அரும்புகள் மலரட்டும்: விரைவாய் எழுவோம்!

Wednesday 19 March 2014

விரைவாய் எழுவோம்!


பத்தோடு பதினொன்றாய் வாழ்ந்து
பதுங்கி மடிவதில் பயனேதடா!
முதலொன்றாய் இருந்து நாமும்
முகம் காட்ட வேணுமடா!

முடிக்கும் கடமை மிகவுண்டு
முதலாய் விழிக்க வேணுமடா!
உழைக்கும் கரம் உமதன்று
உலகம் சொல்லிட வேணுமடா!

வெந்ததைத் தின்று வெறுமனே
வாழ்ந்து முடித்தது போதுமடா!
வெற்றியை நோக்கியே வெகுண்டெழுந்து
விரைவாய் நடை போடுவோமடா!

இருக்கும் கொள்கைகள் இடையூராயின்
இனியும் அதுக்குள் இருப்பதேனாடா!
இன்றே புதுவிதியை நாமெழுதி
இலட்சியம் வெல்ல விரைவோமடா!

இல்லாமை கண்டு வெதும்பாமல்
இளம் ரத்தம் கொண்டு வெல்வோமடா!
இருக்கும் கொடுமைகள் களைந்திடவே
இளைஞர்கள் நாமும் எழுவோமடா!

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

39 comments:

  1. எழுவோம் கண்டிப்பாக/

    ReplyDelete
    Replies
    1. முதலாய் வருகை தந்து கருத்திட்ட ஐயாவிற்கு அன்பு நன்றிகள்.

      Delete
    2. முடிக்கும் கடமை மிகவுண்டு
      முதலாய் விழிக்க வேணுமடா!
      உழைக்கும் கரம் உமதன்று
      உலகம் சொல்லிட வேணுமடா!

      பூனையல்ல
      புலிதான் என்று
      போகப்போக
      வேகம் கூட்டி
      உலகிற்கு காட்டும் காலம் வந்தது ..!

      Delete
    3. வணக்கம் அம்மா
      தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. தாங்கள் கூறுவது போல் வேகம் கூட்டி கடமை முடிக்கும் காலம் கனிந்து வந்துள்ளது. நாம் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நன்றீங்க அம்மா.

      Delete
  2. முடிக்கும் கடமை மிகவுண்டு
    முதலாய் விழிக்க வேணுமடா..
    உழைக்கும் கரம் உமதென்று
    உலகம் சொல்லிட வேணுமடா!..

    சிறப்பான வரிகள்..முத்திரை பதிக்கின்றன..
    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      வழக்கம் போல் வருகை தந்து தன்னம்பிக்கை ஊட்டும் கருத்திட்டமைக்கு நன்றிகள்..

      Delete
  3. பூனைகளாய் இருந்தது போதும் ,சிங்கங்களாய் சீறி எழச் சொன்ன விதம் அருமை !
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. படத்திற்கு வரிகள் எழுதிய சகோதரர்க்கு அன்பு வணக்கம். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

      Delete
  4. வீரமிகு வரிகள் உற்சாகம் தருகிறது சகோதரரே...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி. புதியவர்களைக் கை கொடுத்து தூக்கி விடும் தங்களின் நல்ல உள்ளத்தினால் தான் நாளும் வலைப்பக்கம் வளமை அடைகிறது என்பது எனது கருத்து, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்..

      Delete
  5. இருக்கும் கொள்கைகள் இடையூராயின்
    இனியும் அதுக்குள் இருப்பதேனாடா!
    இன்றே புதுவிதியை நாமெழுதி
    இலட்சியம் வெல்ல விரைவோமடா! அருமை அருமை !

    நிச்சயமாக முடியும் உங்களால் எழுதுங்கள் வெல்லுங்கள் நாளைய உலகை வித்துக்கள் உங்கள் கையில் விதையுங்கள் வேண்டியபடி. அருமையான நோக்கம் எல்லாம் நிறைவேறவும்
    நெஞ்சினில் உரம் பெறவும் வாழ்த்துகிறேன் ....!

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோதரியின் வருகையும் கருத்தும் எப்பவும் மகிழ்ச்சியைத் தரவல்லது. உங்களைப் போன்றோரின் ஊக்கத்தினால் தான் எனது எழுத்து தொடர்ந்து நடைபோடுகிறது. தங்களுக்கே நன்றிகள். நாம் தொடர்ந்த நட்பில் என்றும் இணைந்திருப்போம். மிக்க நன்றி..

      Delete
  6. வீரமிகு
    உணர்ச்சிமிகு
    வரிகள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      தங்களின் வருகையும் உற்சாகமூட்டும் கருத்தும் மகிழ்ச்சியைத் தருகிறது. தொடர்வோம். நன்றி..

      Delete
  7. //முடிக்கும் கடமை மிகவுண்டு
    முதலாய் விழிக்க வேணுமடா!
    உழைக்கும் கரம் உமதன்று
    உலகம் சொல்லிட வேணுமடா!//

    //இன்றே புதுவிதியை நாமெழுதி
    இலட்சியம் வெல்ல விரைவோமடா!//

    பத்தோடு ப்தினொன்றாக இல்லாமல் தனிப்பட்டத் தன்மையோடு வெற்றி கொள்ள நினைக்கும் வரிகள் அபாரம்! அதுவே தனிமுத்திரை குத்திவிட்டது!

    கண்டிப்பாக வெல்வோம் என்பதை அந்தப் பட்மே சொல்லிவிட்டதே!

    அருமை!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. கவிதையின் பலவரிகளை மேற்கோள் காட்டியது ஏதோ ஓரளவிற்கு கவிதை நன்றாக இருக்கிறது எனும் நம்பிக்கையைத் தந்துள்ளது. இன்னும் மெருகேற்றி நல்ல படைப்புகளைத் தர வேண்டுமென்பதே எனது விருப்பம். தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள். தொடர்வோம்.

      Delete
  8. arumaiyana padamum atharketra paadalum ullam kavarkindrana.
    paditha pin naan singamaai silirtthu ezhunthathu unmaiye .

    ReplyDelete
    Replies
    1. சகோதரியின் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி. நேரம் கையைக் கடிப்பதனால் வலைப்பக்கம் வருவது குறைந்து விட்டது. இருப்பினும் சோம்பல் தவிர்த்து வருவேன். கருத்துக்கு மிக்க நன்றிகள் சகோதரி..

      Delete
  9. //முடிக்கும் கடமை மிகவுண்டு
    முதலாய் விழிக்க வேணுமடா!
    உழைக்கும் கரம் உமதன்று
    உலகம் சொல்லிட வேணுமடா!//

    //இன்றே புதுவிதியை நாமெழுதி
    இலட்சியம் வெல்ல விரைவோமடா!//

    பத்தோடு ப்தினொன்றாக இல்லாமல் தனிப்பட்டத் தன்மையோடு வெற்றி கொள்ள நினைக்கும் வரிகள் அபாரம்! அதுவே தனிமுத்திரை குத்திவிட்டது!

    கண்டிப்பாக வெல்வோம் என்பதை அந்தப் பட்மே சொல்லிவிட்டதே!

    அருமை!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. கவிதையின் பலவரிகளை மேற்கோள் காட்டியது ஏதோ ஓரளவிற்கு கவிதை நன்றாக இருக்கிறது எனும் நம்பிக்கையைத் தந்துள்ளது. இன்னும் மெருகேற்றி நல்ல படைப்புகளைத் தர வேண்டுமென்பதே எனது விருப்பம். தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள். தொடர்வோம்.

      Delete
  10. உறங்கிக் கிடக்கும் தோழனையும் எழுந்திருக்க வைக்கும் எழுச்சி மிகு வரிகள். வாழ்த்துக்கள் தோழரே!

    ReplyDelete
    Replies
    1. தங்களது கருத்துரை உண்மையில் எனக்கு தன்னம்பிக்கையை ஊட்டுகிறது. தொடர்வோம். தங்களின் நட்பு கிடைத்ததில் ரொம்ப மகிழ்ச்சி. நன்றீங்க சகோதரர்..

      Delete
  11. இளைஞர்களைத் தட்டி எழுப்பும் அருமையான கவிதை. //இருக்கும் கொடுமைகள் களைந்திடவே
    இளைஞர்கள் நாமும் எழுவோமடா!// மிக மிகத் தேவையான ஒன்று. இளைஞர்கள் அதிகம் இருக்கும் நம் நாட்டில் உங்கள் அறிவுரைப்படி நடந்தால் வெற்றியும் ஒளிவீசும் வாழ்க்கையும் நிச்சயம். வாழ்த்துக்கள் சகோதரா.

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோதரின் அன்பான குணமும் தமிழின்பால் ஈர்ப்பும் என்னை வெகுவாக ஈர்க்கிறது. தங்களின் படைப்புகள் என்னைப் போன்றோரை நிறைய படிக்கத் தூண்டுவது உண்மை. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்..

      Delete
  12. தன்னம்பிக்கையூட்டும் வரிகள்.வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி. நாளும் ஒரு கவிதை உதயமாகிறது உங்கள் வலைப்பக்கத்தில். வாழ்த்துகள். தொடருங்கள். வருகைக்கு அன்பான நன்றிகள்..

      Delete
  13. எழுச்சிக்கவிதை அருமை சகோ!
    கவிதைக்கு ஏற்ற அழகான படம்!
    என்ன ஆச்சு கொஞ்சநாளா ஆளையே காணோம்?
    நலம் தானே சகோ!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி
      10 ஆம் வகுப்பு மாணவர்கள் தான் படுத்தி எடுக்கிறார்கள். அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள், பள்ளி வேலைகள் என இரவு இல்லம் திரும்பவே நேரம் ஆகி விடுகிறது. சிறிது சோம்பேறித்தனம் என்று சேர்ந்து கொள்ள வலைப்பக்கம் வர இயலவில்லை. நலமாக உள்ளேன் சகோதரி. விசாரித்தமைக்கு நன்றி. தங்களின் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்வாயிருக்கிறது. நன்றி சகோதரி. இனி தவறாமல் இணையப்பக்கம் இணைந்திருப்பேன்.

      Delete
    2. நம் மாணவர்களுக்கு என் வாழ்த்துக்கள் சகோ .//இனி தவறாமல் இணையப்பக்கம் இணைந்திருப்பேன். // மிக்க மகிழ்ச்சி !

      Delete
    3. வணக்கம் சகோதரி
      உங்கள் வாழ்த்து நமது மாணவர்களுக்கு சென்றடையும். வாழ்த்தியமைக்கும் இணையப்பக்க வருகைக்காக மகிழ்ந்தமைக்கும் நன்றி சகோதரி. மணவை வந்தால் அவசியம் தெரியப்படுத்தவும். நன்றி..

      Delete
  14. விரைவாய் எழுவோம்!

    வைர வரிகள்.

    வாழ்த்துக்கள் சகோ.!!!

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சகோதரர். விரைவில் நேரில் சந்திப்போம்.

      Delete
  15. எழுச்சிதரும் கவிதை! எழுச்சி பெறுவோம் மகிழ்சி அடைவோம்!

    ReplyDelete
    Replies
    1. அன்பு ஐயாவின் கருத்து மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. மிக்க நன்றீங்க ஐயா.

      Delete
  16. சகோ,நலம்தானே?உன்பலம்உனக்குத்தெரியாதுஉன்முன்இருக்கும்உலகம்சொல்லும்நீயார்?என்றுஅதனால்உழைத்திருப்பதோடுமட்டுமல்லாதுவிழித்திருக்கவும்வேண்டும்இளைஞ்சனே!என்றுபடத்தின்வழியாகவும்சொன்னவிதம்அருமை.

    ReplyDelete
    Replies
    1. சகோதரிக்கு வணக்கம்
      நான் நலமாக உள்ளேன். கொஞ்சம் வேலை காரணமாக வலைப்பக்கம் வர முடியவில்லை. நலம் விசாரித்தமைக்கு மிக்க நன்றீங்க. வருகை தந்து உற்சாகப்படுத்தும் விதமாக கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

      Delete
  17. அருமையான, எழுச்சிமிக்க கவிதை. பாராட்டுகள் சகோதரா.

    ReplyDelete
  18. இதைபோன்ற கவிதைகளை மாதம் இரண்டு தர முயற்சிக்கவும் ..
    கவிஞர் தாரா பாரதியின் இடம் இன்னும் காலியாகவே இருக்கிறது..
    முயன்றால் நீங்கள் உயரலாம் ...

    ReplyDelete