Friday, 8 November 2013

அன்றாட செயல்களில் வன்முறை தவிர்ப்போம்


நண்பர்களுக்கு வணக்கம்.

வன்முறை (Violence) என்பதை உலக சுகாதார அமைப்பு கீழ்வருமாறு வரையறை செய்துள்ளது: ஒரு நபர், குழு அல்லது சமூகத்திற்கெதிராக காயம்,மரணம், உளவியல் தீங்கு, வளர்ச்சியின்மை அல்லது இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்படியாக அல்லது இவை நிகழ அதிகம் வாய்ப்புகளை உருவாக்கும்படியாக, உண்மையாகவோ அல்லது அச்சுறுத்தும்படியாகவோஉடல் வலிமை, அதிகாரத்தை வேண்டுமென்றே பயன்படுத்துவது வன்முறையாகும்

வன்முறை என்றவுடன் ஆயுதம் ஏந்தி அச்சுறுத்தும் செயல்களைப் பற்றி நான் கூற வரவில்லை. இந்த வன்முறை எண்ணம் உதயமாகும் சில நடவடிக்கைகளைத் தவிர்க்கலாம் என்றே உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். வாருங்கள்.


இன்று எல்லா இடங்களிலுன் வன்முறை அதிகரித்து விட்டது என்று நாம் வருத்தப்படுகிறோம். செய்தித்தாள்களைத் திறந்தால் அவை முழுவதும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களே நிரம்ப உள்ளன.

சமுதாயத்தைப் பற்றி சிந்திக்கும் போது நாமும் அந்த சமுதாயத்தில் அடக்கம் என்பதை மறந்து நாம் ஒரு தனித்தீவாக ஒதுங்கி கொள்கிறோம். வன்முறை என்பது தனியாக நிகழ்வது கிடையாது. நாம் அனைவருமே வன்மத்தை மனதில் தேக்கி வைக்கிறோம்.

உலகத்திலேயே வன்மம் மிகவும் மோசமானது என கூறுவதற்கு காரணம் அது நம் மூலமாகத் தான் வெளிப்பட வேண்டுமென்பதில்லை. நாம் தேக்கி வைத்த வன்மங்கள் இன்னொருவரும் மூலம் இந்த சமுதாயத்தில் வெளிப்பட முடியும். எனவே நாம் ஒவ்வொருவரும் நமது மனதில் ஆழத்தில் கிடக்கும் வன்மத்தை விளைவிக்கும் எண்ணங்களை அடியோடு வேரறுப்போம்.

உயிறற்ற பொருட்களின் மீது கூட நாம் வன்மத்தோடு நடந்து கொள்ளக் கூடாது என்று திரு.வெ.இறையன்பு அவர்கள் கூறுவார்.

சுவரின் மீது எச்சில் துப்புவது கூட ஒரு வன்மம் தான்.

நாற்காலியை வேகமாகத் தூக்கி வீசி அதற்கு வலிக்கும் படி இழுப்பது கூட ஒரு வன்மம் தான்.

புத்தகத்தின் பக்கங்களை மடக்குவது கூட அதைக் கிள்ளுவதற்கு சமமாகும்.
செருப்பை வேகமாகக் கழற்றி எறிவது கூட அதை உதாசினப்படுத்துவதன் பொருள் தான். ஒரு செடியைத் தேவை இல்லாமல் பிடுங்கும் போதும், இலையைத் தேவை இல்லாமல் பறிக்கிற போதும், ஒரு நாயைக் கல்லால் அடிக்கிற போதும் நம் வன்முறையாளராக மாறி விடுகிறோம்.

தூக்கத்தில் இருக்கும் பெரியவர்களைத் தேவை இல்லாமல் எழுப்புவது கூட ஒருவித வன்முறை தான் ஏனெனில் எல்லாக்குழந்தைகளுமே உறங்குகையில் அழகு! எல்லா பெரியவர்களுமே உறங்குகையில் குழந்தைகள்!!

பெற்றோர்களும் ஒரு தவறு செய்கிறோம். தரையில் தவறி விழுந்த குழந்தையை சமாதானப்படுத்த தரையை அடிக்கச் சொல்லிக் கொடுப்பது தான் முதல் வன்முறையின் தொடக்கம்!
முட்டிக்காலில் ரத்தம் வராமல் எந்த குழந்தை வளர முடியும். குழந்தை கீழ விழுந்தால் அது தரை விழுந்தால் வலிக்கும் என்றே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நீயா நானா திரு. கோபிநாத் அவர்கள் சொல்வார்.

இப்படிச் சின்னச்சின்ன செயல்களின் மூலமாகக் கூட வன்மம் ஊற்றெடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த வன்மம் ஒரு நாள் பெருகுகிற பொது அந்த வெள்ளத்தில் நாம் அடித்துச் செல்லப்படுவோம் என்பதைக் கவனத்தில் கொண்டு சிறுசிறு செயல்களில் தலைத்தூக்கும் வன்முறை களைவோம்.

அன்பு என்பதையே அனைவருக்கும் தந்து அதை விதைப்போம் நிச்சயம் ஒரு நாள் நாம் அதையே அறுவடை செய்வோம் எனும் நம்பிக்கை எனக்குண்டு. உங்களுக்கு! நன்றி.
கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

40 comments:

 1. நம் சிறு சிறு செயல்களிலும் வன்மை காட்டாமல்
  சாத்வீகமாக இருக்கப் பழக வேண்டும் என்ற கருத்தை
  வலியுறுத்தும் அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒரு நல்ல பதிவு.

  ReplyDelete
  Replies
  1. சகோதரியின் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி. கருத்துக்கும் வருகைக்கும் அன்பான நன்றி.

   Delete
 2. அன்பு என்பதை விதைப்போம். அன்பு என்பதையே அறுவடை செய்வோம்!..

  நல்லதோர் பதிவு!..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அய்யா. கண்டிப்பாக நமது அன்றாட நடவடிக்கைகளில் வன்மம் தலைத்தூக்காமல் பார்த்துக் கொள்வோம். வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி அய்யா.

   Delete
 3. சின்ன சின்ன செயலில் கூட வன்மம் தொடங்குகிறது என்பதை சிந்திக்கும் வைக்கும் படி தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.. நன்று சகோ!

  ReplyDelete
  Replies
  1. அன்பு சகோதரியின் வருகையும் கருத்தும் என்றும் எனக்கு உற்சாகமளிக்கும். வருகை தந்து கருத்திட்டு ஊக்கப்படுத்திய தங்களுக்கு எனது அன்பான நன்றிகள்..

   Delete
 4. இன்றைய சூழலில் மிக
  அவசியமானதை
  ஆழமாகச் சிந்தித்து
  எளிமையாகச் சொல்லிப்போன விதம் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அய்யாவிற்கு வணக்கம்.
   வருகை தந்து நல்லதொரு கருத்தினை பகிர்ந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கு அன்பான நன்றி.

   Delete
 5. வன்முறை எந்ததெந்த விதங்களில் வெளிப்படுகிறது என்பதை தெளிவாக சொன்னீர்கள் சகோ.

  ReplyDelete
  Replies
  1. சகோதரிக்கு வணக்கம்.
   நலம் தானே! வருகை தந்து படித்து கருத்தும் தந்தமைக்கு எனது அன்பான நன்றிகள்.

   Delete
 6. வன்முறையை பிள்ளைகளுக்கு எப்படி கத்துக்கொடுக்கிறோம் என்பதிலிருந்து எதெல்லாம் வன்முறைன்னு அழகா சொன்னீங்க. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. சகோதரிக்கு எனது வணக்கம்.
   வருகை தந்து படித்து கருத்தும் தந்தமைக்கு எனது அன்பான நன்றிகள்.

   Delete
 7. அருமை பாண்டியன்! வன்முறையை அறியாமலேயே குழந்தைகளுக்குக் கற்று கொடுத்துவிடுகிறோம். நல்ல பதிவு! அன்பை விதைப்போம்...நன்றி சகோதரரே! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி.
   தொடர்வருகை தந்து படித்து கருத்துரை வழங்குவது உண்மையில் உற்சாகம் அளிக்கிறது. தொடர்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 8. மிகவும் அழகான விஷயங்களை எளிமையாகச் சொல்லும் அற்புதமான பதிவு. சின்னச்சின்ன உதாரணங்களும் ரஸிக்க வைத்தன.

  பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. அய்யாவிற்கு அன்பு வணக்கம்.
   தொடர்ந்து வருகை தந்து தன்னம்பிக்கை ஊட்டும் கருத்து தரும் தங்களுக்கு அன்பான நன்றிகள்.

   Delete
 9. அத்தனையும் உண்மை! வன்மம் தவிர்ப்போம்! நல்ல விதை விதைப்போம்! அருமையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருக வணக்கம் சகோதரரே.
   தங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி. வன்மம் மனதில் தொற்றாமல் பார்த்துக் கொள்வோம். வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றிகள்.

   Delete
 10. அன்பை விதைத்தால், அன்பை அறுவடை செய்யலாம் என்பதை அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அய்யாவிற்கு வணக்கம்.
   தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றிகள். கொண்ட நட்பில் இணைந்திருப்போம்.

   Delete
 11. குழந்தையிட்ம் அன்பை விதைப்போம்.வன்முறை எதற்கும் தீர்வல்ல

  ReplyDelete
  Replies
  1. சகோதரிக்கு வணக்கம்.
   அன்பை விதைத்து அன்பையே அறுவடை செய்வோம்.வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்

   Delete
 12. ''...அன்பு என்பதையே அனைவருக்கும் தந்து அதை விதைப்போம் ...'''
  Eniya vaalththu.
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
  Replies
  1. சகோதரிக்கு வணக்கம்.
   அன்பை விதைத்து அன்பையே அறுவடை செய்வோம்.வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்

   Delete
 13. ம்...ம்..ம் இப்படி யெல்லாம் சிந்திக்கவும் சிலர் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது. அதில் சகோதரனும் ஒருவர் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி தான். நீங்கள் சொன்னவை அத்தனையும் சத்தியமான வார்த்தைகள். அழகாக அத்தனையும் எடுத்து வைத்திருகிறீர்கள். கோபத்தை கண்ட பொருட்களில் காட்டுவதையும், வலிமையையும் அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்வதையும் முதலில் நிறுத்திடவேண்டும். என்றும்,
  குழந்தைகளிலேயே நற் சிந்தனைகளை வளர்க்க உதவுவோம் என்பதும் அருமையே.
  பகிர்வுக்குநன்றி....! வாழ்க வளமுடன்.....!

  ReplyDelete
  Replies
  1. அன்பு சகோதரிக்கு,
   வணக்கம் வருகை கண்டதும் மற்றற்ற மகிழ்ச்சி. தங்களின் கருத்துரை என்னை நிச்சயமாக ஊக்குவிக்கிறது. அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும், வாழ்த்துக்கும் எனது அன்பான நன்றிகள்..

   Delete
 14. இந்த கலியுகத்தில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி மின்னஞ்சல் வழியாக சக ஊழியரை காரணமில்லாமல் சாடுவதும் வன்மம்தான். பல உயர் அதிகாரிகளிடத்திலும் இந்த போக்கை காணமுடிகிறது. இத்தகைய வன்மம் வாய் வார்த்தையை விடவும் கொடுமையானது. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் சகோதரரே. எவருவர் வார்த்தைகள் அல்லது செய்கை மற்றவர்களைப் பாதிக்கிறதோ அவர் வன்முறையாளரே. அன்பான வருகைக்கும் அழகானக் கருத்துக்கும் எனது அன்பு நன்றிகள்..

   Delete
 15. எதையும் ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்துவிட்டிட்டால் பிரச்சனை இல்லைதான்.. நல்ல பதிவு.. ஆமா நீங்க வக்கீலா ...:-)))))))))) ஒண்ணுமில்ல சும்மா ஒரு டவுட்டு.. பார்த்து கொஞ்சம் சூதானமா நடந்துகனுமே அதான் கேட்டேன் :-)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் நண்பரே.
   வருக. தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி. நான் அரசு பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிகிறேன். தங்கள் கருத்துரையே எனது கருத்தும். வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள். தொடருவோம். நன்றி நண்பரே..

   Delete
 16. அற்புதமான சிந்தனை. ஆழ்ந்த கருத்துக்கள். முற்றிலும் உடன்படுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ.
   தங்கள் வருகை மகிழ்வளிக்கிறது. நமது கருத்துக்கள் ஒத்திருப்பது மகிழ்ச்சி. இணைந்த நட்பில் தொடர்ந்திருப்போம். வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றிகள்..

   Delete
 17. வன்முறை ஏற்படவில்லை,ஏற்படுத்தப்படுகிறது,எங்கும் எல்லாவிஷயத்திலுமாய்.சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக சகோதரரே. வன்முறைகள் ஏற்படுத்தும் சூழல்களில் நாம் எப்படி விலகிக் கொள்வது என்பது தானே வாழ்க்கை படிப்பினை. அழகான கருத்துக்கும் அன்பான வருகைக்கும் எனது நன்றிகள்..

   Delete
 18. அனைவரும் படிக்க வேண்டிய நல்லதொரு பகிர்வு...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.
   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது அன்பான நன்றிகள்.

   Delete
 19. மிக அருமையான தேவையான பதிவு.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.
   தங்களின் அன்பான முதல் வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது அன்பான நன்றிகள். இணைந்த நட்பில் தொடர்ந்திருப்போம்.

   Delete