அரும்புகள் மலரட்டும்: கோபம் உறவுகளைப் பாதிக்கிறதா?

Thursday 12 September 2013

கோபம் உறவுகளைப் பாதிக்கிறதா?

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும்                                                                                           


 கோபம்” மனித உணர்ச்சிகளில் ஒன்று. உணர்ச்சியின் அளவைப் பொறுத்து கோபத்தின் தாக்கமும் அமையலாம். குறிப்பாக கோபம் அன்பின் வெளிப்பாடாக அமையும் போது அவற்றின் தாக்கம் குறைவாக தான் இருக்கும். அதேபோல் ஆணவத்தின் வெளிப்பாடாக அமைந்தால் அவற்றின் தாக்கமும் அதன் விளைவுகளும் சற்று அதிகமாகவே அமைந்து விடுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு தாய் தன் குழந்தை படிப்பில் சரியாக படிக்கவில்லையென்றாலோ அல்லது தான் சொன்னதை சரியாக செய்யவில்லை என்றாலோ! அவள் தன் கோபத்தின் காரணமாக அடிக்கவோ, திட்டவோ செய்கிறாள். இது அன்பின் விளைவாக அமைகிறது.                                                                                                          அதே சமயம் கோபம் என்பது அளவுக்கு அதிகமான உணர்ச்சி கொந்தளிப்பில் உருவானால் தன்னை மீறி மிருகமாக நம்மை மற்றவர்களுக்கு அடையாளம் காட்டி விடுகிறது. அப்போது பிரச்சனைகளும் எழுகின்றன.  தன்னுடய உறவுகளையோ, நண்பர்களையோ அல்லது தன்னுடய மனிதத் தன்மையையோ இழக்க நேரிடுகிறது. எடுத்துக்காட்டாக ஒருவனின் செயல் தன்னைப் பாதித்தால் அதை பொருக்காது தன்னை அறியாமல் அடிக்க பாய்வது, கைகளை ஓங்குவது என்று விரும்பத்தகாத செயல்களில் கோபமானது நம்மை செய்யத் தூண்டுகிறது.                              ஒரு நிமிட கோப உணர்ச்சியை அடக்காமல் தவறு செய்து சிறையில் வாடுபவர்கள் எத்தனை பேர்!
மனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து – பாராட்டி – உதவி செய்து வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும்.

ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.
கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. நமது சொந்தங்களை இழக்க நேரிடுகின்றன.                                       ஒரு சிறுவன் அவன் வயதிற்கு மீறிய அனுபவமுள்ள அபிப்பிராயத்தைச் சொன்னால் அது அவனுடைய கருத்தல்ல, பெரியவர்கள் சொல்லிக் கொடுத்தது என்று நாம் அறிகிறோம். இப்படிப்பட்ட கருத்து இந்தச் சிறுவனுடையதில்லை என்று எளிதில் அறியலாம். அதே போல கோபம் வரும் பொழுது சிலசமயம் அளவு கடந்த வேகத்துடன் வருகிறது. அதனால் அது நம்முடைய சக்திக்கு மீறியது என்பது தெரிகிறது. நம்முடைய சக்திக்கு மீறி வேகத்துடன் கோபம் நம்முள்ளிருந்து எழுவதால், அது சமயம் இது நம்முடையதல்ல, வெளியிலிருந்து நம்முள் நுழைகிறது என்று நாம் அறியவேண்டும். அவ்வாறு உணர்ந்து அத்தருணத்தில் அமைதி காத்து இருந்து விட்டால் நாமே அச்சூழலை வென்றவராகிறோம். எனவே உணர்ச்சி மிகுதியால் வரும் கோபத்தை அடக்குவோம். வாழ்வை வென்று உறவுகளையும் காப்போம்.                                                 தவிர்க்க முடியாத சில நேரங்களில் கோபப் பட்டால் அதற்காக வருந்தி கோபத்திற்குள்ளானவரிடம் மன்னிப்புக் கேட்பதில் தவறில்லை.. அவரும் அதனை ஏற்று அத்தோடு மறத்தல் வேண்டும்.                                                                            

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய                                          பிறத்தல் அதனான் வரும்.                                                    பொருள் :யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்துவிட வேண்டும். தீமையான விளைவுகள் அச்சினத்தாலேயே வரும் -(மு.வ).

28 comments:

  1. இதைப்படித்ததும் எனக்கு இன்று ஏற்பட்ட கோபம் பறந்து விட்டது.

    //தவிர்க்க முடியாத சில நேரங்களில் கோபப் பட்டால் அதற்காக வருந்தி கோபத்திற்குள்ளானவரிடம் மன்னிப்புக் கேட்பதில் தவறில்லை.. அவரும் அதனை ஏற்று அத்தோடு மறத்தல் வேண்டும்.//

    அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அய்யாவிற்கு வணக்கம், அடியேனின் சிந்தனை வரிகள் உண்மையிலேயே அய்யாவின் மனமாற்றத்திற்கு காரணமாயிருந்தால் மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் எனது அன்பான நன்றிகள்.

      Delete
  2. சோகத்தை எப்படி அழுதுத் தீர்க்கின்றோமோ அதே போல்
    எந்த உணர்ச்சி ஆனாலும் அளவுடன் வெளிப்படுத்தி விட வேண்டும்.
    இல்லை என்றால் அழுத்தம் தாங்காது.
    ஆனால் நீங்கள் சொல்லி இருக்கும் அளவு கடந்த கோபம் கூடாது தான்.

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரியாக சொல்லியுள்ளீர்கள் சகோதரி. அளவு கடந்த கோபம் ஆபத்து என்பதை அனைவரும் அறிந்து விழிப்போடு செயல்பட வேண்டும் என்பதே எனது எண்ணம்.. சகோதரின் வருகைக்கும் மேலான கருத்துக்கும் அன்பான நன்றி.

      Delete
  3. ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.
    கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன.

    கோபத்தால் ஏற்படும் தீமைகளை சிறப்பாக எடுத்துக்காட்டி சாந்தப்படுத்தும் அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. சகோதரியின் முதல் வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் அன்பான நன்றிகள். தொடர்ந்து வருகை தந்து கருத்திட்டு பகிருங்கள். நன்றி சகோதரி.

      Delete
  4. வணக்கம்!..
    என் வலைத்தளத்தில் உங்கள் வருகை கண்டேன். மிக்க மகிழ்ச்சுயும் நன்றியும் சகோதரரே!

    இங்கு உங்கள் வலைத்தளமும் சிறப்பாக இருக்கிறது. மேலும் வளர்ச்சி காண என் வாழ்த்துக்கள்!

    கோபம் மனிதனிடம் இயல்பாக இருக்கும் ஓர் உணர்வுதான்.
    கோபம் கூரிய ஆயுதத்திற்கு ஒப்பாகும். அதை வைத்திருப்பவன் அதனால் தானும் காயப்படாமல் அடுத்தவரையும் காயப்படுத்தாமல் கையாளத்தெரிந்திருக்க வேண்டும். கோபம் காட்டவேண்டிய இடத்தில் காட்டவேண்டும் ஆனால் அவதானத்துடன்...

    கோபத்தைத் தவிர்த்து வாழ்வது ஒரு சாதனை.
    அவதானமாக நாம் இயங்க அனைத்தும் வசப்படும்.

    நல்ல சிந்தனை. அருமையான பதிவும் பகிர்வும் சகோ!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோதரி வாங்க! இணைய வானில் கொடிக்கட்டி பறக்கும் தங்களது வருகை மகிழ்ச்சியளிக்கிறது. தங்களது நல்வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் கோடானுகோடி நன்றிகள்.

      Delete
  5. மனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து – பாராட்டி – உதவி செய்து வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும்.//

    உண்மை. அழகாய் சொன்னீர்கள்.
    மனவளக்கலையில் சினம் தவிர்த்தல் என்றே ஒன்று பாடமாய் உள்ளது. பயிற்சி மூலம் சினம் தவிர்க்க பழகலாம்.
    அதற்கு விட்டுக் கொடுத்தல், சகிப்பு தனமை பொறுமை மிக அவசியம்.
    மனிதனின் வெற்றிக்கு தடை கல்லாய் இருக்கும் கோபத்தை அகற்றுவோம்.
    நன்றி அருமையான கட்டுரைக்கு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி, மகிழ்ச்சி அளிக்கிறது தங்களின் வருகை. கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வருக. தங்களின் மேலான கருத்தைத் தருக. நன்றி சகோதரி.

      Delete
  6. கோபத்தின் பல்வேறு நிலைகளை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். செயலின் பாதிப்பை பொறுத்து கோபம் தீவிரமாக அமைவதாக இருக்கிறது. தேவையற்ற இடங்களில் கோபப்படுவதை தவிர்த்தால் பகை தவிர்க்கப்படும். அதே சமயம் ஆங்காங்கே பரவலாக நடந்து கொண்டிருக்கும் குழந்தை, பெண்கள் வன்முறை சம்பவங்களை கண்டு அமைதியாக போய்விட இயலுமா? அந்த இடத்தில் உணர்ச்சி கொந்தளிப்பில் கோபம் நீதி கிடைக்கும் வரை ஓயாது போராட்டம் நடத்ததானே செய்கிறது.? பகைமை உண்டாக்காமல் சினம் காப்போம். சிறுமை கண்டு பொங்குவோம்..!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி வாங்க. தங்களின் கருத்துக்கு அன்பான நன்றிகள். சிறுமை கண்டு கண்டிப்பாக கொதித்தெழுவோம். அது நமது கடமை. கோபம் என்பது தம்மை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடையக் கருத்தும். நன்றி சகோதரி.

      Delete
  7. அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் பாண்டியன். //ஒரு நிமிட கோப உணர்ச்சியை அடக்காமல் தவறு செய்து சிறையில் வாடுபவர்கள் எத்தனை பேர்!// உண்மைதான்.

    உங்கள் வேறு சில கட்டுரைகளும் படித்தேன். மீண்டும் வருவேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோதரி வணக்கம். அழகான, ஆழமான ரசிப்புத் தன்மை உடையவர்கள் நீங்கள். தங்களிடமிருந்து கருத்து பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வருகை தாருங்கள். நன்றி சகோதரி.

      Delete
  8. அருமைநண்பர் பாண்டியன் அவர்களே,
    அருமை ! அருமை !
    கோபமும் குணமும் பக்கத்துப் பக்கத்து வீடுதானாம்!
    மூதேவியும் சீதேவியும் இவங்க மனைவியாம்!
    இவங்க ரெண்டுபேரும் ரெண்டு ஜோடி!
    தம்பதிகளாக வரலாம் தனியாவும் வரலாம்...
    இவங்க வந்தா அவங்க வரமாட்டாங்லாம்...
    அவங்க வந்தா இவுங்க இருக்கமாடடாங்க...
    என்ன சரியா பாண்டியன்?
    நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்க

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா, வருகைக்கு நன்றி. //கோபமும் குணமும் பக்கத்துப் பக்கத்து வீடுதானாம்!

      மூதேவியும் சீதேவியும் இவங்க மனைவியாம்!
      இவங்க ரெண்டுபேரும் ரெண்டு ஜோடி!
      தம்பதிகளாக வரலாம் தனியாவும் வரலாம்...
      இவங்க வந்தா அவங்க வரமாட்டாங்லாம்...
      அவங்க வந்தா இவுங்க இருக்கமாடடாங்க...
      என்ன சரியா பாண்டியன்?// மிகச் சரியா சொன்னீங்க அய்யா. எவ்வளவு பெரிய நபர் நீங்கள் அழைக்கும் போதெல்லாம் தவறாமல் வருகை தந்து கருத்து தெரிவித்து ஊக்கப்படுத்துகிறீர்கள் அய்யா. தங்களுக்கு அன்பான நன்றிகள். தங்களின் ஆசியுடன் தொடர்ந்து நல்லதை எழுதுவேன். நன்றி அய்யா..

      Delete
  9. அருமைநண்பர் பாண்டியன் அவர்களே!
    அருமை! நண்பர் பாண்டியன் அவர்களே! ன்னுதான் நான் உங்களைச் சொல்றேன்...
    நீங்க என்னடான்னா...
    நா பெரிய ஆளு... ஆசி...ன்னெல்லாம் சொல்லி என்னை விட்டுத் தள்ளியே நிக்கிறீங்க.
    இதுதான் நல்லதில்ல...
    நான் உங்க நண்பன் பாண்டி!நண்பர்களுக்குள் என்ன ஆசி? வேண்டவே வேண்டாம் இனியிந்த வார்த்தை.
    பெரிய வார்த்தையாச் சொல்லி என்னை எட்டி நிறுத்தாதீஙக ப்ளீஸ்...

    ReplyDelete
    Replies
    1. உரிமையோடு தாங்கள் கூறும் போது நான் மனதார ஏற்றுக் கொள்கிறேன் அய்யா. நான் தாங்களை மானசீக குருவாகப் பார்த்ததால் வந்த வார்த்தைகள் அவைகள். தாங்கள் முன்பே கூறியது போல் நண்பர்களாகவே தொடருவோம், இலக்கியங்கள் மற்றும் சம்பவங்கள் சார்ந்து ஆரோக்கியமான .விமர்சனங்களைப் பகிர்ந்து கொள்வோம். தொடர்ந்து வலைப்பதிவையும் தாண்டி எல்லாவற்றிலும் இணைந்திருப்போம். அன்புடன் தங்கள் நண்பன் அ.பாண்டியன்.

      Delete

  10. அன்புள்ள பாண்டியனுக்கு. கோபம்பற்றிய கருத்துக்களை சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் கோபப் பட வேண்டிய இடத்தில் கோபப் படுதல் அவசியம். ரௌத்திரம் பழகு என்று சொல்வார்கள். தன்னை இழக்காத கோபம் தவறல்ல. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பு அய்யாவிற்கு வணக்கம் தங்கள் வருகைக்கு ரொம்ப நன்றீங்க அய்யா. தங்களை எனது நண்பர்களிடம் அறிமுகப்படுத்தி தங்களது எழுத்தையும், அனுபத்தையும் சொல்லி ரொம்ப மகிழ்ந்ததுண்டு. கருத்தும் வருகையும் மகிழ்வூட்டுகிறது. நன்றி அய்யா.

      Delete
  11. சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லியைப் பற்றி நல்ல கட்டுரை. அடிக்கடி சினம் கொள்பவர்கலை பற்றி சற்று விலகி இருக்கவே தோன்றும்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் விலகி இருப்பதே சிறந்தது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க அய்யா.

      Delete
  12. சாந்தம் கொள்ள வைக்கும் பதிவு...
    அருமை

    ReplyDelete
    Replies
    1. வாங்க அய்யா, தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றிகள்.

      Delete
  13. கோபம் பற்றிய அலசல் மிக நன்று சகோதரா.
    பயணம் தொடர இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரியின் வருகை மனத்திற்கு இனிய சந்தோசத்தைத் தருகிறது. தங்கள் கருத்து உற்சாகம் தருகிறது. வருகைக்கு நன்றீங்க சகோதரி. தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள். நன்றி.

      Delete
  14. கோபம் கொள்ளா விட்டாலும் கோமாளியாக்கி விடுவார்களாம். கோபத்தின் போது எடுக்கும் எந்த முடிவும் நன்மை பயக்காது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை அல்லவா. கோபம் கொள்ளும் இடத்தில் சுற்றமும் இருக்காது ஆகையால் அத் தருணம் மௌனமாக
    இருப்பதே சாலச் சிறந்தது. கோபம் செய்யாததை சில வேளைகளில்
    மௌனம் சாதிக்கும்.
    சினம் கொண்டார் வாழ்வு சில்லறை காசு போல் தான்.
    நல்ல விடயம் எடுத்து வந்தீர்கள் நன்றி...!
    வாழ்கவளமுடன்...!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.
      தொடர்ச்சியான தங்களது வருகை ஊக்கமளிக்கிறது. நல்ல கருத்துக்களை பின்னூட்டமாக தந்து கருத்திடுவது ரொம்ப சந்தோசமாக உள்ளது. தங்களது நட்பு கிடைத்தது பெருமையாக உள்ளது சகோதரி. வருகை தந்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கு நன்றீங்க சகோதரி.

      Delete