Wednesday, 19 February 2014

வெளுத்தது காங்கிரஸின் முகம்


முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. பின்னர் நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, கடந்த 2000ம் ஆண்டில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்தனர்.

இவர்களின் மனுக்கள் 11 ஆண்டு தாமதத்திற்கு பின், 2011ல் கருணை மனுக்களை அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பாட்டீல் நிராகரித்தார். கருணை மனுக்கள் தாமதமாக பரிசீலிக்கப்பட்டதால், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, குறைக்க கோரி, மூன்று பேரும் சென்னை ஐகோர்ட்டில் நடந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது. ஆயுள் தண்டனைக்கான வருடங்களுக்கு மேலாக சிறை தண்டனையாக பெற்றுள்ளதால் அவர்களை விடுதலை செய்வது மாநில அரசின் விருப்பதிற்கு விடுகிறோம் என்று கூறியுள்ளது.

அதன் அடிப்படையில் தான் தமிழக அரசு தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று அவசாரமாக கூடியது. இதன் பின்னர் 110 விதியின் கீழ் பேசிய ஜெயலலிதா, ராஜிவ் கொலை குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரும் சிறையில் இருந்த விடுதலை செய்யப்படுவர்; வேலூர் சிறையில் இருக்கும் முருகனின் மனைவி நளினி, ஜெயகுமார், ரவிச்சந்திரன் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோரும் விடுதலை செய்யப்படுவர்; இவர்கள் 7 பேரும் 23 ஆண்டுகள் சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு இவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர். கருணை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் இவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர். இது தொடர்பான பரிந்துரை மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்படும்; தமிழக அரசின் பரிந்துரை மீது 3 நாட்களுக்குள் மத்திய அரசு முடிவு செய்யவிட்டால், அரசியலைப்பு சட்டப் பிரிவின் கீழ் மாநில அரசிற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி தமிழக அரசே இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்யும் என்று கூறியுள்ளார்.

இந்த நிகழ்வுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி அவர்கள் மரணதண்டனைக்கு நான் எதிரானவன் ஆனால் உச்சநீதி மன்றத் தீர்ப்பு கவலையளிக்கிறது என்று கூறியுள்ளார். இது பொதுமக்கள் பலரையும் குழப்பி உள்ளது. மரணதண்டனைக்கு எதிரானவன் என்றவர் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த உச்சநீதி மன்றத்தீர்ப்பு வருத்தமளிப்பதாக அடுத்த வரியில் கூறியுள்ளார் (லாஜிக் கே இடிக்கிறதே!)

தங்களின் சகோதரி பிரியங்கா காந்தி வேலூர் சிறைக்கு வந்து நளினியைச் சந்தித்து கண்ணீர் கலங்கியது எல்லாம் எதற்காக எல்லாம் கண் துடைப்பு நாடகமோ என்று நாட்டு மக்கள் பேசுகிறார்கள். உங்கள் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு தலைவர் திருமதி. பிரதீபா பாட்டில் கருணை மனுவை நிராகரித்த சூட்சமமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழக அரசின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் கபில்சிபல். ' தமிழக அரசின் கடிதம் கிடைத்தவுடன் அது குறித்து முடிவெடுக்கப்படும். நாட்டில் யார் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள், எதிராக இருக்கிறார்கள் என்பது தெளிவாகி உள்ளது. நான் எந்த ஒரு அரசையோ, கட்சியையோ கூறவில்லை,' என்றார். (அப்படியென்றால் இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கிய உச்சநீதி மன்றத்தை அப்படி கூறுகிறாரோ என்ற ஐயம் மக்களுக்கு ஏற்படுகிறது மனிதவளத்துறை அமைச்சரே!)

சிதம்பரம் எதிர்ப்பு: தமிழக அரசின் முடிவு குறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் தெரிவித்த கருத்து எங்களுக்கு மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை. வருத்தமும் அளிக்கவில்லை.
( நீதி வழங்கிய உச்சமன்றத்தை நிதி அமைச்சர் மதித்து நடப்பதில்லை எனும் குற்றச்சாட்டு பரவலாக காற்றோடு கலந்து வருகிறதே அதற்கான பதில் சிதம்பர ரகசியம் தானோ!)

விடுதலை முடிவு என்பது அரசியல் நோக்கமாக கூட இருந்து விட்டு போகட்டும் காங்கிரஸின் இந்த எதிர்ப்பு குரல் எண்ணற்ற இலங்கை தமிழர்களைக் கொன்று குவிக்க சத்தமில்லாமல் சைகைக் காட்டி விட்டதை நினைவுபடுத்துகிறது. இந்த ஒரு காரணத்திற்காகத்  தான் நாளும் இலங்கை ராணுவத்திடம் அடி வாங்கும் தமிழக மீனவர்களின் நிலையை பாராமுகமாக இருப்பதோடு மட்டுமின்றி தமிழக கட்சிகள் கூவியும் செவிசாய்க்க மறுப்பதன் மர்மமும் இன்று விளங்கிக்கொண்டது. வாழ்க உங்கள் பழிவாங்கும் படலம்.


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

39 comments:

 1. தமிழக அரசின் பரிந்துரை மீது 3 நாட்களுக்குள் மத்திய அரசு முடிவு செய்யவிட்டால், அரசியலைப்பு சட்டப் பிரிவின் கீழ் மாநில அரசிற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி தமிழக அரசே இவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்யும் என்று தமிழக முதல்வர் அறிவித்ததும் காங்கிரஸ் இப்படி முதலைக் கண்ணீர் வடிக்கும் என்று எதிர்பார்த்தேன்.

  தாங்களும் மிகச் சரியாகவே பதிவு செய்து விட்டீர்கள்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   நாம் எந்த அரசியல் கட்சி சார்ந்து இல்லாவிட்டாலும் இது போன்ற நிகழ்வுகள் நம்மை இத்தனை காலம் ஏமாற்றி வரும் அரசியல்வாதிகளை இனம் கண்டு கொள்ள உதவுகிறது தானே ஐயா. முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் நன்றிகள்

   Delete
 2. அய்யா நீங்கள் வழக்கறிஞராகப் போயிருக்கலாம். அத்தனை கோணங்களிலும் அலசி எடுத்துவிட்டீர்கள். அந்தக் கடைசிப் பத்தியைப் படித்து அசந்து போனேன். இப்படி -எந்தக் கட்சியையும் சாராத, எல்லாக் கட்சிகளிலும் இருக்கும் - நல்ல,கெட்ட, ஆனால் நமது பாவப்பட்ட மக்களுக்குத் தேவையான செய்திகளை அவ்வப்போது எழுதுங்கள். அரசியல் என்பது ஏதோ ஒரு கட்சி சார்ந்துதான் இருக்கவேண்டும் என்பதில்லை. மக்களுக்கான அரசியலை அவசியம் எழுதுங்கள். வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   இக்கட்டுரை அரசியல் சார்பால் எழுந்த கட்டுரையல்ல இதுவரை ஒரு முகம் காட்டி விட்டு விடுதலை என்றவுடன் உண்மை முகம் காட்டும் நல்லவர்களைக் கண்டு ஆற்றாமையால் எழுதியது. எனது கருத்துக்கு மாற்றுக்கருத்துக்கு இருக்கலாம். அதையும் வரவேற்போம். கருத்திட்டமைக்கு நன்றீங்க ஐயா.

   Delete
 3. பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
  Replies
  1. வருகை தந்து கருத்திட்டமைக்கும் நன்றி சகோ.

   Delete
 4. தமிழ் நாட்டுக்கு என்ன நல்லது நடந்தாலும் நம்ம பா.சிக்கு மகிழ்ச்சி அளிப்பதில்லை பாவம் //இவங்கள எல்லாம் ஏன் இன்னும் சுனாமி தூக்காம இருக்கு // .நீங்க சொல்றத நானும் second it சகோ. வழிமொழியிறேன் ! கலக்கிடிங்க !

  ReplyDelete
  Replies
  1. நல்லவர்களை நாமும் அடையாளம் கண்டு கொள்ளனும் இல்லையா சகோதரி. அதற்காக தான் இந்த பதிவு. அதுவும் இது எனது ஐம்பதாவது பதிவு. வழிமொழிந்தமைக்கு நன்றி சகோதரி..

   Delete
 5. வணக்கம்
  சகோதரன்

  நீங்கள் சொல்வது உண்மைதான்....
  பல வேடங்களில் நடிக்கும் நடிகர்கள் இவர்கள்...
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள் சகோதரன்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அன்பு சகோதரரின் வருகையும் கருத்தும் மகிழ்வளிக்கிறது. பல வேடங்கள் போட்டு நடிப்பது இருக்கட்டும் அரசியலுக்கென்றே அரிதாரம் பூசி நடிக்கும் வித்தையை முழுமையாக அறிந்தவர்களாக இருக்கிறார்களே!

   Delete
 6. வணக்கம்
  த.ம 2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 7. அருமையானதொரு அலசல்..அதிலும் அடைப்புக்குறிக்குள் நீங்கள சொல்லியிருக்கும் கருத்துகள்..அட அட அருமை!

  ReplyDelete
  Replies
  1. சகோதரியும் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு ஒரு பதிவு எழுதியதில் எனக்கு மகிழ்ச்சி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்..

   Delete
 8. எத்தனை காலம்தான் ஏமாற்ற முடியும் ?
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. ஏமாறும் வரை ஏமாற்றுவது தொடரும் சகோதரர். மக்கள் விழிப்படையும் போது அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றித்தான் ஆக வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வண்டி ஓடாது.

   Delete
 9. முதல்ல இவங்கள குத்தவாளின்னு நிரூபிச்ச முறையே சரியில்லீங்க. இவங்க போலீசுக்கு குடுத்த வாக்கு மூலத்த வச்சே இவங்கள கன்விக்ட் பண்ணாங்களாம். ஆனா இது போலீஸ் துன்புறுத்தி வாங்குனதுன்னு அப்பவே இவங்க எல்லாருமே சொல்லிட்டாங்க. ஆனா தடா சட்டத்துல இதுக்கு ப்ரொவிஷன் இருக்கறதால தடா கோர்ட்டாலயோ இல்ல சுப்ரீம் கோர்ட்டாலயோ ஒன்னும் செய்ய முடியல. அதனால இவங்களுக்கு எதிரான குற்றச்சாட்டு சரியா நிரூபிக்கலன்னுதான் அர்த்தம். அந்த பேசிஸ்லயே இவங்கள விடுதலை செஞ்சிரலாம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர்
   நல்லதொரு கருத்தை அறியும் வண்ணம் தந்தமைக்கு நன்றிகள்.

   Delete
 10. Your understanding of the whole situation is moronic.Try to use your brain and stop writing nonsense like this.

  It does not matter whether one is a fellow Tamilan or not not,

  these terrorists are responsible for killing our Prime minister.

  There ends all the hue and cry.

  ReplyDelete
  Replies
  1. நண்பருக்கு வணக்கம்
   உங்களுக்கு நன்றாக தமிழ் தெரியும் என்பதால் நான் தமிழிலேயே உங்களுக்கு பதில் தருகிறேன். எனது பதிவிற்கு உங்கள் கருத்துரை தான் முட்டாள் தனமானது. நான் எங்கும் ராஜீவ் கொலையாளிகளை நல்லவர்கள் என்று கூறவில்லை. இவ்வளவு காலம் நளினி மீது கருணை உள்ளவர்கள் போல் காட்டிய காங்கிரஸ் பற்றி தான் பகிர்ந்துள்ளேன்.

   ராஜீவ் கொலையாளிகளாக குற்றச்சாட்டப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால் தான் காங்கிரஸ் இவ்வளவு காலமும் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் அநீதி இழைத்து வருகிறது என்பதே என் குற்றச்சாட்டு. இதற்கெல்லாம் துடிக்காத உங்கள் ரத்தம் ஒரு படுகொலைக்கு மட்டும் துடிக்குமென்றால் அது தமிழ் ரத்தமா என்பது பலரின் கேள்வியாக இருக்கும். கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் குற்றவாளிகள் என்றால் லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் கொல்ல ரேடார், பட்டாளியன் என எல்லா விதத்திலும் உதவிய இந்தியாவை ஆளும் கட்சிக்கு என்ன பெயர் என்பதே என் கேள்வி?

   உச்சநீதி மன்றத்தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்வதாக தமிழக அரசு தெரிவித்த செய்திக்கு காங்கிரஸாரின் எதிர்மறை எண்ணங்களைத் தான் பகிர்ந்துள்ளேன் எனும் எனது முழுமையான கட்டுரையின் கருத்தைப் புரிந்து கொள்ளாமல் கண்மூடித் தனமாக கருத்துரை இடுவதில் அவசரம் வேண்டாம் நண்பரே!

   உங்கள் பதிவையும் படித்தேன். அப்படியே இந்திய அமைதிப்படை இலங்கையில் நடத்திய அட்டூழியம் பற்றிய தகவல்களையும், இலங்கைத் தமிழர்களை ஈவு இறக்கமில்லாமல் கொன்று குவித்த கல்நெஞ்சனுக்கு எல்லா விதத்திலும் உதவி விட்டு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் அது உள்நாட்டு விவகாரம் இந்தியா தலையிட முடியாது என்று சப்பை சப்புக்கட்டும் ஆளூம் கட்சியின் கொள்கையைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்கள். அமைதிப்படை, ரேடார், ராணுவம் என எல்லா உதவியும் செய்யும் போது அது உள்நாட்டு விவகாரம் என்று தெரியவில்லையா! இப்போது மட்டும் உள்நாட்டு விவகாரம் நல்லா இருக்குதுய்யா உங்கள் நியாயம். நன்றி.

   Delete
  2. Mr.Common Sense,

   The true Killers of Rajiv was already killed in bangalore and war front in sri lanka.

   After Jain commission report also, Our Indian Government is still silent with Chandra Sami

   These People (seven )done some help to rajiv killers unintesionally

   Your Name having sense but not your ststement

   Delete
  3. பெயர் வெளியிடாத நண்பருக்கு வணக்கம்.
   உண்மை என்ன என்பது தெரியாமல் நண்பர் பேசியிருக்கார். அதற்கு பதில் தந்து கருத்திட்டமைக்கு நன்றி. இருப்பினும் அவர் அளவிற்கு நாமும் இறங்கிப் போய் கருத்திடும் அவசியம் இல்லை என்பதே எனது கருத்து. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சகோதரர்.

   Delete
 11. உங்களிடமிருந்து இப்படி ஒரு சிறப்பான அலசலை (பதிவை) எதிர்ப்பார்க்கவே இல்லை... இது போல் தொடருங்கள்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோதரர் வணக்கம்
   மனதில் தோன்றிய எண்ணத்தைப் பதிவாக பதிந்து விட்டேன். உங்களை கவர்ந்திருக்குமானால் எனக்கு மகிழ்ச்சியே. நன்றி சகோதரர்..

   Delete
 12. இதில் கருத்துக் கூறும் அளவிற்கு எனக்கு அரசியல் அனுபவம்
  கிடையாது சகோதரா ஆனாலும் கெட்டதிலும் ஒரு நன்மை நிகழ்ந்துள்ளது குறித்து மகிழ்ச்சியாகவே உள்ளது .இந்த 4பேருக்கும் விரைவில் விடுதலை கிட்ட வேண்டும் சகோதரா அதுவே
  நீதிக்கும் கிடைக்கும் நல்லதொரு தீர்ப்பு .அரசியல் சாக்கடை
  அதுவும் மெல்ல மெல்ல தனது சுயத்தை மக்கள் அறியும் வண்ணம்
  துலங்கட்டும் .சிறப்பான பகிர்வுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி (அம்மா)
   தங்களின் கருத்தை மிக சிறப்பாக சொல்லி விட்டீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா..

   Delete
 13. Replies
  1. பதிவை ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றிகள் ஐயா..

   Delete
 14. மிகவும் அருமையாக அலசி இருக்கிறீர்கள்...
  சிதம்பரம் போன்றோர் தமிழினத் துரோகிகள்...
  விஜயதாரணின்னு ஒரு அம்மா கிணத்துத் தவளையாட்டம் கத்திக்கிட்டுக் கிடக்கு...
  தமிழர்களுக்கு தமிழர்களே எதிரிகளாக மட்டுமல்ல துரோகிகளாகவும் இருக்கிறார்கள் சகோதரரே...
  அருமையானதொரு அலசல்..

  ReplyDelete
  Replies
  1. ”தமிழர்களுக்கு தமிழர்களே எதிரிகளாக மட்டுமல்ல துரோகிகளாகவும் இருக்கிறார்கள் சகோதரரே...” இதை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் சகோதரர். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்..

   Delete
 15. உங்கள் கருத்தை மிக அழகாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கிறீர்கள் இந்த கால இளைஞர்களுக்கு பணத்தை சம்பாதிக்க தெரிஞ்ச அளவிற்கு பொதுவிஷயங்களில் சிந்திக்க தெரியாது என்று மக்களிடையே ஒரு எண்ணம் நிலவி வருகிறது அந்த எண்ணத்தை இந்த பதிவு தகர்த்து இருக்கிறது. பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. கருத்திட்டு ஊக்கப்படுத்திப் பாராட்டிய தங்களுக்கு எனது அன்பான நன்றிகள் சகோதரர்.

   Delete
 16. நல்ல பதிவு
  காமன் சென்ச்க்கு நல்ல பதில்...
  இன்னும் கொஞ்சம் சாரமாக அடர்வாக எழுதுங்கள் சகோ...

  ReplyDelete
  Replies
  1. வருகை தந்து கருத்திட்டு ஆலோசனையும் வழங்கிய எனது அன்பு சகோவிற்கு நன்றிகள். தொடர்வோம்.

   Delete
 17. அன்புச் சகோதரரே!
  நல்ல தொரு தலைப்பும் அலசலும் இதற்கு கருத்து சொல்லும் அளவுக்கு அறிவும் அனுபவமும் போதாது. இருந்தாலும் இதை தான் ராஜதந்திரம் என்பார்களோ! இதற்குள் சிக்கி அப்பாவி மக்கள் அழிவது எங்கும் ஏற்கப்படக்கூடாதவை அதற்குள் யாராக இருந்தாலும் அகப்படக் கூடாது. வேலியே பயிரை மேயலமா என்று மட்டும் தான் கேட்கத் தோன்றுகிறது. பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு மரணம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
  மிகவும் வேதனையாக உள்ளது. சகோதரா! மிக்க நன்றி தலை வணங்குகிறேன்! தங்கள் செயல்கள் அனைத்தும் போற்றத் தக்கதே!

  தங்கள் எண்ணங்கள் பற்றி நான் அறிவேன் இருந்தாலும் இன்று தெள்ளத் தெளிவாக தெரிந்து கொண்டேன். பெருமிதமும் பேரன்பும் கொண்டேன்.
  எப்படி அலசுகிறீர்கள் அத்தனையும்,ஆஹா ஒரு அருமையான வழக்கறிஞரை இழந்துவிட்டோமே
  தொடருங்கள் வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
  Replies
  1. அன்பு சகோதரிக்கு வணக்கம்
   சகோதரனின் எண்ணங்கள் சகோதரிக்கு தான் தெரியும். எதிர்மறைக்கருத்து வந்த போதும் தயங்காமல் வெளியிட்டு பதிலும் தந்துள்ளேன். உங்களைப் போன்றோரின் ஊக்கமூட்டும் கருத்துகள் என்றும் என் நெஞ்சில் கலந்து என்னோடு பயணித்து சிறப்பான நடை போட தூண்டுதலாக அமையும் சகோதரி. உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிகுந்த நன்றிகள்.

   Delete