Tuesday, 4 March 2014

விமலனின் பூப்பதெல்லாம்!- ஒரு பார்வை

சிறுகதை மனித உள்ளத்தின் அடைய முடியாத ஆசைகளின் எதிரொலி என்றார் புதுமை பித்தன். சுற்றி நிகழும் கொடுமை, சூழலில் நிகழும் அவலம் இவற்றைக் கண்டும் காணாமல் பார்த்தும் பார்க்காமல் பாதையோரத்தில் செல்கின்ற நடைபாதை வாசியல்ல எழுத்தாளன். அவனுக்குச் சமூக அக்கறை இருக்க வேண்டும். சுற்றி நிகழும் அழுகையின் குரல் புரிய வேண்டும். அகிலத்தின் அவலத்தில் அவன் மூழ்கி எழவேண்டும். அப்பொழுது தான் அவனது கதை மாந்தர்களும் சமூகத்திடையே மின்னிச்சிறப்பார்கள். எனவே எந்த எழுத்தாளனுக்குச் சமுதாயத்தின் மீது அக்கறை இருக்கிறதோ அந்த எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகள் எதிர்காலத்தில் பேசப்படும் படைப்புகளாக மிளிரும்.

அந்த வகையில் நான் படித்த சிறுகதை நூலும் அதன் ஆசிரியரும் என்னோடு அமர்ந்து கதை சொல்லி விட்டுத்தான் நகர்ந்தார்கள் என்பதால் துணிவோடு பரந்து விரிந்து கிடந்த கரிசல் பூமியில் சட்டையில்லா வெற்று மேனியாய் விதைகளைத்தூவி பின்னர் நகர வாழ்க்கையிக் தன்னை நிலைநிறுத்தி பாண்டியன் கிராம வங்கியில் பணி புரிந்து வரும் விருதுநகர் திரு.விமலன் அவர்கள் எழுதிய பூப்பதெல்லாம் எனும் சிறுகதை நூலைப் பற்றி என்னுடைய கருத்துகளை உங்களின் காட்சிக்கு வசப்படும் வண்ணம் வரிசைப்படுத்துகிறேன்.

”நாணல்புல்” முதலாக ”ஆனாலும்” ஈராக 21 சிறுகதைகள் அடங்கிய பூப்பதெல்லாம் எனும் நூலினைப் பற்றிய அதிக எதிர்பார்ப்போடு வாசிக்க துவங்கிய எனக்கு ஒவ்வொரு கதையும் எதார்த்தத்தை அள்ளித்தெரித்து நகர்ந்தது எனக்குள் வாழ்க்கையின் உண்மைத்தன்மையை உணர்த்திச் சென்றது. இவரது கதைகளில் எதார்த்தங்கள் கரை புரண்டு ஓடுகின்றன. படைப்பாளியின் ரசிப்புத்தன்மைகள் ரம்யமாக விரிகின்றன. ஆங்காங்கே உவமைகள் உரு பெற்று காட்சியாய் நிற்கின்றன.

ஊதாக்கலர் மற்றும் தேநீர் பிரியருமாகிய விமலன் ஐயா கதை தோறும் தவறாமல் டீக்கடையை காண்பித்து விடுவதோடு மட்டுமல்லாமல் ஒரு கதைக்கே டீத்தண்ணி என்று பெயரிட்டும் உள்ளார் என்றால் தெரிந்து கொள்ளுங்கள். மரங்களை அதிகம் நேசிப்பவராகவும் கதையின் மூலம் அறிய முடிகிறது வேப்பமரமும் பன்னீர் மரமும் ஆங்காங்கே அசைந்து ஆடிப்போகின்றன. பெரும்பான்மை கதைகள் தொடங்கிய வாக்கியங்களுடனே முடிவது இவரது தனி பாணியாகத் தெரிகிறது.
நாணல்புல் முதல் கதையே அரை வயிற்றுக்கஞ்சிக்கு அல்லல் படும், வறுமையில் வாடும் மூதாட்டியின் முகம் காட்டி நம் கண்களில் ஈரம் கன்னங்களை நனைய வைக்கிறது 
விலாசம் கதையில் சின்னக்குழந்தை போல் சிரிப்பு கொண்ட அவரது மனம் காட்சியாய் விரிகிறது பாருங்கள்: என்னை விட குறைந்த வயதினர், குறைந்த வருவாய் பிரிவினர், குறைந்த வேலை பார்ப்பவர் அனைவரிடமும் எந்த பேதமில்லாமலும், மரியாதையுடனும் பேசவும் பழகவும் கற்றுக்கொண்டதன் விளைவு தான் இந்த மனம் என்று வாக்குமூலம் தருகிறார்.
கத்தரிப்பான் கதை முடி திருத்துவது கை மற்றும் கத்திரிக்கோல். சீப்பு இவைகளின் கூட்டு உழைப்பே என்று சொல்வதோடு வாங்கிய கடனுக்கு பதில் சொல்ல முடியாத முடி திருத்தும் தொழிலாளியின் மன உணர்வை உள்வாங்கிய இனிமே செத்தாலும் கடன் வாங்கக்கூடாது சார். நானும் ஒரு பொரட்டு பொரட்டிடலாம்னு தான் இவர்கிட்ட காசு வாங்கினேன். வார வட்டி சார்னு சொல்லும் வார்த்தைகள் நம்மையும் உணர வைக்கிறது.
இக்கால இளைஞர்களின் கலாச்சாரத்தைக் கண்டு ஒரு தந்தையின் ஆற்றாமையை தனது ஸ்கீரீன் சேவர் எனும் கதையில் நல்ல பழக்கம் இல்ல, நாலு பேர மதிக்கத் தெரியல, காலேஜ் படிக்கிற என்னோட பையன் காலையில் காலையில் எழுந்திருச்சு சரியா பல்லுகூட வெளக்கிறதில்ல, தலையில எண்ணைய் கூட தேய்க்கிறதில்ல கேட்டா ஸ்டைல்ங்குறான் எனவும்
கிளியாஞ்சட்டி கதையில் இப்ப வந்து போனான் பாருங்க. காலேஜில படிக்கிறான். தலைக்கு எண்ணெய் வைக்காம, தலை சீவாம, சமயத்துல குளிக்காம கூட காலேஜ் போயிருவான். இன்னும் நாலு பேரு கூட பேசத் தெரியல, பழகத் தெரியல. இங்கேயிருந்து சைக்கிள எடுத்துட்டு ஓடுறான் சார், ரெண்டு கிலோ மீட்டர் தள்ளியிருக்கிற ப்ரெண்டு வீட்டுக்கு. ஆனா பக்கத்து வீட்டுப் பையன்கூட ஒரு வார்த்தைப் பேசிப் பழக மாட்டேங்குறான் எனவும் வருத்தப்படுகிறார்.
தனது கதைகளில் எள்ளல்களையும் ஆங்காங்கே அள்ளித்தெளித்துள்ளார் உதாரணத்திற்கு வல்லினம் மெல்லினம் கதையில் புதுநிறமாக கசலையாய் இருந்த நீங்கள் வேப்பங்குச்சிக்கு கையும் காலும் முளைத்தது போல ஒல்லியாகவும் என் மனம் கவர்ந்தவராகவும் அப்படி இருந்த நீங்கள் எனும் வாசகமே சான்று
மனித உணர்ச்சிகளில் ஏதாவது ஒன்றைத் தொட்டு உலுக்குவதுதான் சிறுகதை என்பார் விந்தன் அவர்கள் அந்த வகையில் இவரது கதைகள்  கம்பெனி தொழிலாளர்கள்,தனலட்சுமி ஹோட்டல், அறிவொளி இயக்கம், பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம், இவரது நண்பர்கள், டீக்கடை, கையில் ஏந்திய டீயுடன் எண்ணெய் பதார்த்தங்களை எண்ணி ஊறிய எச்சில். வீட்டின் முற்றத்தில் விளையாடும் மரங்கள் இப்படி இன்னும் பல... நம் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பது என்னவோ உண்மையிலும் உண்மை.

கதை மாந்தர்களை நம்முள் விளையாட விடுகிற வித்தை விமலன் ஐயாவிற்கு உண்டு என்பதை பூப்பதெல்லாம் சிறுகதை புத்தகம் பரைசாற்றுகிறது. இவரது புத்தகம் கையில் தாங்கிய கனமற்ற மலரின் மென்மையைப் போல் தவழுகிறது. தவழுவது கைகளில் மட்டுமல்ல மனங்களிலும் தான். பொறுமை காத்து படித்து மகிழ்ந்தமைக்கு நன்றி நண்பர்களே!!

விமலன் ஐயாவிற்கு:
அடுத்தடுத்த படைப்புகளில் தங்கள் எதார்த்த நடை கொண்ட கதைகள் எட்டி சிகரம் தொட வேண்டும். அவ்வாறு மலரவிருக்கும் படைப்புகளில் தங்கள் அனுபவங்களில் கற்பனையைக் கட்டவிழ்த்து விட்டு கதையின் முடிவில் மனதிலிருந்து பிரிக்க முடியாத இன்பத்தையும் சோகத்தையும் தந்து ஆட்கொள்ள செய்ய வேண்டுமென வாழ்த்தியும் வணங்கியும் மகிழ்கிறேன் நன்றி..


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

36 comments:

 1. அருமையான விமர்சனம்நண்பரே
  விமலன் சிகரம் தொடுவார்
  வாழ்த்துக்கள் நன்றி

  ReplyDelete
  Replies
  1. விமலன் ஐயா அவர்களின் புத்தகத்திற்கான உங்களின் மதிப்புரை போல் இல்லாவிட்டாலும் ஓரளவு படிக்கும் அளவிற்கு இருக்குமென்று நம்பு எழுதினேன். பிழையிருந்தால் மன்னிக்கனும். வருகைக்கு மிக்க நன்றீங்க ஐயா.

   Delete
 2. காட்சிகள் மனதில் நினைக்கத் தோன்றும் வகையில் எழுத்துக்கள் உண்டு... ஒவ்வொரு காட்சியும் கண் முன்னே தோன்றும் வகையில் எழுதுவதில், இனிய நண்பர் விமலன் ஐயா நிபுணர்... வாழ்த்துக்கள்...

  அருமையான விமர்சனத்திற்கு பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உண்மை சகோதரர். விமலன் ஐயா எழுத்துகளும் அவரை போலவே எளிமையும் எதார்த்தங்களையும் தாங்கியுள்ளது. கருத்துக்கு நன்றீங்க சகோதரர்..

   Delete
 3. அருமை தோழர் இந்தமாதிரி ஒரு நேர்மையான விமர்சனப் பதிவை ஒரு நல்ல இலக்கிய ஆர்வலராலேயே தரமுடியும்
  தொடருங்கள் தோழர்...

  ReplyDelete
  Replies
  1. எனக்கு எல்லாமே புது முயற்சி தான் சகோ. நடை பழகும் சிறுகுழந்தை போல் தான் எனது எழுத்துகளும் சிந்தனைகளும். இருப்பினும் உங்கள் ஊக்கவிப்பே எனக்கு தூண்டுகோள். தொடருங்கள். மிக்க நன்றி சகோ..

   Delete
 4. பதிவின் நேர்த்தியில் சகோ தோழராக மாறிவிட்டது
  சரியா சகோ..

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக சகோ. ஐயாவின் எழுத்துகளின் வண்ணங்கள் என் மீது ஒட்டிக்கொண்டிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

   Delete
 5. யதார்த்தமான விமர்சனம் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அம்மா
   விமர்சனம் என்பதை விட எனது பார்வை என்றே நான் தலைப்பிட்டேன். காரணம் ஐயாவின் படைப்புக்கு நான் மதிப்பிடுவது என்பது கொஞ்சம் மிகை தான். இருப்பினும் எழுதியாயிற்று. கருத்துக்கு நன்றீங்க அம்மா.

   Delete
 6. நன்றி பாண்டியன் சார்,விமர்சனத்திற்கு/

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   தங்கள் படைப்பு பற்றிய இந்த சிறியவனின் பார்வையில் பிழையிருந்தால் மன்னிக்கனும் ஐயா. கருத்திட்டமைக்கு மிக்க நன்றி..

   Delete
 7. வணக்கம்
  தங்களின் பார்வையில் விமர்சனம் சிறப்பாக உள்ளது அவர் சிறந்து விளங்க எனது வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ.
   தங்களின் பார்வையும் ரசனை மிகுந்தது என்பதை நான் அறிவேன். தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் எல்லாமும் தாண்டி. மிக்க நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்..

   Delete
 8. நல்ல விமர்சனம்... தங்கள் எழுத்து நடை மிக அருமை...! வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரர். எல்லாம் போட்டாச்சு போட்டாச்சு இல்லையா இந்த முறை! சும்மா. தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்திருப்போம்..

   Delete
 9. சக பதிவரின் புத்தக விமர்சனம் நன்று. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றீங்க சகோதரி. வாய்ப்பு இருந்தால் நீங்களும் படித்து பாருங்கள். உங்கள் வலைச்சர ஆசிரியர் பணி மிகவும் சிறப்பாக இருந்தது. வாழ்த்துகள். கருத்துக்கு நன்றீங்க சகோதரி..

   Delete
 10. விமர்சனம் நன்று. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றீங்க சகோதரி வருகைக்கும் வாழ்த்துக்குமாக

   Delete
 11. விமர்சனம் நல்லா எழுதறிங்க சகோ.. விமலன் சார் எழுத்துக்கள் ரொம்ப ரசனையானவை... எனக்கு நேரத்தை கொஞ்சம் ஏற்படுத்திக்கொண்டு புத்தகம் வாங்கலாம் என்றிருக்கிறேன்....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி
   இது விமர்சனம் என்பதை விட எல்லோருக்கும் இந்த புத்தகம் அறிமுகமாகும் என்னும் எண்ணத்தில் துணிந்து எழுதி விட்டேன். இன்னும் படித்து மெருகேற்றி விமர்சனம் செய்ய வேண்டுமென்பதே எனது எண்ணம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்..

   Delete
 12. விமர்சனம் அருமை... ஆனால் இந்த மாதிரி புத்தகங்களை படிக்க வாய்ப்பில்லாமல் போய்கிறது எங்களை மாதிரி வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர்
   துளசிதரன் ஐயா நல்லதொரு தகவல் சொல்லியுள்ளார். இனிமே நீங்களும் படிக்க நண்பர்கள் முயற்சிப்பார்கள் என்று நம்புகிறேன். நன்றி சகோதரர்.

   Delete
 13. சிறந்த திறனாய்வுப் பகிர்வு

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க ஐயா..

   Delete
 14. அவரின் எழுத்துக்களான ‘பூப்பதெல்லாம்’ தங்களின் பார்வையில் பட்டு பூத்துக்குலுங்கி இங்கு மணம் பரப்பியுள்ளது மகிழ்வளிக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. கடுமையான பணிச்சுமையிலும் வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றீங்க ஐயா. சிறுகதை போட்டிக்கான வேலைகளுக்கு நடுவில் உடல்நலத்திலும் அக்கறை கொள்ளுங்கள் ஐயா. மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..

   Delete
 15. அருமை சகா பாண்டி அவர்களே

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் நண்பா
   உனது வருகை கண்டதும் மற்றற்ற மகிழ்ச்சி. விளையாட்டாய் வந்து வலைப்பூ ஆரம்பித்தேன் நண்பா. இன்று நீங்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஒரு தளமாக மாறியுள்ளது ரொம்ப மகிழ்ச்சியளிக்கிறது. என் நண்பர்களாகிய வருகை,வாசிப்பு, கருத்து என்னை இன்னும் மெருகேற்றி உதவும் என்று நம்புகிறேன். வாருங்கள் கைகோர்த்து பயணிப்போம். நன்றி நண்பா..

   Delete
 16. நல்ல விமர்சனம் சகோ.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றீங்க சகோதரி தங்களின் வருகைக்கும் கருத்துக்குமாக

   Delete
 17. விமர்சனம் அருமையாக உள்ளது!

  விமலன் அவர்களுக்கு ஒரு பரிந்துரை! இது போன்ற நல்ல புத்தகங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டில் உள்ளவர்களும் வாசிக்க வேண்டும் என்பதால் - இதோ இங்கு மதுரைத் தமிழன் கூட சொல்லியிருக்கிறார் பாருங்கள் - தாங்கள், தமிழ் புத்தகங்களை வெளினாட்டில் உள்ளத் தமிழர் வாசிக்க வேண்டி இணையத்தில் சந்தைப்படுத்த உதவும் திரு. திருமூர்த்தி ரங்கநாதன் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். அவரது முகவரி thiru@digitalmaxim.com இதனைத் தொடர்பு கொண்டு முயற்சிக்கலாமே!

  அருமையான பதிவிற்கு மிக்க நன்றி! கண்டிப்பாக நூல் எங்கள் வாங்கும் படியலில் சேர்ந்துவிட்டது!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   ஒரு நல்ல தகவலைத் தந்துள்ளது தங்களது கருத்துரை. மிக்க நன்றீங்க. வருகைக்கும் கருத்துக்குமாக.

   Delete
 18. விமலன் நல்ல எழுத்தாளர் என்று தெரிகிறது. படிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டீர்கள். ஒரு விமர்சனத்தின் விளைவு இதுவாகத்தான் இருக்க வேண்டும். படைப்பும் விமர்சனமும் எழுத்தாளனின் இரண்டு கண்கள். விமர்சனத்திலும் இறங்கியிருக்கிறீர்கள். தொடருங்கள் பாண்டியன் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ஐயா வணக்கம்
   விமலன் ஐயாவின் எழுத்துகளில் எதார்த்தங்கள் கரை புரண்டு ஓடுவது அவரது சிறப்பு. விமர்சனம் என்பதற்காக மட்டும் இதை நான் எழுதவில்லை ஐயா புத்தகம் பற்றிய அறிமுகம் நமது வலைத்தளம் மூலம் அனைவரையும் சென்றடையும் எனும் நம்பிக்கையில் எழுதினேன். உங்களுக்கு பிடித்திருந்தால் கூடுதல் மகிழ்ச்சி ஐயா. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் ஐயா..

   Delete