Friday, 18 October 2013

வைரமுத்துவின் தண்ணீர் தேசத்தில் உவமைகள்- பகுதி 2

                                                     
 வணக்கம் நண்பர்களே!
வைரமுத்துவின் தண்ணீர் தேசத்தில் உவமைகள் பகுதி 1 எனும் எனது பதிவைப் படித்து வைரமுத்து அவர்களின் வைர வரிகளை அசைப்போட்டிருப்பீர்கள் என்று நம்பி இரண்டாம் பகுதியிலும் எனக்கு பிடித்த உவமைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த பதிவு உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் மகிழ்வைக் கொடுக்குமாயின் அதுவே எனது முயற்சிக்கான வெற்றியாகக் கருதுகிறேன். வாருங்கள் இரண்டாம் பகுதியைக் காணகாதலி காதலரின் மடியில் பத்திரமாய் இருப்பதற்கு கவிஞர் கூறும் உவமை: 
என் மடியிலிருக்கிறாய். ஓர்
ஏழையின் உள்ளங்கையிலிருக்கும்
தங்க நாணயத்தைப் போலவும்
- தூக்கணாங்குருவிக் கூட்டின்
ஆழத்தில் கிடக்கும் அதன்
குஞ்சைப் போலவும் நீ
பாதுகாப்பாயிருக்கிறாய்.

குடிக்க வைத்திருந்த ஒரு பீப்பாய் தண்ணீரில் தமிழ்ரோஜா குளித்து விட்டு வருந்துவதற்கு:
உப்புத்தூளுக்குப் பதிலாய்
வைரக்கற்களை அம்மியில்
வைத்து அரைத்துவிடுகிற ஒரு
குழந்தை மாதிரி - குடிநீர்
என்று தெரியாமல் அதில்
குளித்து முடித்த தமிழ்ரோஜா
இப்போது
அழுது அழுது அழுக்கானாள்.

ஸ்குவிட் பிராணியின் வெளிச்சத்திற்கு:
ஸ்குவிட் போன்ற
பிராணிகள், தங்கள்
உடம்பிலேயே வெளிச்சம்
போட்டு உலவுகின்றன -
தங்கள் சொந்தச் செலவில்
சுயவெளிச்சம்
போட்டுக்கொள்ளும் சில
மனிதர்களைப்போல.

சலீம் சோற்றைத் திருடியதற்கான காரணத்தை அறியும் பரபரப்பிற்கு:
 பட்டாசுத் திரியில்
முதன்முதலாய்த் தீ வைத்துவிட்டு
அது வெடிக்கும்வரை
பரபரக்கும் சிறுவனைப் போல
அவன் பதில் கேட்க
ஆவலானார்கள்
ஐந்து பேரும்.

சலீம் எலிக்கு சோறு வைக்கும் காட்சிக்கு:
 வைரங்களை எண்ணும் ஒரு
வியாபாரியைப் போல்
கவளத்தில் ஒரு பருக்கையும்
சிதறிவிடாமல் சேர்த்தெடுத்து,
கடுகுபுட்டியின் மூடிமேல்
கவனமாய் வைத்தான் சலீம். 

இசக்கியின் வியப்புக்கு: 
உயிர்த்தெழுந்த ஏசுநாதரைப்
பார்த்தவனைப்போல் வியந்து
நின்றான் இசக்கி.

 நிலவிற்கும் நட்சத்திரத்திற்கும்:
எலிகடித்த ரொட்டியாய்
வடிவிழந்த
நிலா.
நாலா திசையிலும்
சிதறிக்கிடக்கும் நட்சத்திரப்
பருக்கைகள்.

நா வறட்சிக்கு:
தார்ச்சாலையில் அசைவற்றுக்
கிடக்கும் செத்தபிராணியாய்
உள் அண்ணத்தில்
ஒட்டிக்கொண்டது நாக்கு. 
மேகம் பொழிய மறுப்பதற்கு:
திருடிய பொருளைத்
திருப்பித்தர மறுக்கும் ஒரு
திருடனைப் போல -
உயரத்தில் ஏறிக்கொண்டு ஏன்
எங்கள் உயிர் குறைக்கிறாய்?

காணாமல் போன மகளை நினைக்கும் அகத்தியர்க்கு: 

வாரத்தில் ஒருநாள் மட்டும்
சலவைச்சட்டை அணிந்து
கொள்ளும் ஒரு பழைய
தமிழ்வாத்தியாரைப் போல
அந்த வாரத்தில் அன்றுதான்
மகளை நினைந்தார்
அகத்தியர்.

அகத்தியரின் பயத்திற்கு:
அவர் மீசையில் தோன்றிய
நரைகளைப் போலவே
மனதிலும் அங்கங்கே
அச்சரேகைகள்.
செழித்த மேகத்திற்கு:
ஒரு மார்கழி மாதத்து
மாலையில் அருகம்புல் மேய்ந்து
திரும்பும் ஒரு தாய்ப்பசுவின்
கொழுத்த காம்பாய் அந்த
மேகம் செழித்து நின்றது.
உணர்ச்சி இல்லாத வேலைக்கு:
உணர்ச்சியில்லாமல் அவர்கள்
அந்த வேலையைச்
செய்தார்கள்- ஒரு பிணத்திற்குக்
குழிவெட்டும் வெட்டியானைப்போல.  
 எலியின் வாடிய தேகத்திற்கு:
தண்ணீர் வற்றியதும்
தலைகாட்டும் ஏரிமரங்களைப்
போல அதன் உடம்பில்
விறைத்து நின்றன
குருத்தெலும்புகள்.

சுண்டெலியின் தோலை சலீம் தடவிப் பார்ப்பதை:
தான் வருவதற்கு முன்பே
அடக்கம் செய்யப்பட்டு விட்ட
தாயின் பழைய புடவையைத்
தொட்டுப் பார்க்கும்
ஒரு பாசமுள்ள மகனைப்
போல - சுண்டெலியின்
தோலை
அவன் தடவிக்கொண்டிருந்தான்.

அவர்கள் தீப்பெட்டியைத் தேடியக் காட்சிற்கு:
மூன்று வருடங்கடந்து மழை
பெய்த ஒரு திருநாளில், தன்
பழைய கலப்பையைத் தேடுகிற
ஓர் ஏழை விவசாயியைப்போல
அவர்கள் திசைக்கொருவராய்ப்
பறந்து தீப்பெட்டி
தேடினார்கள்.
 தீக்குச்சியின் பற்றாக்குறைக்கு:
ரஷயப்படையெடுப்பில் தோற்றுத்திரும்பிய
நெப்போலியனின் படைவீரர்களைப் போல்
எண்ணிக்கையில் குறைவாகவே
இருந்தன தீக்குச்சிகள்.
 துன்பத்திலும் நம்பிக்கைக்கு:
 ஒரு பட்டமரத்தில் புறப்படும்
முதல் தளிரைப் போல எனக்குள்
புதியநம்பிக்கை பூத்திருக்கிறது 
அனைவரின் விழிப்புக்கு:
தீப்பிடித்த வீடாய் அந்த
ஒரே சத்தத்தில்
விழித்துக்கொண்டது படகு..

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

42 comments:

 1. வணக்கம்
  அண்ணா

  வைரமுத்துவின் வைர வரிகள் மனதை கவர்ந்தது பதிவு அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோததரே
   தாங்கள் வருகை தந்து வைரமுத்துவின் வைர வரிகளில் நனைந்தமைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி.

   Delete
 2. கவித்துவமுள்ள ரசனை. வாழ்க!

  ReplyDelete
  Replies
  1. அய்யாவிற்கு வணக்கம்
   தங்களது வருகைக்கும் ரசனையான கருத்துக்கும் அன்பான நன்றிகள் அய்யா.

   Delete
 3. அனைத்தும் அருமை... தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. அய்யாவின் வருகை மகிழ்வளிக்கிறது. கருத்துக்கு நன்றீங்க அய்யா.

   Delete
 4. இன்று முதல் தமிழ்மணம் வேலை செய்கிறது... தமிழ்மணம் இணைத்து ஓட்டு அளித்து விட்டேன்... நீங்களும் ஒரு ஓட்டும் இடலாம்...

  ta.indli.net வேலை செய்யவில்லை... சில சமயம் இவ்வாறு தான் ஆகும்... இதனால் தளம் திறக்க நேரம் ஆகும்... அந்த indli ஓட்டுப்பட்டையை எவ்வாறு உடனே நிறுத்தி வைப்பது...?

  பார்க்கவும் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Speed-Wisdom-1.html

  மேலும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருக அய்யா. தங்களது உதவிக்கும், ஆதரவுக்கும், வழிகாட்டுக்கும் என்றும் கடமைப்பட்டுள்ளேன். நன்றி மறவேன். அவசியம் பதிவைப் படித்து செய்து பார்க்கிறேன். சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்கிறேன். தகவலுக்கு நன்றீங்க அய்யா.

   Delete
 5. கவியரசு வைரமுத்துவின் வரிகளில் தேர்வு - அருமை!..

  ReplyDelete
  Replies
  1. அய்யா அவர்களின் தொடர் வருகைக்கு நன்றி. தங்களது தளத்திற்கு வர வேண்டும் கண்டிப்பாக வருவேன். கருத்துரைக்கு நன்றீங்க அய்யா.

   Delete
 6. பல இடங்களில் மாங்காயைப் போல நிறைய புளிப்பும்
  சிறிது இனிப்பும் கலந்து சில இடங்களில் மாம்பழத்தைப் போல
  நிறைய இனிப்பும் சிறிது புளிப்பும் கலந்தது அவரின்
  உவமைகள். சுவைத்து மகிழ்ந்தேன் . ஹை லைட் செய்து
  வெளி இட்டமைக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி. தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி. ரசனையான கருத்துரைக்கு நன்றீங்க.

   Delete
 7. அனைத்தும் அருமை.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகை கண்டு மகிழ்ச்சி அம்மா. கருத்துரைக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள் அம்மா.

   Delete
 8. அத்தனையும் அற்புத ரசனைமிக்க வரிகள்!...

  உங்கள் தேர்ந்தெடுத்த ரசனை மிகச்சிறப்பு!
  நானும் ரசித்தேன்... வாழ்த்துக்கள் சகோ!

  த ம.2

  ReplyDelete
  Replies
  1. சகோதரியின் தொடர் வருகைக்கும் ரசனை மிகுந்த கருத்துரைக்கும் அன்பான நன்றிகள். தொடர்ந்து வருகை தந்து ஊக்கப்படுத்துங்கள்.

   Delete
 9. வைரமுத்து கையாண்ட உவமைகள் வித்தியாசமானவை. அதை கோர்வையாக்கி தந்ததற்கு நன்றி
  தமிழ் மண இணைப்பு அங்கீகரிக்கப் பட்டதற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அய்யா
   தங்களது உதவியை என்றும் மறவேன். வைரமுத்து அவர்களின் வரிகளை ரசித்தும், கருத்துரை வழங்கியமைக்கும் நன்றி அய்யா.

   Delete
 10. அனைத்தும் அருமையே.

  // ஒரு பட்டமரத்தில் புறப்படும்
  முதல் தளிரைப் போல எனக்குள்
  புதியநம்பிக்கை பூத்திருக்கிறது //

  மிகவும் பிடித்துள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. அய்யா அவர்களின் வருகை கண்டு மகிழ்ச்சி. தங்களது ரசிப்புக்கும் வருகைக்கும் நன்றீங்க. தொடர்ந்து வருகை தந்து ஊக்கப்படுத்துவதற்கும் நன்றீங்க அய்யா.

   Delete
 11. மீண்டும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. அய்யாவிற்கு வணக்கம்.
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி. கருத்துரைக்கும் வருகைக்கு நன்றீங்க.

   Delete
 12. வணக்கம்
  அண்ணா
  என்தளத்தில்....http://2008rupan.wordpress.com/2013/10/18/%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%b4%e0%af%81/
  அன்புடன் வாருங்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோததரே! வருகை கண்டேன். தங்களது தளத்திற்கு வருகிறேன். கவிதை போட்டிக்கு வாழ்த்துக்கள் சகோததரே.

   Delete
 13. தலைப்பிட்டு எளிமையாய் படிப்பவர்க்கு அழகாய் ரசிக்க கொடுத்து அசத்திட்டிங்க சகோ! படிப்பாளி நல்ல படைப்பாளி ஆக முடியும் இத்தனை அழகாய் ரசித்து படிக்கும் நீங்க அழகான கவிதைகளை இனி படைக்கவும் போகிறீர்கள் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. அன்பு சகோதரிக்கு எனது வணக்கங்கள்.
   தங்கள் கருத்துரைக் கண்டு என்னுள்ளே தன்னம்பிக்கை தளிர் விடுகிறது. விரைவில் உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து விடுவேன் என்று நம்பலாம். கருத்திட்டு ஊக்கப்படுத்துவதற்கு நன்றீங்க சகோதரி.

   Delete
 14. முதலில் வணக்கம்.. என் முதல் வருகையே எனக்கு மிகவும் பிடித்த தலைப்பாக இருக்கிறதே என மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு... அதைவிட மகிழ்ச்சி.. நம்மவர் பலரும் இங்கு பின்னூட்டியிருப்பது காண:)..

  அழகிய ஒரு அலசல்.. நன்றாக இருக்கு. என் மொபைலில்.. இந்த தண்ணீர் தேசம் டவுன்லோட் பண்ணி வச்சிருக்கிறேன்.. மிகவும் பிடிக்குமெனக்கு.

  ReplyDelete
  Replies
  1. வருக! வணக்கம் சகோதரி!,
   தங்களது வருகை கண்டதும் ரொம்ப மகிழ்ச்சி. தண்ணீர் தேசத்தில் உவமைகள் மட்டும் எடுத்து போட்டுருக்கிறேன். ஆனால் முழு கதை இதைவிட அவ்வளவு அருமையாக நகரும் அல்லவா சகோதரி! வைரமுத்துவின் வரிகள் தனித்துவமானது. தங்கள் வருகையும் கருத்தும் அதை உறுதிப்படுத்தியுள்ளது. வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றீங்க சகோதரி.

   Delete
 15. வலையுலகினுள் புதியதாய் அடியெடுத்து வைத்திருக்கும் உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள், பல நல்ல பயனுள்ள கருத்துகளை அனுபவங்களை பகிர வலைப்பூவை விட சிறந்த தளம் வேறேதும் இல்லை என்பது எனது எண்ணம்... உங்களது எழுத்துகளைப் படிக்க ஆர்வமுடன்...

  சீனு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அய்யா.
   தங்களைப் பற்றி இணையத்தில் நண்பர்களின் பதிவுகள், பின்னூட்டங்கள் மூலம் கேள்விப் பட்டிருக்கிறேன். உண்மையில் தங்களது வருகை எனக்கொரு இன்ப அதிர்ச்சி, வருகை தந்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கு வாழ்த்துக்கள் அய்யா. தொடர்ந்து இணைந்திருப்போம்.

   Delete
  2. அய்யாவா.. அய்யய்யோ நான் சின்னப் பையன் தான் நண்பா...

   //உண்மையில் தங்களது வருகை எனக்கொரு இன்ப அதிர்ச்சி,// ஹா ஹா ஹா நீங்கள் இப்படி சொல்வது எனக்கு பேரதிர்ச்சியாய் இருக்கிறது :-))))))))

   நீங்க மேல சொன்னத நம்ம ஜாதிக்காரன் பார்த்தா என் நிலம என்னாவாகுறது.... ஓ காட் :-)))))))

   // தொடர்ந்து இணைந்திருப்போம்.// நிச்சயம் நண்பா.... தொடர்ந்து உற்சாகமாக எழுதுங்கள்..

   Delete
  3. வணக்கம் நண்பா!
   கடவுளே! சீனு அய்யானு பிரபல இணைய எழுத்தாளர் இருக்காங்க. அவர் தானு நினைச்சுட்டேன். மன்னிக்கவும் நண்பரே. ஒரே நகைச்சுவையா போயிடுச்சே! இருப்பினும் தங்களது நட்பு கிடைத்ததில் மகிழ்ச்சியே. தொடர்வோம் நட்பை. தெளிவு படித்தியமைக்கும் நன்றி நண்பா.

   Delete
  4. ஹா ஹா ஹா நண்பா அவர் சீனு ஐயா இல்லை.. சீனா ஐயா....

   நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்

   Delete
  5. சீனு அய்யா தெரியும் நண்பரே! நான் நினைத்தவர் பதிவர் திருவிழாவில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளாராக இருந்தாக நினைவு. அவரும் இல்லைனா என்னை விட்ருங்க சாமி.. தெரியாம அய்யானு சொல்லிட்டேன். சும்மா விளையாட்டுக்கு....

   Delete
  6. பதிவர் திருவிழாவில் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு குழுவில் ஒரு அங்கத்தினராக இருந்த அந்த சீனு நான் தானுங்கோ..

   அய்யய்யோ நான் இந்தக் ஆட்டத்துக்கு வரலே மீ பாவம்... மீ எஸ்கேப் :-)))) ஹா ஹா ஹா

   Delete
  7. நான் மிகச் சரியாகத் தான் கணித்து மறுமொழி இட்டுருக்கிறேன் உங்கள் வயதைத் தவிர. அய்யானு சொன்னது தான் நம்மளை இவ்ளோ பேச வச்சுருக்கு. அதில் சந்தோசமே.. இணைந்த நட்பில் தொடர்ந்திருப்போம். நன்றி..

   Delete
 16. ரசித்துப் படித்தவரிகளை அசைபோடவைத்த அருமையான பகிர்வுகள்.பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி. தங்களின் வருகை மகிழ்ச்சியளிக்கிறது. படித்து ரசித்த வரிகளை அசைபோட்டதால் பதிவின் நோக்கம் வெற்றி கண்டதாகவே உணர்கிறேன். வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றீங்க சகோதரி.

   Delete
 17. உவமைகளை மட்டும் ஜூஸ் போல பிழிந்து தந்து உள்ளீர்கள் ...கரும்பு தின்ன கூலியா வேண்டும் ?
  த.ம 3

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வருக அய்யா..
   வருகை கண்டதும் மகிழ்ச்சியளிக்கிறது. உண்மையில் முழுக்கதை தான் இனிக்கும். உவமைகள் கண்டு வியந்ததால் வந்த விளைவு தான் அய்யா இந்த பதிவு. கருத்துரைக்கும் வருகைக்கும் நன்றீங்க அய்யா.

   Delete
 18. வைரமுத்துவின் உவமைகள் பிரமிக்க வைக்கின்றன.அதை ரசித்ததோடு எங்களையும் ரசிக்க வைத்தமைக்கு நன்றி பாண்டியன்

  ReplyDelete
  Replies
  1. அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் எனது அன்பு கலந்த நன்றிகள் அய்யா.
   அன்பு சகோதரருக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

   Delete