அரும்புகள் மலரட்டும்: சூமாக்கருக்கு நடந்தது என்ன? குணமடைய பிரார்த்திப்போம்!

Tuesday 31 December 2013

சூமாக்கருக்கு நடந்தது என்ன? குணமடைய பிரார்த்திப்போம்!


பனிச்சறுக்கில் ஈடுபட்ட போது தலையில் பலத்த காயமடைந்த முன்னாள் ‘பார்முலா–1’ கார்பந்தய வீரர் மைக்கேல் சூமாக்கர், ஆபத்தான நிலையில் ‘கோமாவில்’ உள்ளார்.

ஜெர்மனியின் முன்னாள் ‘பார்முலா–1’ கார் பந்தய வீரர் சூமாக்கர், 44. மொத்தம் 7 முறை (1994, 1995, 2000 முதல் 2004 வரை) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கடந்த 2006ல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 2010ல் மீண்டும் ‘பார்முலா–1’ போட்டிக்கு திரும்பினார்.

இருப்பினும், பெரியளவில் வெற்றிகள் கிடைக்காததால், 2012ம் ஆண்டின் கடைசியில் மீண்டும் ஓய்வு பெற்றார். வரும் 2014, ஜன., 3ல் தனது 45வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார் சூமாக்கர். இதற்காக குடும்பத்துடன் பிரான்ஸ் சென்றார். இங்கு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில், தனது 14 வயதான மகன் மைக் சூமாக்கருடன் பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென நிலைதடுமாறிய சூமாக்கர், அருகில் இருந்த பாறைகள் மீது மோதினார். பாதுகாப்புக்காக ‘ஹெல்மெட்’ அணிந்திருந்த போதும், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இவரை மீட்டு, அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது, சூமாக்கருக்கு நினைவு இருந்தது. இருப்பினும், மேல் சிகிச்சைக்காக, கிரனாபல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இங்கு இவருக்கு, மூளையில் ஆப்பரேசன் நடந்தது. தற்போது ‘கோமா’ நிலையில் உள்ள சூமாக்கர், தொடர்ந்து ஆபத்தான நிலையில் தான் உள்ளார் எனும் செய்தியை படித்ததும் நெஞ்சத்தில் ஒரு வித பாரம் ஏறிகொண்டு இறங்க மறுக்கிறது.

அண்மையில் ஹாலிவுட் நடிகர் பால் வாக்கர் அவர்களின் மரணத்தின் அதிர்ச்சியில் மீளாத நிலையில் இன்னொரு வேகப்புயல் விபத்தில் சிக்கியிருப்பது வேதனையாக உள்ளது.


பால்வாக்கரின் உயிரைப் பறித்த அந்த விபத்து பற்றிய  நிகழ்வை சகோதரர் திரு. மது கஸ்தூரி ரங்கன் அவர்களின் மலர்தரு வலைப்பக்கத்தில் விரிவாக படிக்கலாம் நண்பர்களே. காண
  http://www.malartharu.org/2013/12/star-has-fallen-paul-walker.html

பால்வாக்கர் அவர்களின் ஆன்மா சாந்தியடையவும், சூமாக்கர் அவர்கள்
பூரண குணமடைய அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்களோடு இணைந்து நாமும் பிரார்த்தனை செய்து கொள்வோம். சூமாக்கர் அவர்கள் விரைவில் குணமடைந்து பழைய நிலைக்கு மீிண்டு(ம்) வர வேண்டும். ரசிகர்களை தன் விரல்நுனியில் கட்டிப்போட்டுள்ள பிரபலங்கள் விபத்தில் சிக்குவது தொடர்வதால் எழுந்த வேதனையால் தங்களோடு பகிர்ந்து கொண்டேன்.

பிரபலங்கள் மட்டுமல்ல சாமானிய மனிதன் ஒவ்வொருவரும் தனது பொறுப்பை உணர்ந்து தாங்கள் மேற்கொள்ளும் பயணங்களிலும் செயல்களிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எப்பொழுதும் விழிப்போடு செயல்பட் வேண்டுமெனும் வேண்டுகோளையும் பதிவிட விரும்புகிறேன். நன்றி..


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

35 comments:

  1. பால்வாக்கர் அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    சூமாக்கர் அவர்கள் விரைவில் குணமடைவார்...

    ReplyDelete
    Replies
    1. விரைவான வருகைக்கும் எனது வேண்டுதலை தங்கள் வேண்டுதலாக ஏற்று கொண்டமைக்கும் நன்றிகள் சகோதரர்.

      Delete
  2. சூமாக்கர்வரைவில் குணமடைய வேண்டுமென பிராத்திக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் அன்பான குணத்திற்கும் எனது நன்றிகள் சகோதரர். அனைவரும் இணைந்து பிரார்த்திப்போம் நிச்சயம் நமது எண்ணங்களுக்கு வலிமை உண்டு. மிகுந்த நன்றிகள் சகோதரர்.

      Delete
  3. மனித நேயம் மிகக் கொண்டு வேதனைப்படும் அன்பு சகோதரனே வணக்கம்...!
    மேலும் மேலும் நல்ல எண்ணங்கள் வளரட்டும்...!
    ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது உங்களை நினைத்தால். உங்கள் மாணவர்கள் அதிர்ஷ்டம் பண்ணியிருக்கிறார்கள் என்றே எண்ணுகிறேன். அவர்கள் நிச்சயமாக நல்ல பிரஜைகளாவார்கள் என்று நம்புகிறேன்.

    பால் வாக்கர் ஆன்மா சாந்தி அடையவும். சூமாக்கர் விரைவில் குணமாகவும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி
      எனது வேண்டுதலோடு தங்கள் தங்களின் வேண்டுதலும் கைகோர்த்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

      Delete
  4. பிரபலங்கள் மட்டுமல்ல சாமானிய மனிதன் ஒவ்வொருவரும் தனது பொறுப்பை உணர்ந்து தாங்கள் மேற்கொள்ளும் பயணங்களிலும் செயல்களிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். //

    சரியாகச் சொன்னீர்கள். ஆனாலும் விதி என்று ஒன்று உள்ளதே. விபத்துக்கள் நம் தவறுகளால் மட்டும் நடப்பதில்லை என்பதும் உண்மை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரர்
      எனது வேண்டுதலோடு தங்கள் தங்களின் வேண்டுதலும் கைகோர்த்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

      Delete
  5. //பிரபலங்கள் மட்டுமல்ல சாமானிய மனிதன் ஒவ்வொருவரும் தனது பொறுப்பை உணர்ந்து தாங்கள் மேற்கொள்ளும் பயணங்களிலும் செயல்களிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எப்பொழுதும் விழிப்போடு செயல்பட் வேண்டுமெனும் வேண்டுகோளையும் பதிவிட விரும்புகிறேன். //

    நல்ல கருத்து! பால்வாக்கர் அவர்களின் ஆன்மா சாந்தியடையவும், சூமாக்கர் அவர்கள் பூரண குணமடைய பிரார்த்திப்போம்!!

    பகிர்தலுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரர்
      எனது வேண்டுதலோடு தங்கள் தங்களின் வேண்டுதலும் கைகோர்த்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

      Delete
  6. சூமாக்கர் விரைவில் குணமடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர். தங்களது பதிவைத் தமிழில் கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி. எனது வேண்டுதலோடு தங்கள் தங்களின் வேண்டுதலும் கைகோர்த்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

      Delete
  7. உங்கள் பிரார்த்தனையில் நானும் சேர்ந்து கொள்ளுகிறேன்.
    இனிய உத்தாண்டி வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்மா
      எனது வேண்டுதலோடு தங்கள் தங்களின் வேண்டுதலும் கைகோர்த்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

      Delete
  8. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் தங்கள் இல்லத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

      Delete
  9. சூமேக்கர் அசைக்கமுடியாத சாம்பியனாக எத்தனை ஆண்டுகள் இருந்தார் .இப்படி ஒரு விபத்தா ?
    விரைவில் குணமடைவார் என நம்புவோமாக !
    புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி
      எனது வேண்டுதலோடு தங்கள் தங்களின் வேண்டுதலும் கைகோர்த்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

      Delete
  10. தங்களுக்கும் ,ம்தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் தங்கள் இனிய தோழி கீதா அவர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      Delete
  11. சகோ தொடர் பயணங்களால் தெரியாமல் போன செய்தி
    எனது பதிவையும் பகிர்ந்தமைக்கு நன்றி

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரர்
      எனது வேண்டுதலோடு தங்கள் தங்களின் வேண்டுதலும் கைகோர்த்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

      Delete
  12. எல்லோரின் நம்பிக்கையும் அவரை குணமடைய வைக்கட்டும் .இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி
      தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      Delete
  13. மிசேயல் சூமாக்கர் மீண்டும் சுகமடைந்து வர வாழ்த்துகிறேன்.
    ஹெல்மெட் அணிந்திருந்த அவருக்கே இந்த நிலையென்றால் ஹெல்மெட் அணிவது வேவையற்ற ஒன்று என்று நினைக்கும் நம்மவர்களை பற்றி என்ன சொல்வது.
    புது வருட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரர்
      எனது வேண்டுதலோடு தங்கள் தங்களின் வேண்டுதலும் கைகோர்த்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
      -----
      தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

      Delete
  14. ஆமாம் சகோ!
    இங்கு பலரின் மனங்களில் சந்தோஷமே மறைந்துபோயுள்ளது இவரின் நிலையால்..

    விரைவில் நலம்பெற நானும் வேண்டுகிறேன்!

    உங்களுக்கும் இனிய புதுவருட நல் வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி
      எனது வேண்டுதலோடு தங்கள் தங்களின் வேண்டுதலும் கைகோர்த்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
      -----
      அன்பு சகோதரிக்கும் தங்கள் இல்லத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

      Delete
  15. இனிய புது வருட நல்வாழ்த்துக்கள் சகோ.
    சூமாக்கர் குணமடைய நானும் வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோதரிக்கும் தங்கள் இல்லத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

      Delete
  16. பால்வாக்கர் அவர்களின் ஆன்மா சாந்தியடையவும் சூமாக்கர் அவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரர்
      எனது வேண்டுதலோடு தங்கள் தங்களின் வேண்டுதலும் கைகோர்த்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

      Delete
  17. வணக்கம் !

    சிறப்பான பகிர்வுகள் கண்டு மகிழ்ந்தேன் அத்தோடு இவ்வார
    வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ள தங்களுக்கு என்
    மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சொல்லிக் கொள்வதில்
    மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன் .மிக்க நன்றி பகிர்வுகளுக்கு .

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி
      எனது வேண்டுதலோடு தங்கள் தங்களின் வேண்டுதலும் கைகோர்த்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

      Delete
  18. தகவலுக்கு மிக்க நன்றி சகோதரர். தங்கள் அன்பும் ஆலோசனைகளும் என்றும் நன்றி சொல்ல வேண்டும். நன்றிகள் சகோதரரே..

    ReplyDelete