அரும்புகள் மலரட்டும்: எத்தனை எத்தனை முகங்கள் நமக்கு!

Saturday 9 November 2013

எத்தனை எத்தனை முகங்கள் நமக்கு!

                       (பேசாமா நாமளும் இவங்கள போல இருந்திருக்கலாமோ)

காலையில் எழுந்தவுடன் அவசர அவசரமாக தங்கள் அலுவலகங்களுக்கு கிளம்பும் நம்ம முகத்தை யாரும் கவனித்ததுண்டா! கவனித்தவர்கள் நம்மில் மிகக் குறைவு தான். அப்போது நமது முகம் பரபரப்பாக அலுவலகம் நோக்கிய மனத்துடன் பின்னிப்பிணைந்து அதிரடி காட்டுகிறது.

அவசரமாக நகரும் கடிகாரத்தின் முற்களோடு போட்டியிட்டு வெற்றி பெற்றதாய் நினைத்து சரியான நேரத்திற்குள் அலுவலகம் வந்து அமர்ந்து இறுகிய முகத்திற்கு விடை கொடுத்து பெருமூச்சு விடும் போது ஒரு முகம்.


நமக்கு பிடித்தவர்களைக் காணும் போது எவ்வளவு அழகாக முகமும் மனமும் பிரகாசிக்கிறது. அவர்களோடு எவ்வளவு ஒன்றென கலந்து விடுகிறது.

இதுவே பிடிக்காதவர்களாக இருந்தால் தலைகீழ் மாற்றம் தான். நமது மனத்திற்கு பிடிக்காதவர்கள் நம்மைக் கடந்து போகும் போது நமது முகமும் போகிற போக்கைப் பார்க்கணுமே அட அட!கடுகடுவென்ற ஒரு முகத்தை நாம் காட்டிக்கொண்டு கடந்து செல்வோம்.

தங்கள் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளைக் காணும் பிரகாசிக்கிற ஒரு முகம். தொல்லையென்று நினைக்கிற காலத்தின் கடைநிலையில் தம் உயிரை காற்றுக்கும் காலனுக்கும் ஊஞ்சாடக் கொடுத்து விட்ட மூத்தவர்களிடம் காட்டுகிற அக்கினி பிரவேச முகம்.

தம்மைக் காட்டிலும் பதவியிலும் செல்வத்திலும் உயர்ந்தவர்களிடம் வலியச் சென்று பாவனை செய்யும் ஒரு முகம். நல்லவர்களாகவே இருந்தாலும் தம்மை விட பதவியிலும் செல்வத்திலும் குறைந்திருப்பின் நாலே வரிகளில் வார்த்தைகளை முடித்துக் கொண்டு விடை பெறும் ஒரு முகம்.

நமது எதிர்பார்ப்புகள் நனவாகாத பொழுது அந்த ஏமாற்றத்தை, தவிப்பைக் காட்டுகிற முகத்தை பின்பு வெற்றி பெற்ற ஒரு நாளில் ரசித்து புன்முறுவல் பூத்ததுண்டா!

தனது காதலியிடமோ அல்லது காதல் மனைவியிடமோ வலிந்த முகத்தை கற்பனையில் கூட காணாமல் இருப்பது நலம் என்று தோன்றுகிறது. அது நாம் தானா என்று நினைத்து ரொம்ப வெட்கமாகத் தானே போகும்! அந்த ரகசியம் நம்மோடே இருந்து விட்டு போகட்டும்.

இப்படி பலபல முகங்கள் காட்டும் நாம் சில நேரங்களில் சூழ்நிலைக்கேற்ப முகம் மாற்றிக் கொள்ளும் பச்சோந்தி போல் ஆகி விடுவது கவனிக்கப்பட வேண்டியது இல்லையா!

நேர நெருக்கடியில் எதிரே வருவரின் நேசம் மறந்து பாரா முகமாக அலுவலகம் போகும் திட்டமிடாத நெருக்கடி முகம் தவிர்க்கப் பார்ப்போம்.

ஒருவரின் செயல் அல்லது நடவடிக்கை பிடிக்காமல் சட்டென்று மாறுகின்ற மாறுகிற முகத்தை நாமும் மாற்றிக் கொண்டு சகிப்பு முகம் காட்டலாமே!

பிறப்பால் ஒன்று என்பதை மறந்து இருக்கிறவனுக்கும் இல்லாதவனுக்கும் பாரபட்சம் காட்டுகிற முகம் தவிர்ப்போம். ஏனெனில் நீ எட்டு பிடித்த வாழ்க்கை, செல்வம் அவர்களுக்கும் எட்டாத தொலைவு இல்லை.

தொல்லையென்று எண்ணி காட்டும் அக்கினி பிரவேச முகம் நாளை நம் பிள்ளைகளால் நமக்கு நேரிடலாம் என்று உணர்ந்து கருணை முகம் காட்டத் தயங்க வேண்டாம்.

வெற்றியைக் கண்டதும் துள்ளிக் குதிக்கிற, தோல்வியைக் கண்டதும் துவண்டு விடுகிற இரு முகம் நமக்கு இருப்பின் நாம் பலவீனம் ஆனவர்கள் என்று தானே அர்த்தம். சொல்லுங்கள் பலவீனமுள்ளவர்களாகத் தொடர ஆசைபடுகிறீர்களா!

சிந்தித்து தொடருங்கள் நண்பர்களே உங்கள் வாழ்க்கை பயணத்தை. செல்லும் வழி நல்வழியாகட்டும்.
நன்றி.
கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

40 comments:

  1. Ithai eluthum pothu ungal mugam eppadi irunthathu nanba?. Ithai padikumpothu eppadi irukirathu enbathaium kannadi munnadi parunga. Sirapaga irunthathu vaalthukal

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வருக என் அன்பு நண்பரே.
      தங்களை வலைப்பக்கத்தில் காணும் போது எனது முகம் புன்னகை கடலில் மூழ்கி முத்தெடுப்பது தெரிகிறதா நண்பா! அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது அன்பான நன்றிகள். தொடருங்கள் உங்கள் வருகையை. சந்திப்போம்.

      Delete
    2. குறும்புக் கேள்வி ... நல்ல பதில்

      Delete
    3. நண்பர்களுக்குள் இது சாதாரணம் என்று எண்ணி விட்டு போகாமல் ரசித்து கருத்தும் இட்டமைக்கு நன்றி சகோதரரே..

      Delete
  2. நாமும் தசாவதாரம் எடுத்து கொண்டுதான் இருக்கிறோம் என்பதை படம் பிடித்துக் காட்டியதற்கு பாராட்டுக்கள் !
    த.ம 2

    ReplyDelete
    Replies
    1. வருக வணக்கம் சகோதரரே..
      தசாவதாரம்! அதை விடவும் நாம் எடுக்கும் அவதாரங்கள் ஏராளம். வருகை தந்து கருத்திட்டமைக்கு எனது அன்பு நன்றிகள்.

      Delete
  3. மிகவும் அழகான அலசல் கட்டுரை.

    தங்களின் முகத்தினை நான் இதுவரை நேரில் பாராமலேயே அது புன்சிரிப்புடன் மிக அழகாகத்தான் இருக்க வேண்டும் என என் கற்பனையில் நினைத்து மகிழ்ந்தேன்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பு அய்யாவிற்கு வணக்கம்.
      தங்கள் நம்பிக்கை பொய்த்து போகாது என்பது எனது நம்பிக்கை. தங்களின் நல்ல குணமும் பார்க்காமலே தெரிகிறது. வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி அய்யா.

      Delete
  4. ஒரு சில நேரத்தில் இரு முகங்கள் இருப்பதும் நல்லதாகத்தான் தோன்றுகிறது பலவீனமாகத் தெரிந்தாலும்...

    அழகான ஆழமான அலசல்...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே..
      தொடர் வருகை தந்து கருத்துரை தந்து ஊக்கப்படுத்தும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  5. வணக்கம்
    சகோதரன்
    படிக்கும் ஒவ்வொரு வாசகனையும் சிந்திக்க வைக்கும் பதிவு ...படங்கள் ஒவ்வொன்றும் பல வடிவங்கள்... அருமை வாழ்த்துக்கள்
    -------------------------------------------------------------------------------------------
    புதிய பதிவாக என்பக்கம்(உயிரில் பிரிந்த ஓவியமாய்)கவிதையாக
    http://2008rupan.wordpress.com
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே..
      வருக தங்களது வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி. வருகை தந்து கருத்திட்டு இந்த அன்பு சகோதரனை வாழ்த்தியமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  6. பாண்டியன் வரிகளினூடே விரவியிருக்கும் தங்களின் சுய அனுபவங்களையும் உணர முடிகிறது..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.
      ஆம் உண்மை தான். எதையும் குறிப்பிட்டு எழுதவில்லை. எழுதும் பொது எண்ணக் குறிப்புகள் தானாகவேத் தலைக்காட்டி விட்டன. வருகை தந்து கருத்திட்டு உற்சாகமூட்டிய தங்களுக்கு எனது அன்பு நன்றிகள்.

      Delete
  7. பகிர்வு அருமை...தொடருங்கள்..

    வாழ்க்கையில் முகமுடி அணியாத மனிதர்களே இல்லை எனலாம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.
      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்..

      Delete
  8. அருமையான பகிர்வு
    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.
      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்..

      Delete
  9. நீங்கள் சொன்ன பிறகுதான் இத்தனை முகங்கள் நமக்கும் இருந்துள்ளதே என்று எண்ண தோன்றுகிறது. ஆனாலும் இது ஓரளவுக்குத் தேவைதான் என்றும் தோன்றுகிறது. இரவும் பகலும் சேர்ந்தால்தானே ஒரு நாள் முழுமைப் பெறுகிறது. அதுபோலவே மகிழ்ச்சியும் சோகமும் ஆர்வமும் வெறுப்பும் நட்பும் பகையும் என்று உணர்வுகள் மாறி மாறி தோன்றும்போதுதான் வாழ்வில் ஒரு சுவாரஸ்யம் பிறக்கிறது. அழகான பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.
      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்..

      Delete

      Delete
  10. நல்ல பதிவு சகோதரரே! இறுதியில் சொல்லியிருக்கும் அறிவுரை அனைத்தும் அருமை என்றாலும் இது நச்.. "நீ எட்டு பிடித்த வாழ்க்கை, செல்வம் அவர்களுக்கும் எட்டாத தொலைவு இல்லை."
    வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.
      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும் ரசித்து படித்து பகிர்ந்த கருத்துக்கும் அன்பான நன்றிகள்..

      Delete

      Delete
  11. பல்வேறு வகையான முகங்களை அணிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! அருமையாக எழுதி உள்ளீர்கள்! பாராட்டுக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.
      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்..

      Delete

      Delete
  12. மூகமூடிகள் இல்லாத உலகத்தை தினசரி வாழ்க்கையில் எங்கேனும் பார்த்ததுண்டா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.
      எப்படி காண முடியும். சற்று சிந்தித்து பார்க்க நம்மை நாமே அசை போடவே இந்த பதிவு. தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்..

      Delete

      Delete
  13. நல்ல அலசல்.நாம் வெளியில் நடமாடுவதற்கு இத்தனை முகங்கள் தேவைப் படுகிறது.உண்மையான முகங்களுடன் நடமாடினால் பலரின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி இருக்கும். பல கோணங்களில் ஆய்ந்தது நன்று.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே..
      பல முகங்கள் காட்டி பலரின் முகங்களைக் காண வேண்டியே உள்ளது. சற்று சிந்தித்து பார்க்க நம்மை நாமே அசை போடவே இந்த பதிவு. தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள். தமிழ்மணம் ஓட்டுக்கும் எனது நன்றி..

      Delete
  14. வணக்கம் சகோதரா...
    அடுத்தது காட்டும் பளிங்கு போல
    அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது. அது நல்லது தான் அப்பொழுது தான் நாம் புரிந்து கொண்டு சிக்கல்களில் இருந்து விலகி விடலாம். பல சமயங்களில் எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாதவர்களும்
    இருக்கிறார்கள். அதுவும் சில சமயங்களில் அவர்களுக்கு நல்லது. மற்றவர்களுக்கு நல்லதல்ல. எது எப்படி என்றாலும் உலக மேடையில்
    அனைவரும் நன்றாக நடிக்கிறோம் நவரசத்தில்.

    நல்ல பகிர்வு நன்றி ....! வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. சகோதரிக்கு அன்பு வணக்கம்.
      அனைவரும் நடித்துக் கொண்டு தான் இருக்கிறோம். நடிப்பதில் நேர்மையைக் கடைபிடிக்கலாம் என்பது பற்றியும் யோசிக்கலாம் அல்லவா சகோதரி. நம் பல முகங்களை ஒரு நிமிடம் எண்ணிப் பார்க்கவே இந்த பதிவு. தங்கள் கருத்துக்கும் மேலான கருத்துக்கும் எனது அன்பான நன்றிகள்..

      Delete
  15. நமக்கு இருப்பது ஒருமுகம். ஆனால்...
    அடிக்கடி சந்தற்ப சூழ்நிலைகளால் நாம் நவரசங்களை முகத்தில் காட்டுவதுதான் அதிகம்.
    அத்தனையும் மனதிற்குள் போட்டு மறைக்கத் தெரிவதில்லையே...

    அகத்தின் கண்ணாடியல்லவோ முகம்..:)
    ஆக,... அகத்தை எந்த நிலையிலும் பளிச்சென வைத்திருந்தால்
    முகத்திலும் நிலவின் ஒளி தெறிக்கும்..:)

    நல்ல பயனுள்ள ஆய்வுக்கட்டுரை!
    மிக அருமை! வாழ்த்துக்கள் சகோ!

    த ம.5

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வருக சகோதரி.
      உடல்நலம் நன்றாகி விட்டதா! உள்ளத்தில் ஒளி உண்டாயின் முகத்திலும் அது பிரதிபலிக்கத் தான் செய்யும். முடிந்த வரையில் நேர்மையின் முகத்தையே மற்றவர்களுக்கு காட்டுவோம்.ற்று சிந்தித்து பார்க்க நம்மை நாமே அசை போடவே இந்த பதிவு. தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்..

      Delete
  16. அழகான குழந்தையின் படங்களும் சிந்திக்கவைக்கும் வரிகளும் அருமை..!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.
      தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி. தங்கள் ரசிப்புத் தன்மைக்கும், வருகைக்கும், கருத்துக்கும் அன்பான நன்றிகள்..

      Delete
  17. உண்மைதான் முகமே அகத்தினைக் காட்டிவிடும்

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோதரரே வருக.
      தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது. உள்ளத்தில் உள்ளவற்றை ஒருவரது முகம் அழகாக காட்டி விடும். நேர்மை முகங்களே அனைவருக்கும் காட்டி அன்பை வளர்த்திடுவோம். வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றிகள்..

      Delete
  18. “ஒண்ணாம் தேதி
    எண்ணிவாங்கிய நோட்டில்
    எவரெவர் முகமோ தெரிகிறது,
    அவன் முகம் தவிர“ - என்னும் மேத்தாவின் கவிதை படித்த ஞாபகம் வருகிறது.. அழகான கவிதைக்கான கரு. தொகுத்துத் தந்த விதமும் அருமை. நண்பரே, தொடரட்டும் உங்கள் சிந்தனைத் தொடர்.

    ReplyDelete
  19. வணக்கம் அய்யா.
    தங்கள் கருத்துரை கண்டதும் எல்லையில்லா மகிழ்ச்சி என்னுள் எட்டிப்பார்க்கிறது. தங்களின் மூலமே வலைப்பக்கம் என்ன என்பதை அறிந்தேன். நீங்கள் வந்து கருத்திட்டு தொடர வாழ்த்தி சிறப்பித்த விதம் என்னை மிகவும் கவர்கிறது அய்யா. இனி தொடர்வேன் ஒரு உத்வேகத்துடன். வருகை தந்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கு எனது உளமார வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  20. முக மூடி இல்லாத மனிதரை பார்ப்பது அரிது... இருந்தாலும் இது முகமூடி என்று உறுத்தும் அடுத்த நிமிடமே அதை விலக்கி வைக்க முயற்சி செய்வதுண்டு...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.
      சற்று சிந்தித்து பார்க்க நம்மை நாமே அசை போடவே இந்த பதிவு. தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்..

      Delete