Monday, 11 November 2013

மரணம் என்பது ஒருமுறை தானா!


வாழ்க்கையில் நிச்சயக்கப்பட்ட இரு தருணங்கள் ஒன்று பிறப்பு. மற்றொன்று இறப்பு. எப்பொழுது பிறப்பு என்று நிகழ்கிறதோ அப்பொழுதே இறப்பு என்ற ஒன்று நிகழப் போவது உறுதியாகிறது.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நமக்கு எவ்வளவு மரண போராட்டங்கள். எனது உயிர் எனது கடமைகளைச் செய்து முடிப்பதற்குள் போய்விடுமோ! ஏதோ ஒரு விதத்தில் காலன் நமது உயிரைப் பறித்து விடுவானோ! என்ற பயம் நமக்குள் வருவது இயல்பு தான்.


எனக்கொரு கேள்வி நாம் வாழ்க்கையில் ஒருமுறை தான் மரணத்தை தழுவுகிறோமா என்பதே!

ஒருவர் ஒரேடியாகவா மரணம் அடைகிறார்?

நாம் ஒரேயடியாக மரணம் அடைவதில்லை ஒவ்வொரு நாளும் மரணம் அடைகிறோம் என்று ரோசி ஃபிலிப் என்பவர் கூறுகிறார்.

நம் காதலை ஒருவர் புறக்கணிக்கும் போது நாம் கொஞ்சம் செத்து போவதில்லையா!

நம்மை ஒருவர் அலட்சியப்படுத்தும் போது நாம் சிறிது சிதைந்து விடுவதில்லையா!

நமக்கு நெருக்கமானவர் ஒருவர் இறக்கும் போது நமக்குள் ஒரு பகுதி அவரோடு இறந்து போவதில்லையா!

ஓர் இடத்தைவிட்டுப் பிரிகிற போதும், நட்பைவிட்டு நகருகிற போதும், நெருங்கியவர்கள் தளர்கிற போதும் ஏற்படும் இழப்பு என்னும் வெற்றிடம் ”இறப்பு” எனும் வகையைச் சார்ந்தது என்று திரு. இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் கூறுகிறார்.

ஒவ்வொரு பருவம் முடிகிற போதும் நாம் மரணம் அடைகிறோம் என்பதை நம் இலக்கியமான குண்டலகேசி அழகாக இயம்புகிறது
பாளையாம் பருவம் செத்தும்
பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் பருவம் செத்தும்
காமுறும் இளமை செத்தும்
மீளுமிவ் வயதும் இன்னே
மேல்வரு மூப்புமாகி
நாளும் நாம் சாகின்றோமால்
நமக்கு நாம் அழாததென்னே

நிலைமை இப்படியிருக்க வாழ்க்கையிம் எதார்த்தத்தை உணராது அளவுக்கு அதிகமாக செல்வம் சேர்ப்பதிலேயே வாழ்க்கையின் பாதி காலத்தைத் தொலைத்து விடுகிறோம். மீதி பாதியை சேர்த்த செல்வத்தை எப்படி பாதுகாப்பது என்பதிலேயே போய்விடுகிறது.

தனது பிஞ்சு குழந்தைகளின் மழலைப் பேச்சு கேட்காமல், தனது மனைவியிடம் அன்பு பகிராமல், சேர்த்த செல்வத்தை வறுமையில் வாடும் சமுதாயத்திற்கு பகிராமல், போட்டி, பொறாமையோடு வாழ்க்கையை வியாபாரமாய் ஆக்கி விட்டு கடைசியில் எந்த சுகமும் அனுபவிக்காமல் இறந்து போவதில் என்ன பயன்! அதற்கு பிறந்த உடனையே இறந்திருக்கலாமே!

எனவே ஒவ்வொரு நாளும் இறக்கும் நாம், பேராசை தவிர்த்து இருப்பதை வைத்து நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ கற்றுக் கொண்டு ஒவ்வொரு நிமிடமும் ரசித்து நம்மோடே இருக்கும், வாழ்க்கையிம் இலக்கு நோக்கி பயணித்தாலும் பாதையெல்லாம் பரவி கிடக்கும் மகிழ்ச்சியை உணர்ந்து நமது குடும்பத்திற்கும் சுற்றத்தார்க்கும் பயனுள்ள வகையில் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவோம்.

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

46 comments:

 1. //ஓர் இடத்தைவிட்டுப் பிரிகிற போதும், நட்பைவிட்டு நகருகிற போதும், நெருங்கியவர்கள் தளர்கிற போதும் ஏற்படும் இழப்பு என்னும் வெற்றிடம் ”இறப்பு” எனும் வகையைச் சார்ந்தது என்று திரு. இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் கூறுகிறார்.//

  இது மிகவும் உண்மையானதோர் அனுபவம் தான்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. அய்யாவிற்கு வணக்கம்.
   நிச்சயம் உண்மையான அனுபவம் தான். அழகான கருத்தும் அன்பான வருகைக்கும் நன்றி அய்யா..

   Delete
 2. நல்லதொரு சிந்தனை!..

  பாதையெல்லாம் பரவி கிடக்கும் மகிழ்ச்சியை உணர வேண்டும். அப்படி உணர்ந்து விட்டால் - மனிதம் புனிதமாகி விடும்.. மரணம் விலகி விடும்!.

  அருமையான பதிவு.. வாழ்க.. வளர்க!..

  ReplyDelete
  Replies
  1. அய்யாவிற்கு வணக்கம்.
   வருகை தந்து அழகான கருத்தும் அன்பான வாழ்த்தும் தெரிவித்து ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி..

   Delete
 3. //தனது பிஞ்சு குழந்தைகளின் மழலைப் பேச்சு கேட்காமல், தனது மனைவியிடம் அன்பு பகிராமல், சேர்த்த செல்வத்தை வறுமையில் வாடும் சமுதாயத்திற்கு பகிராமல், போட்டி, பொறாமையோடு வாழ்க்கையை வியாபாரமாய் ஆக்கி விட்டு கடைசியில் எந்த சுகமும் அனுபவிக்காமல் இறந்து போவதில் என்ன பயன்! //

  இறப்பவருக்கு இதில் ஒரு பயனும் இல்லை தான். அழகாகத் தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. மற்றவர்களுக்கு பயனில்லாமல் ஒரு வாழ்க்கை வாழ்ந்து இறுதியில் மடிந்து போவதில் என்ன ஒரு அடையாளம் இருக்க போகிறது அய்யா. பயனுள்ள வாழ்க்கை தான் நம்மை அடையாளம் படுத்தும். அழகான கருத்துக்கு நன்றி அய்யா..

   Delete
 4. குண்டலகேசி பாடல் அருமை.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ரசித்தமைக்கு நன்றி அய்யா.

   Delete
 5. Replies
  1. சகோதரரின் வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்..

   Delete
 6. //பாதையெல்லாம் பரவி கிடக்கும் மகிழ்ச்சியை உணர்ந்து நமது குடும்பத்திற்கும் சுற்றத்தார்க்கும் பயனுள்ள வகையில் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவோம்.//

  மகிழ்ச்சியான அறிவுரைகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

   Delete
 7. ” இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை, இறந்தவன் அல்லவோ திறக்கின்றான் “ என்றார் கண்ணதாசன் (படம் நீர்க்குமிழி ) மரணம் பற்றிய தங்கள் கட்டுரையும் அவ்வாறே இருப்போர் மனதைப் பக்குவப் படுத்தும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அய்யா.
   தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி. அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

   Delete
 8. விநாடிக்கு விநாடி நாம் இறந்துகொண்டு தானிருக்கின்றோம். இறந்து பிறக்கின்றோம்.
  சென்ற விநாடியில், நிமிடத்தில், நாளில் செய்யாமல் இழந்தவை இழந்தவையே... புதுப்பித்துக் கொள்ளலாம்.. ஆனால் அது சில நேரம் காலங்கடந்ததாய் இருந்துவிடும்...

  காலத்தே பயிர் செய் என்பது இதைத்தானென நினைக்கின்றேன்.

  நல்ல ஆழ்மனச் சிந்தனைக் கட்டுரை! அவசியமான பதிவு!

  அருமை! வாழ்த்துக்கள் சகோ!

  த ம.3

  * சுக நல விசாரிப்புக்கு உளமார்ந்த நன்றி சகோ!..
  தேறிவருகிறேன்...:)

  ReplyDelete
  Replies
  1. அன்பு சகோதரிக்கு வணக்கம்.
   தங்கள் வருகை கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி. உடல் நலம் பெற என் இறை வேண்டலும் என்றும் உண்டு. அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

   Delete
 9. அருமையான பகிர்வு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

   Delete
 10. அருமையான கருத்துப்பகிர்வு சகோ!

  ReplyDelete
  Replies
  1. அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

   Delete
 11. ஆழமான கருத்துடன் கூடிய
  அற்புதமான பதிவு
  சொல்லிச் சென்ற விதம் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அய்யா. தங்களின் அன்பான கருத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கும் எனது அன்பு நன்றிகள்

   Delete
 12. எந்த சுகமும் அனுபவிக்காமல் இறந்து போவதில் என்ன பயன்! அதற்கு பிறந்த உடனையே இறந்திருக்கலாமே! /// உண்மைதான் நல்ல கேள்வி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே வருக.
   அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

   Delete
 13. வணக்கம்
  சகோதரன்

  உர்ணவு மிக்க கருத்துக்கள் சொல்லிச்சென்ற விதம் அருமை குண்டலகேசி பாடல் பதிவுக்கு மிகவுஒரு சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரன்....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அன்பு சகோதரருக்கு வணக்கம்.
   தங்கள் வருகை கண்டதும் அளவற்ற மகிழ்ச்சி மனதில் குடி கொள்வது நமது அன்பின் சிறப்பு. அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.. குண்டலகேசி பாடலை ரசித்தமைக்கும் நன்றி..

   Delete
 14. சகோதரா ....!

  வாயடைத்து விட்டது எனக்கு. என்ன சிந்தனை எவ்வளவு ஒரு பக்குவம், போகும் காலம் வந்த பின்னும் போராட்டம் ஓயாது புழுங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களில் நீர் மாணிக்கம் தான் என்று சொல்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
  இதனால் தான்......
  எதுவும் கடந்து போகும் எண்ணம் கிடந்து வாட்டும்
  எதையும் தாங்கும் இதயம் எளிதில் மறந்து போகும் என்று எழுதினேன். தினம் தினம் சாகாதிருக்க.

  மரணம் வருமுன் மறக்காமல்
  மகிழ்ந்திடு என்றும் முறைக்காமல்,. என்றுஎழுதியது அன்பையே நோக்கி நகரட்டும் என்று.

  மனம் கவரும் முறையில் அழகாக வரிசைப் படுத்தியிருகிறீர்கள். எடுத்து வைத்த கருத்தும் சரி எழுத்து வடிவும் சரி சூப்பர்.

  பகிர்வுக்கு நன்றி...! தொடரவாழ்த்துக்கள்....!

  ReplyDelete
  Replies
  1. வாங்க வணக்கம் சகோதரி.
   முதலில் உங்கள் மனம் திறந்த கருத்துக்கும் வாழ்த்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். தன் சொந்த சகோதரனை போல் என்னை பாவித்து தன்னம்பிக்கை தரும் கருத்துக்களைத் தந்து ஊக்கப்படுத்தும் தங்கள் மனம் கண்டு வியப்பும் தங்கள் மேல் அன்பும் கூடுகிறது. அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி..

   Delete
 15. நாளும் நாம் சாகின்றோமால்
  நமக்கு நாம் அழாததென்னே..//
  அதானே.....ஆனால் அதே சமயம் நமக்கு நெருங்கியவர்கள் இனிமேல் இல்லை என்று ஆகும்போது வருத்தம் வருவது இயற்கைதானே. என்னுடைய மரணத்திற்கு நானே அழப்போவதில்லை என்பதும் உண்மை. ஆகவே இது மற்ற மரணங்களிலிருந்து வேறுபடுகிறது.

  அருமையான சிந்தனை, அழகான நடை..... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே../
   தொடர்வருகை தந்து தன்னம்பிக்கை ஊட்டும் கருத்துக்களைத் தரும் தங்களைப் போன்றவர்களால் தான் எனக்குள் தன்னம்பிக்கை துளிர் விடுகிறது.
   அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

   Delete
 16. தனது பிஞ்சு குழந்தைகளின் மழலைப் பேச்சு கேட்காமல், தனது மனைவியிடம் அன்பு பகிராமல், சேர்த்த செல்வத்தை வறுமையில் வாடும் சமுதாயத்திற்கு பகிராமல், போட்டி, பொறாமையோடு வாழ்க்கையை வியாபாரமாய் ஆக்கி விட்டு கடைசியில் எந்த சுகமும் அனுபவிக்காமல் இறந்து போவதில் என்ன பயன்! அதற்கு பிறந்த உடனையே இறந்திருக்கலாமே!
  // நல்ல கேள்விகள்! சிந்தனை சிறப்பு! சிறப்பான ஆக்கம்! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. சகோதரருக்கு வணக்கம்.
   அன்பின்ம் மிகுதியால் வருகை தந்து ரசித்து அழகான கருத்தினை கருத்துரையாக வழங்கியமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..

   Delete
 17. இருப்பதை வைத்து நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ கற்றுக் கொண்டு ஒவ்வொரு நிமிடமும் ரசித்து நம்மோடே இருக்கும், வாழ்க்கையிம் இலக்கு நோக்கி பயணித்தாலும் பாதையெல்லாம் பரவி கிடக்கும் மகிழ்ச்சியை உணர்ந்து நமது குடும்பத்திற்கும் சுற்றத்தார்க்கும் பயனுள்ள வகையில் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவோம்.

  vவீரனுக்கு ஒருமுறைதான் சாவு
  கோழைக்கு பல் முறை சாவு என்பார்கள்..

  சிந்திக்கவைக்கும் சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி.
   முற்றிலும் உண்மை தான் அம்மா. அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

   Delete
 18. அனுபவிக்காமல் வாழ்வை அவமாக செலுத்துவோருக்கு.நல்ல புத்திமதி.
  மிக அழகாக எழுதப் பட்டுள்ளது.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி.
   தங்கள் வரவு மகிழ்வளிக்கிறது. அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

   Delete
 19. பதிவு மிக நல்லா வந்திருக்கு சகோ... நாங்கள் இன்று மாலை வரை உங்கள் ஊரில் தான் இருப்போம் ...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ. வருக.
   தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. அவசியம் வீட்டிற்கு வரவும். காத்திருக்கிறேன். நன்றி சகோ..

   Delete
  2. திடீர் பயணம் என்பதால் வர இயலவில்லை ஒருமுறை சொல்லிவிட்டு வருகிறோம்...

   Delete
  3. அடுத்த முறை அவசியம் வருகை தர வேண்டும் ஆவலோடு காத்திருக்கிறேன் சகோ.

   Delete
 20. ஆழமான கருத்துக்களை பகிர்ந்துள்ளீர்கள்.. நன்று!

  ReplyDelete
  Replies
  1. வருக வணக்கம் சகோதரி.
   தங்களிம் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

   Delete
 21. இன்னும் அரும்புகள் மலரட்டும்! நல்ல மணம் வீசட்டும்! வாழ்க!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

   Delete

   Delete