அரும்புகள் மலரட்டும்: விழித்தெழு மனிதா!

Friday 15 November 2013

விழித்தெழு மனிதா!


எட்டி உதைத்தற்கு விருட்டென்று
கிளம்புகிறது இருசக்கர வாகனம்
தன்னையறியாது சீண்டி விட்டதற்கு
சீற்றம் காட்டுகிறது அரவம்

சின்னதாய் தொட்டதற்கே பச்சைத்
தேகத்தை சுறுக்குகிறது தொட்டாற்சிணுங்கி
மட்டையால் அடி வாங்கியதற்கு
எல்லைதாண்டி ஓடுகிறது பந்து

சூடு போதுமென ஆர்பரித்து
விசிலடித்து அழைக்கிறது குக்கர்
காசுக்காக காடுகளை அழித்ததனால்
பொழிய மறுக்கிறது மேகம்


இப்படி அஃறிணையும் இயற்கையும்
தன்மான உணர்வோடு இருக்கையில்
மனிதா நீ மட்டும்
தரம் கெட்டு போனதென்ன!

காலை துயிலெழ கடிகாரஒலி
காதில் எச்சரிக்கை செய்தும்
செவிமடியா சொரனை மறந்த
பஞ்சணை துயில் மயக்கமேன்!

சோம்பல் முறியா தன்மானமில்லா
வாழ்க்கை போதுமென வீறுகொண்டு
துயிலெழும்பு காத்திருக்கிறது புதுஉலகம்
பச்சைக்கம்பளம் விரித்து வரவேற்க!



கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

43 comments:

  1. சோம்பலை அடித்து விரட்ட ஆயுதமாய் புறப்பட்ட கவி வரிகள்...! தூங்க போறதுக்கு முன்னாடி அலாரம் வைக்க வேணாம்... இந்த கவிதையை ஒரு தரம் வாசித்து விட்டு தூங்கலாம். தூக்கம்- ஒய்வுக்காகத்தான் மட்டும் இருக்க வேண்டும்... சோம்பலுக்காக கூடாது. வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.
      சிந்தையில் தோன்றியதை அப்படியே பதிந்து விட்டேன். கவிக்கான அலங்காரங்கள் இல்லை இக்கவிதையில். இனி தான் அப்படி எழுத முயற்சி செய்ய வேண்டும். அன்பான வருகைக்கு நல்லதொரு கருத்திட்டு ஊக்கப்படுத்தி வாழ்த்தியமைக்கு நன்றீங்க சகோதரி..

      Delete
  2. இன்று தூங்கி எழுந்ததும் இதைத்தான் முதலில் படித்தேன். அருமையான உதாரணங்களுடன் சிறப்பாக எழுதியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா.
      தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

      Delete
  3. //காத்திருக்கிறது புதுஉலகம் பச்சைக்கம்பளம் விரித்து வரவேற்க!//

    ஆஹா, மனதை வருடிச்செல்லும் அற்புதமான காட்சிகள். ;)))))

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ரசிப்புத்தன்மை அழகு தொடர எனது. வேண்டுகோள். மிக்க நன்றி அய்யா..

      Delete
  4. சோர்வை விரட்டியே தேடும் விடியலால்
    போரிலா வாழ்வும் புலர்ந்து!

    மிக அற்புதமான எழுச்சிக் கவிவரிகள்!
    சிறந்த கற்பனை! அருமை!

    வாழ்த்துக்கள் சகோ!

    த ம.3

    ReplyDelete
    Replies
    1. சகோதரிக்கு வணக்கம்,
      தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி. தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

      Delete
  5. மிகவும் அருமையான கருத்துக்கள்.... பாராட்டுக்கள்.... கணினி கோளாறு காரணமாக இணையம் வர முடியவில்லை... (நண்பரின் கணினி உதவியால் இந்தக் கருத்துரை)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே..
      நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் வருகை கண்டதும் அளவற்ற மகிழ்ச்சி மனதில். தங்கள் கணினி கோளாறு பற்றி ரூபன் அவர்கள் மூலம் அறிந்தேன். விரைவில் சரிசெய்து வாங்கி விடுங்கள். தங்கள் கருத்துரை பதிவுலகிற்கு தேவை. தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

      Delete
    2. அடடா நானும் யோசிச்சேன்ன்.. தனபாலன் அவர்களை எங்கேயும் காண முடியவில்லையே.. என்னாச்சோ என.

      Delete
    3. வலைச்சித்தரின் கணினி வைத்தியத்திற்கு சென்றதன் விளைவு தான் சகோதரி. இனி அவரது விரைவைக் காணலாம்.

      Delete
  6. சரியான சவுக்கடி சகோ தங்கள் வரிகள். நறுக்கென இருந்திருக்கும் படிப்பவர்களுக்கு சிறப்பு சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. சகோதரிக்கு அன்பு வணக்கங்கள்,
      தங்கள் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  7. தமிழ் மண ஓட்டும் இட்டுவிட்டேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி.. தங்களைத் தொடர்ந்து அனைவரும் வாக்களிக்கட்டும்..

      Delete
  8. வணக்கம்
    சகோதரன்
    தங்களின் கவிதை பல மனிதர்களை திருத்தும் என்பதில் ஐயமில்லை......கவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள் சகோதரன்..
    தமிழ்மணத்தில் வாக்கு போட்டாச்சி...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ருபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அன்பு சகோதரரே,
      எண்ணத்தில் தோன்றியதைக் கவியாய் தந்தேன். கவிதை யாரையாவது திருத்தும் என்றால் முதலில் நான் முன்வரிசையில் இருப்பேன். தங்கள் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும், தமிழ்மணம் வாக்குக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  9. பாரதியின் கவிதை படித்த உத்வேகம் பிற்க்கிறது! வாழ்த்துகள் .

    ReplyDelete
    Replies
    1. சகோதரருக்கு வணக்கம்,
      தங்கள் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  10. தினம் காணும் சின்னச் சின்ன விசயங்களில்
    அற்புதமான விசயங்களைக் கண்டு
    அருமையான கவிதையாக்கித் தந்தது
    மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வருக அய்யா,
      தங்கள் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  11. அருமையான கவிதை நண்பரே...
    சோம்பலை விரட்ட நீங்க சொல்லி வந்த விதம் அருமை...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே..
      தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி. தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

      Delete
  12. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. சகோதரிக்கு வணக்கங்கள்,
      தங்கள் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  13. இனிமேல் அலாரத்தைப் பார்க்கும்போதெல்லாம் இக்கவிதைதான் நினைவுக்கு வரப்போகிறது:).. அழகாக சிந்தித்து எழுதியிருக்கிறீங்க...

    ஆனாலும் அலாரம் இல்லையெனில்... இரவிரவா நித்திரையே வராதே:).. அலாரம் அடிக்கும் எனும் நம்பிக்கையில்தான, நிம்மதியாக நித்திரையே கொள்கிறோம்ம் ஹா..ஹா..ஹா..:)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.தங்கள் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  14. தங்களின் ஆதங்கம் உண்மைதான்.கவிதை நன்று .இதுபோல் மீண்டும் மீண்டும் எழுத வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே..
      தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி. தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

      Delete
  15. அருமையான கவிதை நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே..
      தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி. தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

      Delete
  16. இப்படி அஃறிணையும் இயற்கையும்
    தன்மான உணர்வோடு இருக்கையில்
    மனிதா நீ மட்டும்
    தரம் கெட்டு போனதென்ன!

    சரியான கேள்வி தான் நறுக்குன்னு.
    அடேங்கப்பா...! சிரிப்பாகவும் இருக்கிறது பிரமிப்பாகவும் இருக்கிறது.
    மடை திறந்த வெள்ளம் போல் பாய்ந்து கொண்டு வருகிறது. கவிதையும் அப்படி வருகிறது கட்டுரையும் அப்படி வருகிறது. வேறு என்னென்ன மாயம் தெரியும் சொலுங்கள்.

    அருமை அருமை வாழ்த்துக்கள்.....!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி,
      வருக. என் எண்ணத்தில் தோன்றியதை எழுத்தாகத் தந்தேன் தயங்கியபடி. தங்கள் கருத்துரை தன்னம்பிக்கை தருகிறது. நன்றி சகோதரி. தங்கள் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  17. வீறுகொண்டு
    துயிலெழும்பு காத்திருக்கிறது புதுஉலகம்
    பச்சைக்கம்பளம் விரித்து வரவேற்க!

    தன்னம்பிக்கை தரும் தளரா வரிகள் அருமை..! பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.தங்கள் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  18. தங்களின் திருப்பள்ளி எழுச்சி வரிகளை ரசித்தேன் !
    த.ம +1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே..
      தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி. தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

      Delete
  19. அருமை அருமை

    முதல்மூன்று கவிதைகளும் நிஜத்தை காட்டும் அசத்தல்
    இறுதியில் நல்லா சொன்னீங்க சோம்பலுக்கு மருந்து

    அத்தனையும் ரசித்தேன்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சகோதரரின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

      Delete
  20. ''..இப்படி அஃறிணையும் இயற்கையும்
    தன்மான உணர்வோடு இருக்கையில்
    மனிதா நீ மட்டும்
    தரம் கெட்டு போனதென்ன!..''
    good question.
    Eniya vaalththu.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. கேள்விக்கு முதலில் உரியவன் நான் தான் சகோதரி. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

      Delete