Tuesday, 18 February 2014

வீட்டிற்குள் உலகப்போர்

வணக்கம் நண்பர்களே பல நாடுகளுக்கிடையே நடந்த உலகப்போர் ஏற்படுத்திய பாதிப்பை விட ஒரு வீட்டிற்குள் நடக்கும் சண்டை ஏற்படுத்தும் பாதிப்பைகளை உங்கள் கண்களுக்கு காட்சிகளாய் எனது வரிகளில் வைக்கிறேன்.

கணவன் மனைவிகளுக்கிடையே வரும் சண்டை குழந்தைகளைப் பலவகையில் பாதிக்கிறது. குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது பெற்றோர் ஏற்படுத்தும் பாதிப்பைகளையும் பள்ளிப்பையில் சுமந்து கொண்டுதான் செல்கிறது. குறிப்பாக காலை நேரங்களில் தம்பதிக்களுக்கிடையே அவசரமாக அலுவலகங்களுக்கு கிளம்பும் நேரத்தில் ஆளாளுக்கு மாற்றி மாற்றி வசைப் பாடுவது இருக்குமே அட அட என்னன்னு சொல்றது!

முடிந்த வரையில் சிரித்த முகத்துடன் கிளம்ப பாருங்கள். ஏனெனில் குழந்தைகள் எதிரில் பெற்றோர்கள் போடும் சண்டை அவர்களைப் பற்றிய மோசமான எண்ணத்தைக் குழந்தைகளிடம் ஏற்படுத்தி விடும்.

பாஸ்ட் புட் சாப்பிடுவது போல வேகமாக மணமுறிவுகள் இக் காலத்தில் அதிகரித்துவருகின்றன. காதல் திருமணங்களும் இதற்கு விலக்கல்ல. ஏன் இப்படி நடக்கிறது? மிகுந்த கனவுகளுடனும் எதிர்பார்ப்புடனும் இறுதிவரை துணையிருப்பேன் என்ற சங்கல்பத்துடனும் சேர்ந்த ஆணும் பெண்ணும் அவர்கள் குடும்பங்களும் பிரியும் நிலை ஏன் உருவாகிறது? சின்னச் சின்ன விடயங்களில் விட்டுக்கொடுத்து போகாமல் விடாப்பிடியாக இருப்பது தான்.
"பரஸ்பரம் பாவயந்த ஸ்ரேயா பரம் அவாப்ச்யதா". ஒருவரோடு ஒருவர் மற்றவர்களையும் மகிழ்வித்து வாழும் பொழுது சிறப்பை அடையலாம் என்பது பகவத் கீதையில் சொல்லப்பட்ட ஒரு வசனம். விட்டுக்கொடுத்து வாழ்வதால் கெட்டுப்போவதில்லை என்பதை உணரும்படி வளர்கப்படாததே இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணம்.

இன்றைய தம்பதியினருக்கு இடையே பேசிப் பொழுதுபோக்க பொதுவாக எந்த விஷயமும் இருப்பதில்லை என்று இயந்திரத்தனமாக வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். ஏசி கார் வாங்கணும், மூணு வருடத்திற்குள் வீடு கட்டணும் என்ற ஆசையுடன் சம்பாத்தியத்தை நோக்கி ஓடுபவர்களிடையே பாசப் பிணைப்பை எப்படி எதிர்பார்க்க முடியும்? வாழ்க்கை என்பது சாதிப்பதற்கு மட்டுமல்ல வாழ்வதற்கு என்பதை முதலில் உணர்ந்து கொண்டாலே வாழ்க்கையின் அர்த்தம் பிடிபட்டு விடும்.
ஒருவர் நண்பரிடம் சொன்னார்
நேற்று எனக்கும் என் மனைவிக்கும் வாக்குவாதம்
எது சம்பந்தமா!
நான் இசைக்கச்சேரிக்கும் போகணும்னு சொன்னேன்.அவ திரைப்படத்திற்கு போகணும்னா?
சரி எந்த படத்திற்கு போனீங்கனீங்க!
ப்படி யாராவது விட்டுக்கொடுத்து விட்டால்  நலமாகத்தான் இருக்குமல்லவா!

எல்லாம் தம்பதியினரும் தங்களைத் தவிர மற்ற தம்பதிகள் அனைவரும் மகிழ்ச்சியில் இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். இங்கு வீட்டுக்கு வீடு வாசற்படி மட்டுமல்ல குளறுபடியும் இருக்கிறது பாஸ் அதைப் புரிந்து கொண்டு மகிழ்வானதாக ஆக்குங்கள். நன்றி..


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

30 comments:

 1. விட்டுக்கொடுத்தலே அனைத்து உறவுகளையும் இணைக்கும் பாலம்.அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
  Replies
  1. அன்பு சகோதரியின் வருகையும் கருத்தும் மகிழ்வளிக்கிறது. நன்றி சகோதரி..

   Delete
 2. எந்திரமயமான வாழ்க்கையில் எண்ணிப் பார்க்க வேண்டிய பதிவு...! வாழ்த்துக்கள்...!

  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

  ReplyDelete
  Replies
  1. அழகான கருத்துரையோடு எல்லாம் போட்டதுக்கும் அன்பான நன்றிகள் சகோதரர்..

   Delete
 3. விட்டுக் கொடுக்கும் புரிதல் இல்லையெனில் வாழ்வு வீண் தான்... வாழ்த்துக்கள் சகோதரரே...

  ReplyDelete
  Replies
  1. விட்டுக்கொடுப்போர் கெட்டுப்போவதில்லை என்பதை உணர்ந்தால் போதும். அன்பு சகோதரரின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளிக்கிறது. நன்றி சகோதரர்..

   Delete
 4. வணக்கம்
  சகோதரன்....

  இதைப்போல எல்லா தம்பதியினரும் புரிந்து கொண்டால் வாழ்வு சிறக்கும் சகோதரன்....பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ
   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

   Delete
 5. உண்மைதான் சகோ..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் சகோதரர்..

   Delete
 6. “விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதிலலை, கெட்டுப் போனவர்கள் விட்டுக் கொடுத்ததில்லை” என்பது இன்றைய “ஃபாஸ்ட் ஃபுட்“ கலாசார உலகிற்குத் தேவையான பொன்மொழி. பொதுவான கனவு வீடு,கார் என்றாலும் இவற்றைக் காசு கொடுத்து வாங்கலாம், “வாழ்க்கை“யை என்ன கொடுத்து வாங்குவது? துட்டுக் கொடுத்து வாங்க முடியாது, ஆனால்...விட்டுக்கொடுத்து வாங்கலாம். அருமை பாண்டியன்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் முதலில் நன்றிகள்.
   எனது கட்டுரைக்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்த தங்கள் கருத்துரை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க்கை என்பது அவரவர் கையில் தான் உள்ளது. நன்றீங்க ஐயா..

   Delete
 7. விட்டுக்கொடுப்பதையும் சுயமரியாதையையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் இன்று...குடும்பம் என்ற பிணைப்பு தேவையில்லை என்று எண்ணுகின்றனர்..இந்நிலை மாறி தம்பதிகள் இணைந்து வாழும் சமூகம் நிலைக்க வேண்டும்..
  அருமையான பதிவு பாண்டியன்..வாழ்த்துகள்!
  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோதரி
   வழக்கம் போல் உற்சாக வார்த்தைகளால் கருத்துரை தந்து கலக்கி விட்டீர்கள். தங்கள் வருகைக்கு அன்பான நன்றிகள்..

   Delete
 8. ஆசிரியரே ! இப்பவே பிள்ளைகளுக்கு அதை வலியுறுத்தி சொல்லிக் கொடுங்கள் எதிர்காலத்தில் தங்கள் மாணவர்களாவது நல்லபடி வாழட்டும். நான் சொல்வது சரி தானே. பெண்கள் அடுக்களையை விட்டு அகன்றது தப்போ என்று சில சமயம் தோன்றுகிறது சகோதரா.
  இயந்திர வாழ்கையும் பொருளாதாரமும் கூட ஒரு காரணம் தான்.

  ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வை தான் வாழவேண்டும். பிறர் வாழ்வை வாழ எண்ணும் போது தான் (ஒத்துப்பார்த்தல்) நிம்மதி குலைகிறது.( அய்யய்யோ குழப்புகிறேனோ)

  வழமை போல் நல்ல விடயம் எடுத்து வந்தீர்கள் சகோதரா நன்றி ! வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. இனிய சகோதரியின் இனிமையான வருகையும் கருத்துரையும் வெகுவாக கவர்கிறது (குழப்பவில்லை சகோதரி). கண்டிப்பாக அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு வாழுவது தான் நிம்மதியின்மைக்கு முதல் காரணம்.. நன்றீங்க சகோதரி...

   Delete
 9. சகோ, கல்யாணத்துக்கு முன்னாடியே ரொம்ப தெளிவா இருக்கீங்க... வர போறவங்க ரொம்ப அதிர்ஷ்டசாலிதான்..........!

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான் சகோதரி. மணநாள் முடிவாகி விட்டது. கண்டிப்பாக அழைப்பு உண்டு. வருவதற்கு தயார் ஆகிக்கொள்ளுங்கள் சகோதரி. தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள்..

   Delete
 10. இங்கு வீட்டுக்கு வீடு வாசற்படி மட்டுமல்ல குளறுபடியும் இருக்கிறது

  விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை..
  கெட்டுப்போனவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை..!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அம்மா
   உங்கள் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

   Delete
 11. # விட்டுக்கொடுத்து வாழ்வதால் கெட்டுப்போவதில்லை #
  இது மட்டுமல்ல ,தம்பதிகள் தங்களுக்குள் விட் அடித்துக் கொண்டும் இருந்தால் மகிழ்ச்சியாய் நாட்கள் நகரும் !
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர்
   விட் அடிப்பதை விடாம பிடிச்சிருக்கீங்க பார்த்தீங்களா! இது தான் பகவான் ஜீ பாலிசி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 12. விட்டுக் கொடுத்தல் என்பது கணவன் மனைவுக்கு இடையில் கண்டிப்பாக அவசியம்...இது இந்த உறவுக்கு மட்டுமல்லா, எல்ல உறவுகளுக்குமே பொருந்தக் கூடிய ஒன்று!

  மிக மிக அருமையான பகிர்வு!

  நன்றி, வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   எல்லா உறவுகளுக்கும் விட்டுக்கொடுத்தல் என்பது பொருந்தும். அன்பு மட்டும் நிறைந்து இருந்தால் எல்லாம் மகிழ்ச்சி தான். தங்களின் மேலான கருத்துக்கு அன்பான நன்றிகள்

   Delete
 13. அப்படா கவலை இல்லை.புள்ள பொழச்சுக்கும்.
  தம்பிக்கு பொண்ணு தேடவேண்டியது தான்.
  சகோ அந்த சினிமா காமெடி செம சிரிப்பு
  வாழ்த்துக்கள் சகோ !

  ReplyDelete
  Replies
  1. சகோதரிக்கு அன்பு வணக்கம்
   திருமண தகவல் குறித்து சகோ தங்களிடம் கூறவில்லையா! அவசியம் வர வேண்டும். வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி சகோதரி..

   Delete
 14. விட்டுக்கொடுத்தால் சிறக்கும் வாழ்க்கை! இதை அருமையாக உணரவைத்த கட்டுரை! சிறப்பான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தவறாமல் வருகை தந்து கருத்திடும் தங்களுக்கு எனது அன்பான நன்றிகள் சகோதரர்..

   Delete
 15. ""பரஸ்பரம் பாவயந்த ஸ்ரேயா பரம் அவாப்ச்யதா". ஒருவரோடு ஒருவர் மற்றவர்களையும் மகிழ்வித்து வாழும் பொழுது சிறப்பை அடையலாம் என்பது பகவத் கீதையில் சொல்லப்பட்ட ஒரு வசனம். விட்டுக்கொடுத்து வாழ்வதால் கெட்டுப்போவதில்லை என்பதை உணரும்படி வளர்கப்படாததே இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணம்." என்ற
  எடுத்துக்காட்டை விரும்புகிறேன்! தங்கள் பதிவு சிறந்த வழிகாட்டல்!

  தங்கள் வலைப்பூவை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (Directory) இல் http://tamilsites.doomby.com/ இணைத்து உதவுங்கள். இதனைத் தங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்து உதவுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஐயா அவர்களின் வருகைக்கும் அழகான கருத்துக்கும் அன்பான நன்றிகள். அவசியம் இணைத்து விடுகிறேன். மிக்க நன்றீங்க ஐயா..

   Delete