ தெளிவோ வேண்டும் அல்லவா? அருமை சகோ!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி
      நித்தம் விபத்து பற்றிய செய்திகள் காதுகளில் விழும் போதும், அழுகுரலை கண்டும் அந்த மார்ச்சுவரி கடந்து செல்லும் போது மனது விம்மி அழும் உணர்வை அடக்கிக்கொண்டு ஒவ்வொரு நாளும் நகர்கிறது சகோ. அதனால் இந்த பதிவு. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  13. சாலையில் செல்லும் ஆம்புலன்சின் ஒலி எப்பொழுதும் மனம் பதறும் ..உள்ளே யார் என்ன நிலையில் போகிறார்களோ..கடவுளே காப்பாற்று என்று சொல்லும்...நீங்கள் மருத்துவமனை அருகிலேயே இருப்பது என்றால்....பிள்ளைகள் பத்திரமாய் இருக்கவேண்டும் என்று பதிவிட்ட உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்..அனைவரும் திருந்துவார்களா என்று சந்தேகம் வந்தாலும் உங்களிடம் பயிலும் மாணவர் தெரிந்துகொள்வார் என்பதில் மகிழ்ச்சி அடைகிறது மனம்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி
      தங்களின் அன்புள்ளம் நான் அறிவேன். உங்களைப் போன்றோரின் நட்பு கிடைக்க உதவிய வலைத்தளத்திற்கு நன்றிகள். ஒரே இரவில் உலகத்தைப் புரட்டிப் போட்டுவிட முடியாது தான். அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்களே!! அது போல் இந்த பதிவும்! விபத்துப்பற்றிய விழிப்புணர்வு எனது தளத்தில் இரண்டாவது பதிவு இது. தொடர்ந்து நம்மால் முடிந்த மாற்றத்தை உண்டாக்குவோம். நன்றி சகோதரி..

      Delete
  14. மிக சிறப்பான விழிப்புணர்வு பதிவு! இளவயதிலேயே வாகனம் ஓட்டுவது இப்போதெல்லாம் அதிகரித்துவிட்டது விபத்துக்களுக்கு முக்கிய காரணம்தான். விழிப்பான பயணம் விபத்தை தவிர்க்கும் என்று இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் புரிய வேண்டியது அவசியம். நல்ல பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர். உங்களின் படைப்பு பாக்யா இதழில் வெளி வந்தமைக்கு வாழ்த்துகள். எனது படைப்பைப் படைத்து கருத்திட்டமைக்கு நன்றிகள்..

      Delete
  15. சமூக நலன் கொண்ட அருமையான பதிவை பகிர்ந்ததற்கு பாராட்டுக்கள்.

    நாம் என்னதான் அறிவுரைகளை சொன்னாலும் இளம் வயதுள்ளவர்கள் அதை காதில் வாங்கி கொள்வதே இல்லை பல சமயங்களில் ஆனாலும் அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என்பதற்காக நாம் அப்படியே இருந்துவிடக் கூடாது அதனால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எச்சரிக்க வேண்டும் அதற்காக டேய் ஸ்பீடாக போகாதே போன் பேசிக் கொண்டு போகாதே குடித்துவிட்டு ஒட்டாதே என்று தினமும் சொல்லாதீர்கள் அப்படி மேம்போக்காக சொல்லுவது இளம் வயதினரின் காதில் ஏறுவதில்லை
    அதற்கு பதிலாக வார இறுதி நாட்களில் வீட்டில் அனைவரும் சேர்ந்து உண்ணும் போது கவனமாக ஒட்டாததால் ஏற்படும் விளைவுகளை எடுத்து சொல்லவேண்டும். விபத்து ஏற்பட்டால் கைகால் போனால் வாழ்க்கை எப்படி ஆகும் அதன் பின் உன் நட்பு வட்டாரங்கள் எப்படி இருக்கும். ஊனமுற்றால் எப்படி பட்ட பெண்கள் உன்னை மணம் முடிக்க முன் வருவார்கள், பெற்றோர்களின் மறைவுக்கு பின் உன் எதிர்காலம் எப்படி இருக்கும். விபத்து ஏற்பட்டால் அதை சரி செய்ய தேவையான பண வசதி நம் குடும்பத்திற்கு உண்டா என்று பல விஷயங்களை மிக அழகாக எடுத்துரைத்து அவர்கள் மனதில் பதிய செய்ய வேண்டும் அதுவும் அடிக்கடி செய்ய வேண்டும் அப்போதுதான் அவர்கள் சிந்தனையில் செயலில் மாற்றம் ஏற்படும். இதை பெற்றோர்களும் ஆசிரியர்களும்தான் செய்ய வேண்டும்

    சமுகத்திற்காக நீங்கள் எழுதும் பதிவுகளுக்கு மீண்டும் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் இந்த கருத்துரை அனைவருக்கும் பயன்படும். மிக நேர்த்தியாக எல்லா விடயங்களையும் அலசி விட்டீர்களே! கருத்துரை என்பது படைப்பின் கருத்தை அடுத்த தளத்திற்கு நகர்த்த வேண்டும் அப்படி இரு பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி சகோதரர்..

      Delete
  16. உங்கள் இந்த பகிர்வில் இந்த வரிதான் கொஞ்சம் எனக்கு இடிக்கிறது

    //டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது;///

    டிரைவிங்க் லைசென்ஸ் என்பது ஒரு அடையாள அட்டைதான் இந்தியாவில் சரியாக ஒட்டத் தெரியாதவர்களுக்கும் லைசென்ஸ் கொடுக்கப்படுகிறது அதை முறையாக சோதித்து தரப்படுவதில்லை அப்படி முழுமையாக சோதித்து தந்தால் பாதி விபத்து குறைக்கப்படும். அது போல விதிமுறைகளை மீறுவோருக்கு மிக கடுமையான தண்டனை தர வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சகோதரர். காசு கொடுத்தால் எல்லாம் கிடைத்து விடும் எனும் நிலை மாற வேண்டும். இரு சக்கர வாகனத்தில் கால் எட்டாதவன் எல்லாம் லைசென்சு வச்சுருக்கான். எப்படினா மேற்கண்ட உங்கள் கருத்து தான் பதிலாக வருகிறது. அழகாக சொன்னீர்கள் நன்றி சகோதரர்..

      Delete
  17. அருமையான சமூக அக்கறையுள்ள கருத்து
    “18 வயது நிரம்பாதவர்கள் ரோட்டில் வாகனம் ஓட்ட அனுமதிப்பதன் மூலம் போக்குவரத்து விதிமுறைகள் மீறப்படுகின்றன. எதிர்கால கனவுகளுடன் இளம்தளிர்கள் கண்மூடித்தனமான வேகத்தில் வாகனத்தை ஓட்டுவதால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. பள்ளி பருவத்தினர் இருசக்கர வாகனங்களைத் தவிர்க்க வேண்டும். “ இந்த உங்கள் கருத்தை அரசுகள் கவனித்தால் நல்லது நடக்கும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      எனது கருத்தோடு உங்கள் கருத்தும் ஒத்துப்போனது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நம்மால் முடிந்த வரைக்கும் விழிப்போடு பயணம் தொடர வழிகாட்டி எச்சரிப்போம். வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றிகள் ஐயா..

      Delete
  18. நல்லதொரு விழுப்புணர்வுப் பதிவு! பகிர்வு!

    சிறுவர்களும் வண்டி ஓட்டிச் செல்கின்றனரே! அதற்கு இப்போதெல்லாம் 18 வயது நிரம்புவதற்குள் ஏதோ தற்காலிக உரிமம் என்று ஒன்று L போட்டு வழங்குகின்றார்களே! அதற்கு பெற்றோர்களும் இடந்தையாக இருப்பதுதான் காரணம்! 18 வயது நிரம்பினால் மட்டும் உரிமம் என்பதும் மாற வேண்டும்! ஓட்டும் மனப் பக்குவமும், பாதுகாப்பாக ஓஓடுகின்றனர என்பதும் பரிசீலிக்கப்பட்டு உரிமம் வழங்கப்பட வேண்டும்!

    நமூரில் ஆளைப் பார்க்காமலேயே உரிமமும் வழங்கப்படுகிறது! இப்படி இருக்கும் பொது இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்குமா?

    தாங்கள் கூறியிருக்கும் யோசனைகளும் அருமை! அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்! உங்கள் கருத்து சரியே! பாராட்டுக்கள்!

    த.ம.

    ReplyDelete
  19. மிகவும் கவர்ந்த பதிவு..
    இப்படி ஒரு விழிப்புணர்வு அவசியம் வரவேண்டும் மக்களிடம்..
    தொடர்க
    சகோ..
    வாழ்த்துக்கள்

    (ஆமா பெரியாஸ்பத்திரிக் கிட்ட இருந்தா ஆம்புலன்ஸ் எழுப்பாம அமலா பாலா வந்து எழுப்புவா?)

    ReplyDelete