அரும்புகள் மலரட்டும்: வேண்டுகோள்

Monday 4 November 2013

வேண்டுகோள்


இரு கண்களில் நுழைந்து
இருதயம் பார்த்தவளே- உன்
நேசத்தையும் பாசத்தையும் உன்னதமாய்
நெஞ்சோடு பகிர்ந்த என்னவளே..

அனுதினமும் அன்பைப் பரிமாறி
அன்னையின் நகலாய் வந்தவளே
உன் சந்திப்பு நிகழாவிட்டால் நான்
சமுத்திரத்தில் விழுந்த மழைத்துளி..


உன் கடைவிழி பார்வை
பட்டதற்கே பட்டமரம் போல்
இருந்த நான் இன்று
பாலில் விழுந்த தேன்துளி..

உன் முழுமுகம் காண
நிலவைத் தொலைத்த அமாவாசை
இரவைப் போல் கேள்விகளால்
வேள்விகள் செய்து காத்து
இருக்கிறேன் காலம் கனிந்துவர..

என் வாழ்க்கை பாதையில்
இருளகற்ற களங்கரை விளக்காய்
என்னோடு வந்துவிடு காலம்
முழுதும் கலங்காது நானிருக்க..



கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

33 comments:

  1. அவளுக்கான அழகான விண்ணப்பம். அப்பம் போல தித்திப்பாக. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா.
      விரைந்து வருகை தந்தமைக்கும் கருத்துக்கும் எனது அன்பான நன்றிகள்.

      Delete
  2. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உடன் வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்கும் எனது அன்பான நன்றிகள் சகோதரரே.

      Delete
  3. "விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே"
    கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வைர வரிகளை ஒத்து இருக்கிறது உங்களது கவிதை வரிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே.
      ஆமாம் ல. வைரமுத்து அவர்களின் கவிவரிகளின் தாக்கம் எனக்குள் இருப்பது உண்மை. இந்த வரிகள் கண்ணை மூடிட்டு நானா கிறுக்கினது. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி..

      Delete
  4. ஆஹா காதலில் விழுந்தாச்சா வாழ்த்துக்கள் வெற்றி பெற....! கவிதை நன்றாக இருக்கிறது.

    அனுதினமும் அன்பைப் பரிமாறி
    அன்னையின் நகலாய் வந்தவளே
    உன் சந்திப்பு நிகழாவிட்டால் நான்
    சமுத்திரத்தில் விழுந்த மழைத்துளி..

    காதல் வந்தவுடன் கவிதையும் அப்படி வருகிறதே ......ம்..ம் நடக்கட்டும்....நடக்கட்டும்.
    தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி வருக.
      காதலில் விழாத்வர் இருக்க முடியுமா சகோதரி! ஆனால் இது மணநாளுக்கு காத்திருக்கும் ஒரு காதலனின் வேண்டுகோள் எனது கற்பனையில். நம்ப மாட்டேனு சொல்ற மாதிரி கேட்குதே சகோதரி. இருப்பினும் தங்கள் வாழ்த்துக்கும் வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றிகள்..

      Delete
  5. கவிதை அழகு. அதிலும் உவமை மிக நன்று.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.
      வருகை தந்து கவிதையை ரசித்து கருத்துரை வழங்கிய தங்கள் ரசனை குணத்திற்கு எனது அன்பான நன்றிகள்..

      Delete
  6. உவமைகளும் ஒப்பீடும் அற்புதம்
    ஒரு அருமையான கவிஞரை
    உருவாக்கியவருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா வருக.
      வருகை தந்து கருத்திட்டதோடு அல்லாமல் வாழ்த்தியமைக்கு எனது அன்பான நன்றிகள்.

      Delete
  7. அவளுக்கு நன்றி சொல்லுங்கள்.ஆம் கவிஞர்ஆக்கியமைக்காய்

    ReplyDelete
    Replies
    1. சகோதரருக்கு வணக்கம்.
      இதை விட வேறு என்ன வேலை! நன்றி சொல்லிட வேண்டியது தான். வருகை தந்து கருத்துரையும் தந்தமைக்கு நன்றி சகோதரரே..

      Delete
  8. இப்படி கவிதையில் ஆளாளுக்கு கலக்கினால் நான் என்னசெய்வேன் ?போகிறது கவிதை அருமை !சகோதரர் ,நம்ம ஊர்காரர்,என சந்தோஷபட்டு கொள்கிறேன் !வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி..
      உங்க கூட போட்டி போட முடியுமா சகோதரி. இது என் கன்னி முயற்சி தானே! பிழை இருந்தாலும் போன போகுதுனு மன்னிச்சு விட்டுடுங்க. சரீங்களா சகோதரி! தங்கள் வருகைக்கும் கலக்கலான கருத்துக்கும் நன்றி..

      Delete
  9. கவிதை எழுத ஆரம்பிச்சாவே எளிதாய் புறப்படுவது காதல்தான்...! இனி மெல்ல சமூகம் உங்கள் வசப்படும் சகோ!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.
      தங்களிம் ஊக்குவிப்பே என்னைக் கவிதை எழுத வைத்தது என்பது உண்மை. தங்களுக்கு எனது நன்றிகள். வருகை தந்து கருத்திட்டு ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி சகோதரி.

      Delete
  10. இதை ஒரு அழகான உவமேயக் கவிதை என்றும் சொல்லலாம். அத்தனை உவமைகளும் அழகோ அழகு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருக வணக்கம் சகோதரரே.
      வருகை தந்து உற்சாக வார்த்தைகளைக் கருத்துரையாக வழங்கியமைக்கு நன்றி.

      Delete
  11. //சமுத்திரத்தில் மழைத்துளி, பாலில் தேன் துளி// அட அட மிக அருமை பாண்டியன்!
    பிற உவமைகளும் அருமை! பௌர்ணமியாய் உங்கள் இரவுகள் ஒளிரச் செய்து நீங்கள் கலங்காமல் இருக்க அவள் வந்துவிடட்டும் இந்த வேண்டுகோள் கேட்டு! மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது உங்கள் கவிதை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.
      தொடர் வருகை தந்து ரசித்து கருத்திடும் தங்கள் ரசனை குணத்திற்கு நன்றிகள்.

      Delete
  12. அழகான காதலை வெளிப்படுத்திய விதம் அருமை.இதமான வெளிப்பாடு.வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
    Replies
    1. வருக வணக்கம் சகோதரி
      வருகை தந்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கு எனது அன்பான நன்றிகள் சகோதரி.

      Delete
  13. என் வாழ்க்கை பாதையில்
    இருளகற்ற களங்கரை விளக்காய்
    என்னோடு வந்துவிடு காலம்
    முழுதும் கலங்காது நானிருக்க..
    அருமையான படைப்பு! அழகான வரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரரே வணக்கம்.
      தங்கள் ரசனை கண்டு மிக்க மகிழ்ச்சி. உற்சாக வார்த்தைகளில் கருத்திட்டமைக்கு நன்றிகள் அய்யா.

      Delete
  14. உன் கடைவிழி பார்வை
    பட்டதற்கே பட்டமரம் போல்
    இருந்த நான் இன்று
    பாலில் விழுந்த தேன்துளி..
    ரசித்த உவமை! அழகு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! ரசித்து படித்தமைக்கு எனது அன்பான நன்றிகள் சகோதரரே. உங்கள் வாழ்த்துக்கள் கவிதை எழுத தயங்கிய எனக்கு தன்னம்பிக்கை தருகிறது. மிக்க நன்றி..

      Delete
  15. தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  16. வணக்கம்
    சகோதரன்

    கவிதையில் உவமை. கற்பனை . நயம். நிறைந்தது...படிக்கும் போது மனம் குளிர்ந்தது அருமை வாழ்த்துக்கள் சகோதரான்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.
      தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வருகை தந்து தங்களது சகோதரனை ஊக்கப்படுத்துவதற்கு நன்றி. . தங்களது ரசனையான கருத்துக்கு நன்றிகள்.

      Delete