Monday, 23 December 2013

தைப்பொங்கல் சிறப்புக் கட்டுரைப் போட்டிக்கு 19 நாள்களே உள்ளன

தைப்பொங்கல் சிறப்புக் கட்டுரைப் போட்டி


வணக்கம் நண்பர்களே... இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தை தாய்வீடாக கொண்ட எனது இனிய நண்பர், தற்சமயம் மலேசியாவில் வசிக்கும் திரு. த.தவரூபன்(ரூபன்) அவர்களும், மணப்பாறையைச் சேர்ந்த தமிழாசிரியர் திரு. அ.பாண்டியன் என்கிற நானும் இணைந்து நடத்தும், தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள அழைக்கிறேன் நட்பு உள்ளங்களே...

போட்டிக்கான தலைப்பு :

1. இணையத்தின் சமூகப் பயன்பாடு.

2. இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்.

3. தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்.

4. போதைப் பழக்கமும் அடுத்த தலைமுறையின் முன்னேற்றமும்.

5. உழைப்புக்கான வழியினைச் சீர் செய்ய எண்ணாது அரசு இலவசங்களிலும் வியாபாரத்திலும் முனைவது சரியா…?
போட்டியின் விதிமுறைகள் :

1. இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருந்தால் நல்லது.

2. ஒருவரே எல்லாத் தலைப்புகளிலும் கட்டுரையை தங்களின் தளத்தில் பதிவிடலாம். ஒரு சிறப்பான கட்டுரை மட்டுமே போட்டியில் ஏற்கப்படும். பதிவர் அல்லாதவர்களும் எதிர்காலத்தில் வலைத்தளத்தை தொடங்க ஊக்கம் பெறலாம் என்பதால் அனைவரும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம். கட்டுரைகளை படமாக (jpg) எடுத்து அனுப்பாமல் யுனிகோடு தமிழ் லதா (Unicode Tamil Font) எழுத்துருவில் அனுப்ப வேண்டும்.

3. கட்டுரையை தங்கள் தளத்தில் 10/01/2014 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்) பதிவிடப் பட்டிருக்கவேண்டும்.

4. நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாக இருக்கும்

5. உங்களின் தளத்தில் கட்டுரையை வெளியிட்ட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரிகள்
svramani08@gmail.com,
pandi29k@gmail.com

 பெயர்களை சொடுக்கினால் அவரவர் தளங்களுக்கு செல்லலாம்...

நடுவர்கள் குழு :

1 கவிஞர் திரு.நா.முத்துநிலவன்

2 கவிஞர் திரு.வித்யாசாகர்

3 கவிஞர் திரு.இராய.செல்லப்பா

நிர்வாகக் குழு :

1 கவிஞர் திரு ரமணி

2 திரு.பொன்.தனபாலன்

3 திரு.ரூபன்

4  திரு.அ.பாண்டியன்

பரிசுகள் விபரம்

முதல் மூன்று பேர்களுக்கு :-
பதக்கம் + சான்றிதழ்
ஆறுதல் பரிசு ஏழு பேர்களுக்கு :-
சான்றிதழ்

புத்தகப் பரிசு :- நடுவர் குழு தேர்ந்தெடுக்கும்
முதல் 3 கட்டுரைக்கு ஏற்றவாறு, ஒவ்வொரு பதிவரின் கட்டுரையில் சிறப்பாக பின்னூட்டம் இடும் 3 பேர்களுக்கும், அவர்கள் விரும்பும் புத்தகத்தை கவிஞர் திரு. நா. முத்துநிலவன் ஐயா அனுப்புவார்கள்.

வலைத்தளம் இல்லாதவர்களின் கட்டுரையை நண்பர் திரு. ரூபன் அவர்களின் புதிய (Blogspot) வலைத்தளத்தில் வெளியிடப்படும்.

பெருவாரியான எண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ் வளர்க்க வாரீர் வாரீர் என்று வரவேற்கிறோம்...! மேற்கொண்டு விளக்கம் தேவையெனில் தயங்காது மேலே குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்... கலந்து கொள்ளும் அன்பர்கள் தங்களின் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரியை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்... வலைப்பதிவர் நண்பர்களே... உங்களின் வலைப்பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டு உதவும்படி கேட்டுக் கொள்கிறோம்... நன்றி
கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

20 comments:

 1. இன்னும் 19 நாட்களுக்குள் அதிகம் பேர் எழுதுவார்கள்... கவலை வேண்டாம் சகோதரா....


  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்
   குமார்(அண்ணா)

   தங்களின் கருத்து எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது..அண்ணா

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   Delete
 2. வணக்கம்
  சகோதரன்

  சரியான காலத்தில் சரியா பதிவு...நினைவூட்டல் பதிவு அருமை வாழ்த்துக்கள் சகோதரன்.
  த.ம 2வது வாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. சகோதரரின் ஊக்கமும் சுறுசுறுப்பும் தான் என்னையும் இயக்குகிறது என்று சொன்னால் மிகையல்ல. தங்களுக்கே நன்றிகள்..

   Delete
 3. கவலை வேண்டாம் சகோதரரே.
  கட்டுரைகள் மலையாய் குவியும்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்
   ஐயா.

   தங்களின் கருத்து எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது..ஐயா.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   Delete
 4. தங்கள் தளத்திலும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. சகோதரரின் ஒத்துழைப்பு இல்லையென்றால் போட்டியேது! தங்களது மேலான ஆலோசனைகள் என்றும் வேண்டும். கருத்துக்கும் வருகைக்கும் அன்பு நன்றிகள் சகோதரரே..

   Delete
 5. தகவலுக்கு நன்றி.
  கலந்து கொள்பவர்களை அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  போட்டி நடத்தும் உங்கள் இருவருக்கும், நடுவர் குழுவுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அம்மா
   தங்களின் ஊக்கமே எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு உற்சாகம். அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் அம்மா..

   Delete

 6. கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
  போட்டி நடத்தும் அன்பு சகோதரருக்கும் , நடுவர் குழுவுக்கும் போட்டி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அன்பு சகோதரியின் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள். தாங்களும் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன், அவசியம் கலந்து கொள்க. நன்றி..

   Delete
 7. Pale pandia! Un muarchi vetri pera valthukkal.

  ReplyDelete
  Replies
  1. அண்ணா! தங்களை இணையத்தில் பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாய் உள்ளது. வாழ்த்துக்கு ரொம்ப நன்றீங்க. விரைவில் தங்களுக்கு வலைப்பூ ஆரம்பித்து விடலாம். சந்திப்போம் சகோதரர். நன்றி..

   Delete
 8. இனிய சத்தார் புது வருட வாழ்த்துகள்
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. சகோதரியின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. தங்களுக்கும் இல்லத்தாருக்கும் நத்தார் தின வாழ்த்துகள். நன்றி சகோதரி..

   Delete
 9. Please correct சத்தார்..as Naththaar
  Vetha.

  ReplyDelete
  Replies
  1. திருத்திப் படித்துக் கொண்டேன். மிக்க நன்றி சகோதரி..

   Delete
 10. நினைவூட்டலுக்கு நன்றி.போட்டியில் கலக்கப் போகிறவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர்
   தங்கள் வருகையும் வாழ்த்தும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும். தங்களுக்கு அன்பான நன்றிகள்..

   Delete